25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 11, 2025

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் .

ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில். 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். மொத்த பரிசுத் தொகை ரூ. 6 கோடி.'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.இத்தொடரின் 'நாக் அவுட்' முறையிலான இரண்டாவது சுற்று தற்போது நடக்கிறது. இந்தியாவின் ஹரிகா, சகவீராங்கனை நந்திதாவை எதிர்கொண்டார். இருவரும் மோதிய முதல் போட்டியில் ஹரிகா வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார் நந்திதா. இப்போட்டி 37வது நகர்த் தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹரிகா 1.5–0.5 என வெற்றி பெற்றார்.இந்தியாவின் வைஷாலி, கனடாவின் மெய்லி மற்றொரு போட்டியில் மோதினர்.இதில் இரு போட்டியிலும் வெற்றி பெற்ற வைஷாலி (2.0-0) மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய இளம் வீராங்கனை திவ்யா, 1.5–0.5 என ஜார் ஜியாவின் கெசரியாவை சாய்த்தார்.இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஹம்பி, உஸ்பெகிஸ்தானின் அப்ரு ஜாவை 1.5-0.5 என வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 

Jul 11, 2025

விம்பிள்டன் டென்னிஸ் முதன்முறையாக பைனலுக்குள் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் முன்னேறினார்கள்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில்,  பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 12வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா மோதினர். இரண்டு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் அனிசிமோவா 6-4, 4-6, 6-4 என வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்..மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர்.இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 பெற்று விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். 

Jul 10, 2025

வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் ரிஷாப், ஜோதி ஜோடி மொத்தம் 1431 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, புதிய உலக சாதனை .

உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 4) ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் ,ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு தகுதிச்சுற்றில் 85 பேர் பங்கேற்றனர். இந்தியாவின் ரிஷாப் யாதவ் 718 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்தார். பெண்கள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி 715 புள்ளி எடுத்தார். கலப்பு அணிகள் பிரிவில் ரிஷாப், ஜோதி ஜோடி மொத்தம் 1431 புள்ளியுடன் முதலிடம் பிடித்தது. இது புதிய உலக சாதனை ஆனது. அடுத்து அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் ஜோதி, பர்னீத் கவுர், பிரதிகா இடம் பெற்ற அணி, அரையிறுதியில் இத்தோனேஷியாவை சந்தித்தது.இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி 230-226 எனவெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் சீன தைபே அணியை சந்திக்க உள்ளது. ரிஷாப், பிரதமேஷ், அமன் இடம் பெற்ற இந்திய காம்பவுண்டு ஆண்கள் அணி, காலிறுதியில் 233-234 என பிரான்சிடம் தோல்வியடைந்தது.  

Jul 10, 2025

கிரிக்கெட் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று  லண்டன்,லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை தொடரும் பட்சத்தில், தொடர்ந்து இரண்டாவது வெற்றி பெறலாம்.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்டில் எழுச்சி பெற்ற இந்திய அணி, 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது, இன்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. 

Jul 10, 2025

ஆசிய கோப்பை  பெண்களுக்கான கால்பந்துதொடர்.

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் பெண்களுக்கான 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள முள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடந்தது.12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதன் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. காலிறுதிக்கு செல்லும் 8 அணிகள், 2027ல் பிரேசிலில் நடக்க உள்ள 'பிபா' பெண்கள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற.இத்தொடரில் 12 அணிகள் தலா 4 கொண்ட 3 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்- 2' அணிகளுடன், இரண்டாவது இடம் பெற்ற சிறந்த 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி வீராங்கனை ஸ்வீட்டி தேவி கூறியது: ஆசிய கோப்பை தொடருக்கு 23 ஆண்டுக்குப் பின் தகுதி பெற்றதை, இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை எனஇந்திய அணி வீராங்கனை ஸ்வீட்டி தேவி கூறினார்.” இதில்வார்த்தைகளால் விவரிக்க முடியாத, பல்வேறு உணர்வுகள் கலந்துள்ளன.பெண்கள் கால்பந்துக்கு ஆதரவு தருபவர் யாரும், எங்களது மகிழ்ச்சியை புரிந்து கொள்வர் “.“அடுத்து உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதுதான் எங்களது கனவு .அடுத்த இலக்கு” என ஸ்வீட்டி தேவி கூறினார். 

Jul 10, 2025

இந்தியா 'ஏ' ஹாக்கி அணி ,ஐரோப்பிய சுற்றுப்பயணம்.

 இந்தியா 'ஏ' ஹாக்கி அணி ,ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா, 8 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்துக்கு எதிராக தலா 2, இங்கிலாந்து, பெல்ஜியத்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் பங்கேற்கிறது.நெதர்லாந்தில் நடந்த முதல் போட்டியில் அயர் லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 'ஏ' அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Jul 10, 2025

சர்வதேச டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி.

சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர்  அமெரிக்காவில், கலப்பு இரட்டையர் தொடரின் ,'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி, நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்கியது. முதல் செட்டை 8-11 என இந்திய ஜோடி இழந்து,அடுத்த செட்டை 11-8 என கைப்பற்றியது. தொடர்ந்து 3வது செட்டை 11-6 என இந்திய ஜோடி, 4வது செட்டையும் 11-7 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Jul 10, 2025

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு முன்னேறிய போலந்தின் இகா ஸ்வியா டெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியா டெக், ரஷ்யாவின் சாம்சோனோவா மோதினர்.  ஸ்வியாடெக் முதல் செட்டை 6-2 , , 2வது செட்டை 7-5 என போராடி கைப்பற்றி, விம்பிள்டனில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட் ரீவா மோதினர். இரண்டு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட்டியில் பென்சிக் 7-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு போலந்தின் ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பென்சிக் முன்னேறினர்.

Jul 09, 2025

கிரிக்கெட் டெஸ்ட் தொடர்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ,முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.பர்மிங்காம் போன்று லார்ட்சிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர் .. இந்தியா-இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன்  லார்ட்சில், இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.. முந்தைய போட்டியில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதால், அவரும் கடும் பயிற்சி மேற்கொண்டனர்

Jul 09, 2025

சென்னை எம்.சி.சி. -முருகப்பா தங்கக்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி

 சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் 96-வது அகில இந்திய ஹாக்கி , சென்னை எம்.சி.சி. -முருகப்பா தங்கக்கோப்பைக்கான போட்டி நாளை (வியா ழக்கிழமை) தொடங்குகிறது. 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சிறப்பு அழைப்பின் பேரில் மலேசியா ஜூனியர் அணி , முதல் முறையாக. வெளிநாட்டு அணி ஒன்று பங்கேற்கின்றது. அணிகள் இருபிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம், என்.சி.ஓ.இ. (போபால்) மராட்டியம், தமிழ்நாடு அணியும், 'பி' பிரிவில் இந்தியன் ஆயில், மலேசியா ஜூனியர், இந்திய கடற்படை, கர்நாடகா மத்திய நேரடி வரிகள் வாரியம் (டெல்லி) அணியும் இடம் பிடித்துள்ளன . ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.  அணிகள் அரைஇறுதிக்கு முன் னேற ,லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்க வேண்டும்.  தொடக்க நாளான நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் மராட்டியம்-தமிழ்நாடு (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும் ஆட்டத்தில் கர்நாடகா-மத்திய நேரடி வரிகள் வாரியம் அணிகள் சந்திக்கின்றன .இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும்  அணிக்கு பரிசுக் கோப்பையுடன்  ரூ.7 லட்சமும், 2-வது  இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இது தவிர  சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10  ஆயிரம் மதிப்பிலான சைக்கிள் பரிசாக அளிக்கப்படும்.  

1 2 ... 125 126 127 128 129 130 131 ... 170 171

AD's



More News