25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Jul 05, 2025

ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்.

தேவையான பொருட்கள்ஓட்ஸ் 2கப் , ரவை ஒரு கப்,தயிர் ஒரு கப், சோடா உப்பு கால் ஸ்பூன் , உப்பு தேவையான அளவு,எண்ணெய் தேவையான அளவுஅலங்கரிக்க தேவையானவை – வெங்காயம்,கேரட் ,கறிவேப்பிலை,கொத்தமல்லிசெய்முறை முதலில் ஒரு வாணலியில் ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும்.பிறகு வறுத்த ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.பொடித்த ஓட்ஸ் உடன் ரவை சோடா உப்பு தயிர் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் மூடி போட்டு ஊறவிடவும்.ஊறிய பிறகு தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.பிறகு தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊத்தாப்பமாக ஊற்றி அதன்மேல் வெங்காயம் ,கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ,மிளகுத்தூள், உப்பு ,ஆகியவை கலந்து ஊத்தாப்பத்தின் மேல் பரப்பி விட்டு எண்ணெய் ஊற்றி ,வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான ஓட்ஸ் ஊத்தாப்பம் தயார்.

Jul 05, 2025

பனீர் வெங்காய ஊத்தாப்பம்  .

தேவையான பொருட்கள்:தோசை மாவு - 2 கப், பனீர் - 1/2 கப் (துருவியது), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது),எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு , மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) செய்முறை:ஒரு பாத்திரத்தில் தோசை மாவுடன் உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.அதில் துருவிய பனீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.தோசை கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவவும்.ஒரு கரண்டி மாவை ஊற்றி, மெதுவாக வட்டமாக பரப்பவும்.நடுவில் பனீர் கலவையை வைத்து லேசாக அழுத்தவும்.இருபுறமும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.சூடான பனீர் வெங்காய ஊத்தாப்பத்தை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும். 

Jul 05, 2025

பார்லி ஊத்தாப்பம்.

தேவையான பொருட்கள்:பார்லி மாவு - 1 கப்,புளித்த தோசை மாவு - 1 கப்,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),,தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது),கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது),எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை:பார்லி மாவை தோசை மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கரைக்கவும். மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.சூடான தோசை கல்லில், ஒரு கரண்டி மாவை ஊற்றி, மெல்லியதாக பரப்பவும்.நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை மாவின் மேல் தூவவும்.எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.சுவையான பார்லி ஊத்தாப்பம் தயார். 

Jul 05, 2025

வெங்காய ஊத்தாப்பம் .

தேவையான பொருட்கள்: தோசை மாவு, பெரிய வெங்காயம், தேவையான அளவுநெய், இட்லி பொடி, கொத்தமல்லிசெய்முறை :தோசை கல்லில் சிறிய அளவில் கெட்டியாக மாவு ஊற்ற வேண்டும்.நெய் விட்டு அதன் மேல் நறுக்கிய வெங்காயம்,இட்லி பொடி சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும்.சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Jun 28, 2025

ஸ்வீட் கார்ன் தோசை

தேவையான பொருட்கள்3 தக்காளி,6 வரமிளகாய்,7 முந்திரி,1 வெங்காயம் பொடியாக,1 குட மிளகாய் பொடியாக, சிறிதுமல்லித்தழை,தேவையானஅளவு எண்ணெய், 1 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன்,2 கப் இட்லி மாவு,.தேவையான அளவு உப்பு,1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 வெங்காயம்செய்முறை மிக்ஸியில் தக்காளி முந்திரி வர மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்ததை ஊற்றி உப்பு சேர்த்து வதக்கவும்.தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதில் வதக்கிய மசாலா வைத்து தேய்க்கவும்.பின் வெங்காயம், குட மிளகாய், ஸ்வீட் கார்ன், மல்லித்தழை பரப்பி விட்டு நெய் விட்டு மூன்றாக மடித்து எடுத்து பரிமாறவும்.

Jun 28, 2025

மரவள்ளி கிழங்கு தோசை

தேவையான பொருட்கள்1கப் இட்லி அரிசி,1கப் துருவிய மரவள்ளிக்கிழங்கு,1/2ஸ்பூன் மிளகு,1/2 ஸ்பூன் சீரகம்,8 காய்ந்தமிளகாய், தேவைக்கு உப்பு,தேவைக்கு எண்ணெய், 1/2ஸ்பூன் கடுகு.,ஒரு கொத்து குறிவேப்பிலை.,தேவைக்கு தண்ணீர்.செய்முறை ஒரு கப் இட்லி அரிசியை2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு துருவிய மரவள்ளிக்கிழங்கு அதனுடன் சேர்த்து மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.மரவள்ளிக்கிழங்கை அரைத்தவுடன் அதனுடன் ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.பின்பு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். மூன்று மணி நேரம் புளிக்க விடவேண்டும். தோசைக்கல்லை சூடு செய்து தோசை வார்க்கவும்.இப்பொழுது சூடான மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.சுவைக்கு தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஈஸியான சத்தான கிழங்கு தோசை ரெடி.

Jun 28, 2025

காளான் தோசை.

தேவையான பொருட்கள்200 கிராம்காளான்,2டீஸ்பூன் எண்ணெய், 1 பெரிய வெங்காயம்,1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன்கரம் மசாலா,தேவையான அளவு உப்பு,தேவையான அளவுதோசை மாவு,செய்முறைஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.பின்பு தோசை வார்த்து அதன் மேல் காளானை பரப்பி வேக வைக்கவும்.சுவையான காளான் தோசை தயார்.

Jun 28, 2025

ராகி தோசை.

தேவையான பொருட்கள் ஒரு கப் ராகி மாவு,மூன்று டேபிள் ஸ்பூன் வறுத்த ரவை,1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய்,தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய்செய்முறை ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, உப்பு ,தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். 15 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.அதன் பிறகு கரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை ,சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கெட்டியாகும். தோசை மாவு ஊற்றும்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுப்பைப் பற்றவைத்து தோசைக் கல் சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து சுற்றி தோசை ஊற்றவும்.ஊத்திய பின்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு தோசை நன்றாக சுட்டு எடுக்கவும்.இப்போது சுவையான மொறுமொறு தோசை தயார் சூடாக சாப்பிடலாம்.

Jun 28, 2025

பாலக் கீரை அடை தோசை.

தேவையான பொருட்கள் 1கப் இட்லி அரிசி,1/2 கப் பச்சரிசி,1/2 கப் துவரம்பருப்பு,1/4 கப் கடலை பருப்பு,1டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய் அல்லது வத்தல் மிளகாய் தேவைக்கு,10-15 பாலக்இலைகள்,1/2 ஸ்பூன் பெருங்காய தூள்உப்பு தேங்காய் எண்ணெய் தேவைக்கு,ஒரு துண்டு இஞ்சிசெய்முறைமுதலில் அரிசி, பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக்கவும்.அதை மிக்ஸியில் இஞ்சி ,பச்சை மிளகாய், பெருங்காயம், சேர்த்து அரைத்த பிறகு கடைசியா பாலக் கீரை சேர்த்து அரைத்து எடுத்துக்கவும்.அத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஸ்டவ்வில் தோசை தவா வைத்து சூடானதும்.மெல்லிசா அடை வார்க்கவும். சுத்தி தேங்காய் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்அழகான பச்சை நிறத்தில் அருமையான சுவையில் பாலக் அடை தோசை தயார்... வெங்காயம், பூண்டு எதுவும் நான் சேர்க்க வில்லை.... விரும்பினால் சேர்த்தும் செய்யலாம்.... தக்காளி மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

Jun 28, 2025

சுரைக்காய் அடை தோசை .

தேவையான பொருட்கள்1 கப் இட்லி அரிசி,2 டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 2டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு, 2 மிளகாய் வற்றல், 1 சிறிய துண்டு இஞ்சி,1கப் நறுக்கிய சுரைக்காய்,1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்,1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய் செய்முறை ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு சேர்க்கவும்.பின்பு கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி பருப்பு வகைகளை கழுவி இதனுடன் மிளகாய் வற்றல், இஞ்சி துண்டு மற்றும் சுரைக்காய் சேர்க்கவும்.இதனுடன் சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.பின்பு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் வைக்கவும்.தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.தேவையான அளவு எண்ணெய் தெளித்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 72 73

AD's



More News