மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம். மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். மொச்சையில் நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.. மொச்சையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குகிறது. பெருங்குடலில்புற்று நோயை உண்டாக்கும் ரசாயனங்களை தடுக்கிறது. இதில் அடங்கியுள்ள புரதச்சத்துஅ ணுக்கள். செல்களின் வளர்ச்சிக்கும். பாதிப்படைந்த செல்களை பழுது செய்யவும் உதவுகிறது. மொச்சையுடன் இஞ்சி பூண்டு சேர்த்து சமைத்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.
கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்தால் தலைவவி குணமாகும். இதனை அரைத்து சூடேற்றி அடிபட்ட இடத்தில் தடவினால், வலியும் வீக்கமும் குறையும் இதன் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்று வலியும், பாலில் கலந்து குடித்தால் இருமலும் தீரும் வியர்வைக் கட்டிகள் மறைய இதை வெங்காய சாற்றில் குழைத்து பூசலாம்.கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்..
உணவிற்கு பின் சாப்பிடும் வெற்றிலையுடன் கொட்டைப் பாக்கில் ஏராளமான நன்மைகளும் ஆரோக்கியம் உண்டு.பாக்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மேலும் மலச்சிக்கலை போக்கும் .தலைவலி, மூட்டுவலி, தசைவலி போன்றவற்றை நீக்கும் .உதடு புண், வாய் புண் சரியாகும் .பற்களில் உள்ள மஞ்சள் கறை,,பல் சொத்தை, போன்ற பிரச்சனைகளை சரியாகும், பல் வலுவடைகிறது ..
பெரும்பாலானோர் காலை சிற்றுண்டி உணவுக்கு பிரெட் சாப்பிடுவது வழக்கம்ஆனால் மைதா மாவில் தயாரிக்கப்படும் பிரெட், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.மாறாக அதில் சேர்க்கப்படும் பொருட்களால் பிரெட் பல நாட்கள் கெடாமல் இருக்கும், ஆனால் பல்வேறு உடல் உபாதைகள், மற்றும் சில நோய்களுக்கு வழிவகுக்கும்.அதில் சேர்க்கப்படும் மூலப்பொருள் ஈஸ்ட் பூஸ்டர், சர்க்கரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.அதிகம் சாப்பிட்டால் வயிறு கோளாறுகள் செரிமான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.பிரெட் கெட்டு போகாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிபொருகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும், ஆனால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
...ஆலமரத்துப் பால், இலைகள், பட்டை கனிகள். விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவ பொருட்களாக பயன்படுகின்றன. ஆலம்பழம் தசை வயிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்கு பிரச்சினைகளை நீக்க வல்லது பல்வலி ஏற்படும் நேரத்தில்,ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி தீரும். சரும பளபளப்பிற்கும் ஆலம்பழம் ஏற்றது.ஆலமரத்தின் பழங்களைகொண்டு ஆண் மற்றும் பெண்இருவருக்கும் கருத்தரிப்பு குறைபாடுகள் சிறியதாக இருக்கும்பட்சத்தில் அதை நீக்க முடியும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் உண்டாகும் சிறு குறைபாடுகளை நீக்கும். சிலருக்கு கர்ப்பப்பை வீக்கம் இருக்கும் இந்தவீக்கத்தை கட்டுப்படுத்தவும் இது உதவும். மாதவிடாய்கோளாறை குணபப்டுத்தி சீரான மாதவிடாயை உண்டாக்கும். வெள்ளைப்படுதலை குணமாக்கும்.சருமத்துக்கும் நன்மை செய்யும் குணம்இதற்கு உண்டு. ஆலம் மரத்தின்பழமானது மூலநோயை குணப்படுத்தும்.வளரும் குழந்தைகளுக்கு அவ்வபோது பாலில் சிட்டிகை பொடிகலந்து கொடுத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். ஆலம் மரத்தின் பழங்களில்இருக்கும் செரடோனின் என்னும் பொருள் மனஅழுத்தத்தையும் மன சோர்வையும் குணப்படுத்தும்.ஆலம்மரத்தின் பழத்தை வாரம் ஒருமுறைஅனைவருமே பாலில் கலந்து குடிக்கலாம். வளரும் பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். இதை மருந்தாக எடுத்துகொள்ளநினைப்பவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனைபெற்று எடுப்பது நல்லது.
சார பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின்- பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், கூட நினைப்பவர்கள் தினமும்10 கிராம் சார பருப்பு சாப்பிடலாம்.சாரப்பருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்தும், மேலும் வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.. ஆயுர்வேத மருந்துகளில், சாரபருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று காரணமாக உள்நாக்கு வீக்கம் உண்டாகும்.இந்த உள்நாக்கு வீக்கத்தை Tonsilitis என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.உள்நாக்கு வீங்கி வளர்ந்துவிடும்,அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது முறையான சிகிச்சையாகும்.உள்நாக்கில் வீக்கம் மற்றும் சதை வளர்வதை ஆரம்ப கட்டத்திலேயே, இயற்கையான பொருட்களைகொண்டுமிகஎளிமையானமுறையில்குணப்படுத்தலாம்.10-15 பூண்டு பல் எடுத்து, அதை இடித்து சாறு பிழிந்து கொள்ளவும்இந்த சாற்றை ஆள்காட்டி அல்லது நடுவிரலில் தொட்டு உள்நாக்கு வளர்ச்சியின் மீது தடவி வந்தால் விரைவில் வீக்கம் கரையும்.தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வந்தால் பூரண குணம் பெறலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்டநோய்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி, சுண்டைக்காய் வற்றல் செய்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் தணியும், இந்த நோயினால் வரக்கூடிய உடற் சோர்வு வயிற்றுப் பொருமல், கை கால் நடுக்கம், மயக்கம் முதலியவற்றை நீக்கக்கூடிய சக்தி இதில் உள்ளதுஹீமோகுளோபின் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு மருந்தாக பயன்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி அஜீரணம் செரிமான பிரச்சனை போன்றவற்றை தீர்க்க சுண்டைக்காய் பயன்படுகிறது.பெண்களுக்கு பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது வழக்கம். அப்படி ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய சுண்டைக்காய் பயன்படுகிறது. இதில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது.தலைசுற்றல் சோர்வு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை போக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது.
ஆமணக்கு எண்ணெய் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ள இந்த எண்ணெயை உடல் பயன்பாட்டிற்காகவும் பல விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சன்னைக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் 1-2 சொட்டு உட்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.உடல் சுளுக்கு மசாஜ் செய்யலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும்.பித்தம் காரணமாக கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது, தினமும் இரவில் 2 சொட்டு தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.முடி உதிர்வதற்கு தேங்காய் எண்ணெயில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து தடவினால், முடி உதிர்வது நின்றுவிடும்.உடல் சூடு, மற்றும் மாதாவிடாய் நாட்களில் ஏற்படும், வலிக்கு எண்ணெய் தடவினால் தசை பிடிப்பு, வயிற்று வலி நீங்கும்.கணினியில்நீண்டநேரம்வேலைசெய்பவர்கள்,இரவில்கண்களுக்குமேல்எண்ணெய்துளிகள்தடவினால்,கண்குளிர்ச்சியடையும்.மூட்டு, முழங்கால்களில்எண்ணெய் தடவினால், விரைவில் வலி குறையும்.
நீரிழிவு நோயாளிகள்,முருங்கைப்பூவை அடிக்கடிசமைத்து சாப்பிடலாம்..உடல் சூட்டை தணிக்கக்கூடியது இந்த பூ.. பெண்களுக்கு ஏற்படும்.உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது..நினைவாற்றலுக்கு, இந்த முருங்கைப்பூ பொரியல்குழந்தைகளுக்குசெய்து தரலாம்.. அல்லது, முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்கவைத்து, அத்துடன் பனங்கல்கண்டு கலந்து,தினமும் காலை, 2 வேளையும் குடித்துவந்தாலும், நினைவாற்றல். அதிகரிக்கும்.முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.அல்லது, இந்த பூவை. நிழலில் உலர்த்திகாயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்..