25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

May 02, 2025

கலர் வடகம் .

 தேவையானவை- பச்சரிசி -1 கிலோ,உப்பு - தேவையான அளவு, ஜவ்வரிசி -100 கிராம், 'ரெட் புட்' கலர் மற்றும் 'க்ரீன் புட்' கலர் - சிறிதளவு.செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து,உப்பு சேர்த்து முதல் நாள் இரவே அரைத்து வைக்கவும். ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.மறுநாள் காலை, பெரிய பாத்திரத்தில், நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். ஜவ்வரிசி மாவைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும் போது, அரைத்த பச்சரிசி மாவையும் ஊற்றிக் கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.ஈரமான காட்டன் துணியைப் பாய் மேல் விரித்து வைக்கவும். கூழ்மாவை, மூன்று பங்காக பிரித்து, ஒன்றை வெள்ளையாகவேவைக்கவும். இரண்டாவதில், 'ரெட் புட்' கலரும், மூன்றாம் பங்கில், 'க்ரீன் புட்' கலரும் சேர்த்து, நன்கு கலக்கவும்.மாவைக் கரண்டியில் எடுத்து ஊற்றித் தடவவும். வெயிலில் நன்கு காய்ந்ததும் மாலையில், துணியைத் திருப்பிப் போட்டுத் தண்ணீர் தெளித்து உரித்து எடுக்கவும். நான்கு நாட்கள் காயவைத்து பொரித்து சாப்பிடலாம்.

Apr 25, 2025

இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் (Amla and Ginger Pickle) )

தேவையானவை : நெல்லிக்காய் - 100 கிராம், இஞ்சி -100 கிராம், பூண்டு -50 கிராம்,வெல்லம் - சிறிது,மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,மஞ்சள்தூள் - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - சிறிதாக வறுத்துப் பொடித்தக்கொள்ளவும். நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,உப்பு - தேவையான அளவுசெய்முறை:முதலில் இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும் எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கி எடுத்தால் சுவையான இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

Apr 25, 2025

பூண்டு ஊறுகாய் (garlic pickle )

தேவையான பொருட்கள் ; 1கப்பூண்டு பல், 6 வரமிளகாய்,அரை ஸ்பூன்கடுகு,கால்ஸ்பூன் வெந்தயம்,தேவைக்கு உப்பு, கால்ஸ்பூன் பெருங்காயம்,கால்ஸ்பூன் மஞ்சள்,தாளிக்க ;கால்ஸ்பூன்கடுகு,1 வரமிளகாய்,1 கொத்து கருவேப்பிலை,தேவைக்கேற்ப நல்லெண்ணெய்செய்முறை -முதலில் பூண்டு உரித்துக்கொள்ளவும்.பின் கடுகு, வெந்தயம் வறுக்கவும்.அதிலேயே வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.பின் அதிலேயே உப்புசேர்க்கவும். ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.பின் வாணலியை அடுப்பில்வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.அதில் கடுகுபோட்டு பொரிந்ததும்,வரமிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.அரைத்த பொடியைப் போடவும்.பின் மஞ்சள்பொடி சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.பின் புளிகரைசலை ஊற்றவும்.நன்கு கொதிக்கவிடவும்.பின் அடுப்பை சிம்மில்வைத்து விடவும்.வெல்லத்தூள் அரைஸ்பூன் சேர்க்கவும்.பெருங்காயம் கால்ஸ்பூன்சேர்க்கவும்.பூண்டு புளி கரைசலோடு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும். அப்போது பூண்டுஊறுகாய் ரெடி.தயிர் சாதம், சப்பாத்தி, தோசை,இட்லிக்கு அருமையாக இருக்கும்.

Apr 25, 2025

ஆவக்காய் ஊறுகாய் (Avakkaai oorukaai)

தேவையான பொருட்கள் - 6 கப் மாங்காய் துண்டுகள், 1கப் மிளகாய்த்தூள், 1கப் கடுகுத்தூள்,1 கப் கல்லுப்பு,2 கப் நல்லெண்ணெய், 1/2 கப் வெந்தயம்,மஞ்சள் தூள் செய்முறை –நல்ல தோல் கட்டியாக இருக்கிற மாங்காய் வாங்கி நன்கு கழுகி துடைத்து தோலுடன் பெரிய துண்டாக கட் பண்ணி வெச்சுக்கவும். ஈரம் இருக்கவே கூடாது.இந்த மாங்காய் அளவு6:1 விகிதத்தில் கலந்துக்கவும் ஒரு பரந்த பாத்திரத்தில் எல்லா பொடிகளையும் முதலில் கலந்துக்கவும். உப்பு, மிளகாய் தூள், கடுகுத்தூள், வெந்தயம், மஞ்சள்தூள்,எண்ணெய் எல்லாம் நல்லா கலந்து வெச்சுக்கவும்.ஊறுகாய் போடப்போகும் ஜாடியில் இந்தக்கலவை போட்டு மேலே மாங்காய் துண்டுகளை போட்டு(layer) நன்றாக கிளறி மூடி வெச்சுடவும். ரெண்டு நாள் கழிஞ்சு திரும்பவும் கிளறி கொடுக்கவும். இதேபோல் விட்டு, விட்டு கிளறிகொடுத்து,15 நாள் கழிஞ்சு பார்த்தால் மாங்காய் நன்கு ஊறி எண்ணெய் மேலே எழும்பி இருக்கும்.இப்போ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட தயார். இந்த ஊறுகாயை, 1 வருஷம் வரை வைத்திருந்து சாப்பிடலாம் கெட்டு போகாது.இந்த ஊறுகாய்க்குpreservative ஆக கடுகும், உப்பும், எண்ணெய் மட்டும் தான்.

Apr 25, 2025

கிராமத்து பிரண்டைஊறுகாய் (village style pirandai pickle )

தேவையான பொருட்கள் - 1 கப்சுத்தம் செய்து நறுக்கின பிரண்டை,1/4 கப் நறுக்கின பெரிய வெங்காயம் ,2டேபிள்ஸ்பூன் தோலுரித்து நறுக்கின பூண்டு,1டீ ஸ்பூன் ம.தூள், 2 ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்,தேவைக்குகல்லுப்பு, 2 1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் வெந்தயம்.2 சி.மிளகாய்,1 ஆர்க்குகருவேப்பிலை, 1 ஸ்பூன்பெருங்காயத் தூள், 1/4 கப் ந.எண்ணெய்,.1 கோலி குண்டளவு புளி செய்முறை –பிரண்டையை நன்கு சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை நன்கு வறுக்கவும்.வறுத்து தட்டில் ஆற விடவும்.சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு,சற்று கொரகொரப்பாக பொடித்து தட்டில் போடவும்.அடுப்பைமீடியத்தில்வைத்து,ந.எண்ணெய்காய்ந்ததும்,வெங்காயம், புளி,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.பௌலில் ஆற விடவும்.பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.கடாயில்,மீதமான ந.எண்ணெயில், பிரண்டையை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.அரைத்த விழுதுடன், வதக்கிய பிரண்டையை போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகை போடவும்.கடுகு பொரிந்ததும், மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.தாளித்த எண்ணெயில், ம.தூள், மி.தூள், உப்பு போட்டு நன்கு, வதக்கவும்.அடுத்து வதக்கிய விழுதை போட்டு ஒன்று சேர சுருள வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு, வறுத்த பொடி, பெருங்காயத் தூள் போட்டு கிளறவும்.அடுத்து,பௌலுக்கு, மாற்றி, மேலே காய்ச்சாத ந.எண்ணெயை விடவும். இப்போது, சுவையான, ஆரோக்கியமான, கிராமத்து பிரண்டை ஊறுகாய் தயார்.

Apr 25, 2025

சின்னவெங்காயஊறுகாய் (shallots pickel)

தேவையான பொருட்கள் -  2 கப் சாம்பார் சின்னவெங்காயம் உரித்தது. ஒரு பெரிய நெல்லிக்காய்அளவு புளி,வெல்லப்பாகு1கரண்டி,தேவைக்கு உப்பு,தேவைக்கு நல்லெண்ணெய்,வரமிளகாய் , அரைஸ்பூன் பெருங்காயம்,1ஸ்பூன் கடுகு, அரைஸ்பூன் வெந்தயம்செய்முறை –முதலில்சின்னவெங்காயத்தைஉரித்து வைத்துக்கொள்ளவும்.கடுகு,வெந்தயம்வறுத்து அரைப்பதற்கு எடுத்து வைக்கவும். ஊறுகாய்போடுவதற்கு கடுகு,வெந்தயப்பொடி தான் ஸ்பெசல்.புளியை தண்ணீரில் சிறிதுநேரம்ஊறவைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில்,வெங்காயம்,வரமிளகாய்,புளிமூன்றையும் அரைக்கவும். கடுகு,வெந்தயம்வறுத்து பொடிபண்ணிக்கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, பின்பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுபின்பெருங்காயப்பொடிசேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.நன்குகொதிக்கவிடவும்.பின்னர்வெல்லப்பாகுசேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.பின் இறக்கிவைக்கும் போது வெந்தயப்பொடி, காயப்பொடி சேர்த்து உடனே கேஸை ஆப் செய்து விடவும்.எண்ணெய்பிரிந்துஅழகாகஊறுகாய் பளபள வென்று இருக்கும்.வெங்காய ஊறுகாய் ரெடி.இந்தவெங்காயஊறுகாய் இட்லி,தோசை,சப்பாத்தி, சாதம்எதற்கும் ஏற்ற தாகஇருக்கும்.

Apr 25, 2025

மஸ்ரூம் ஊறுகாய் ( mushroom pickel )

தேவையான பொருட்கள் -  ஒரு கப் நல்லெண்ணெய் ,ஒரு பாக்கெட் மஸ்ரூம் ,கால்ஸ்பூன் கடுகு பொடி,இரண்டு ஸ்பூன்எலுமிச்சை பழச்சாறு,தேவையான அளவு உப்பு,கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்,அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்,அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்,ஒருஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுசெய்முறை -  மஸ்ரூம் ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கரம் மசாலாத்தூள் ,கடுகு தூள், உப்பு,சேர்த்து வதக்கவும்.மஷ்ரூம் நன்றாக வெந்ததும், கடைசியாக எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்கவும். ஊறுகாய் ஆறியதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் உபயோகப்படுத்தலாம்.

Apr 18, 2025

காளான் தொக்கு. (Mushroom Thokku) 

தேவையானவை:காளான் - 1 கப் (நறுக்கியது)நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்உப்பு -தேவையான அளவுஎண்ணெய் - 2 டீஸ்பூன்கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவுகரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்சாம்பார்பொடி தனியாதூள். 1 டீஸ்பூன்செய்முறை:முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் சாம்பார்பொடி, கரம்மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்மசாலா உடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும் பின் உப்பு சேர்த்து, சிறிது நீர்விட்டு வேகவைக்கவும் காளான் நன்றாக வெந்து நீர் வற்றியதும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Apr 18, 2025

இஞ்சி தொக்கு. (Ginger Thokku)

 தேவையானவை :இஞ்சி -1/4கிலோஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் -தேவையான அளவுபச்சை மிளகாய்-50 கிராம்புளி - 100 கிராம்வெல்லம் - சிறு துண்டுதாளிக்க தேவையானவை :கடுகு -1ஸ்பூன்,வெந்தயம் -1 ஸ்பூன், எண்ணெய் - 3 ஸ்பூன், பெருங்காயம் - 1 ஸ்பூன் செய்முறை;நான்கு கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயைக் கறிக் கொள்ளவும் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் புளி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் வாணலியில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் இதில் அரைத்து விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.

Apr 18, 2025

பூண்டு தொக்கு  ( Garlic Thokku )

தேவையான பொருட்கள்:பூண்டு - 20 லிருந்து 25மிளகாய் பொடி-2 tbspsகொத்தமல்லி பொடி-1tbspகடுகு-1 tspவெந்தையம்-1 tspபெருங்காய பொடி-3tspகறிவேப்பிலை- தேவைக்கேற்பபுளி - சிறிய எலுமிச்சை அளவுஉப்பு-தேவைக்கேற்பநல்லஎண்ணெய்-2 தேக்கரண்டியளவுசெய்முறைமுதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.1/4  tsp கடுகையும் ,வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகையும் வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் பெருங்காய பொடி பூண்டையும் சேர்த்து வதக்கவும்."நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள் கொத்தமல்லி பொடி ஆகியவற்றைசேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும்.

1 2 ... 40 41 42 43 44 45 46 ... 72 73

AD's



More News