தேவையான பொருட்கள்:துருவிய பீட்ரூட்1 கப்,பெரிய வெங்காயம் 1,வேர்கடலை பருப்பு-25 கிராம்,இட்லி மாவு1 கப்,சீரகம், எண்ணெய், உப்பு தேவையான அளவு,கருவேப்பிலை,மல்லித்தழை, பச்சை மிளகாய்- சிறிதளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும், சீரகம், துருவிய பீட்ரூட், நறுக்கிய மல்லி தழை, வெங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாய், வேர்க்கடலை பருப்பு, உப்பு போட்டு வதக்கவும். இவற்றை இட்லி மாவில் நன்றாக கலக்கவும். பணியார சட்டி சூடானதும், மாவு கலவையை ஊற்றி நன்கு வேக வைக்கவும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும்சத்து மிக்க'பீட்ரூட் பணியாரம்!' தயார்.
தேவையான பொருட்கள்:பீட்ரூட் -2 ,பெரிய வெங்காயம் – 2,பூண்டு - 5 பல்,காய்ந்த மிளகாய்,இஞ்சி, எண்ணெய்- சிறிதளவு ,கடுகு, உப்பு.,தண்ணீர்,,உளுந்தம் பருப்பு.கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும், காய்ந்த மிளகாய், துண்டாக்கிய வெங்காயம், நறுக்கிய பீட்ரூட், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை போட்டு வதக்கவும். ஆறிய பின், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து கலக்கவும். இட்லி, தோசைக்கு, பக்க உணவாக தொட்டுக் கொள்ள சுவை மிக்க, 'பீட்ரூட் சட்னி!' தயார்.
தேவையான பொருட்கள் -350 கிராம்கோதுமை மாவு,ஒன்று பீட்ரூட் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.தேவையான அளவுஉப்பு,சிறிதளவுசீரகம்செய்முறை - ஒரு பீட்ரூட்டை துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு மையாக அரைத்து சிறிது தண்ணீர் கலந்து எடுத்துக் கொள்ளவும்.எடுத்து வைத்துள்ள கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு சீரகம் சேர்த்து பீட்ரூட் சாறை கலந்து சப்பாத்தி மாவு பிசையவும். 10 நிமிடம் ஊறவைக்கவும் .பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சத்தான பீட்ரூட் பூரி சுவைக்க தயார். இதற்கு சென்னா மசாலா நல்ல காம்பினேஷன்.
தேவையான பொருட்கள் -5,6 டீஸ்பூன் நெய்,தேவையான அளவு முந்திரி பருப்பு,2கப் துருவிய பீட்ரூட்,2 ஏலக்காய்,2கப் பால்,1 கப் சக்கரை,1 சிட்டிகை உப்புசெய்முறை -முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி பருப்புபைநன்றாக வறுத்து கொள்ளவும்பின் அதே கடாயில் துருவிய பீட்ரூட் சேர்த்து3to5 நிமிடம் வதக்கவும்.பின் அதில் ஏலக்காய் மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.பின் அதில் சக்கரை சேர்த்து கிளறவும். சக்கரை பீட்ரூட் உடன் சேர்த்து கரையும் வரை கிளறவும்.பின் நெய் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து 3-5 நன்றாக கிளறி இறக்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.
தேவையான பொருட்கள் - குழம்பு கடலை பருப்பு 50 கிராம்,பீட்ரூட் சிறியது, பெரிய வெங்காயம் ஒன்று,பச்சைமிளகாய் 3, கொத்தமல்லி கருவேப்பிலை,சீரகம் அரை டீஸ்பூன்,உப்பு தேவைக்கேற்பசெய்முறை- முதலில் குழம்பு கடலை பருப்பை30 நிமிடம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்ஊற வைத்த பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.பின்னர் எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறு சிறு உருளையாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான மொறுமொறுப்பான பீட்ரூட் வடை ரெடி.
தேவையான பொருட்கள்-1பீட்ரூட்,100 கிராம் சர்க்கரை,சிறிது எண்ணெய் தேவை என்றால்,2 ஏலக்காய், 2 சொட்டு ரோஸ் எஸ்ஸன்ஸ்செய்முறை -பீட்ருட்டை தோல் சீவி பின் பீட்ரூட்டை சிறு துண்டுகளாக கட் செய்து வேகவைக்கவும்.பின் ஆரவைத்து மிக்ஸியில் அரைத்து பின் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த பீட்ரூடை சேர்க்கவும்.பின் சர்க்கரை சேர்ந்து மிக்ஸ் செய்த பிறகு2 சொட்டு ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்ந்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.நன்கு ஜாம் பதம் வரும் வரை வதக்கவும் பின் ஏலக்காய் வைத்து, டோஸ்ட் செய்த பிரட் உடன் பரிமாறவும்.பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்-1கப் அவல்,1கப் கலர் குடை மிளகாய்,1/2 கேரட் ,3 பீன்ஸ்,சிறிதளவுகோஸ்,சிறிதளவு வெங்காயத் தாள்,1/2ஸ்பூன்மிளகு தூள்,தேவையான அளவு உப்பு,2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்செய்முறை- தடிமனான அவலை எடுத்து தண்ணீரில் அலசி வடிகட்டி 10 நிமிடம் ஓரமாக வைக்கவும்..ஒரு கடாயில் எண்ணெய்விட்டு காய்கறிகளை சேர்த்து மிதமான சூட்டில் அரை பதம் வேக வைக்கவும்.. அதிகமாக வெந்தால் நன்றாக இருக்காது..காய்கறி வதங்கியதும் அதனுடன் நாம் ஊறவைத்த அவலையும் சேர்த்து அத்துடன் மிளகு உப்பு சேர்த்து கலந்து விடவும்..எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் இறுதியாக சிறிது வெங்காயத் தாளையும் சேர்த்து கலந்து விடவும்..இப்போது சூடான சுவையான சத்தான குழந்தைகளுக்கு பிடித்த அவல் ஃப்ரைட் ரைஸ் தயார்... இது குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ப்ரைட் ரைஸ்.
தேவையான பொருட்கள் -1கப் தின் அவல்,1/4 கப் கேரட் நறுக்கியது, 1/4 கப் பீன்ஸ் நறுக்கியது 1/4 கப் பச்சை பட்டாணி, 1/4 கப் தேங்காய் துருவல், 3 பச்சை மிளகாய், 1 பெரிய வெங்காயம்,1/2 கப் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்,1/4 டீஸ்பூன் கடுகு,1/2 டீஸ்பூன் உளுந்துபருப்பு, 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, மல்லி இலை,கறிவேப்பிலை,தேவையான அளவு உப்பு செய்முறை -கொழுக்கட்டை செய்ய தேவையான காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தயாராக வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும். அவல் எடுத்து தண்ணீரில் சேர்த்து அலசி எடுத்து எடுக்கவும்.பாதி வெந்தவுடன் அவலை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கலந்து,உப்பு தேங்காய் துருவல்.மஞ்சள் தூள் சேர்த்து,கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.பின்னர் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.அதன் பின் எடுத்து கொழுக்கட்டைகளை பிடித்து ஒரு ஸ்டீமர் தட்டில் வைக்கவும்.பின்பு ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் கொழுக்கட்டை வைத்துள்ள தட்டை வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.இப்போது மிகவும் சுவையான, சத்தான, மிருதுவான வெஜிடபிள் அவல் கொழுக்கட்டை தயார்.
தேவையான பொருட்கள்-1-1/2கப் சிவப்பு அவல்,1டீஸ்பூன்மஞ்சள் தூள்,150கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது,5பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது,1டேபிள்ஸ்பூன் இஞ்சி பொடியாக கட் செய்தது,2டேபிள்ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை,1/2கப் தேங்காய் துருவல்,சிறிதளவுகறிவேப்பிலை,1டீஸ்பூன் கடுகு ,உளுத்தம்பருப்பு,4டேபிள்ஸ்பூன் எண்ணெய்1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,தேவையானஅளவு உப்பு,செய்முறை அவலை நன்கு கழுவி உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் அவலை சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். அவல்தேங்காய் சாதம் தயார்.
தேவையான பொருட்கள்-1கப்அவல்,1கப்தேங்காய்,1 கப்சர்க்கரை,1/4 கப்பொட்டு கடலை, 4ஏலக்காய், தேவையான அளவுநெய் செய்முறை -அவல், பொட்டு கடலை,ஏலக்காய் வறுத்து சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.தேங்காயை வறுத்து கொள்ளவும்.அரைத்த அவலுடன் தேங்காய்,நெய் சேர்த்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். அவல்தேங்காய் லட்டுதயார்.