25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Jul 19, 2025

அவல் ஊத்தப்பம்.

தேவையான பொருட்கள்-1/2 கப் அவல்,1/4 கப் ரவை,1/4 கப் புளிப்பில்லாத கெட்டி தயிர்,2 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்,2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,சிறிதளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை,தேவையானஅளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்செய்முறை -முதலில் அவலை கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.பின் ஊற வைத்த அவலை நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.பின் இதனுடன் ரவை, தயிர் தேவையான அளவு , சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க கூடாது. பின்னர் ஊத்தப்பம் சரியாக வராது. அடை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.கேரட் ,வெங்காயம் , கொத்தமல்லி தழை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். அடுப்பை பற்றி வைத்து தோசை கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பின் மேலாக கேரட் வெங்காய கலவையை பரவலாக தூவி எண்ணெய் சேர்த்து இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்.  அவல் ஊத்தப்பம் தயார்.

Jul 19, 2025

அவல் கட்லெட்

தேவையான பொருட்கள்-அவல் 1 கப்,உருளை கிழங்கு 2,சீஸ் 1 கட்டி துருவியது,கேரட் 1/4 கப்,பச்சை மிளகாய் 1/2 (பாதி),எலுமிச்சை ஜூஸ் 1/2 பாதி பழம், 3 பிரட் தூள்,இஞ்சி 1 துண்டு,மைதா 2டீஸ்பூன், தண்ணீர்,உப்பு ,மிளகு தூள் 1/4 டீஸ்பூன் ,கரம் மசாலா 1/4 டீஸ்பூன்,சாட் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்,ஆயில் 1 குழிகரண்டி,கொத்தமல்லி தழைசெய்முறை -பிரட் துண்டுகள்3 மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.அவல் சுத்தம் செய்து கழுவி2,0 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.உருளை கிழங்கு வேக விட்டு மசித்து வைக்கவும்.சீஸ் துருவி வைக்கவும்.கேரட் துருவி வைக்கவும்.கழுவி ஊற விட்ட அவலை பிழிந்து வைக்கவும்.இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய்1 பொடியாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி தழை சிறிது பொடியாக நறுக்கி வைக்கவும்.எலுமிச்சம் பழம் பாதி எடுத்து வைக்கவும்.கரம் மசாலா1/4 டீஸ்பூன்,மிளகு தூள்1/4 டீஸ்பூன்,சாட் மசாலா1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகாய் தூள்1/4 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.உருளை கிழங்கு மசித்தது சீஸ் ,அவல் ,கேரட் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி நறுக்கியது அனைத்து மசாலா தூள் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் கடைசியாக சேர்க்கவும். நன்கு பிசைந்து வைக்கவும்.சிறிய உருண்டை செய்து நடுவில் தட்டை ஆக்கவும்.மைதா மாவு2 டீஸ்பூன் சலித்து தண்ணீர் சிறிது ஊற்றி கட்டி பிடிக்காமல் கலக்கி வைக்கவும்.பிரட் தூள் ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.தட்டையாக உருட்டிய மாவு எடுத்து மைதா கரைசலில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி தோசை கல்லில் அடுப்பை சிம்மில் வைத்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை ஆயில் சேர்த்து சுட்டு எடுக்கவும். கிறிஸ்பியான கட்லெட் ரெடி.

Jul 12, 2025

கோதுமை மாவு வெங்காய சமோசா.

தேவையான பொருட்கள்- 2 கப் கோதுமை மாவு,2கப்நறுக்கிய வெங்காயம்,1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு சிட்டிகை சமையல் சோடா,தேவையான அளவு உப்பு,1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, பொரிப்பதற்கு எண்ணெய்.செய்முறை -ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், நீர் சேர்த்து, சப்பாத்தி மாவை விட கெட்டியாக பிசைந்து ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கிலும் கறிவேப்பிலை கொத்தமல்லி, காரத்திற்கு சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, மாவை சப்பாத்தி போல கல்லில் தேய்த்து வெங்காய கலவையை உள்ளே வைத்து, சமோசா போல மடித்து கட்செய்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி மடித்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக எடுத்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.

Jul 12, 2025

கோதுமை மாவு பணியாரம் .

தேவையான பொருட்கள்:-கோதுமை மாவு - 1 கப்அரிசி மாவு - 1/2 கப்வெல்லம் - 1/2 கப் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ)துருவிய தேங்காய் - 1/4 கப்ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவுதண்ணீர் - தேவையான அளவு செய்முறை:-ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி, மாவுடன் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பணியார மாவு பதத்திற்கு கலக்கவும்.குழிப்பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.மாவு கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். குறிப்பு:நீங்கள் கார பணியாரம் செய்ய விரும்பினால், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் பயன்படுத்துவது இன்னும் சுவையாக இருக்கும்.இனிப்பு பணியாரத்திற்கு, நீங்கள் மாவுடன் வாழைப்பழத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

Jul 12, 2025

கோதுமை மாவு கடலைப்பருப்பு போளி.

தேவையான பொருட்கள்-2கப் கோதுமை மாவு,2 ஸ்பூன் வெள்ளை ரவை,1/4ஸ்பூன் மஞ்சள்தூள்,1/4ஸ்பூன் உப்பு,2டீஸ்பூன் எண்ணெய்,1 கப் கடலை பருப்பு,1கப் வெல்லம்,3/4கப் தேங்காய்ப்பூ,3ஏலக்காய் தூள். தேவையான அளவு நெய்செய்முறை-ஒரு பாத்திரத்தில்2கப் கோதுமை மாவு இரண்டு ஸ்பூன் வெள்ளை ரவை இரண்டு ஸ்பூன் எண்ணெய் மஞ்சள்தூள் உப்பு இவற்றை போட்டு சப்பாத்தி மாவு பதத்தை விட இலக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.இந்த பிசைந்த மாவை 30 நிமிடங்கள் ஊறவிடவும்..போலி செய்ய கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற விட்டு குக்கரில்4 விசில் விட்டு இறக்கவும்..கடலைப் பருப்பை மசித்து வைக்கவும்.வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் பூவை நன்றாக வறுத்துக் கொள்ளவும். தேங்காய் பூவுடன் காய்ச்சிய வெல்லப்பாகு சேர்த்து. மசித்து வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து ஏலக்காய் போட்டு இறக்கி வைக்கவும்.இறக்கி வைத்த போலியை உருண்டையாக செய்து வைத்துக் கொள்ளவும் ஆறியவுடன்.30 நிமிடங்கள் ஊறிய கோதுமை மாவை உருண்டையாக எடுத்து தட்டி அதன் நடுவில் ஒரு போலி உருண்டையை வைத்து சப்பாத்தி அளவுக்கு தேய்த்து வைத்துக் கொள்ளவும்.சப்பாத்தி மாதிரி தேய்த்து அதை தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்..

Jul 12, 2025

கோதுமை மாவு முருங்கை கீரை அடை.

தேவையான பொருட்கள்-1கப்கோதுமை மாவு,1ஸ்பூன்சீரகம்,1ஸ்பூன்மிளகு தூள்,ஒரு கைப்பிடிசுத்தம் செய்த முருங்கைக்கீரை, உப்பு ஒரு தேவையான அளவுசெய்முறை-ஒரு கப் கோதுமை மாவுடன் முருங்கைக்கீரை மிளகு தூள் சீரகம் உப்பு ஆகியவற்றை சேர்த்து ரொட்டி சுடும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.அடுப்பில் தோசை கல் வைத்து சூடாகியதும் இந்த மாவை ரொட்டி ஆகவோ அல்லது தோசையாகவோ சுடலாம் மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். சத்தான சீக்கிரம் செய்ய கூடிய முருங்கை கீரை அடை தயார்

Jul 12, 2025

கோதுமை மாவு மிளகு காராசேவ்

தேவையான பொருட்கள்1கப் கோதுமை மாவு,1கப் கடலை மாவு,2 ஸ்பூன் மிளகு,1/2 ஸ்பூன் பெருங்காயம்,உப்பு ,ஒரு கைப்பிடி கருவேப்பிலை,எண்ணெய் பொரிப்பதற்குசெய்முறைஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலைமாவு அரிசி மாவு, மிளகுத்தூள், பெருங்காயம் தூள், உப்பு,சேர்த்து சூடான ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து, பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், ஒரு பெரிய ஜல்லி கரண்டியில் மாவையை அழுத்தி தேய்த்து, எண்ணெயில் விட்டு, பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு மிளகு காரசேவு தயார்.இப்படிப் பிழிய முடியாதவர்கள், முறுக்கு அச்சில் பிழிந்து விடலாம். கறிவேப்பிலையை வறுத்துதூவி சாப்பிட அருமையாக இருக்கும்.

Jul 12, 2025

கோதுமை மாவு பிளம் கேக்

தேவையான பொருட்கள் 2 கப் கோதுமை மாவு,1கப் நாட்டுசர்க்கரை,3/4 கப்உருக்கிய வெண்ணெய்,1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா,1 டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்,2டேபிள்ஸ்பூன் தயிர்,1/2 கப் பால்,1 டேபிள்ஸ்பூன் தேன்,1/4 கப் டேட்ஸ்,1/4 கப் வால்நட்ஸ், முந்திரி,1/4 கப் திராட்சை டூட்டி புரூட்டிசெய்முறைகோதுமை மாவு,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சலித்து வைத்துக் கொள்ளவும்.கேரமல் ப்ரூட் கலவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.வெண்ணெய்,சர்க்கரை, தேன் எல்லாம் சேர்த்து கிரீமியாக பீட் செய்யவும். தயிர்,எசன்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.பின்னர் மாவுக்கலவை சேர்த்து கட் அண்ட் போல்ட் முறையில் கலந்து விடவும்.பின்னர் கேரமெல் ப்ரூட் கலவையை ஊற்றி நன்கு கலந்து விடவும்.பின்னர் கேக் கலவையை மோல்டில் ஊற்றி மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரீயில் பத்து நிமிடங்கள் பிரஹீட் செய்து 55 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் கோதுமை மாவு பிளம் கேக் தயார்.இப்போது மிகவும் சுவையான சத்தான மிருதுவான கோதுமை மாவு பிளம் கேக் சுவைக்கத்தயார்.

Jul 05, 2025

பிரெட் ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள் 2கப் ரவை ,  2கப்அரிசிமாவு, 1/2கப் தயிர் , தேவையான அளவு உப்பு,1 வெங்காயம்,2 கேரட்,2 பச்சை மிளகாய்,10பீஸ் பிரெட்,தேவையான அளவு எண்ணெய் செய்முறை ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு ரவை தயிர் உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.மிக்ஸியில் பிரெட் போட்டு தூள் செய்து கொள்ளவும். பிரெட் தூளில் கலந்து வைத்த மாவை ஊற்றி கலக்கவும்.பின் அதில் வெங்காயம் துருவிய கேரட் பச்சை மிளகாய் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.தோசை கல்லில் மாவை ஊற்றி ஊத்தாப்பம் போல் ஊற்றி எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Jul 05, 2025

பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள் 2 கப் தோசை மாவு,பீட்ரூட் துருவியது,ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,ஒரு தக்காளி நறுக்கியது,சிறிதளவு மல்லித்தழை, சிறிதளவு கருவேப்பிலை,சிறிதளவு புதினா தழை, இட்லி பொடி, தேவையான அளவு எண்ணெய்.செய்முறை ஒரு பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கருவேப்பிலை, மல்லித்தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் இட்லி பொடியை எடுத்துக் கொள்ளவும்.அடுப்பில் தோசை கல்லை காய வைக்க வேண்டும். காய்ந்ததும் ஒரு கரண்டி தோசை மாவை எடுத்து சிறியதாக ஊற்ற வேண்டும். அதன்மேல் பீட்ரூட் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சிறிது மல்லித்தழை போட வேண்டும்.அதன்மேல் முழுசும் இட்லி பொடியை தூவ வேண்டும்.தோசையை சுற்றிலும் எண்ணெய் ஊற்ற வேண்டும்.தோசை வெந்ததும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். இப்பொழுது மிகவும் சுவையான பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம் ரெடி.

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 72 73

AD's



More News