கோடை காலம் வந்தாலே வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால், இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். வறட்சி, வியர்வை, தூசி போன்றவை கோடையில் ஏற்படும் மற்ற நோய்களுடன் சேர்ந்து இந்த நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகின்றன. கோடை வெயிலின் தாக்கத்தால், சோர்வு பெரியவர்களுக்கு வருவது பொதுவானவை என்றாலும், குழந்தைகள் இந்த நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றன.வயிறு மற்றும் குடல் தொற்று: கோடையில் வைரஸ் தொற்று காரணமாக வயிறு மற்றும் குடல் தொற்றுகள் அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம், குடத்தில் குறைவாக நீர் இருக்கும் போது அடிமட்ட நீர் மிகவும் மாசுபட்டு இருக்கும். அந்த நீரை குடிக்கும் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து வரும். எனவே, இந்த உங்கள் கைகளை நன்கு கழுவி, சுத்தமான மற்றும் நல்ல நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுங்கள்.கொசுக்கள், எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற பூச்சிகள் கோடையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவை குழந்தைகளை கடித்தால் அரிப்பு, வீக்கம், வலி மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே, இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு, குழந்தைகள் வெளியில் செல்லும்போது முழுக் கை சட்டை மற்றும் பேண்ட்டை அணியுங்கள். மேலும், பூச்சிகள் பொதுவாக இனப்பெருக்கம் செய்யும் நீர் தேங்கும் பகுதிகளை முடிந்தவரை தவிர்க்கவும்.கோடை காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக, பூஞ்சை தொற்று பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக, அக்குள், உடல் மடிப்புகள், இடுப்பு பகுதி போன்ற இடத்தில் ஈரப்பதம் இருக்கும். இங்கு பூஞ்சை தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளின் இந்த பகுதிகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது இந்த பாகங்களை துடைக்கவும் மற்றும் கோடைக்கு ஏற்றால் போல் நல்ல ஆடைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவிர்கள்.கோடை விடுமுறை, வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதற்கான நேரம் . கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த கதிர்களின் வெளிப்பாடு சருமத்தை கருமையாக்கும். ஒரு குழந்தையின் மென்மையான தோல் இந்த கதிர்களின் தாக்கத்தை தாங்க முடியாது. எனவே, நீங்கள் குழந்தையை வெளியே அழைத்து சென்றால், நல்ல தரமான சன் ஸ்கிரீனை பயன்படுத்தவும் மற்றும் சூரிய ஒளியில் இருந்து அதிகபட்சபாதுகாப்பைவழங்கும்ஆடைகளைகுழந்தைக்குஅணியுங்கள்.குழந்தையைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது மிகவும் முக்கியமானது.
வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகம் எங்கும் அரிப்பும் எரிச்சலும் தோன்றக்கூடும் இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.தேங்காய்எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல்அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும்முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில்தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம்,கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.முகத்தை வெறும்தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரைமுகம், கழுத்து, கை, கால்களில் தடவிவிடவும்.15 நிமிடம் கழித்து முகம்மற்றும் கை, கால்களை சோப்புபோட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும்.15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும்.
இரைப்பை அழற்சி என்பது வேறு.. அல்சர் என்பது வேறு.. அல்சர் வர எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. சிகரெட் பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள், ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் போன்றோருக்கு அல்சர் வரலாம். அல்லது,பாக்டீரியா தொற்று, மன உளைச்சல், அதீத கவலை, அதிகமாக காபி குடிப்பது போன்ற காரணங்களினாலும் அல்சர் வரலாம்.உணவு சரியாக எடுத்து கொள்ளாதது, அதிக உணவு, அதிக காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும்,அல்சர் வரலாம்.. அதேபோல,உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் போன்றோருக்கும் அல்சர் போன்ற வயிற்றுப் புண் பிரச்சனை வரலாம்.ஒருவகையான வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் அல்சர் வரலாம்.. அல்சர் பிரச்சனை ஆரம்பக்கட்டமாக இருந்தால் உணவு முறை மூலமாகவே தீர்வு காணலாம்.அல்சர் ஏற்பட்டுவிட்டால் வயிற்றில் புண்கள் ஏற்படும். முதலில்,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.. காரணம்,காபியில் காஃபின் என்ற பொருட்கள், வயிறு புண்களை அதிகப்படுத்திவிடும்..வயிற்றில் அமிலத்தன்மையையும் அதிகரிக்க செய்துவிடும்.இதனால் வயிறு வலி அதிகமாகும். இந்த காஃபின் நிறைந்த ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப்பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.காரம் நிறைந்த, மசாலா அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பால் நிறைய குடிக்கக்கூடாது.பாலில் நிறைய கொழுப்பு உள்ளதால், வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை இந்த பால் அதிகப்படுத்திவிடும்.. கூல் டிரிங்க்ஸ்,சோடா போன்ற பானங்களை தவிர்க்கலாம். இதுவும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்திவிடும். சிவப்பு இறைச்சியிலும்,நிறைய கொழுப்பு, புரோட்டீன் உள்ளதால், அவைகளையும் தவிர்த்துவிட வேண்டும்.வயிற்றில் அல்சர் புண் இருப்பவர்கள், முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்..காரம், மசாலா இல்லாத நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளை சாப்பிட வேண்டும். தேங்காய்ப்பாலுக்கு வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் தன்மை உண்டு.. தினமும் அரை கிளாஸ் தேங்காய் பால் குடிப்பதால்வயிறுஎரிச்சல்குறையும்,வயிறு புண்களும் மெல்ல ஆற துவங்கும்.அல்லது வெறும் மணத்தக்காளி கீரைகளை நான்கைந்து கழுவி வெறுமனே மென்று சாப்பிடலாம்.தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், புண்களுக்கு சிறந்தது. மோர் குடிக்கலாம்.. இதனால், வயிறு எரிச்சல் தணிவதுடன், உடல் முழுவதுமே உடல் சூட்டினை தணித்துவிடும்.மாதுளை ஜூஸ்களுக்கும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி உண்டு..அதனால், மாதுளை சாறு தினமும் அரை கிளாஸ் குடிக்கலாம்..கீரைகளில் மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். வயிற்றுப்புண்,வாய்ப்புண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது..அதேபோல, அகத்திக்கீரையை சாப்பிடலாம். அகம்+ தீ+ கீரையே அகத்திக்கீரையாகும்.அதாவது உடலுள்ள உஷ்ணத்தை விரட்டக்கூடியது இந்த அகத்திக்கீரைகள்..இந்த2 கீரைகளையும் சமைக்கும்போது,காரம் அதிகம் சேர்க்காமல், வாரம் 2முறையாவது சாப்பிட வேண்டும். எந்த கீரை செய்தாலும், பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். முட்டைக்கோஸ், பூசணிக்காய், முள்ளங்கி, புடலைங்காய்,பூசணிக்காய், வெள்ளரிக்காய், போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.. இளநீர் அடிக்கடி குடிப்பதன் மூலம் அல்சர் குறையும். ஆனால்,இதெல்லாம் அல்சர் புண்களை ஆற்றுவதற்கு ஓரளவு மட்டுமே உதவும்.. மற்றபடி, அல்சர் புண்கள் தீவிரமாவதற்கு முன்பேயே, மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.
முடக்கத்தான் கீரை வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது.இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.
பல வகையான நோய்களைத் தடுக்கவும் கட்டுப் படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எலுமிச்சை இலைகளை நீரில் கொதிக்க வைத்து டீயாகவும் அருந்தலாம். இலைகளைப் பொடி செய்தும் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.எலுமிச்சை இலைகளில் மிகுந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இது ஒற்றைத் தலைவலி மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெகுவாக குறைக்கிறது.இதில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்கலாய்டுகள் தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. \மேலும், சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது.இதில் காணப்படும் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து எடையைக் குறைப்பதில் திறம்பட செயல் படுகிறது.
மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சிலர் இதை இரவு உணவோடு குடிக்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் மாலையில் குடிக்கிறார்கள். ஆனால் மோர் குடிக்க சரியான நேரம் ?ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், புரோபயாடிக்குகள், பாஸ்பரஸ், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.மோர் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது, இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது.கோடை வெயிலில் மோர் குடித்தால் புத்துணர்ச்சி பெறலாம். இது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.உடல் ஆரோக்கியமான தசைகள், தோல் மற்றும் எலும்புகளை உருவாக்க மோர் உதவுகிறது. இதில் பாலை விட குறைவான கலோரிகள் மற்றும் அதிக கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது. நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம்.உண்மையில், இந்த பானத்தை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம். ஆனால் யாராவது வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.இதற்கு, தயிரை ஒரு பிளெண்டரில் போட்டு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை கலக்கவும். அதில் குளிர்ந்த நீரை சேர்த்து மீண்டும் குறைந்த வேகத்தில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை கலக்கவும். இப்போது அதனுடன் கருப்பு உப்பு, புதினா தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.
சளி, இருமல்: மழைக்காலங்களில் தண்ணீரில் 3, 4 தூதுவளை போட்டுக்கொதிக்க வைத்து குடித்தால் இருமலை கட்டுப்படுத்தும். இருமல் உண்டாகும்போது, சிறிதளவு தூதுவளை இலையை கழுவ, மென்று சாப்பிட, இருமல் குறையும். ஆவி பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் தூதுவளை முக்கியமானது.தூதுவளையின் மருத்துவ குணங்களை பார்த்தால், இருமல், சளியை விரட்டியடிக்கக்கூடியது.. தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், நம்மை சளி, காய்ச்சல் என்றுமே அண்டாது.குறிப்பாக மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இந்த செடியின் தேவை நிச்சயம் இருக்கும்.. இந்த இலையின் சாற்றை எடுத்து, அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், சளி, இருமல் குணமாகும். தூதுவளை இலைகளை தண்ணீரில் சேர்த்து குடித்தால், பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்...
கீரைகளில் மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். வயிற்றுப்புண், வாய்ப்புண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. அதேபோல, அகத்திக்கீரையை சாப்பிடலாம். அகம் + தீ + கீரையே அகத்திக்கீரையாகும். அதாவது உடலுள்ள உஷ்ணத்தை விரட்டக்கூடியது இந்த அகத்திக்கீரைகள்.. இந்த 2 கீரைகளையும் சமைக்கும்போது, காரம் அதிகம் சேர்க்காமல், வாரம் 2முறையாவது சாப்பிட வேண்டும். எந்த கீரை செய்தாலும், பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
அடிக்கடி கை உரிதல், வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால்தான் கைகளில் தோல் உரிகிறது. வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறதெனில் வெதுவெதுப்பான நீரில் கைகளை10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி நீங்கும்.விட்டமின்E எண்ணெய்யைகைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். கைகளும் பளபளக்கும்.கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி கைகளில் மசாஜ் செய்து காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.தேங்காய் எண்ணெய்யைகைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகள் பளபளக்கும்.
அன்னாசி பழம் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை எரிக்கும் ஆற்றலும் உண்டு. பேரிக்காய் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று என்பதால், இவை உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவும். வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்களும் பொட்டாசியமும் அதிகமாக இருப்பதால், நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும். அவகேடோ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும். திராட்சையில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் உடலின் ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவி செய்யும். டிராகன் பழம் நார்ச்சத்துக்கள் மிக அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் ஏற்கனவே கடினமாக படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற முடியும். ஆப்பிளில் வைட்டமின் சி, பொட்டாசியம், கரையும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது உயர்கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது.