காலை எழுந்ததும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தலாம்.தர்பூசணி,உடலைநீரேற்றமாகவைத்திருக்கும்.ஊறவைத்த சியா விதைகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவலாம்.சமையலறையில் நுழையும்முன்பு,கழிவறை பயன்படுத்திய பின்பு,புகைபிடித்த பின்பு,தும்மல் மற்றும் இருமல்வந்த பின்பு - உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும்,தலை அல்லது மூக்கில் கை வைத்த பின்பு கைகளை கழுவ வேண்டும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இவை கொழுப்பைக் குறைப்பதோடு பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்கவும் வெந்தயம் உதவுகிறது.இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல் சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகி உடல் மெலிந்துபோவார்கள். பெண்கள் பருவமடைந்த புதிதில் வெப்பத்தை குறைத்து உடல் மெலிந்து போவதை தடுக்கிறது. அப்படியுள்ளவர்கள் வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து சாப்பிட கொடுக்கவேண்டும்.இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கவும். எலும்புகள் நன்கு வளரச் செய்யவும் உதவும்.வாய் புண் இருந்தால் விரைவில் குணமடையும். சர்க்கரை நோயை கட்டுபடுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
.பொட்டுகடலைஇந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி ஆகும். இது பொட்டுக்கடலை பொரிகடலை போன்ற பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் அறியப்படுகிறது மற்ற அனைத்து பருப்பு வகைகளைப் போலவே. இதில் புரதம். நார்ச்சத்து தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. மேலும் இந்த பருப்பில் கலோரிகள் மிகக் குறைவு: மற்றும் இரும்புச் சத்து அதிகம்.பொட்டுகடலை வளரும் குழந்தைகளுக்கு நல்ல சக்தியை அளிக்கிறது. இது அற்புதமான ஆரோக்கியமான சிறந்த தானியங்களில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருவருக்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டி ஆகும்..பொட்டுக்கடலையில் ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன. இவை சீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும். இது செரிமான பிரச்சினைகளை களைவது, உடல் எடையை குறைக்க மற்றும் பல நோய்களை விரட்ட என நிறைய நன்மைகளை தருகிறது100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே எடை இழப்புக்காக வறுத்த பொட்டுக்கடலையை உட்கொள்ளுங்கள்.
முளைகட்டிய பயறு வகைகள் கொள்ளு, காறாமணி, முழுக்கடலை, பயத்தம் பயறு இவற்றுடன் மூங்கில் குருத்தும் சேர்த்து சோம்பு பட்டை லங்கம் இஞ்சி பூண்டு தக்காளி வெங்காயம் சேர்த்து குருமா செய்து சாப்பிட பெண்கள் கருப்பை பலப்படும் .மூட்டுத்தசைகள், ஐவ்வு பசை உற்பத்தி ஆகும். எலும்பு வலுவாகும். குடலிலுள்ள மண் கசடுகள் மலத்தில் வெளியேறும்.இது இதய தமனிகளில் இருந்து கொழுப்புகளை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் ரத்தத்தின் இயக்கம் எளிதாக்க உதவுகிறது. இதில் நிறைய விட்டமின்களும் தாதுக்களும் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. மூங்கில் குருத்து வயிற்றுப்போக்குக்கு நல்லது.
பப்பாளி பழத்தில் இருப்பதைப்போலவேஅதன்விதையிலும்நிறையமருத்துவகுணமும்ஊட்டச்சத்துகளும் இருக்கிறது.பப்பாளி விதைகளில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் நமது செரிமாண மண்டலத்தைத் துரிதப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.நமது உடல் எடையை மேலும் அதிகரிக்கச் செய்யாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது..பப்பாளி விதைகளில் மிக அதிக அளவில் ஆன்டிஆக்சிடண்ட்டுகள் மற்றும் பரிலபினைல்கள் இருக்கின்றன. அதனால் இவை தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுக்களைத் தாக்கி அழிக்கக் கூடியவையாக இருக்கின்றன.குடல் புண்களை ஆற்றுகின்ற சக்தி பப்பாளி விதைக்கு உண்டு. உடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கு அதிலும் அல்சர் என்னும் வயிற்றுப்புண், உணவுக்குழாய் தொற்று இருப்பவர்கள் கட்டாயம் பப்பாளி விதைகளை பச்சையாகவோ அல்லது நன்கு உலர வைத்தோ சாப்பிட்டு வரலாம்.பப்பாளி விதைகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற கடுமையாக வயிற்று வலி மற்றும் தொடை, இடுப்பு வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. உடலுக்குப் போதிய வலிமையைக் கொடுக்கிறது. பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் மிக அதிக அளவில் இருப்பதால், இதயக் குழாய், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கின்ற ஆற்றலைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்பாக பப்பாளி விதைகளைச் சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும்.ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஜூஸ் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றிரண்டாக அரைத்து ஃபுரூட் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்.பப்பாளி விதையோடு தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள்.பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு அதை சூப், ரசம் போன்றவற்றில் தூவிக் கொள்ளலாம்.காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. அளவோடு சாப்பிட வேண்டும்.
அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் உணவுகளில் வெண்பூசணிக்காயும்ஒன்று.வெண்பூசணியில்ஏராளமான நன்மைகள் உள்ளது. வெண் பூசணி உணவில் எடுத்துக் கொள்வது கணையத்தின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.இதில் துத்தநாகம் உள்ளது, இதை தைராய்டு உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.வெண் பூசணி வறண்ட சருமத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.வெண்பூசணி சாப்பிடுவதால் சிறுநீர் மூலம் நச்சுகள் வெளியேறுகிறது.இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கு பல மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.குறைந்த கொழுப்பு கொண்ட வெண்பூசணி உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது.பூசணி சாறு அடிக்கடி பருகுவது வயிற்றுப் புண்களுக்கு நன்மை பயக்கும்.
இரும்பு, கால்சியம், நார்ச்சத்து நிறைந்த மாதுளை ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் தன்மை கொண்ட பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை வைட்டமின் சி சத்துக்களின் ஆதாரமாக உள்ளது. இவை இரும்பு சத்துக்கள் உறிஞ்சுவதை உறுதி செய்கிறது.இரும்பு சத்து, வைட்டமின் சி நிறைந்திருக்கும் ஆப்பிள் பழங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதுடன், ரத்தத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.பச்சை நிற காய்கறியாக இருந்து வரும் ப்ரோக்கோலி இரும்பு சத்து, வைட்டமின் சி, போலேட் நிறைந்து காணப்படுவதுடன் ஹீமோகுளோபின் உற்பத்தியைஅதிகரிக்கிறது.இரும்பு சத்து, போலிக் அமிலம், பொட்டாசியம், நார்சத்து நிறைந்த காணப்படும் பீட்ரூட் ரத்த அளவை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.இரும்பு சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் பசலை கீரை, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மலைப்பாங்கான இடங்களில் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகைகளில் மரவள்ளிக்கிழங்கும் ஒன்றாகும். வேர்களில் உருவாகும் இந்த அற்புத கிழங்கில் கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது."இரத்தசிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது எலும்புகளின் நெகிழ்வு தன்மையை உறுதி செய்கிறது.மரவள்ளிக் கிழங்கு சாற்றை தினமும் இரண்டு வேளை பருகுவதால், வருங்காலத்தில் தலைவலி ஏற்படாமல் தடுக்கிறது. மரவள்ளிக் கிழங்கை நாம் தினமும் சாப்பிடுவதால், உடலுக்கு தினசரி தேவையான 'வைட்டமின்கள்' மற்றும் 'மினரல்கள்' எளிதில் கிடைக்கின்றன. இவை நமது கண் பார்வையை மேம்படச் செய்கின்றன. மரவள்ளிக் கிழங்கின் இலைகளை கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து பருகி வந்தால் நமக்கு ஏற்படும் லேசான காய்ச்சல் பறந்துபோகும். உடலில் ஏற்படும் காயங்களுக்கு மரவள்ளிக் கிழங்கு இலையில் உள்ள பசையை பிழிந்து எடுத்து, காயங்கள் மேல் பூசுவதால், சிறந்த நிவாரணம் கிடைக்கும். மரவள்ளி கிழங்கின் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்துக்கொண்டால் கூடுதல் சுவையைத் தரும்.பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இவற்றில் அதிகமாகவே உள்ளன. மரவள்ளிக் கிழங்கை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், நமது உடல் எடையை படிப்படியாக குறைக்கலாம். இவற்றில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. மேலும், உடலில் ஏற்படும் அழற்சியையும் குறைக்கவும், இரைப்பை பிரச்னைகளில் இருந்தும் காக்கிறது.ஒற்றை தலைவலி மற்றும் சாதாரண தலைவலிக்கு மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகள் பயன்படுகின்றன. இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி, அரைத்து சாறு எடுத்தும் பருகலாம்.
கோரைக்கிழங்கு பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.இது ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கானசெரிமானசக்தியைஅதிகரிக்கும்.கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. மலேரியாகாய்ச்சலைகுணப்படுத்தக்கூடியது.இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரை கிழங்கு மருந்தாக பயன்படுகிறது.வெள்ளைப்போக்கு. இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்குகிறது..கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும். முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது.
விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, ஒரு தேக்கரண்டி வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல்.காய்ச்சல், உடல் சூடு. இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை(வேர், இலை. தண்டு, பூ அனைத்தும்) சுண்டைக்காய்அளவு அரைத்து சாப்பிட்டு வர வயிற்றில்உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.மேலும் இதை தயிரில் கலந்து கொடுக்க இரத்த பேதி, சீதபேதி குணமாகும்கபவாதசுரம் என்ற வகையைச் சேர்ந்த டெய்கு காய்ச்சலுக்கு, ஆரம்ப நிலையில் நிலவேம்புக் கசாயம் சிறந்தது. டெங்கு காய்ச்சலுக்கான வைரஸை அழிக்கும் தன்மை நிலவேம்புக்கு உண்டு. அதே நேரம் டெங்கு முழுமையாக தாக்கும் போது விஷ்ணுகிராந்தி வேர்-6, கீழாநெல்லி வேர்-6, ஆடாதொடை இலை-8 ஆகிய மூலிகைனளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், சித்தரத்தை, தானிப்பச்சரிசி, கோஸ்டம், அதிமதுரம், அக்கரா பரங்கிப்பட்டை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சீந்தில்கொடி, நிலவேம்பு, பேய்குடல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. இந்தப்பொடியை ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள மூலிகைகளுடன் சேர்த்து 4 லிட்டர் தண்ணீர் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இதை ஒரு லிட்டராகச் சுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.இந்தக் கஷாயத்தை பெரியவர்களுக்கு 100 மில்லி அல்லது சிறியவர்களுக்கு 50 அல்லது 25 மில்லி குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். தினமும் மூன்று வேளை எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால், டெங்கு மட்டுமல்ல, விடாத காய்ச்சலும் விலகி ஓடும் .