தேவையான பொருட்கள் - 3 வாழைப்பழம் , 1/4 கப்சர்க்கரை ,1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,10 முந்திரி,10 திராட்சை, 1 - 1/2 கப் பால் , 1/4 கப்கன்டஸ்டென்ட் மில்க்செய்முறை - வாழைப்பழத்தில் தோல் உரித்து சின்ன துண்டுகளாக கட் செய்து மசிக்கவும்.கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சைகளை வறுத்து எடுக்கவும். பின்னர் கடாயில் மதித்து வாழைப்பழத்தை போட்டு கிளறவும்.பின்னர் அதில் பால் சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்க்கவும். பின்னர் கன்டஸ்டென்ட் மில்க் சேர்த்து கொதிக்க விட்டு முந்திரி திராட்சைகளை சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான வாழைப்பழ பாயாசம் ரெடி.
தேவையான பொருட்கள் - 100 கிராம் குதிரைவாலி அரிசி ,1/2 கப் மில்க்மெய்ட் ,2 லிட்டர் பால் , தேவையானஅளவு சர்க்கரைதாளிக்க - 3 மேஜைக்கரண்டி நெய் ,2 மேஜைக் கரண்டி முந்திரி , 2 மேஜைக்கரண்டி பாதாம்செய்முறை- ஒரு அடிகனமான பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியைக் கழுவி சேர்க்கவும். இதோடு காய வைத்த பாலை சேர்த்து அடுப்பை ஆன் செய்து மிதமான தீயில் அரிசி வேகும் வரை கிளறிக்கொண்டே வேக வைக்கவும்.அரிசி வெந்தபின் தேவைப்படும் அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்த பின் மில்க் மெய்டு சேர்த்து கலக்கவும்.தாளிக்க நெய் சேர்த்து உருகியதும் நீளமாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்த்துக் கலக்கவும்
தேவையான பொருட்கள்: இன நுங்கு -5, பசும்பால் 1 லிட்டர், மில்க்மெய்டு -1 கப், சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூன் -1/2 ஸ்பூன், பாதாம் பருப்பு துருவல் - 2 டீஸ்பூன், செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பாலில் மில்க்மெய்டை ஊற்றி 15 நிமிடங்கள் 'சிம்மில் வைத்து கிளறி, ஏலக்காய் மற்றும் நுங்குகளை சிறு சிறு துண்டுகளாக்கி போடவும்.அடுப்பில் இருந்து இறக்கியவுடன் பாதாம் துருவலை கலக்கவும். சுவையான நுங்கு பாயசம் தயார். இதை குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து பரிமாறினால் சுவை இன்னமும் அதிகமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - 1/2கப் கருப்பு கவுணி ,3/4 கப் சக்கரை 3 கப் பால்,2 டீஸ்பூன் நெய் , முந்திரி, ஏலக்காய் தேவையான அளவு செய்முறை- முதலில் கவுணி அரிசியை நன்கு கழுகி அதன் பிறகு8மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்.ஒரு குக்கரில் கவுணி அரிசி 3 பங்கு தண்ணி (1கப் பால் + 2கப் தண்ணி)விட்டு மீடியும் ஹீட்டில் 6-7 விசில் விட்டு ஸ்டவ் ஆப் செய்துடவும்.பிரஷர் போன பிறகு குக்கரை திறந்து பார்த்தால் நன்றாக வெந்திருக்கும்., அதை சூடாக இருக்கும்போதே நன்றாக மசித்து விட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்அதன் பிறகு சக்கரை,சேர்த்து நன்கு கிளறி,அத்துடன் மீதி பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக சிம்மில். வைத்து கொதிக்க விட்டு ஸ்டவ் ஆப் செய்து கீழே இறக்கி விடவும்.கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்... மிக ஆரோக்கியம் மிக்க சுவையுடன் கூடிய கருப்பு கவுணி பால் பாயசம் தயார்.
தேவையான பொருட்கள் – 1 கப் தாமரை விதை , அரைலிட்டர் பால்,தேவையான அளவு மில்க்மெய்ட் அல்லது சர்க்கரை தேவையான அளவுதேவையான அளவுநெய் , தேவையான அளவு முந்திரி திராட்சை , தேவையான அளவு பாதாம் செய்முறை - ஸ்டவ் ஆன் செய்து ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.மற்றொரு ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தாமரை விதைகளை போட்டு சிறிது நெய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.நன்றாக காய்ச்சிய பாலில் மில்க்மெய்ட் சேர்த்து தாமரை விதைகளை சேர்த்து நன்றாக கிளறவும். 15 லிருந்து20 நிமிடம் வரை நன்றாக கொதிக்கவிடவும்.அதில் தேவையான அளவு மில்க்மெய்ட் அல்லது சர்க்கரை சேர்த்து இறக்கவும்.பின் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் திராட்சை நன்றாக வறுத்து எடுத்து அதில் கலந்து கொள்ளவும்.சுவையான தாமரை விதை பாயாசம் தயார்.
தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2 1/2 கிலோ, பூண்டு – 1/4 கிலோ, உளுத்தம்பருப்பு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், கடுகு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் தூள் – 50 கிராம், தனியா தூள் – 50 கிராம், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 4 கொத்து, உப்பு – 100 கிராம், (நல்லெண்ணெய் – 50 ml தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன்).செய்முறை:முதலில் வெங்காயத்தை மட்டும் சிறியதாக(பொடிப் பொடியாக), நறுக்கிக் கொள்ள வேண்டும். கையில் நறுக்க முடியாதவர்கள், வெங்காயத்தை தோலுரித்து, நான்காக வெட்டி, மிக்ஸியில் போட்டுpush பட்டன் வைத்துக்கூட சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்வார்கள். மிக்ஸியில் போட்டு மொழுமொழுவென்று அரைத்து விடக்கூடாது. ரிவர்ஸ் பட்டன் வச்சு ஒரு ஓட்டு ஓட்டிகோங்க.அடுத்ததாக பூண்டு. பூண்டின் மேல் தோலை மட்டும் உரித்து தனித்தனி திரிகளாக எடுத்துக்கொண்டால், போதும். உள்ளே இருக்கும் தோலை உரிக்க வேண்டாம். அதை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு, ஓட்டி ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது நல்ல பெரிய, குவாலிட்டியான பிளாஸ்டிக் டப்பாவை, எடுத்துக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து வைத்திருக்கும் பூண்டு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, தனி மிளகாய் தூள், தனியா தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மேல் குறிப்பிட்டுள்ள அளவின்படி, சேர்த்து ஒரு கரண்டியை போட்டு, எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கி, வைத்துவிடவேண்டும். முடிந்தால் பக்கெட்டோடு எடுத்து, ஒரு குலுக்கு குலுக்கி வைத்து விடலாம். ஒரு வெள்ளைத் துணியை அந்த பக்கெட்டின் மேல், நூல் போட்டு கட்டி மூடி வைத்துவிட வேண்டும். தட்டு போட்டு மூடக்கூடாது.இரண்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். மூன்றாவது நாள் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை, ஒரு தாம்பாளத் தட்டில் மேல், பெரிய பிளாஸ்டிக் கவராக விரித்து, அதன் மேல் இந்த கலவையை கொட்டி வெயிலில் காய வைக்க வேண்டும். வெங்காயத்தில் லேசாக தண்ணீர் விட்டிருக்கும். அதோடு சேர்த்து வெயிலில் காய வைத்து விடுங்கள். 5ல் இருந்து9 நாட்கள் வரை, வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை காயவைக்கவேண்டும். வெங்காயத்தில், ஈரப்பதம் உள்ளதா என்பதை, பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். ஐந்து நாட்களுக்குப் பிறகு6வது நாள்,7வது நாள், எந்த நாளில் வேண்டுமென்றாலும் பின்வருமாறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்(அதிக வெயிலில் ஒன்பது நாள் வரை காய வைத்தீர்கள் என்றால் மொறுமொறுவென்று ஆகிவிடும். உருண்டை பிடிக்க வராது.)
தேவையான பொருட்கள் - பிரண்டை நறுக்கியது - 2 கப் ,ஜவ்வரிசி - 500 கிராம் ,சீரகம் - 2 தேக்கரண்டி ,எலுமிச்சம் பழம் - 3,பச்சை மிளகாய் - 10,எண்ணெய்,சமையல் சோடா,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:ஜவ்வரிசியை,10 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரில் காய்ச்சவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், பிரண்டையை வதக்கவும். ஆறியதும் அரைத்து, காய்ச்சிய ஜவ்வரிசியுடன் சேர்த்து கொதிக்க விடவும். பின், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, சமையல் சோடா சேர்த்து கிளறி ஆறவிடவும்வெயிலில் சுத்தமான பருத்தி துணியை விரித்து ஆறிய கலவையை சிறிது சிறிதாக ஊற்றி காய வைக்கவும். நலம் தரும் பிரண்டை வடகம்' தயார். எண்ணெயில் பொரித்து மதிய உணவுடன் சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - கேழ்வரகு - 1 கிலோ, உப்பு - இரண்டு தேக்கரண்டி.செய்முறை: கேழ்வரகை ஊறவைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.1 கிலோ கேழ்வரகிற்கு,20 கப் நீர் ஊற்றி, பாலை பிழிந்து எடுக்கலாம். இரவு முழுவதும் இந்தப் பாலைப் புளிக்க வைத்து, மறுநாள் காலை நன்கு கலக்கி, அடுப்பில் வைத்துக் கைவிடாமல் நன்கு கிளறவும்.கண்ணாடி போல் வெந்து வந்ததும், உப்பு சேர்த்து கலக்கி இறக்கவும். கையை நீரில் நனைத்து மாவை தொட்டால், ஒட்டாமல் இருக்க வேண்டும். இதுவே பதம்.காட்டன் துணியை நீரில் நனைத்து, பாய் மேல் விரித்து, கேழ்வரகு கூழைக் கரண்டியால், வடகம் போல் ஊற்றி, தடவி காய விடவும். மாலையில், துணியை திருப்பிப் போட்டு நீர் தெளித்து, வடகங்களை தனியாக எடுக்கவும். நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து, பொரித்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் - உளுந்து - இரண்டு கப், சின்ன வெங்காயம் - 1 கிலோ, பூண்டு 50 கிராம், கடுகு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - இரண்டு தேக்கரண்டி, ஜவ்வரிசி 50 கிராம், வரமிளகாய் -20 அல்லது மிளகாய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, உப்பு - இரண்டு தேக்கரண்டி, கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி. செய்முறை: உளுந்தை ஊற வைத்து,நீர் இல்லாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும். வரமிளகாயையும் ஊறவைத்து நீரில்லாமல் அரைத்து, இதில் சேர்க்கவும் அல்லது மிளகாய் பொடியைப் போட்டுக் கொள்ளவும்.ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வடித்து இதில் போடவும். சீரகம் மற்றும் கடுகை சேர்க்கவும். தேவையான உப்பை சேர்க்கவும். கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து, பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். அனைத்தையும் நன்கு பிசைந்து கொள்ளவும்.பாயை விரித்து, அதன் மேல் காட்டன் துணி அல்லது புடவையை நனைத்து பிழிந்து போடவும். இதில்,கறிவடக மாவை எடுத்து கிள்ளி, கிள்ளி வைக்கவும். மாலையில் காய்ந்ததும் தாம்பாளத்துக்கு மாற்றித் திருப்பி வைக்கவும். நான்கைந்து நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்துப் பத்திரப்படுத்தவும். தயிர் சாதம், சாம்பார் சாதத்துக்கு இதை பொரித்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் - பச்சரிசி - 1 கிலோ, உப்பு - இரண்டு தேக்கரண்டி.செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து,உப்பு சேர்த்து, முதல் நாள் இரவே அரைத்து வைக்கவும்.மறுநாள் காலை ஒரு பெரிய பாத்திரத்தில், ஆறு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சிறிது வெந்நீரை எடுத்து அரைத்தமாவில் சேர்த்து கரைத்து, கொதிக்கும்போது மெதுவாக ஊற்றியபடி கிளறவும். கண்ணாடி போல் வெந்து, ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.ஈரமான காட்டன் துணியை, பாய் மேல் விரித்து வைக்கவும். கூழ் மாவை ரிப்பன் பகோடா அச்சில் போட்டு நீளமாக பிழியவும். வெயிலில் நன்கு காய்ந்ததும், மாலையில் துணியைத் திருப்பி போட்டு தண்ணீர் தெளித்து, உரித்து எடுக்கவும். நறுக்கி நான்கு நாட்கள் காய வைத்து எடுக்கவும். இதை பொரித்து சாப்பிடலாம்.