25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Nov 02, 2023

சீம்பால்

பிறந்த குழந்தைகளுக்கு எப்படி தாய் பால் அவசியமோ அதேபோல் மாடுகளுக்கு குட்டி போட்டவுடன் அதற்கு பால் கொடுப்பது அவ்வளவு அவசியம். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் பாலானது மிகவும் அவசியம். அவற்றின் வளர்ச்சிக்கு பிறகு தாய் பால் தான் ஊட்டச்சத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் பெரிதும் உதவு செய்கிறது.நம் வீடுகளில் பசு மாடு உள்ளது. அது கன்றை ஈன்ற பின் அந்த கன்று சற்று சோர்வாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்காது. அந்த சமையத்தில் தாய் மாடானது கொடுக்கும் பால் தான் அதற்கு சத்துக்களை கொடுக்க வேண்டும்.கன்றை ஈன்ற பின் தாய்மாடு 3 நாட்கள் அளிக்கும் வெண்ணிறமாக இல்லாமல் அடர்ந்த நிறமாக பால் கொடுக்கும் அந்த பாலில் கொழுப்பு சத்து குறைவாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும்.அதனால் கன்றுகள் பிறந்து அதற்கு வயிற்று போக்கு ஏற்பட்டால் இந்த பாலை குடிப்பதன் மூலம் குட்டிகள் வேகமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் இருக்கும் கன்று ஈன்று3 நாட்கள் கொடுக்கும் பாலை தான் சீம்பால் என்று சொல்வார்கள் அதன் பின் பால் வெண்ணிறமாக மாறிவிடும்.சீம்பாலில் வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் உள்ளன. ஆகவே மனிதர்கள். சீம்பாலை உட்கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க உதவி செய்கிறது.நாள்பட்ட மலச்சிக்கல் சரியாக்கும்.மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து, உடலில் அஜீரண பிரச்சனைலிருந்து விடுபடவும் வழி செய்கிறது. இதனை பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு உடல் பலத்தை கொடுக்கும். ஆகவே இதனை வீட்டில் பால்கோவா போல் செய்தும் சாப்பிடுவார்கள்.

Oct 29, 2023

கை தட்டுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.

கைதட்டல் பயிற்சி செய்வதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.இதய நோய், ஆஸ்துமா, கீல்வாதம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இதற்காக கைதட்டல் 1500 முறை கைதட்ட வேண்டியிருக்கும்..இப்படி நம்மை ஈர்க்கும் விசயங்களில், மன உற்சாகத்தில், நாமறியாமல் செய்யும் இந்த கைதட்டல், உண்மையில் நமக்கு ஒரு வரம், உம்மணாமூஞ்சிகளின் மத்தியில் கைதட்டி சிரித்து இரசிப்பது ஒரு வரம். மனதின் உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எப்போதும் சீரியஸ் முகமாக காட்சிதரும் மனிதர்கள் மத்தியில், நம்மை ஈர்க்கும் விசயங்களுக்கு, எளிதில் சிரித்து கைத்தட்டி மகிழும் மனிதர்கள், உண்மையில் வரம் பெற்று வந்தவர்கள்தான்! மேலும், இதனால், உடலில் வியாதி எதிர்ப்பு தன்மைகள் அதிகரித்து, உடலை வியாதிகளில் இருந்து காத்து வர முடியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். "மனம் போல வாழ்வு!" என்பர் பெரியோர், உடலின் பல்வேறு வியாதிகளுக்கும் அடிப்படை மனம்தான்! வெற்றியடைந்தால்தான் மகிழ்ச்சி கிட்டும் எனும் எண்ணத்தை விடுத்து, உற்சாகமாக இருப்பதே ஒருவகை வெற்றிதான்.

Oct 26, 2023

நெல்லிக்கனி

நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று. ரத்த ஓட்டத்தை நன்குதூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து,இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு சரும புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளபளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். ஆயுர்வேதத்தின்படி, சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள நெல்லிக்காய் உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கண் பார்வை மேம்படவும் நெல்லிக்காய் பயன்படுகிறது. நெல்லிக்காய் செரிமான மேம்பாட்டுக்கும், அசிடிட்டி பிரச்சனைக்கும்உதவுகிறது.இதுஇரத்தசர்க்கரைஅளவைகட்டுப்படுத்துவதால்,சர்க்கரைவியாதிக்கும்நன்மருந்தாகஉள்ளது.பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும், அதைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைக்கிறோம். ஆனால், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும்.குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின்`சி' கிடைத்துவிடும். ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Oct 24, 2023

பிளம்ஸ் பழம்

பிளம்ஸ்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லது. பிளம்ஸ் சிவப்பு நிறங்களில் அடங்கும்.பிளம்ஸ் பழம் வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் கே ஆகிய சத்துகளும்,வைட்டமின் பி1,பி2,பி3,பி6மற்றும் வைட்டமின் இ சத்துகளும்நிறைந்துள்ளன.இப்பழத்தில் உள்ளமெக்னீசியம் சத்து உடலின் தசைகள் மற்றும் சீரான நரம்புகளின் செயலாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது.பிளம்ஸ்  பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவி செய்யும். பிளம்ஸ்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லது. பிளம்ஸ் சிவப்பு நிறங்களில் அடங்கும்.இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.இரத்தத்தில் கலந்துள்ளகொழுப்புப்பொருட்களைகரைக்கும்குணமுடையது.இதுஇரத்தஅழுத்தத்தின் ஆரோக்கியமானஅளவை பராமரிக்க உதவுகிறது.சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.தசைகளில் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடைச் செய்யும். மூளை நரம்புகளும் அதிகம் பலம் கொடுக்கும்.மனம் அழுத்தத்தை போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப்பழங்கள் விளங்குகின்றன.

Oct 23, 2023

அதிமதுரம் டீ

அதிமதுரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பல மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன.உடல் எடையை குறைக்க உதவும்.அதிமதுரம் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிமதுரம் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆன்டி வைரல் பண்புகள் உள்ள அதிமதுரம் டீ சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.அதிமதுரம் டீ பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். இதைத் தொடர்ந்து குடித்து வர வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.அதிமதுரம் டீ குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன.

Oct 20, 2023

பிரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள்

வாழைப்பழம் முதல் வெங்காயம் வரை குளிர்சாதனப் பெட்டியில் ஒருபோதும் வைக்க கூடாது. அதிக குளிர் வாழைப்பழத்தை எளிதில் பழுக்க வைக்கிறது. வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் அதன் தன்மை பாதிக்கப்படும். தக்காளி சுவை மற்றும் அதன் தன்மையை இழக்கிறது. தேன் படிகமாக்குகிறது, அதே நேரத்தில் காபி வாசனையை உறிஞ்சுகிறது. வெங்காயத்திற்கு நன்கு காற்றோட்டமான இடம் தேவை, பூண்டு தீவிர சுவைக்காக உலர்வது மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பொருட்களின் தரத்தை சரியான முறையில் பயன்படுத்த, நச்சுத்தன்மையை தடுக்க பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். 

Oct 19, 2023

உடலில் உள்ள நச்சுக்களை   வெளியேற்றும் சுண்டைக்காய்

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியை தூண்டி, உடலில் உள்ள நச்சுக்களை   வெளியேற்றும் தன்மை கொண்டது.

Oct 19, 2023

தேங்காயும், பேரீச்சையும்...

அரைமுடிதேங்காயை துருவி5 பேரீச்சை பழத்தை அதனுடன் பிசைந்து காலை உணவாக கலந்து எடுத்துக்கொள்ளுங்கள்.மூட்டு வலி,எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள் தான் தேங்காயும், பேரீச்சையும்...

Oct 18, 2023

அலர்ஜி பிரச்சனை

அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். அலர்ஜி மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சிலருக்கு மூச்சுமுட்டி திணறல் ஏற்படும். வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு ,போன்ற கோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள்.ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும், உணர் குறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம்தான். சிலருக்கு வெயில் மற்றும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்,கடுமையான வியர்க்குரு  வந்தாலும் அரிப்பு வரும்.எந்த அலர்ஜியாக இருந்தாலும், நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்.அலர்ஜி பிரச்சனை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கபடும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்கவும்.எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.பசலைக் கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.புதினாவை வாரத்தில்3 முறை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளறிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப்போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

Oct 17, 2023

இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா

புரோட்டின், இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது.கண்பார்வையை அதிகரிக்கச்செய்வதோடு தோல் பாதிப்படையாமல்பாதுகாக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணமுடையவை. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது.சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும்,நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது. அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன.சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

1 2 ... 28 29 30 31 32 33 34 35 36 37

AD's



More News