25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும்

இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ், வார்அமைப்பு, இந்திய வன அறக்கட்டளை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையும், மேகமலையும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல்பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ் சுற்றுச்சூழல், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். தலைமை செயல்பாட்டு அதிகாரி கிரிதரன் வாழ்த்தினார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் முன்னிலை வகித்து பேசினார். 

கிரீன் ப்யூச்சர் பவுன்டேசன் இயக்குனரான ஐஸ்டஸ் ஜோஸ்வா மேற்கு தொடர்ச்சி மலை குஜராத்தில் துவங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வரை செல்கிறது. இந்தியாவின் பரப்பில் 5 சதவீதம் உள்ளது. இதில் 51-வது புலிகள் சரணாலயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 149 வண்ணத்து பூச்சி வகைகளும், 252 பறவை வகைகளும், 63 பாலூட்டி வகைகளும், 100 ஊர்வன வகைகளும், 44  நீர் ,நில வாழ்வனவும், உள்ளன.

விலங்குகள் நம்மை விட நுண்ணுணர்வு கொண்டவை. அவை ஒரு போதும் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியது இல்லை. இயற்கையை பாதுகாக்க தான் செய்யும், அதே போல் மனிதர்களான நாமும் மலையை பாதுகாக்க வேண்டும் என்றார்.

சிவகங்கை பசுமை குழுஉறுப்பினர் மணிவண்ணன் மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு பல வற் றாத ஜீவ நதிகளை தரு • கிறது. இன்று மதுரையின் வைகையும், விருதுநகர் மாவட்டத்தின் வைப்பா றும் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிலைகளை காக்க மேற்கு தொடர்ச்சி மலை அவசியம் .இதை பாதுகாத்தால் வைகை, வைப்பாறு நதிகள் புத்துயிர் பெற்று 5 மாவட்டங்களுக்கான குடி நீர் தேவை பூர்த்தி ஆகும், என்றார்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News