25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

May 31, 2024

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் உங்கள் நாளை தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள் .காலை தண்ணீர் குடிப்பதால் நீர்ச்சத்து அதிகரித்து சருமத்தில் சுருக்கங்கள் குறைந்து இயற்கையான பொலிவை அதிகரிக்கும். காலை தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.  காலை தண்ணீர் குடிப்பது நீங்கள் காலை உண்ணும் சிற்றுண்டியின் செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கிறது.  உடலில் நீர்ச்சத்து குறையும் போது முடி உலர்ந்து உடையக்கூடியதாக மாற்றும். எனவே காலையில் தண்ணீர் குடிப்பதால் முடியின் பொலிவும் வலிமையும் அதிகரிக்கும்.  சிறுநீரகத்தில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க காலை தண்ணீர் குடிங்க. காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவை உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்கும். 

May 30, 2024

பனை வெல்லம்

உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.சுவாச குழாய்,நுரையீரல்போன்ற பிரச்சினைகளுக்குநிவாரணம் அளிக்கிறது.ரத்த சோகையைத் தடுக்கும் தன்மைக்கொண்டது.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானம் மற்றும்  மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்கிறது. சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.சிறுநீர் பாதை பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

May 28, 2024

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ...

எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரேட், கால்சியத்துடன் சேர்ந்து, சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் இருக்க உதவுகிறது.எலுமிச்சை ஜூஸில் இருக்கும் பெக்டின் எனும் நார்ச்சத்து, கல்லீரலில் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.இதனால் மலச்சிக்கல் வராது.  எலுமிச்சை ஜூஸ் குடிப்பது ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை ஜூஸில் உள்ள பெக்டின், எடை இழப்பினை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும். 

May 27, 2024

அதிக வெப்பநிலை காரணமாக உடலில் தோன்றும் வேர்வையால் வேர்க்குரு ஏற்படுகிறது

 ஏப்ரல் மாதத்திலேயே வெப்பம் உச்சத்ததில் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். வெயிலில் நீண்ட நேரம் தங்குவதால் உடல் உஷ்ணம் வேர்க்குரு பிரச்சனை அதிகரிக்கிறது. சிறிய சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுகிறது. பல நேரங்களில் ஆடை அணிவதில் கூட சிரமம் ஏற்படுகிறது..வேர்க்குரு போக்கமுல்தானி மெட்டியை பயன்படுத்தி உஷ்ண தடிப்புகளை நீக்கலாம். முல்தானி மெட்டி குளிர்ச்சியாக இருக்கும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத் தழும்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின் வேர்க்குரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். வேர்க்குரு இருக்கும் பகுதிகளில் இந்த பேஸ்ட்டை 15 நிமிங்கள் உடலில் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.வேர்க்குருவை தடுக்க கோடையில் முடிந்தவரை காட்டன் துணியை மட்டுமே அணியுங்கள். இது வியர்வை உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கிறது.வேர்க்குருவை தடுக்க முடிந்தவரை உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். உடலை ஈரப்பதமூட்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். எலுமிச்சை நீர், பழ வகை சார்ந்த ஜூஸ் மற்றும் சர்பத் போன்ற பானங்களின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக உடலில் இருந்து நச்சு பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன.வெயிலில் இருந்து வெளியே வரும்போதெல்லாம் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். இதனால் உடலில் தேங்கியிருக்கும் வியர்வை நீங்கும் தொற்று மற்றும் வேர்க்குரு ஆபத்து இருக்காது.

May 26, 2024

வயதுக்கு ஏற்ப பெண்களின் சரியான எடை அளவு

ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு சரியான உடல் எட யில் இருப்பது அவசியம் .அந்த வயதிற்கு குறிப்பிட்ட எடைக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.12 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் 32-36 கிலோ எடை இருக்க வேண்டும்.15 முதல் 20 வயதுடைய இளம் பெண்கள் 45-50 கிலோ எடையில் இருப்பது அவசியம்.21 முதல் 30 வயது வரை இளம் பெண்கள் 50-60 கிலோ எடையில் இருப்பது ஆரோக்கியமானதாகும்.31 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 60-65 கிலோ எடையில் இருக்க வேண்டும்.41 முதல் 60 வயது வரை வயது முதிர்ச்சி அடையும் பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள59-63 கிலோ எடை இருக்க வேண்டும்.இந்த தகவல்கள் பொதுவானவை. பெண்களின் உடல் உயரத்தைபொறுத்து உடல் எடையின் அளவு மாறும்.

May 23, 2024

நம்முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது வசம்பு

கிராமத்தில்உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடு படுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்னச் சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது.இதனாலேயேஇது பிள்ளை வளர்ப்பான்என்று கூறப்படுகிறது. வசம்பை ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் என்று அழைப்பதுண்டு.வசம்பு பொடி அரை ஸ்பூன் எடுத்து அருகம்புல் சாறு50 மில்லி சாற்றில் கலந்து30 நாட்கள் பருகி வர வேண்டும் திக்குவாய் தீரும்.சுடுதண்ணீர்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.வசம்பை தூள் செய்து ரெண்டு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியை கொடுக்கவும் ,சோம்பலை நீக்கவும், வசம்பு பயன்படுகிறது.அதிமதுரம் சிறிதளவு அதே அளவு வசம்பு சேர்த்து நசித்து ஒரு டம்ளர் நீரில் காய்ச்சி.20மில்லி காலை, மாலை இரண்டு நாள் பருக கொடுத்தால் குழந்தை காய்ச்சல் சரியாகும்.வசம்பு ஒரு அங்குல துண்டையும்,10 லவங்கத்தையும் அம்மியில் நசித்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதித்து ஆறியபின் காலை மாலை வேலைக்கு50 மில்லி பருக காலரா சரியாகும்.கோலி அளவு மஞ்சள், சிறிது வசம்பு,சிறிது கற்பூரம் மூன்றும் சேர்த்து அத்துடன் மருதோன்றி இலைகள், நெல்லிக்காய் இலைகள் சேர்த்து அரைத்து இரவில் கால் ஆணி மீது வைத்து கட்டி காலையில் எடுத்து விட வேண்டும். மூன்று நாட்கள் இது போல் செய்தால் கால் ஆணி குணமாகும்.துளசி செடியின் பூங்கொத்து, சுக்கு, திப்பிலி, வசம்பு இவற்றை தனித்தனியே தூளாக்கி சலித்து சம அளவு கலந்து ஒரு சிட்டிகை தூளை சர்க்கரை சேர்த்து காலை மாலை இரண்டு நாள் கொடுத்தால் கக்குவான் சரியாகும்.

May 22, 2024

தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால்...

தினமும் பாதங்களின் கீழ் ஆழமாய் எண்ணெய் தடவினால்,80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம்2 முதல்3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும். நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்துபோகும்.சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள். தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள். தொடர்ந்து செய்வதால் நல்ல தூக்கம், வலியில்லாத கால்கள் வசப்படும். சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும். அதற்கும் இது நல்ல தீர்வு.

May 21, 2024

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிப்பதால்....

ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி இதனுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரணச் சக்தி பெருகும்.சாதம் வடித்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.வடித்த கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகளவில் அடங்கி உள்ளன.இதனைப் பயன்படுத்தி ரசம் வைத்தும் சாப்பிடலாம். இட்லிமாவு அரைக்கும்போது இதனைக் கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாகஇருக்கும். சாதம் வடித்த கஞ்சியுடன் திராட்சைப் பழங்களைச் சேர்த்துஅரைத்து முகத்தில் தடவி வர, முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள்நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.கால் வலியில் அவதிப் படுபவர்கள். சாதம் வடித்த கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைத்தால் கால் வலி, வீக்கம் குறையும். இது நல்ல வலி நிவாரணியாக பயன்படும்.சாதம் வடித்த கஞ்சி பசியைத் தூண்டும் தன்மையுடையது. இதனுடன்' சிறிது சீரகம் கலந்து குடித்தால் சாப்பிட்ட உணவுகள் சீக்கிரம் ஜீரணம்ஆகும்.முகம், கழுத்து, கைப் பகுதிகளில் சாதம் வடித்த கஞ்சியைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அலசி லர, விரைவில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.நீர்கடுப்பு பிரச்சனை தீரும். நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும். கண் எரிச்சலை தீர்க்க உதவுகிறது.வெள்ளை படுதல் பிரச்சனையை சரிசெய்கிறது.மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும் புற்று நோய் வராமல் தடுக்கும். உடலின் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும். குடல் அழற்சியைத் தடுக்கும்.மேலும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

May 20, 2024

பல் வலி,பல்சொத்தை சரியாக

பல் வலி,பல்சொத்தைக்கு கிராம்பு-5கி,  தேங்காய் எண்ணெய்-50 மிலி ,கல் உப்பு-சிறிதளவு, மிளகு -10.  தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். பின்பு ஒரு கிண்ணத்தில் மிளகு கிராம்பு தூளை,எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவுதண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.பயன்படுத்தும் முறை: ஒரு ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும்.பாதிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி, சிறிது நேரம்கழித்து நீக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் வலி நீங்கும்.

May 19, 2024

 ஆரோக்கியத்தை மேம்படுத்தும்ஓமதேநீர்

ஓம தேநீர் தனிநபர்களின் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும்நல்லகுடல்ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நன்கு அறியப்படுகிறது. ஓமத்தில் உள்ள தைமோல் மற்றும் பிற செயலில் உள்ள உட்பொருட்கள், இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டுவதில் உதவுகின்றன, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை போன்ற அறிகுறிகளை நீக்குகிறது. உணவுக்குப் பிறகு செரிமான பிரச்சனைகள் அல்லது வயிற்று வலி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி, ஏனெனில் இது வயிற்றில் அடக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது.ஓம தேநீர் பசியைத் தூண்டுவதாகவும் அறியப்படுகிறது, இது கோடையில் வெப்பம் பசியை அடக்க முனையும் போது நன்மை பயக்கும். ஓமத் தேநீர் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, இது ஆரோக்கியமான பசியை ஊக்குவிக்கிறது மற்றும் நீங்கள் ஆற்றலுடன் இருக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைப்பெறுவதை உறுதிசெய்கிறது ஓம தேநீர் வீக்கம் மற்றும் வாய்வு ஆகியவற்றிலிருந்துவிடுபட சிறந்தது. வீக்கம் மற்றும் அதிகப்படியான வாய்வு அறிகுறிகள் ஓமத்தின் கார்மினேட்டிவ் குணங்களால் நிவாரணம் அளிக்கின்றன,  வாயு பிரச்சனை மற்றும் செரிமான அசௌகரியத்தையும் குறைக்கின்றன. நாள் முழுவதும் அதிக ஆறுதலையும் நிவாரணத்தையும் வழங்குகிறது.ஓம தேநீர் குடிப்பதன் கூடுதல் நன்மை நச்சு நீக்கம் ஆகும். சிறுநீர் கழிப்பதன் மூலம் கழிவுகள் மற்றும் பிற நச்சுகளை வெளியேற்ற உடலை ஊக்குவிக்கும் டையூரிடிக் பண்புகளை ஓமம் கொண்டிருக்கிறது. ஓம தேநீர், உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்க உதவுகிறது, இது அமைப்பை அழிக்க மற்றும் பொது ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.ஓம தேநீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், இது எடை நிர்வாகத்திற்குஉதவுகிறது.ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இருக்கும்போது, அதிக வளர்சிதை மாற்றம் கலோரிகளை மிகவும் திறம்பட எரிக்க உடலின் திறனுக்கு உதவுகிறது, எடை இழப்பு மற்றும் பராமரிப்புக்கு உதவுகிறது. ஓம தேநீர் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் எடை நிர்வாகத்திற்கு உதவக் கூடும். கோடையில் காலையில்எழுந்தவுடன் முதலில் ஓம தேநீர் குடிப்பதால்ஏராளமான ஆரோக்கிய நன்மைகள்உள்ளன. ஓம தேநீர்செரிமான மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்து. 

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 36 37

AD's



More News