25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காய்கறி சட்னி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காய்கறி சட்னி 

 தேவையான பொருட்கள் -   கேரட் 1, பீன்ஸ் 6, நடுத்தர அளவு கத்தரிக்காய் 3, கோஸ் 1 துண்டு, சௌசௌ 1 துண்டு, சிறிய முள்ளங்கி 1, பிஞ்சான பச்சை மொச்சைக்கொட்டை கால் கப், அவரை 5, பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி 1 துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் 6, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. 

செய்முறை:  - வெங்காயம், தக்காளி, காய்கறிகளைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலைத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் காய்கறிகள், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிதமான - தீயில் காய்கள் வேகும்வரை வதக்குங்கள். வதங்கியதும் தேங்காய், பெருங்காயம், புளி, உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள். சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி சட்னியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News