முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாக பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04.07.2025) முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினருடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மத்திய குழுவின் ஆய்வு அலுவலர் கூடுதல் செயலாளர் மற்றும் முதன்மை ஆலோசகர் (கணக்குகள்) திரு.வெங்கடேஷ் அவர்கள் மற்றும் குழுவினர் 03.07.2025 மற்றும் 04.07.2025 ஆகிய 2 நாட்கள் வத்திராயிருப்பு வட்டத்தில் நியாய விலை கடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் விருதுநகர் மத்திய உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வுக்குப்பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், துணை ஆட்சியர் /மண்டல மேலாளர்(தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) திரு.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
0
Leave a Reply