25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 22, 2025

வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

வாலிபால் சாம்பியன்ஷிப் (16 வயது) தாய்லாந்தில் நடக்கிறது.இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் (தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா) வென்றது. அடுத்து வலிமையான உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி,உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடருக்கு (2026, பல்கேரியா) முதன் முறையாக தகுதி பெற்றது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பானை சந்தித்தது. முதல் செட்டை இந்தியா 25-21 என கைப்பற்றியது.அடுத்த செட்டை 12-25 என இழந்த போதும், 3வது செட்டை 25-23 என கைப்பற்றியது. 4வது செட்டை 18-25 என நழுவவிட்டது.  வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் இந்திய அணியினர் 15-10 என கைப்பற்றினர் .முடிவில் இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில்'வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது. 

Jul 21, 2025

இந்தியாவின் ஹம்பி உலக கோப்பை செஸ் தொடரில்  வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஜார்ஜியாவில் பெண் களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக் கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா வெற்றி பெற்றனர். இதையடுத்து முதன் முறையாக இந்தியாவின் நான்கு வீராங்கனைகள், உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறி, வரலாறு படைத்தனர். நேற்றுகாலிறுதிசுற்றுதுவங்கின.நடக்கும்இருபோட்டியில்.நேற்றுநடந்தமுதல்போட்டியில்இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, உலகின் 'நம்பர்-5', கோனேரு ஹம்பி, சீனாவின் யூஜின் சாங் ('நம்பர் -36') மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி துவக்கத்தில் இருந்து ,சிறப்பாக செயல்பட்டு 53வதுநகர்த்தலில் வெற்றி பெற்றார்..இவர் 1.0-0 என முன்னிலையில் உள்ளார்.. நேற்று 2வது போட்டி நடந்தது. இதில் ஹம்பி, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறு விறுப்பான இப்போட்டி 53வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹம்பி1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஹரிகா, திவ்யா தேஷ்முக் மோதி னர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் 60வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் போட்டி 1.0 - 1.0என சமநிலையில்  உள்ளது. இன்று 'டை பிரேக்கர்' நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறலாம்..

Jul 21, 2025

100 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் சாதனை.

100 மீ., 'பிரீஸ்டைல்' ஆண்கள் நீச்சல் போட்டி பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்றார். 'ஹீட்-6ல்' களமிறங்கிய இவர், 49.46 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஸ்ரீஹரி நடராஜ், அரையிறுதிக்குள் நுழைந்தார். இவர், 100 மீ. 'பிரீஸ் ஸ்டைல்' பிரிவில் பந்தயதுாரத்தை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். 10வது இடம் பிடித்த ஸ்ரீஹரி நடராஜ் (25.59 வினாடி), ஆண்களுக்கான 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு தகுதிச்சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Jul 21, 2025

இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வா சர்மா ஜோடி டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் வெற்றி.

 இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வா சர்மா ஜோடி ,டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் 2-0 (6-1, 6-4) கொலம்பியாவின் ரெய்னா கேசிலோ,  கான்சலஸ் டோரஸ் ஜோடியை வென்றனர்.

Jul 21, 2025

இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் சர்வதேசதடகளத்தின் நீளம் தாண்டுதலில் சாம்பியன் பட்டம் வென்றார்.

'வேர்ல்டு கான்டினென் டல் டூர்' சர்வதேச தடகள போட்டி போர்ச்சுகலில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 26, பங்கேற்றார்.கேரளாவை சேர்ந்த இவர், தனது முதலிரண்டு  வாய்ப்புகளில் 7.63, 7.75 மீ., தாண்டினார். மூன்றாவது வாய்ப்பை 'பவுல்' செய்த ஸ்ரீசங்கர், அடுத்த இரு வாய்ப்புகளில் 6.12, 7.58 மீ. தாண்டினார். ஸ்ரீசங்கர் 7.75 மீ., தாண்டி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

Jul 21, 2025

பாட்மின்டன் கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில்  இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெண்கலம் பதக்கம்.

114 நாடுகள் பங்கேற்கும் உலக பல்கலை., விளை யாட்டு 32வது சீசன் ஜெர்மனியில்,நடக்கிறது.. இந்தியாவின் 90 பல்கலை., யில் இருந்து 300க்கும் மேற் பட்டோர் விளையாடுகின்றனர்.பாட்மின்டன் கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, சீனதைபே மோதின. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன்1-2எனசீனதைபேயின்சுலியாங்கிடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையரில் தேவிகா சிஹாக் (இந்தியா) 2-0 என சிங் பிங் ஹுவாங்கை (சீனதைபே) தோற்கடித்தார். இரட்டையரில் இந்தியாவின் சனீத் தயானந்த்-சதிஷ், தஸ்னிம் மிர்-வர்ஷிணி ஸ்ரீ ஜோடி தோல்வியடைந்தன. முடிவில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது. இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெண்கலம் பதக்கம்.

Jul 19, 2025

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி)..

 ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி) இந்தோனேஷியாவில், சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, கலப்பு இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு கேதர், ரெஷிகா ஜோடி 11-5 என இலங்கையின் கெனத், இசுரி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மான்சாரவாத் ஜோடி 11-9 என இலங்கையின் இசுரி, சிதுமி டி சில்வா ஜோடியை வென்றது.  இந்தியாவின் தன்வி சர்மா 11-7 என  பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இலங்கையின் சிதுலி ரணசிங்கேவை வென்றார். இந்தியாவின் பிரனவ் ராம் 11-7 என ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ,இலங்கையின் திடாசாவை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ராஜுலு ராமு 11-9 என இலங்கையின் ரணித்மா லியனகேவை வென்றார்.இந்திய அணி 110-69 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) சந்திக்கிறது. 

Jul 19, 2025

உலக கோப்பை செஸ் பெண்கள் தொடர்.

 பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் ,46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற் கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம் பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையி லான இத்தொடரின் நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் பங்கேற்றனர். 19 வயது திவ்யா, உலகின் 'நம்பர்-2' வீராங்கனை, சீனாவின் ஜூ ஜினரை சந்தித்தார். முதல் இரு சுற்று முடிவில் 1.0-1.0 என சமன் ஆனது. நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது.இதன் முதல் போட்டியில் வென்ற திவ்யா, அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். முடி வில் திவ்யா 2.5-1.5 என வெற்றி பெற்று, காலிறு திக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஹம்பி, சுவிட்சர்லாந்தின், அலெக்சாண்ட்ரா மோதினர். இதில் ஹம்பி 2.5-1.5 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.இந்தியாவின் வைஷாலி, கஜகஸ்தானின் கமலிடெனோவாவை 4.5-3.5 என வெற்றி பெற்றார். இந்தியாவின் ஹரிகா, உக்ரைனின் கேத்தரினாவை போட்டி முடிவில், ஹரிகா  3.5-2.5 என வென்றார்.

Jul 19, 2025

ஆண்கள் பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர்.

 5 தொடர்களாக பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர், நான் காவது தொடர், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தன.'பிரீஸ் டைல்' செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பெருமை பெற்றார் அர்ஜுன்.மற்றொரு காலிறுதியில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோவை எதிர்கொண்டார். சுமார் 11 மணி நேரம் நடந்த போட்டியில் முடிவில் பிரக்ஞானந்தா 3.0-4.0 என வீழ்ந்தார். 

Jul 19, 2025

32 வது உலக பல்கலை., விளையாட்டு ஜெர்மனியில்…

32 வது உலக பல்கலை., விளையாட்டு ஜெர்மனியில் 114 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் 90 பல் கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட் டோர் பங்கேற்றுள்ளனர். நீச்சலில் ஆண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் அரையிறுதி நடந்தது.  இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் ,ஆண்கள் 200 மீ., பிரீஸ்டைல் போட் டியில் 5வது தகுதிச்சுற்றில் ஒரு நிமிடம், 48.22 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறினார். இது புதிய தேசிய சாதனை (இதற்கு முன் 1:48.66 வினாடி) ஆனது.  50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் ,ரோகித் பெவடிக்சன் (தமிழகம்) இதன் தகுதிச்சுற்றில் 24.00 வினாடியில் வந்து, தேசிய சாதனை படைத்து களமிறங்கினார். இம்முறை 23.96 வினாடி நேரத்தில் வந்து 6வது இடம் பெற்று, பைனல் வாய்ப்பை இழந்தார். இருப்பினும் 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் 24.00 வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடந்த முதல் இந்தியர் என, தேசிய சாதனை படைத்தார். இந்திய அணி ஆண்கள் டேபிள் டென்னிஸ் குரூப்-3ல் இடம் பெற்ற, கோலம்பியாவுக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் ஹர்குன்வர், தேவர்ஷ், அயாஸ் முராத் வெற்றி பெற்றனர். இந்தியா 3-2 என வென்று, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது. இந்திய பெண்கள் அணி 3-1 என நெதர்லாந்தை வீழ்த்தி, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் டென்னிசில் இந்தியாவின் வைஷ்ணவி, 6-1, 6-0 என நெதர்லாந்தின் மரியா ஜெனியாவை வென்றார். இந்தியாவின் அஞ்சலி ரதி, 6-0, 6-0 என உகாண்டாவின் கிறிஸ்டியாவை சாய்த்தார். ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் கபிர், மான் ஜோடி 6-1, 6-1 என தாய்லாந்தின் மஜோலி, சுபாவத் ஜோடியை வென்றது. 

1 2 ... 122 123 124 125 126 127 128 ... 170 171

AD's



More News