25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Apr 22, 2024

கோடையில் உடலில் நீர் பற்றாக்குறை   தவிர்க்க சர்க்கரை நோயாளிகளுக்கு ஜூஸ்

கோடையில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை அதிகம். சுற்றுச்சூழலில் அதிக வெப்பநிலை காரணமாக, உடலில் நீர் பற்றாக்குறை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நமக்கு அதிக வாந்தி, மயக்கம் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். எனவே, கோடையில் திரவங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.கோடையில் நமக்கு நிவாரணம் என்றால் அது பழங்களிலும், பழச்சாறிலும் தான் இருக்கிறது. பலரும் ஜூஸ்ஸைகுடிப்பார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு அப்படி இல்லை.  இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும்.மாம்பழ ஜூஸ்,தர்பூசணி சாறு,கரும்பு சாறு  ஜூஸ்கள் குடிக்கக் கூடாதுஉடலில் நீர் பற்றாக்குறை   தவிர்க்க சர்க்கரை நோயாளிகள் கோடையில் இளநீர் , சப்ஜா விதைகள் தண்ணீர் , எலுமிச்சை நீர் , மோர்  குடிக்கலாம்சர்க்கரை நோய்க்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. இது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இளநீர் உடல் சூட்டு பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கும்.சப்ஜா விதை நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் நுகர்வு சோர்வு மற்றும் பலவீனத்தையும் குறைக்கிறது.எலுமிச்சை நீரும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு நல்ல வழி. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கலாம். ஆனால் இனிப்புக்காக நீங்கள் எதையும் சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நீரிழிவு நோயாளிகளுக்கு மோர் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் புரோபயாடிக்குகள் உள்ளன, இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினசரி உணவில் மோர் சேர்த்துக்கொள்ளலாம்.இதில் ஏதேனும் சந்தேகமோ அல்லது உங்கள் உடலில் வேறு ஏதும் தீவிரத்தன்மையோ இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Apr 21, 2024

கர்ப்பப்பையில் நீர்கட்டி 

 பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய (PCOS) வராமல் தடுக்க,  காய்கறி சாலட் சாப்பிட்டு வரலாம் . வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, வேகவைத்த காளான், வேகவைத்த ப்ரோகோலி, துருவிய பீட்ரூட் மற்றும் மாதுளை சேர்க்கவும் இந்த காய்கறி சாலட்டை தொடர்ந்து சாப்பிட்டு வர, கர்ப்பப்பை ஆரோக்கியமடையும், நீர்க்கட்டி உருவாகாமல் தடுக்கும் மேலும் ஊற வைத்த சியா விதைகளை பாதாம் பாலுடன் சேர்த்து பருகி வரலாம்" அவகேடோ பழத்தை பிரட் டோஸ்டில் வைத்து சாப்பிட்டு வந்தால் (PCOS) A வராமல் தடுக்கும்  . வெள்ளரிக்காய், கேரட் மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறி கருப்பைக்கு மிகவும் ஆரோக்கியமானவை .

Apr 11, 2024

குழந்தைகளுக்கு சளி, இருமல் சரியாக கற்பூரவல்லி இலை ( ஓமவள்ளி இலை )

குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, ஓமவள்ளி இலை சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் மென்மையாகத் தடவி விடலாம்.. அதேபோல, வயிறு உப்பி மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம். இலைச்சாறு சற்றுக் காரமாக இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம். இந்த கற்பூரவல்லி இலைகளை கஷாயம் போல தயாரிக்கலாம்.. அதாவது, கொத்தமல்லி விதை, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடித்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி ஒரு கைப்பிடி கற்பூரவல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு, மிக்ஸியில் அரைத்த பொடிகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு சுண்ட காய்ச்ச வேண்டும். இறுதியில், வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால், கற்பூரவல்லி கஷாயம் தயார். இருமல், சளி, தொண்டை வலி, போன்றவற்றுக்கு மிகவும் நல்லது..

Apr 09, 2024

முடவாட்டுக்கால் கிழங்கு..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதியை தரும் முடக்குவாத பிரச்சனைக்கும், மூட்டு வலி பிரச்சனைக்கும் தீர்வாக இருப்பது முடக்குவாத கிழங்குதான்.. முடக்குவாதத்தினை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து தீர்வு காணாவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். சர்க்கரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்வதால், முடக்குவாதம் கட்டுக்குள் இருக்கும். அதேபோல, இதில் முடவாட்டுக்கால் கிழங்கினை சூப் வைத்து குடிக்கலாம். ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் உள்ளன. எலும்பு அடர்த்தி: முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மிகக்சிறந்த மருந்தாகும். எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) நோய்களுக்கும் இந்த கிழங்குகள் மருந்தாகின்றன.. ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.. இந்த கிழங்குக்கு உண்டு. எலும்பு, நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகளையும் இந்த முடவாட்டுக்கால் போக்கிவிடுவதுடன், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.கருப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக முடவாட்டுக்கால் கிழங்கு உதவுகிறது.. பெரும்பாலும் இந்த கிழங்கை, தோல் சீவி கழுவி, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து போட்டு, சூப் போல வைத்து குடிப்பார்கள்... முடவன் ஆட்டுக்கால் கிழங்கின் மீதுள்ள தோல் மற்றும் முடிகளை நீக்கிவிட்டு, உள்ளே மஞ்சள் கலரில் கிழங்கினை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.. பிறகு கிழங்கினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுகளைகொட்டி, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் முடவாட்டுக்கால் சூப் ரெடி.இஞ்சி, பூண்டு, சிறிது தேங்காய் சேர்த்து பேஸ்ட்போல அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், லவங்கப்பட்டை, சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து வைக்கப்பட்ட முடவாட்டுக்காலையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.. நன்றாக கொதித்தபிறகு, கடைசியாக பூண்டு, உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சூப் ரெடி. முடவாட்டுக்கால் கிழங்கில் சாறு போல தயாரித்து குடிக்கலாம்.. அதாவது, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், என அனைத்தையும் வதக்கி கொள்ள வேண்டும். பிறகு அதிலேயே சுத்தம் செய்து பொடிபொடியாக நறுக்கப்பட்ட கிழங்கையும் போட்டு வதக்க வேண்டும்.. பிறகு, சோம்பு, பட்டை, சேர்த்து, வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மொத்தமாக அரைத்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு ஊற்றி இந்த விழுதை கொதிக்க வைத்து இறக்கி, சுடுசோறில் பிசைந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.. குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கும் இந்த சூப்பை குடிக்க தரலாம்.. மூட்டுவலியை தவிர, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இந்த சூப் நல்லது. 15 நாட்களுக்கு இந்த சூப் குடித்துவரும்போது நல்ல பலன் கிடைக்குமாம். ஆனால், இந்த சூப்பை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தான் குடிக்க வேண்டும்..

Apr 07, 2024

சளி தொல்லைக்கு ஓமவள்ளி இலை

 ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி இலை.,3 இலைகள் மட்டுமே போதும்.. ஒரே நாளில்  சுவாச கோளாறு ஓடிவிடும். சளி, காய்ச்சல் என்றால், மிளகு, இஞ்சி இந்த இரண்டை மூலிகைகளையும் தவிர்க்கக்கூடாது. மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டதுதான் மிளகு.அஜீரண கோளாறுகளை மட்டுமல்லாமல், உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவதும் இந்த மிளகுதான். இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அந்தவகையில், மிளகு ரசம் போலவே, 2 புதினா இலைகளை சேர்த்து மிளகு டீ தயாரித்து குடித்தால், சுவாச கோளாறுகள் தீரும்.இஞ்சியும் அதுபோலவே, தொண்டைக்கு இதமான பண்புகளை கொண்டுள்ளது. அதனால்தான், இருமலுக்கான சிரப்புகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது சளியை நீக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது.. நுரையீரலிலிருந்து சளியை தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது.. தொண்டையின் பின்புறத்தில் இருமலை தூண்டும் வலிமிகுந்த கூச்ச உணர்வை இஞ்சி கட்டுப்படுத்தவும் செய்யும்.ஓமவள்ளி இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், ஓமவள்ளி இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும். ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும். அல்லது இந்த ஓமவள்ளி இலையை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, சிறிது பனகற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலும் நன்மை பயக்கும். இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும். தலைவலிக்கு இலையைக் கசக்கித் தலையில் தடவலாம். 

Mar 26, 2024

மனஅழுத்தத்தை குறைக்க..

தரமான உறக்கம்யோகா மற்றும் தியானம்ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுமகிழ்ந்திருக்கவும், சிரிக்கவும் பழகுங்கள்மூச்சுப்பயிற்சிகள்ஹாபிகளுடன் மகிழ்ந்திருங்கள்நல்ல உறவுகளை வளர்த்தெடுத்துக் கொள்ளுங்கள்புகை தவிருங்கள்

Mar 12, 2024

கோடைக் காலத்தில் உடலைக் குளிரச் செய்யும் ராகி கூழ்

வெயிலைத் தவிர்க்கவும், கோடைக் காலத்தில் உடலைக் குளிரச் செய்யவும் ராகி கூழ் உங்களுக்கு உதவும்கோடை காலம் வந்துவிட்டது. வெயிலின் உக்கிரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர யோசிக்கிறார்கள். மோசமான நிலையில் வெளியே சென்றவர்கள் வெயிலின் வெப்பத்தில் இருந்து விடுபட குளிர் பானங்கள், பழச்சாறுகள், தேங்காய் தண்ணீர் போன்றவற்றை நாடுகின்றனர்.பழச்சாறுகள் மற்றும் தேங்காய் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றை தினமும் உட்கொள்ள முடியாது. அப்படியானால், வெயிலில் இருந்து தப்பிக்க ராகி கூழ்  தீர்வு.தேவையான பொருட்கள்·        ராகி மாவு - 4 டீஸ்பூன்·        சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்·        மோர் - 1 கப்·        தண்ணீர் - 2 முதல் 3 கப்·        உப்பு - தேவையான அளவுராகி கூழ் செய்முறை·முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் ராகி மாவை சேர்க்கவும். பிறகு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கவும்.·        இப்போது ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.·        தண்ணீர் சிறிது கொதித்ததும், ராகி மாவு கலவையை ஊற்றவும்.·        இப்போது தீயை குறைத்து, ராகி கூழை ஒரு கரண்டியால் கிளறவும்.·        இதையடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்க்கவும்.·        ராகி கூழ் சிறிது ஆறிய பிறகு அதனுடன் தயிர் அல்லது மோர் சேர்த்து கலந்து குடிப்பது மிகவும் நல்லது.·        இந்த கூழை மேலும் சுவையாக மாற்ற பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.ராகி கூழை காலையில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் அயோடின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இதனை குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இதனை கோடையில் குடிப்பதால் உடலில் உள்ள சூடு குறையும்.ராகி கூழில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதை குடித்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் என்பது ஐதீகம். ராகி கூழை தினமும் குடித்து வர இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ராகி கூழை முதல் நாள் இரவு தயாரித்து மறுநாள் மோர் அல்லது தயிர் கலந்து குடித்தால் மிகவும் ருசியாக இருக்கும் உடலுக்கும் நல்லது.  

Mar 08, 2024

நெல்லிக்காய் ஜூஸின்  நன்மைகள்

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் புற்றுநோய் ஏற்படாது கண் பார்வை திறன் அதிகரிக்கும் வாயில் துர்நாற்றம்| ஏற்படாது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.

Mar 06, 2024

கோவக்காய்விதை, பழம் மற்றும் இலைகள்  அனைத்தும் தொற்றுக்களை குணப்படுத்தும்

கோவக்காயில்தியாமைன் என்ற ஊட்டச்சத்து, கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்த உதவுகிறது. கோவக்காயில் உள்ள தியாமைன் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் புகுந்து அதிக சக்தியை வழங்குகிறது. இந்த ஊட்டச்சத்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. இது மரபணு கோளாறுகளையும் சரிசெய்கிறது. கோவக்காய்விதை, பழம் மற்றும் இலைகள் என அனைத்தையும் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மற்றும் தொழுநோய்க்கு உபயோகிக்கலாம். இந்த நோய்களுக்கு இது இயற்கை மருத்துவம். பல்வேறு மருந்துகள் இருக்கும்போதும் இதுவும் உதவுகிறது. இது பாக்டீரியாக தொற்றுக்களுக்கு ஆன்டிபயோடிக்காகவும் பயன்படுகிறது

Mar 04, 2024

நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

மூளை வளர்ச்சி மற்றும் ஞபாக சக்தியை அதிகரிக்கிறது.ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.சரும பிரச்சினைகளை நீக்கி முகப்பொலிவுக்கு உதவுகிறது. அல்சர் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

1 2 ... 24 25 26 27 28 29 30 ... 36 37

AD's



More News