25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Sep 28, 2023

சமையலில் தவிர்க்க முடியாத வெந்தயம்

முந்தின நாள் இரவு வெந்தயம் அல்லது சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.சீரகத் தண்ணீர் செரிமான பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்டது.சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம், ஆனாலும் கூடபலருக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. கிராமங்களில் உள்ளபெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால், உடனேவெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோரைகுடிக்க சொல்வார்கள். வயிற்று வலி நீக்குவதோடு உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

Sep 26, 2023

களாக்காய் சாப்பிட்டால்

மிகவும் அதிகம் கிடைக்கும் அதே நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் களாக்காய் சாப்பிட்டால் மிகப்பெரிய அளவில் உடலுக்கு நல்லது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் களாக்காய் மிக அதிகமாக கிடைக்கும். புளிப்பு இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்டாய்ந்த களாக்காய் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கின்றன.  ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை களாக்காய் சீசன் உண்டு. வைட்டமின் சி பி இரும்பு சத்து மாங்கனிசியம் பொட்டாசியம் காப்பர் உள்பட பல சத்துக்கள் இந்த களாக்காயில் உள்ளன. களாக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகிக்கிறது. மேலும் உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கும். தலை முடியை வலிமையாக்கும், கூந்தல் ஆரோக்கியமாகவும் நீளமாகவும்  பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், சீரான மாதவிடாய் ஏற்படுத்த உதவும் ஆகிய பல நன்மைகள் களாக்காய் சாப்பிடுவதால் உண்டாகிறது.

Sep 25, 2023

நன்மையை தரும் விளாம்பழம்  (Wood Apple )

விளாம்பழம். இதை ஆங்கிலத்தில் Wood Apple அல்லது Stone fruit என்பார்கள். இந்த பழம் எல்லா காலங்களில் கிடைக்காது. இது ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பழமாகும்.இதன் மேல் ஓடு போன்று இருக்கும். அதை உடைத்தால் அதில் ஒரு பல்ப் (pulp)இருக்கும். அந்த சதை பகுதியான பல்ப்பை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா. அதை சிறிது வெல்லத்தை பொடித்து நன்கு கைகளால் பிசைந்தால் பஞ்சாமிர்த பதத்திற்கு வரும். அதை அப்படியே ஸ்பூனாலோ அல்லது கைகளாலோ சாப்பிட்டால் பஞ்சாமிர்தம் திடீரென தேவாமிர்தமாக மாறிவிடும்.இது புளிப்பு சுவையுடையது. அதனால் அதை ஈடுகட்ட வெல்லத்தூள் சேர்க்கிறோம். இது புளிப்பு சுவை கொண்டது என்பதால் இது சீதளம், குளிர்ச்சி என கருதி பலர் தவிர்க்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனையாகும் இந்த பழத்தை வாங்கி விநாயகருக்கு படைத்துவிட்டு  குப்பையோடு குப்பையாக வீசி விடுகிறார்கள். இது பசியை தூண்டக் கூடியது. ரத்தத்தை சுரக்கும் தன்மை கொண்டது. வாந்தியை கட்டுப்படுத்தும், மலத்தை இறுக்கும், பித்தத்தை நீக்கிவிடும். இதனால் ஏற்படும் தலைச்சுற்றலை போக்கிவிடும். முக்கியமாக கோழையை அகற்றிவிடும். வாய்ப்புண், ஈறு பிரச்சினைக்கு நல்லது. இருமல், சளியை எடுக்கும். வெள்ளைப்படுதலை நீக்கும், மாதவிடாய் அதிக ரத்த போக்கை கட்டுப்படுத்தும்.வயிற்றுப்போக்கு, சீதபேதியை நிறுத்தும்.. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த பழத்தை கொடுத்தால் உள்ளுறுப்புகளில் புண் ஏதேனும் இருந்தாலும் அது ஆறிவிடும். ஆஸ்துமா, அலர்ஜிக்கு அருமருந்தாக அமைகிறது.

Sep 24, 2023

ஒயிட் சாக்லெட் சாப்பிடுவதால்

சாக்லேட்டுகள் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகளில் உள்ளது. ஒயிட் சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது.ஒயிட் சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார்169 மிகி கால்சியம் இருக்கும். இதனால், இவை எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு உதவுகிறது.ஒயிட் சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான பளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஒயிட் சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். இதில் உள்ள கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். ஒயிட் சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.ஒயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாகஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒயிட் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியடைய செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற செய்யும்.

Sep 22, 2023

பிஸ்கட் அதிகம் பிஸ்கட் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

 குழந்தைகள் பிஸ்கட்டுகளை விரும்பி சாப்பிடும் என்பதும் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக, பெற்றோர்கள் பிஸ்கட்டுகளை அதிகம் வாங்கிக் கொடுப்பதும் நடந்து வருகின்றன. ஆனால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிட்டால். குழந்தையின் செரிமான சக்தி குறையும் என்றும் பிஸ்கட்டுகள் நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை உடையதால் மலச்சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.  பிஸ்கட் என்பதை உணவுக்கு மாற்றாக பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்றும் உடல்நலம் இல்லாத நிலையில் உணவு சாப்பிட முடியாத பட்சத்தில் மட்டும் பிஸ்கட் கொடுக்கலாம்.. சத்தான உணவு மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்றது என்றும் அதற்கு மாற்றாக ஒருபோதும் பிஸ்கட்டுகளை கொடுக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது. பிஸ்கட்டுக்கு பதிலாக பழங்கள் சுண்டல் ஆகிவற்றை கொடுக்கலாம் என்றும் பிஸ்கட்டுகளை அளவோடு குழந்தைகளுக்கு கொடுத்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Sep 21, 2023

பாதாம் பால் நன்மைகள்

பாதம் பாலில் நிறைந்துள்ள பண்புகள் ஆரோக்கியத்தில்நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாதாம் வைட்டமின்E இன் சிறந்த ஆதாரமாகும். இது செல்களின் மீளுருவாக்கத்திற்கும், சூரிய கதிர்களால் சேதமடைந்த சருமத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது.பாதாம் பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. இதனுடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.இது தாவர அடிப்படையிலானது என்பதால், வேகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு ஏற்றது. இதை பசும்பாலுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.100 மில்லி பாதாம் பாலில்30 முதல்55 கலோரிகள் வரை இருக்கும். மற்ற பாலுடன் ஒப்பிடுகையில் பாதாம் பால் குறைவான கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.பாதாம் பாலில் வலுவூட்டப்பட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்துக்கள் மிகவும் முக்கியமானவை பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு பாதாம் பால் ஒரு சிறந்த மாற்று உணவாக இருக்கும்.நட்ஸ் வகைகளில் உள்ள நல்ல கொழுப்புகள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.இந்நிலையில் அதிக அளவு வைட்டமின்E மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாம் பால் இதயத்திற்கு நன்மை தரும்.

Sep 19, 2023

உடல் சதை கரைய வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும் முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும்.இந்த விதைகளும் நோயை தீர்க்கும். சிறுநீர் பெருக்கத்தை அதிகரிக்கும். குளிர்ச்சியை தரக்கூடியது.. அஜீரணத்தை நீக்கும்.. மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும்.. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும். நூறு கிராம் அளவு வெந்தயக்கீரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இதில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாகவே உள்ளன.. அதனால், உடல் சோர்வாக உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். கண்பார்வை: வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.  நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த உணவாக இந்த கீரையை பயன்படுத்தலாம்.. தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். அதனால், நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த கீரையை சாப்பிட்டாலே நீரிழிவு கட்டுப்படுமாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும், காச நோய் கோளாறு உள்ளவர்களுக்கும் சிறந்த தேர்வு.இந்த கீரை.. கீரைகள்: கீரைகள் என்றாலே மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது என்றாலும், இந்த வெந்தயக்கீரையை, வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாப்பிட்டால், வயிறு சுத்தமாகும்.. குடல் புண்களும் குணமாகும்.. வெந்தயக்கீரையை வெண்ணையில் வதக்கி சாப்பிட்டால், வயிறு உப்பசம், பசியின்மை போன்ற வயிறு கோளாறுகள் நீங்கும்.. இந்த கீரையின் தண்டுகூட மருத்துவ குணம் கொண்டது.. வெந்தயக்கீரையின் தண்டை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட்டு வந்தாலும், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும்.வெந்தயக்கீரையை நெய்யுடன் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை விரைவில் ஆறும். உடல் எடை: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வெந்தயக்கீரை பெஸ்ட் சாய்ஸ்.... பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தந்தால், பால் உற்பத்தி பெருகும்.. அல்லது கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தந்தாலும் பால் சுரக்கும். இந்த வெந்தய விதைகளில், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை செய்யலாம் என்றாலும். வெந்தயத்தில் களி செய்யலாம்.. இந்த வெந்தயக்களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. இந்த கீரை குளிர்ச்சி என்பதால் முடி கொட்டுவதை தடுக்கிறது.. வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, நைசாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வதுநிற்கும்..

Sep 18, 2023

வாழைத்தண்டு சூப்'

தேவையான பொருட்கள்-வாழைத்தண்டு - 1| தக்காளி-1/ சின்ன வெங்காயம் - 6 | பெரிய வெங்காயம் - 1 | பூண்டு பல் - 10 | சீரகம் - அரை  ஸ்பூன் | மிளகு - அரை  ஸ்பூன் | இஞ்சி - 1" அளவு | உப்பு, எண்ணெய் - போதுமான அளவுசெய்முறை வாழைத்தண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.குக்கர் ஒன்றில்சிறிதளவு தண்ணீருடன் வாழைத்தண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து4 விசில் வர வேக வைத்து இறக்கவும்.பின்  மிக்ஸர் ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனியேதயாராக எடுத்து வைக்கவும். சூப் தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம்(நறுக்கிய) இஞ்சி சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறியதும் 'மிக்ஸியில் அரைத்தது, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.கால் கப் தண்ணீரில்ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்துகரைத்துஅடுப்பில் கொதிக்கும்சூப்பில் சேர்த்து கலந்து8 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.வாழைத்தண்டு சூப் ரெடிஇறுதியாக இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான வாழைத்தண்டு சூப் ரெடி. இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.

Sep 15, 2023

முலாம்பழம்,சூரியகாந்தி விதைகளின் நன்மைகள்

புரதம் நிறைந்தது.நார்சத்து அதிகம். கொலஸ்ட்ராலை குறைக்கிறது. வீக்கக்தை குறைக்கிறது, முலாம்பழம்விதைகள்.நோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. கொலஸ்ட்ராலை குறைக்கிறது,சூரியகாந்தி விதைகள்சூரியகாந்தி விதைகளில் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும்சோடியம் குறைவாக உள்ளது.அவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன.புற்றுநோய் அபாயத்தைக் குறைக் கிறது.மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.சூரியகாந்தி விதைகள் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பயனுள்ளதாகஇருக்கும்.

Sep 14, 2023

20 நிமிசம்வாக்கிங்:

இன்றைய பிஸியானவாழ்க்கையில், மக்கள்பெரும்பாலும் நாள்முழுவதும் உட்கார்ந்துவேலை செய்கிறார்கள்.இது அவர்களின்ஆரோக்கியத்தில் மோசமானவிளைவை ஏற்படுத்துகிறது.ஐடி துறைஉள்பட பல்வேறுதுறைகளை சேர்ந்தவர்கள்பல மணிநேரம்கணினி முன்உட்கார்ந்தே வேலைபார்ப்பதை வழக்கமாகவைத்துள்ளனர். இவர்கள்பெரிதாக நடைபயிற்சிமேற்கொள்வதில்லை ஒரு ஆய்வின்படி, தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. உட்கார்ந்துஉடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி போன்றபலன்களை அளிக்காது. நாள் முழுவதும்சிறிது நேரம்நடப்பது தசைகளைசெயல்படுத்தி இரத்தசர்க்கரை அளவைக்கட்டுப்படுத்த உதவுகிறது.உட்கார்ந்த நிலைகால்களின் இரத்தநாளங்களில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது, இதுஇரத்த ஓட்டத்தைமாற்றுகிறது மற்றும்இரத்த அழுத்தத்தைஅதிகரிக்கும்.20 நிமிடம்நடைப்பயிற்சி செய்வதால்ரத்தத்தில் உள்ளசர்க்கரை மற்றும்ரத்த அழுத்தஅளவைக் குறைக்கமுடியும் என்றுஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நடைபயிற்சி ஒருநல்ல கார்டியோஉடற்பயிற்சி ஆகும், இது கலோரிகளைஎரிக்க உதவுகிறது. நீங்கள் உடல்எடையை குறைக்கவிரும்பினால், தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது நல்லது. தினமும்20 நிமிடங்கள்நடைப்பயிற்சி மேற்கொள்வது,.இதயத்தை ஆரோக்கியமாகவைத்திருக்க உதவுகிறது. இரத்தஅழுத்தம் மற்றும்கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்க உதவுகிறதுநடைபயிற்சி சிலவகையான புற்றுநோய்களின்அபாயத்தைக் குறைக்கஉதவும்.தினமும் 20 நிமிடம்நடப்பது மனஆரோக்கியத்தை மேம்படுத்தும். நடைபயிற்சி மனஅழுத்தத்தையும் பதட்டத்தையும்குறைக்க உதவுகிறது. இது தன்னம்பிக்கை மற்றும் மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.நடைபயிற்சி பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. நடைபயிற்சிஎலும்புகள் மற்றும்தசைகளை வலுப்படுத்தவும்.,தூக்கத்தின் தரத்தைமேம்படுத்தவும் உதவும்..

1 2 ... 28 29 30 31 32 33 34 35 36 37

AD's



More News