25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 15, 2025

கிரிக்கெட் லார்ட்சில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன்எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன் எடுத்தது.பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் 58/4 ரன் எடுத்திருந்தது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வெற்றிக்கு இன்னும் 135 ரன் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட் இருந்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜடேஜா(61) அவுட்டாகாமல் இருந்தார்.லார்ட்சில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரில் 2,1 என முன்னிலை பெற்றது.நான்காவது டெஸ்ட் வரும் ஜூலை 23ல் மான் செஸ்டரில் துவங்குகிறது. 

Jul 15, 2025

கால்பந்து 'பிபா' உலக கோப்பை 21வது சீசன்.

உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் அமெரிக்காவில், ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த பைனலில் இங்கிலாந்தின் செல்சி, பிரான்சின் பாரிஸ்-செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகள் மோதின. செல்சி அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி அணி சார்பில் பால்மர் 2 (22, 30வது நிமிடம்), ஜோவோ பெட்ரோ (43வது) ஒரு கோல் அடித்தனர். செல்சி அணி 2வது முறையாக உலக சாம்பியன்  பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன் 2021-ல் கோப்பை வென்றிருந்தது. 

Jul 15, 2025

டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ஏ.டி.பி., வெளியிட்ட தரவரிசை ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடம்.

ஏ.டி.பி., டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். லண்டனில் நடந்த விம்பிள்டன் பைனலில் அசத்திமுதல் கோப்பை வென்றார். இத்தொடரில் பைனல் வரை சென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்,2வது இடத்தில் நீடிக்கிறார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 4வது இடத்துக்கு முன்னேறினார். செர்பியாவின் ஜோகோவிச், 6வது இடத்தில் தொடர்கிறார். பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் போலந்தின் இகாஸ்வியா டெக்,4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார்.  விம்பிள்டன் பைனலில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Jul 14, 2025

டென்னிஸ்  சாம்பியன் விருதுடன் ஸ்வியாடெக் .

 பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-4' போலந்தின் இகா ஸ்வியாடெக் 24, 'நம்பர்-12' அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 23, மோதினர். முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டையும் 6-0 என வென்றார்.மொத்தம் 57 நிமிடம் நீடித்த பைனலில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சுலபமாக வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்மு றையாக கோப்பை வென்றார்.இது, இவரது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.விம்பிள்டன் பைனலில் 6-0, 6-0 என வெற்றி பெற்ற 2வது வீராங்கனையானார் ஸ்வியாடெக். 'ஓபன் எரா'வில் இப்படி வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ஸ்வியாடெக் ஸ்வியாடெக், ரூ.35 கோடி, 2வது இடம் பிடித்த அனிசிமோவா, ரூ.17 கோடி பரிசு பெற் றனர்.விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் ஸ்வியாடெக்கிடம்(போலந்து) தோற்ற அனிசிமோவா(அமெரிக்கா) கோப்பையை கோட்டைவிட்ட. இந்த சோகத்தில் அழுத அனிசிமோவா கூறுகையில்,"எனது வளர்ச்சிக்காக பல தியாகங்களை செய்தவர் அம்மா. பைனலை காண புளோரிடாவில் இருந்து லண்டன் வந்த அம்மாவுக்கு நன்றி. தோல்விக்காக ரசிகர்களிடம் 'சாரி' கேட்கிறேன்," என்றார். 

Jul 14, 2025

உலக தடகள கான்டினென்டல் 'சன்செட் டூர்' தேசிய சாதனையாளர் குல்வீர் சிங்

உலக தடகள கான்டினென்டல் 'சன்செட் டூர்' அமெரிக்காவில் ,1500 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் குல்வீர்சிங் களமிறங்கினார். சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த ஆசிய தட கள சாம்பியன்ஷிப்பில் 5000,10000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், இம்முறை 3 நிமிடம், 36.58 வினாடி நேரத்தில் வந்து, நான்காவது இடம் பிடித்தார். புரூக் பீஸ்ட் அணியின் பிரண்டன் மில்லர் (3:35.27), ஆக்லஹாமா பல்கலை., வீரர் ரியான் ஷோப்பே (3:36.13), டெக்சாஸ் வீரர் கூப்பர் (3:36.38) முதல் மூன்று இடம் பிடித்தனர். குல்வீர் சிங் 3000,5000,10,000 மீ.,'ஷார்ட் டிராக்' பிரிவில் 3000,5000 மீ., என ஐந்து வித போட்டியில் பங்கேற்று, அனைத்திலும் தேசிய சாதனையாளராக உள்ளார். தேசிய சாதனையாளர்.

Jul 14, 2025

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில், மூன்றாவது கிரிக்கெட் போட்டி

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில்,மூன்றாவது போட்டி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 387, இந்தியா 387 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங் சில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது,  பின் 193 ரன் எடுத்தால் வெற்றி என இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால்(0), கருண்(14), சுப்மன்(6) ஏமாற்றினார். 4வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 58/4 ரன் எடுத்திருந்தது. ராகுல் (33) அவுட்டாகாமல் இருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் ஆனார், இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் நேற்று 4 விக்கெட் சாய்த்தார். 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் ,இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி ,முதல் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது, கடைசி போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவரில் 167/7 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 168/5 ரன் எடுத்து,5 விக்கெட்டில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 3-2 என, கோப்பை வென்றது.

Jul 12, 2025

பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளம்..

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகளத்தின் 7வது சீசன் பெங்களூருவில், நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப் 12-எப்64' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 72.25 மீ., எறிந்த ஹரியானாவின் சுமித் அன்டில் தங்கம் வென்றார்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்40-எப்41' பிரிவு பைனலில் ஹரியானாவின் நவ்தீப் சிங் (42.63 மீ,), பிரின்ஸ் (31.90 மீ.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.ஆண்களுக்கான ஈட்டி எறிதல், 'எப்46' பிரிவு பைனலில் ராஜஸ்தானின் சுந்தர் சிங் குஜ் ஜார் (64.53 மீ.,) தங்கப் பதக்கத்தை பற்றினார். 'டி35, டி37, டி42' பிரிவு பைனலில் பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில், உ.பி.,யின் பிரீத்தி பால் (15  வினாடி )முதலிடம் பிடித்து தங்கம்  வென்றார். அடுத்த இருஇடங்களை குஜராத்தின் பினா (17.20 வினாடி), ஹரியானாவின்  அவானி (20.40 வினாடி) கைப்பற்றினர்.பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் 'டி12, டி13' பிரிவு பைனலில் உ.பி.,யின் சிம்ரன் (12.30 வினாடி) தங்கம் வென்றார். ' எப் 55, எப்56' பிரிவுஆண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் தமிழகத்தின் முத்துராஜா தங்கம் வென்றார். ஹரியானாவின் யோகேஷ் கதுனியா, ராமன் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 

Jul 12, 2025

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்.

  லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் ,முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 251/4 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா - பந்தில் பவுண்டரி அடித்த ரூட், சதம் கடந்தார். பும்ரா 'வேகத்தில்' ஸ்டோக்ஸ் (44) போல்டானார். தனது 21வது ஓவரை வீசிய பும்ரா, முதல் பந்தில் ரூட்டை (104) போல்டாக்கினார். அடுத்த பந்தில் வோக்சை, 'டக்' அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 271/7 என திணறியது.  இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145/3 ரன் எடுத்து, 242 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (53), ரிஷாப் (19) அவுட்டாகாமல் இருந்தனர்

Jul 12, 2025

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்.

விம்பிள்டன்கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில்ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். இதில் அல்காரஸ்  6-4, 5-7, 6-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தொடர்ந்து 3வது முறையாக (2023, 2024, 2025) பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், விம்பிள்டனில் 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர். இதில் சின்னர் 6-3, 6-3, 6-4 என வெற்றி பெற்று, விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் நெதர்லாந்தின் செம் வெர்பீக், செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, 7-6, 7-6 என பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி, பிரேசிலின் லுாயிசா ஸ்டெபானி ஜோடியை  வென்றது. அமெரிக்காவின் அனிசிமோவா, போலந்தின் ஸ்வியாடெக்பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று மோதுகின்றனர். இருவரும் முதன் முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறினர். இன்று வெற்றி பெறும் வீராங்கனை விம்பிள்டனில் முதல் கோப்பை வெல்லாம்.இதன்மூலம் விம்பிள்டனில் தொடர்ந்து 8வது ஆண்டாக பெண்கள் ஒற்றையரில் புதிய சாம்பியன் கிடைக்க உள்ளார். 

Jul 11, 2025

கிரிக்கெட் போட்டி july 10 th

நேற்று துவங்கிய லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்டில் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில்,. தொடர்ந்து மூன்றாவது முறையாக 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், தேர்வு செய்தார். இம்முறை பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில், பும்ரா இடம் பெற்றார்.இங்கிலாந்து அணியில்டங்க் நீக்கப்பட்டு  ஆர்ச்சர் சேர்க்க பட்டார். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் ,முதல் இன்னிங்சில் 251/4 ரன் எடுத்திருந்தது.  கிரிக்கெட் பெண்கள் ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி முதல் 3 போட்டி முடிவில் 2-1 என இந்தியா முன்னிலையில் இருந்தது. 4வது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் டாமி பியுமன்ட், பேட்டிங் தேர்வு செய்தார். 20 - ஓவரில் 126/7 ரன் மட்டும் எடுத்தது. 'சுழலில்' இந்தியாவின் ராதா 2, ஸ்ரீ சரணி 2, தீப்தி 1 விக்கெட் சாய்த்தனர்.இந்திய அணி 17 ஓவரில் 127/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா (24), ரிச்சா (7) அவுட்டாகாமல் இருந்தனர். 

1 2 ... 124 125 126 127 128 129 130 ... 170 171

AD's



More News