25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 04, 2025

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் பிரக்ஞானந்தாவை வென்றார் .

 10வது சீசன் (மொத்தம் 3 தொடர்). கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.உலக சாம்பியன், இந்தியாவின்குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான்டுடாவிடம் தோல்வியடைந்தார். குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரே சாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினார்.குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப் -4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.ஜூனியர் செஸ்: இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம்7 பதக்கம் கைப்பற்றியது. இந்தியா அபாரம்ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக் கான உலக கோப்பை ஜூனியர் ,சர்வதேச செஸ் கூட்ட மைப்பு ('பிடே') சார்பில் ('கேடட்') தொடர் நடந்தது.  10 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் பைனலில் இந்தியாவின் சர்பர்தோ மானி தங்கப்பதக்கம் வென்றார்.பெண்கள்பிரிவு.(10 வயது) பைனலில் இந்தியாவின் திவி பிஜேஷ், சீனாவின் ஜிஹான் செனை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந்தியாவின் ஷர்வானிகா (தமிழகம்), ரஷ்யாவின் வோல்கோவாவை வென்றார். 

Jul 03, 2025

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 ND

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 NDடி. என் பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங் கத்தின் சார்பில் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி பைனலுக்கு முன்னேறியது. நேற்று, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. திருச்சி அணி, 20 ஓவரில் 140/9 ரன் எடுத்தது, திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 143/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் சேப்பாக்கம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் இங்கிலாந்து,இந்திய அணி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது.  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 310 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர். 

Jul 03, 2025

விளையாட்டு போட்டிகள்.JULY 2ND

கால்பந்து 2026,மார்ச் 1/26ல் ஆஸ்திரேலியாவில்(12 அணிகள்) நடக்கவுள்ளபெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து தொடரின். நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா,ஜப்பான், ஆஸ்திரேலியா என4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இந்திய அணி'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் மங்கோலியா(13,0), திமோர்லெஸ்தே(4,0) அணிகளை வென்ற இந்தியா, நேற்று மூன்றாவது போட்டியில் இராக்கை எதிர்கொண்டது. இந்திய அணி 5,0என்ற கோல் கணக்கில் இந்தியாவெற்றி பெற்றது. 3 போட்டியில் 9புள்ளியுடன் முதலிடத்தில் பட்டியலில் உள்ளது. ஜூலை 5ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தாய்லாந்தை(6) வென்றால்,22 ஆண்டுக்குப்பின் ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.   வில்வித்தை,  ஆசிய 'பேர் பவ்' வில்வித்தை சாம்பியன் ஷிப்தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று துவங்கி. ஜூலை6 வரைநடக்கவுள்ளது. இத்தொடரில் ஜப்பான், இந்தியா, மலேசியா, சீனா உட்பட 13 நாடுகளை சேர்ந்த 407 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்,சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு, சேலம், விநாயகா மிஷன் கல்லூரி மாணவர் சஞ்சய் உட்பட 7 பேர் கலந்து கொள்கின்றனர். துப்பாக்கி சுடுதல், டேராடூனில் நடந்ததுப்பாக்கி சுடுதல் தேசிய தகுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சும், சவுரப் சவுத்தரி, மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும்  தேர்வாகி இந்தியாவுக்காக விளையாட உள்ள னர். பாட்மின்டன் இந்தியாவின் ஸ்ரீகாந்த்  கனடா ஓபன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்18-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்தை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

Jul 02, 2025

டேபிள் டென்னிஸ் 1989முதல் நடத்தப்படும் ஆசிய"யூத்"பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என சாதித்தார் திவ்யான்ஷி .

ஆசிய 'யூத்'டேபிள் டென்னிஸ்சாம்பியன்ஷிப்29வதுசீசன்உஸ்பெகிஸ்தானில். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 14 வயது, இந்தியாவின் திவ்யான்ஷி, சீனாவின் ஜிலிங்லியுவை சந்தித்தார். முதல் 6செட்டுகளை இருவரும் மாறிமாறி கைப்பற்ற, 3–3 என ஆனது. 7வது, கடைசி செட்டை திவ்யான்ஷி 11-9 என வென்றார். திவ்யான்ஷி 4-3 என (10-12, 11-9, 11-6, 10-12, 11-9, 5-11, 11-9) பெற்றார்.இவர் 4,2 என்ற கணக்கில் 8,11/(13,11,/12,10,/11,8/,9,11, /11,8) வெற்றி பெற்றார். காலிறுதி, அரையிறுதி, பைனல் எனதொடர்ந்து மூன்று போட்டியில் சீன வீராங்கனைகளை சாய்த்த திவ்யான்ஷி, சாம்பியன் ஆனார். பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சின்ட்ரல்லா, ஹாசினி ஜோடி13 எனஜப்பானின் சாச்சி, மாவோ ஜோடியிடம் தோற்றது.ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அன்குர், அபிநந்த் ஜோடி3-2 எனமலேசிய ஜோடியிடம் (ருய்ஜெ, ஏ சிம்) தோற்றது.

Jul 02, 2025

பர்மிங்ஹாமில் எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட்  டெஸ்ட் இன்று துவங்குகிறது.

  பர்மிங்ஹாமில்  எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட்  டெஸ்ட் இன்று துவங்குகிறது.  பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாஇங்கிலாந்து 8டெஸ்டில் மோதின. இந்தியா 7ல்தோல்வி. ஒரு போட்டி 'டிரா' ஆனது.எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம்எளிதாக ரன் எடுக்க, பேட்டர்களின் சொர்க்க பூமி. துவக்கத்தில் 'வேகம்,3வதுநாளில் இருந்து சுழற் பந்துவீச்சு எடுபடும்.பர்மிங்ஹாமில் முதல் 3 நாள் வெப்பமான வானிலை காணப்படும். கடைசி 2 நாளில் மழைக்கு வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி டி.என். பி.எல்.,'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த நேற்று ‘தகுதிச்சுற்று 1'ல் சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்'வென்ற சேப்பாக்கம் அணிபீல்டிங் தேர்வு செய்தது.திருப்பூர் அணி 20ஓவரில் 202/5 ரன் எடுத்தது. சேப்பாக்கம் அணி 16.1 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இந்த போட்டியில், திருப்பூர் அணி பைனலுக்கு, முன்னேறியது. 

Jul 01, 2025

இந்தியாவுக்கு டேபிள் டென்னிசில் 3 பதக்கம்.

ஆசிய 'யூத்' டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் 29வது சீசன் உஸ்பெகிஸ்தானில்,  15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, சீனா மோதின. சாஹில் ரவாத், ரித்விக் குப்தா, ஆதித்யா தாஸ் அடங்கிய இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆசிய யூத் தொடரில் முதன்முறையாக வெள்ளி வென்று வரலாறு படைத்தது இந்தியா.19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. அபினந்த் பிரதிவதி, அங்கூர் பட்டா சார்ஜீ, பிரியானுஜ் பட்டா சார்யா அடங்கிய இந்திய அணி 2-3 என போராடி தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது.  19 வயதுக்குட்பட்ட கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அங்கூர் பட்டா சார்ஜீ, தனீஷா ஜோடி 2-3 என தென்கொரியாவின் கிம் கயோன், பார்க் கஹியோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.இது வரை இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் கிடைத்துள்ளது.

Jul 01, 2025

யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300’ பாட்மின்டன் .

யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர்  நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யங் மோதினர். மொத்தம் 47 நிமிடம் நீடித்த போட்டியில் ஆயுஷ் 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'வேர்ல்டு டூர்' பட்டம் வென்றார். 20,யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் பட்டம் வென்ற ,இந்திய வீரரானா கர்நாடகாவை சேர்ந்த ஆயுஷ் 2வது இந்திய வீரரானார். நடப்பு சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியரானார் ஆயுஷ்.பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தான்வி சர்மா 16, அமெரிக்காவின் பெய் வென் ஜாங் 34, மோதினர்.முதல் செட்டை 11-21 என இழந்த தான்வி, 2வது செட்டை 21-16 எனக் கைப்பற்றினார்.   வெற்றியாளரை நிர்ண யிக்கும் 3வது செட்டில் தான்வி, 10-21,. முடிவில் தான்வி 11-21, 21-16, 10-21 என்ற கணக்கில் -தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

Jul 01, 2025

விளையாட்டு போட்டிகள். 30TH JUNE

 கிரிக்கெட்  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண் டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்ற  இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது.பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  இரண்டாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. இங்கு இந்தியா பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. கோல்ப்இந்திய வீராங்கனைகளான வாணி கபூர் 6வது, திக்ஷா தாகர் 8வது இடம்,ஜெர்மன் மாஸ்டர்ஸ் தொடரில் பிடித்தனர். சிங்கப்பூரின் ஷானன் டான் சாம்பியன் பட்டம் வென்றார். துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ,டேராடூனில் நடந்த தேசிய தகுதி போட்டிக்கான சுபாஷ் சிஹாக்கை (245.3 புள்ளி) வீழ்த்திய சவுரப் சவுத்ரி (245.7) முதலிடம் பிடித்தார்.

Jun 30, 2025

தமிழ்நாடு டி.என்.பி.எல்., லீக் கிரிக்கெட் போட்டி,

 நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட் டியில் திண்டுக்கல், நத்தம் என். பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் திருப்பூர், நெல்லை அணிகள் மோதின.திருப்பூர் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நெல்லை அணி களமிறங்கியது. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார் திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. நெல்லை அணி 19.4 ஓவரில் 113 ரன்னுக்கு தோல்வி யடைந்தது. இரவு போட்டி திண்டுக்கல், திருச்சி 'நடப்பு சாம்பியன்' அணிகள் மோதின. திண்டுக்கல் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. திருச்சி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.  டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த திண்டுக்கல் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது.  

Jun 30, 2025

விளையாட்டு போட்டிகள். JUNE 29th.

கால்பந்து பெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து 21வது சீசன்ஆஸ்திரேலியாவில், அடுத்த ஆண்டு(மார்ச் 121). மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான் என 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 8 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் 34 அணிகள், 8 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான போட்டிகள் தாய்லாந்தில் நடக்கிறது. முதல் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் திமோர்-லெஸ்தே அணியை சந்தித்தது, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குத்துசண்டை 'எலைட்' பெண்கள் தொடருக்கான காலிறுதியில் (48-51 கிலோ) ஐதராபாத்தில் தெலுங்கானாவின் நிகாத் ஜரீன் 5-0 என கல்பனாவை வீழ்த்தினார்.துப்பாக்கி சுடுதல்10 மீ., 'ஏர் பிஸ்டல்' டேராடூனில் நடக்கும் தேசிய தகுதி போட்டிக்கான ,பைனலில் மனு பாகரை (244,5 புள்ளி) வீழ்த்திய சுருச்சி இந்தர் சிங் (245.6) முதலிடம் பிடித்தார்.

1 2 ... 127 128 129 130 131 132 133 ... 170 171

AD's



More News