தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடியளவு. எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, தண்ணீர்-தேவையான அளவு.செய்முறை: கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.குறிப்பு: உடல் எடையைக் குறைக்க உதவும்; கோடையில் வரும் கண் சம்பந்தமான கோளாறுகளைத் தடுக்கும்.
தேவையானவை : பீட்ரூட் துருவல் - கால் கப், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை தேவையான அளவு.செய்முறை:பீட்ரூட் துருவலுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும். தயிருடன் சர்க்கரை, பீட்ரூட் விழுது சேர்த்துக் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பு: கால்சியம் நிறைந்தது; ரத்தச் சோகையை சரிசெய்ய உதவுகிறது.
தேவையானவை : வெள்ளரித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 4 டீஸ்பூன், மோர் ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு.செய்முறை:வெள்ளரித் துருவலுடன் மாங்காய்த் துருவல் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து நுரை வரும் வரை அரைத்து எடுக்கவும். கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றிப் பரிமாறவும்.
தேவையானவை: கிவி பழம் ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை தேவையான அளவு.செய்முறை: கிவி பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.
தேவையானவை:கேரட்(விரல் நீள துண்டு)ஒன்று, ஆரஞ்சு பழச்சுளைகள்-10, சர்க்கரை தேவையான அளவு, ஐஸ் கட்டிகள் தேவையான அளவு.செய்முறை: கேரட் துண்டுடன் ஆரஞ்சு சுளைகள், சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டவும். ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகவும்.
தேவையான பொருட்கள்:முருங்கை பூ- 1 கப்,தக்காளி -1,புளி, உப்பு, ரசப்பொடி -சிறிதளவுதுவரம் பருப்பு,மிளகு, சீரகம்,தண்ணீர்,நெய்- தேவையான அளவு.செய்முறை:புளியை நீரில் கரைத்து, அதில் முருங்கை பூ, பொடியாக நறுக்கிய தக்காளி, ரசப்பொடி கலந்து கொதிக்க விடவும். நன்றாக வேகவைத்த துவரம் பருப்பை அதில் சேர்த்து கொதித்த பின், நெய்யில் தாளித்த சீரகம், மிளகு போடவும். உப்பு சேர்த்து இறக்கவும்.சுவைமிக்க,'முருங்கை பூ ரசம்!' தயார். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர உதவும்.
தேவையான பொருட்கள் - 15 தூதுவளை இலை,2 தேக்கரண்டி மிளகு,2 தேக்கரண்டி சீரகம், 6 பல் பூண்டு,3 பச்சை மிளகாய் , 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் , தேவையானஅளவு உப்பு , கொத்தமல்லி இலை, 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்செய்முறை - தூதுவளை இலையை கத்தரிக்கோல் கொண்டு முள் குத்தாதவாறு வெட்டிக் கொள்ளவும். அதில் பின் பக்கம் இருக்கும் முல்லை கிள்ளி எடுக்கவும். நன்றாக அலசி வைக்கவும். மிக்ஸியில் மிளகு, சீரகம் பூண்டு பச்சை மிளகாய்4 கருவேப்பிலை கூடவே தூதுவளை இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.புளியை தண்ணீரில் ஊற வைக்கவும் இதில் தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கரைத்து கரைசல் தயாரிக்கவும்.அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதன்பின் அரைத்த மிளகு சீரகம் மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.நுரை கட்டி வந்த பின் அடுப்பை அணைக்கவும். மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை ரசம் சாப்பிட சளி குணமாகும்.
தேவையான பொருட்கள் - 2 கருப்பு வெற்றிலைஅரைக்க:- 1டீ ஸ்பூன்மிளகு 1டீ ஸ்பூன்சீரகம்,.4 பூண்டு .1டீ ஸ்பூன்தனியா,1ப.மிளகாய் , 2தக்காளி . 1கப்புளி கரைசல்தாளிக்க:- 1டீ ஸ்பூன்கடுகு, 2 ஸ்பூன்பசு நெய்,2 சி.மிளகாய்,1டீ ஸ்பூன்சீரகம்,1டீ ஸ்பூன்ம,தூள்,1டம்ளர் தண்ணீர்,கொத்தமல்லி இலை 2 ஸ்பூன், அலங்கரிக்க – வெற்றிலைதுண்டுகள்செய்முறை - தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.மிக்ஸி ஜாரில், தனியா, மிளகு, சீரகம், ப.மிளகாய், பூண்டு, ஆகியவற்றை போட்டு சற்று கொர கொரப்பாக, அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், சி.மிளகாய், தாளித்ததும், ம.தூள், உப்பு போடவும்.அடுத்து புளிக் கரைசலை ஊற்றி, 5 நிமிடம் புளி வாசனை போக கொதித்ததும், அரைத்த விழுதை போடவும்.கொதித்து ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.சிறிய கடாயில் நெய் காய்ந்ததும், வெற்றிலை துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கினதை ரசத்தில் கலக்கவும்.ஒன்று சேர கிளறி அடுப்பை நிறுத்தி விட்டு, ரசத்தை பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுடசுட, மருத்துவ குணம் நிறைந்த,வெற்றிலை ரசம் தயார்.சளி, இருமலுக்கு ஏற்ற ரசம்.சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம்.வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகை ஆகும்.பசியை தூண்டக் கூடியது.வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தை போக்கக் கூடியது.
தேவையான பொருட்கள் - 1/2 கப் - ஆரஞ்சு சாறு,4 நடுத்தரமான தக்காளி, நெல்லி அளவு – புளி,1 சிட்டிகை – பெருங்காயம்,சிறிதளவு-கருவேப்பிலை, மல்லி,தேவையானஅளவு –எண்ணெய், தேவையான அளவு – உப்பு ,1/4 டீஸ்பூன் கடுகு , 2 -வற்றல்வறுத்து பொடிக்க - 1டீஸ்பூன்மிளகு ,1டீஸ்பூன்சீரகம்,5 பல் பூண்டு -1/2 டீஸ்பூன்கடலைபருப்பு , 1/4 டீஸ்பூன்மல்லி, 1/2 டீஸ்பூன்வெந்தயம் -செய்முறை - தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.வாணலியில்எண்ணெய்ஊற்றிபெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர்,ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள்,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
தேவையான பொருட்கள் - 11/2cupகொள்ளு வேக வைத்த தண்ணி,1 சிறிய எலுமிச்சம் பழ அளவு புளி,1/2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி சீரகம், மிளகு, கடுகு , 5 பல் பூண்டு, சிறிதளவு பெருங்காயம்,தேவையான அளவு உப்பு ,ஒரு பிடி கருவேப்பிலை,1பிடி(கொத்தமல்லி தழை.செய்முறை – வரக்கொத்தமல்லி சீரகம், மிளகு, பூண்டு ஒரு வரமிளகாய், மஞ்சள் தூள் உப்பு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.கொள்ளு வேகவைத்து அதிலிருந்து அந்த தண்ணியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும் .அந்த தண்ணீரில் நாம் அரைத்ததை எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும்.புளித் தண்ணியை நன்றாக கரைத்து இதில் சேர்த்து விடவும்.மேலே கருவேப்பிலை கொத்தமல்லித்தழை அனைத்தையும் போட்டு வைத்துக் கொள்ளவும்.வானொலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் தாளித்து இந்த தண்ணீரில் ஊற்றி கொதிக்க விட வேண்டாம். நுரை கட்டி உடன் இறக்கி வைத்து விடுவோம் கொள்ளு ரசம் உடம்புக்கு ரொம்ப நல்லது மிகவும் சுவையாக இருக்கும்.