புளிப்பு சுவையுள்ள இந்த கீரை. உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.இந்த கீரையில் தாதுபொருட்களும். இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன.எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கிரைக்கு உண்டு. சொறி. சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. துரித உணவுகளை போல அல்லாமல் முழுவதும் ஆரோக்கியமானது.கடலை மிட்டாயில் நார்ச்சத்து. ப்ரோட்டீன், இரும்புச்சத்து, உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது.கடலை மிட்டாயில் உள்ள தாமிரம் உடலின் கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன் இதில் உள்ள ஜிங்க் சத்து தோல்களில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குகிறது.கடலை மிட்டாயில் உள்ள செறிவான வைட்டமின் சத்துகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.கடலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் கால்சியம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் எலும்புகள், பற்களை உறுதிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் வெளியேற்றிவிடும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக மழை வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி. இருமல் போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.வேப்பம்பூ சித்திரை. வைகாசி என்ற குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே அதிகளவில் கிடைக்கக்கூடியது.வேப்பம்பூ வாதம். பிந்தம், கபம் ஆகிய மூன்றையும் உடலில் சரியான அளவில் பராமரிக்கக்கூடியது.இந்தப்பொடியை கறிவேப்பிலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்தம் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் சரியாகும்.
பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்கவும். எந்த அலர்ஜியாக இருந்தாலும், . மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்" அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்பு, வஞ்சிர மீன் குழம்பு, கருவாடு, நண்டு, இறால் இவை எல்லாம் ஆகாதவை.
கோதுமைப் புல் செடியில் வேர் முதல் முழுமையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.கோதுமைப் புல்லில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி1, பி2, பி1,2,3,4,5,6,8,12 சி, வைட்டமின் ஈ. வைட்டமின் கே மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்கின்ற தன்மை கொண்டது. இதன்மூலம் உடலின் ரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கும். ஹீமோகுளூாபினை கூட்டும் தன்மை கொண்டது இந்த கோதுமைபுல் நார்ச்சத்து, குளோரோபில், ஆன்டி ஆக்ஸிடன்ட்களின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள கோதுமை புல் வீக்கத்தை குறைக்க உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்தப்போக்கு மற்றும் வலியைக் குறைக்கவும், காயத்தை குணப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். கோதுமைப் புல் சாறு குடிப்பதன் மூலம் வாய்வழி அழற்சியையும் குறைக்கலாம்.
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாப்பழ கொட்டைகளை கொண்டு ருசியான உணவு வகைகளை செய்யலாம். பலாப்பழ கொட்டைகளில் உடலுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து உள்ளது.இதில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. பலாப்பழ கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும். பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கண்புரை, மாகுலர் சிதைவு எனும் கண் பிரச்சனைகளை தடுக்கிறது. புரத உள்ளடக்கம் நிறைந்த இந்த பலாப்பழ கொட்டைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன. பலாப்பழக் கொட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுவதால் வாயுத் தொல்லைகளை நீக்க உதவும்.பலாப்பழ விதைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போராடுகிறது. பொலிவான சருமத்தை பெற, பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை மிக சிறந்த மூலிக மகத்துவம் நிறைந்த செடி ஆகும். இதில் பூக்கும் பூக்களுக்கும் அதே மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன. கற்றாழை பூ உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் உடற்சூட்டின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல், நீர்க்கடுப்பு ஆகிய பிரச்சனைகளை தீர்க்க இதன் பூ உதவி புரிகிறது. இந்த பூவை காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான போது சிறிது நீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் அறவே நின்று விடும்.இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடுகிறது. கற்றாழை பூ உடலை சோர்வு அடையாமல் சுறுசுறுப்பாக வைக்கிறது என்றும் பல ஆய்வுகள் கூறுகின்றன.கற்றாழை பூ உடலில் உள்ள நச்சுக்களை மட்டும் அல்ல, காற்றில் உள்ள நச்சுக்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து ,நம்மை காற்றின் மூலம் பரவும் பல தொற்றுக்களில் இருந்து காக்கிறது.கற்றாழை பூவில் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை உள்ளது. இதனால் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் எனப்படும் புண் மற்றும் கர்ப்பப்பையில் உருவாகும் புண்களை அழிக்கும் தன்மை கொண்டது வயிற்று புண் உள்ளவர்கள் பூவை அரைத்து பாலுடன் வைத்து குடிக்கலாம்.தலையில் உண்டாகும் பொடுகு பேன், ஆகியவற்றை அடியோடு ஒழிக்கிறது. இந்த பூவை அரைத்து தலையில் தேய்த்து கொள்ள தலைமுடியும் நீண்டு வளரும்.
குளிர்காலம் என்றால் குளிர்ச்சியுடன் சளி பிடிக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் நீரிழிவு ஆகியவை குளிர்காலத்தில் அதிகரிக்கும்.குளிர்காலத்தில், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளன. எட்டு முதல் எண்பது வரையிலான அனைவரும் அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மூலிகைகளை நம்பினால் நோய் பயம் இருக்காது.துளசி இலைகள் நீண்ட காலமாக உணவாக அறியப்படுகிறது. இதன் சாறு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடுங்கள். இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற சிறப்பு மூலப்பொருள் உள்ளது. இது வாந்தி பிரச்சனையை அகற்ற உதவுகிறது. மேலும், உணவு விரைவாக ஜீரணமாகும். வேப்ப இலைகளில் பல கலவைகள் காணப்படுகின்றன. வேப்ப இலையின் பண்புகள் மூட்டுவலி பிரச்சனையை நீக்குகிறது. மேலும், வேப்ப இலைகளின் சிறப்புப் பண்பு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். வேப்ப இலைகள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் தொற்றுநோயையும் குறைக்கின்றன மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. அஸ்வகந்தா அந்த ஹார்மோனின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இது கவலைப்படும் போக்கையும் குறைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அஸ்வகந்தா தூக்கமின்மையை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ஆகியவை திரிபலா என்று அழைக்கப்படுகின்றன. திரிபலா செரிமானத்திற்கு சிறந்தது. மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் அவதிப்படுகின்றனர். திரிபலா மலச்சிக்கலைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.
கல்லீரல்.எப்போதும் முழு செயல் திறனுடன் இயங்கும் விதத்தில் பாதுகாத்து வந்தாலே அநேக நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாது காத்திட முடியும்.கல்லீரல் பாதிப்பால் வரும் நோய்களில் முக்கியமானது மஞ்சட் காமாலை. கல்லீரலை எளிதில் பாதிப்படைய செய்யும் மது போன்ற போதை பழக்கங்களை தவிர்த்தல். மற்றும் உணவில் காரம். உப்பு அளவுடன் சேர்த்துக் கொள்வது நலம்.காலை வேளையில் மிதமான சூட்டுடன் உள்ள நீரில்1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது. கல்லீரல் புத்துணர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. கல்லீரலில் சேதமுற்ற செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்க மிகவும் துணை புரியும்.நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கல்லீரை பாதுகாக்கும் உணவகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் ,விஷ்ணு கிரந்தி போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறதாம்
`தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி, தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்' என்பது அந்த பாடல்வரியின் பொருள். தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.தேற்றா மரத்தின் விதை தேற்றான் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த தேற்றான் கொட்டையை கலங்கிய நிலையில் உள்ள நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் அந்த நீர் தெளிவாக மாறும்.வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி. நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும்.இதன் பழம் சளியை போக்கும். வயிற்றுப்போக்கை சரி செய்யும். காயங்களை குணமாக்கும். சிறுநீரக பிரச்சனைகள் சரி செய்யும் மற்றும் கண்ணில் உள்ள கோளாறுகளை நீக்கும்.