25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Aug 28, 2024

நரம்பு சுருட்டல்  நீங்க…

வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக்  கற்றாழையில் அரைத்து  தடவி  2 மணி நேரம் உலர விட்டு பின் கழுவ வேண்டும். இவ்வாறு 20 நாள் வரை செய்ய வேண்டும்.புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட  வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

Aug 23, 2024

தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவும் இந்துப்பு

இந்துப்பு கலந்த இளஞ்சூடான நீரில் வாய்க் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கிப் பல்வலி, ஈறுவீக்கம் போன்றவை குணமாகும். ரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை இதற்கு உண்டு. உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும்உதவுகிறது. தைராய்டு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இதய பாதுகாப்பிற்கு பேருதவி  புரிகிறது.

Aug 14, 2024

சொடக்கு தக்காளி நன்மை

சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும். நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும். சிறுநீரகம் கல்லீரல் பிரச்சினைகள், சரியாகும். இந்த பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் அநீமியா சோர்வு அறிவுத்திறன் குறைபாடுகள்  சரியாகும் கட்டிகளை கரைக்கும் ஆற்றலும் இந்த பழத்துக்கு உண்டு.

Aug 11, 2024

முட்டையை வேகவைக்கும் போது ....

 முட்டையை சிலர் பொதுவாக சோறு வேகவைக்கும் போது அந்த தண்ணீரிலேயே சோறுடன் சேர்த்து வேக வைப்பர்.. இன்னும் சிலர் குழம்பு செய்யும் போது அதிலும் முட்டையை ஓட்டுடன் முழுசாக வேக வைப்பார்கள்.. இது தவறானதாகும்.ஏனென்றால் அந்த பச்சை முட்டையிலிருந்து வெளிவரும் கெட்ட நீர் .ஒரு இறந்த பிணத்தை குளிப்பாட்டும் நீருக்கு சமமாகும். இதனால் கெடுதி அதிகம் ஏற்படும். ஆகையால் முட்டையை அவிக்கும் போது தனியாக ஒரு பாத்திரத்தில் வேகவைப்பது சிறந்ததாகும்..

Aug 07, 2024

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள், நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது, உடல் உழைப்பு அதிகமான வேலைகளில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை வெள்ளை கரு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம், இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தூங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும் .எனவே மஞ்சள் கரு சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது.

Aug 06, 2024

தேவையற்ற கொழுப்பை குறைக்க அருகம்புல் சாறு உதவுகிறது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீர் தடைபடுவது சொட்டு சொட்டாக சிறுநீர் போவது இதற்கெல்லாம் அருகம்புல் சாறு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துகிறது.படை, அரிப்பு, சொறி சிரங்கு, கடி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Aug 05, 2024

பக்கவாதம் வருவதை தடுக்க உதவும்  நாவல்பழம்

நாவல்பழத்தில்  வைட்டமின் ஏ, சி, சிட்ரிக் அமிலம் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதயத்தை பாதுகாக்கிறது. பக்கவாதம் வருவதை தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக கற்களைக் கரைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மாலைக்கண் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

Aug 04, 2024

வாய், தொண்டை, இரைப்பை, குடல்  புண்களை அகற்றும் கடுக்காய்

கடுக்காயில் உவர்ப்புசுவை தவிர மீதமுள்ள 5 சுவையும் இருக்கும். இதை  உண்பதன் மூலம் வாய், தொண்டை, இரைப்பை, குடல்  புண்களை அகற்றும்., மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தி இரத்ததை சுத்தப்படுத்தும். பல நன்மைகள் தரும் இதை சித்த மருத்துவத்தில் அதிகம் உபயோகிப்பர். இதை வெளிச்சம் படாத இடத்தில் சேமித்து வைத்தால்  ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

Jul 25, 2024

தலைவலி இருந்தால் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுவோம்.

கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோஷம் வரப் போகிறது என்று அர்த்தம். தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு  தூங்குவதே மருத்துவம். தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதே மருத்துவம். தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம். ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுவோம்.

May 31, 2024

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செம்பருத்தி டீ

ரத்தத்தில் சோடியம் குறைவாக பொட்டாசியம், சத்து அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் நான்கைந்து செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.வடிகட்டி இத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து தினமும் குடித்தால், இதில் இருக்கும் பீட்டா கரோட்டின், லைக்கோபின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.நார்ச்சத்து, பொட்டாசியம் நிறைந்த சிறுதானியங்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

1 2 ... 21 22 23 24 25 26 27 ... 36 37

AD's



More News