தேவையான பொருட்கள் - 5மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணை,.2½கப் தனியா,முக்கால் கப் பெருஞ்சீரகம்.,கால் கப் வெந்தயம்,15கார சிகப்பு மிளகாய்,10 கறிவேப்பிலை,½கப் திப்பிலி,1 தேக்கரண்டி பெருங்காயம் ரசம் செய்ய - 2 மேஜை கரண்டி துவரம்பருப்பு,1 மேஜைகரண்டி தேங்காய் எண்ணை, 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்,1தேக்கரண்டி கடுகு,1தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது,2 வரமிளகாய்,¼ கப் கறிவேப்பிலை,சிட்டிகை பெருங்காயம்,அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி,1கப் தக்காளி துண்டுகள்,½தேக்கரண்டி புளி பேஸ்ட் (paste),1/4 கப் வெல்லம் பொடித்தது (ஆப்ஷனல்),2½மேஜை கரண்டி ரச பொடி,கால் கப் கொத்தமல்லி ,தேவையான உப்பு செய்முறை - ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்கரசப் பொடி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சிறிது சூடான பின் தனியா வறுக்க. பொன் நிறமானதும், ஒரு கிண்ணத்தி மேல் ஒரு ஜல்லடையில் வடிக்க. வறுத்த தனியாவை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பிண் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், பெருஞ்சீரகம் வறுக்க. சீரகம் பொறிந்த பின் முன் போலவே எண்ணையை வடிக்க. வறுத்த சீரகத்தை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், வெந்தயம் வறுக்க. முன் போலவே எண்ணையை வடித்து, பேப்பர் டவல் மேல் போடவும் .குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், சூடான எண்ணையில் மிளகாய் வறுக்க; காந்த வைக்காதீர்கள். இப்பொழுது அதே வாணலியில் எண்ணை சேர்க்காமல் திப்பிலி, கறி வேப்பிலை வறுக்க பச்சை வாசனை போக. பெருங்காயம் சேர்க்க. வீடு முழுவதும் வாசனை நிரம்பும்.வறுத்தபொருட்களை மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க. பொடி தயார். தட்டில் போட்டு ஆற வைக்க. ஒரு காற்று புகாதairtightcontainer இல் போட்டு சேமித்து வைக்க. தேவையான பொழுது தேவையான அளவு எடுத்து சாம்பார், ரசம் செய்யலாம்.¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க. நீரில் கறையும்.மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் தாளிக்க, மஞ்சள் பொடி, இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்கவும் . பூண்டு வெளி தோலை நீக்கு உள்ளே இருக்கும் கருப்பு பல்களை நசுக்கி சேர்க்கவும் .6 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் . துவரம் பருப்பு, பெருங்காயம் சேர்க்க`10 நிமிடம் ஹைflame மில் கொதிக்க வைக்க,புளி பேஸ்ட்2 கப் நீரில் கரைத்து சேர்க்கவும் .நன்றாக4,5 நிமிடங்கள் கொதிக்கட்டும்.¼ கப் வெல்லம் சேர்க்க. பச்சை வாசனை போகட்டும். கொதி வந்ததும்.2 மேஜைகரண்டி ரச பொடி1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்கவும் . நன்றாக4,5 நிமிடங்கள் கொதிக்கட்டும். உப்பு சேர்த்து கலக்கி பெருங்காயம் சேர்க்க,2 கொதி வரட்டும், அடுப்பை அணைக்க,கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார்.
தேவையான பொருட்கள்-1டம்ளர் சீரகசம்பா அரிசி,1 பாக்கெட் பன்னீர்,1 கப் பச்சை பட்டாணி,1பெரிய வெங்காயம்,1 கப் புதினா இலை,1 பச்சை மிளகாய்,1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1ஸ்பூன் தனி மிளகாய் தூள்,1ஸ்பூன் தனியா தூள், 1சிறியஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1 துண்டு பட்டை, 2 கிராம்பு,1 பிரிஞ்சி இலை, 4 ஸ்பூன் நெய், 2ஸ்பூன் ஆயில்செய்முறை - சீரக சம்பா அரிசியை இருமுறை கழுவி தேவையான நீர் விட்டு10 நிமிடம் ஊறவிடவும். ஒரு பெரிய வெங்காயம் ஒரு பச்சை மிளகாய்நீளவாக்கில் நறுக்கவும். பனீரை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கவும்.இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும். பச்சை பட்டாணி ஒரு கப் எடுத்து வைக்கவும்.குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி ஒரு கப் புதினா தழை சேர்த்து வதக்கவும்.நறுக்கிய பனீர் சேர்த்து தேவையான உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள்சேர்த்து கலந்து விடவும்.தேவையான நீர் விட்டு ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கலந்து குக்கரை மூடி போட்டு சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.சுவையான பன்னீர் புதினா புலவு தயார் .
தேவையான பொருட்கள் – வெங்காயம்-2,பன்னீர்-2பாக்கெட், குடை மிளகாய் 1,தக்காளி 1.1/2,கான்ப்லார் 5 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு,மிளகாய் தூள் தேவையான அளவுகறிமசாலா 11/2 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,டோமேட்டோ சாஸ்,பேப்பர் 2ஸ்பூன் செய்முறை பன்னீரை சிரிதாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் குடை மிளகாய் தக்காளி வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் தக்காளி குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பன்னீரையும் சேர்க்கவும்..மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறிமசாலா தூள் உப்பு சேர்த்து கிளறி தேவைபட்டால் பேப்பர் தூள் சேர்த்து கொள்ளலாம்.பன்னீரையும் சேர்த்து கலந்து கான் பிலார் மாவும் சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ள வேண்டும்.வட்டமாக திரட்டி கொள்ளவும்.அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி பன்னீர் கலவையை பொட்டு பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் கட்லட் ரெடி.
தேவையான பொருட்கள்- தோசை மாவு, பனீர் துருவியது,இட்லிப்பொடி -தேவைக்கு,எண்ணெய்or நெய் - தேவைக்கேற்ப செய்முறை- பனீரைத்துருவிக் கொள்ளவும்.தோசைமாவு,இட்லி பொடி எடுத்துக்கொள்ளவும். துருவியபனீர்,மிளகாய்பொடி, கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கவும்.பின் அடுப்பில் தோசை வாணலியை வைத்து தோசை வார்க்கவும்.இட்லி மிளகாய் பொடி சேர்த்த பனீரை தோசை மீது தூவி தோசையைச்சுற்றி நெய் ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும்.சுவையான பனீர் தோசை ரெடி.சட்னி, இட்லிபொடி, சாம்பார் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்பனீர் ஊற வைக்க :200கி பனீர் 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் 1ஸ்பூன் மிளகாய் தூள்1ஸ்பூன் சீரகத் தூள்1ஸ்பூன் கரம் மசாலா தூள்1ஸ்பூன் தனியா தூள் 1/2ஸ்பூன் உப்பு1ஸ்பூன் வெண்ணை பனீர் வறுப்பதற்குவதக்கி அரைக்க:2ஸ்பூன் வெண்ணை,பெரிய வெங்காயம்-2,தக்காளி-4,1துண்டு பட்டை,4கிராம்பு,2ஏலக்காய்,4,5பல் பூண்டு ,1துண்டு இஞ்சி,6.7 முந்திரிகிரேவி செய்வதற்கு:2டேபிள் ஸ்பூன் வெண்ணை2பிரிஞ்சி இலை, 1ஸ்பூன் மிளகாய் தூள் 1ஸ்பூன் தனியா தூள் 1ஸ்பூன் சீரகத் தூள்1ஸ்பூன் கரம் மசாலா தூள்1ஸ்பூன் கஸ்தூரி மேத்திசிறிதளவுபிரெஷ் கிரீம்தேவையான அளவு உப்புசெய்முறை முதலில் ஒரு ஒரு பாத்திரத்தில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து அத்துடன் பொடிகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறவைத்த பன்னீரை கடாயில் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய் வதக்கியத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் லேசாக வதங்கினதும் அதனுடன் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் அதுவும் லேசாக வதங்கியதும் அதனுடன் முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.பனீர் வறுத்த கடாயிலேயே மீண்டும் வெண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை தாளித்து பொடிகளை சேர்த்து லேசாக வருத்தவுடன் நாம் வதக்கிய வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்த்து கலக்கவும்.வெங்காய தக்காளி விழுதுடன் சிறிது தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு நன்றாக கொதித்ததும் அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.. பன்னீர் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் இறுதியாக கஸ்தூரி மேதியையும் பிரஸ் கிரீமையும் சேர்த்து இறக்கவும்.இப்போது சூடான சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.
தேவையான பொருட்கள் - 200 கி பனீர்,11/2கப்வெண் புழுங்கலரிசி,3/4 கப் ப.பட்டாணி,1 பெரிய வெங்காயம்,2 பிரிஞ்சி இலை,1 ஸ்பூன்சீரகம்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,2 ப.மிளகாய், ருசிக்குஉப்பு, 1/2 கப் பால், 2 1/4 கப் தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன்நெய்,1 டேபிள்ஸ்பூன் நறுக்கின கொத்தமல்லி தழை,அலங்கரிக்க: கட் செய்த வறுத்த பனீர் துண்டுகள்செய்முறை தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.அரிசியை சுத்தம் செய்து தேவையான தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு தண்ணீரை வடித்து விட்டு, 2 1/4 கப் தண்ணீர்,1/2 கப் பால்,1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில்1 விசில் விட்டு குழையாமல் உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.பனீரை சதுர வடிவில் கட் செய்யவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், நெய் விட்டு காய்ந்ததும், பனீரை கருகாமல் பொன்னிறமாக வறுத்து, தட்டில் எடுத்துக் கொள்ளவும்.அதே நெய்யில், சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்ததும், வெங்காயம், ப.மிளகாய்,உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.அடுத்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும், பட்டாணியை சேர்த்து,2 நிமிடம் வெந்ததும், வறுத்த பனீரை சேர்க்கவும்.பிறகு, சாதத்தை போட்டு, பனீர் உடையாமல், ஒன்று சேர மெதுவாக கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.மேலே கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும்.இறக்கினதும்,பிறகு பிளேட்டிற்கு மாற்றவும்.பிளேட்டை சுற்றி பனீர் துண்டுகளை வைத்து, மேலே வறுத்த பனீரை வைத்து அலங்கரிக்கவும். இப்போது, சுவையான பனீர், க்ரீன் பீஸ் புலாவ் தயார்.
தேவையான பொருட்கள் - 1கப் பன்னீர், 1 வெங்காயம்,1 தக்காளி2 பச்சை மிளகாய்,1 பச்சை குடைமிளகாய்,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1/2 கப் கிரீம்,1 டேபிள் ஸ்பூன் பட்டர்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன் சீரகம், 1|பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய்,தேவையான அளவு உப்புசெய்முறை ஒரு கப் பன்னீரை எடுத்து கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலாத்தூள்,உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டர் சேர்த்து உறுகியதும்,சீரகம்,பட்டை, பிரிஞ்சி இலை,இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.அத்துடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின்னர் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்.கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.ஓரளவு கெட்டியானதும், கலந்து இறக்கினால் பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார்.தயாரான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜி சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: நாவல்பழம் 2 டம்ளர், நல்லெண்ணெய் 3 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, சாம்பார் பொடி 1 ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன், சர்க்கரை 5 ஸ்பூன், தயிர் அரை டம்ளர், செய்முறை: நாவல்பழங்களை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை தாளிதம் செய்து, நாவல்பழங்களைப் போட்டு வேகவைக்கவும்.அதில் உப்பு,சாம்பார் பொடி, சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி, அத்துடன் தயிர் ஊற்றிக் கலக்கி, லேசாகக் கிளறி விடவும்.நாவல்பழங்கள்10 நிமிடங்கள் கொட்டை தனியாக பிரியுமாறு வெந்தவுடன் இறக்கி வைக்க வும். கோப்பைகளில் ஊற்றி ஸ்பூன் போட்டு பரிமாறவும்.குறிப்பு:நாவல்பழ கொட்டைகளை அலசி வெயிலில் காயவைத்து, இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.
தேவையான பொருட்கள் - பச்சைப்பட்டாணி (தோல் உரித்தது) - 500 கிராம் கிரீம் - 50 கிராம் சூடான பால் - 100மி.லி ,உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்பசெய்முறை -பச்சைப் பட்டாணியை மூன்று கோப்பை தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.பால் சேர்த்து மீண்டும் சூடாக்கிக் கொள்ள வேண்டும். பரிமாறும் முன் கிரீம் சேர்த்துக் கொள்ளவும். சூடாகப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள் -வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1 வெள்ளரிக்காய் (துருவியது) -1மைதா மாவு - 1 மேசைக்கரண்டி வெண்ணெய் - 25 கிராம்காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மி.லிபாலேடு (அ) கிரீம் – 2 மேசைக்கரண்டிஉப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்பசெய்முறை - வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெயில்வதக்கவும்.பிறகு வெள்ளரிக்காயைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், பாலேட்டையும் சேர்த்து சூடாகப்பரிமாறவும்.