25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 31, 2025

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஹர்தீப்.

. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது) கிரீசில் ,கிரிகோ ரோமன், 110 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் 16 வயது வீரர் ஹர்தீப், ஈரானின் யஸ்டன் எசேவை சந்தித்தார். முதலில் 2-3 என பின்தங்கிய ஹர்தீப், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 3-3 என சமன் செய்தார். இருப்பினும், கடைசியாக புள்ளி எடுத்த வீரர் அடிப்படையில் ஹர்தீப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, இத்தொடரில் இந்தியா முதல் தங்கம் வென்றது  பெண்களுக்கான பிரீஸ்டைல்' போட்டியில், 43 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரச்சனா, 13-2 என எகிப்தின் மரியமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 65 கிலோ போட்டியில் இந்தியாவின் அஷ்வினி, 13-0 என மங்கோலியாவின் அனுஜினை வென்றுஅரையிறுதிக்குள் நுழைந்தார்.

Jul 31, 2025

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் கிரிக்கெட் தொடர்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்க   இங்கிலாந்து சென்றுள்ளது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து,2,1 முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.தற்போது, ஐந்தாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை இழக்கா மல் தப்பிக்கலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்குகிறது. 

Jul 30, 2025

செஸ் உலக கோப்பை வென்ற திவ்யாவிற்கு பாராட்டுக்கள்.

பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில்பைனலில் ஹம்பி, திவ்யா என இரண்டு இந்திய வீராங்கனைகளில் திவ்யா, செஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். தவிர இருவரும் 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர்.உலக கோப்பை தொடர் துவங்கும் முன் திவ்யா வலிமையான வீராங்கனை, இவர் வெற்றி பெறுவார் என யாரும் கணிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம், மன உறுதி திவ்யாவிடம் இருந்தது. 12 வயதில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆன போது, பெரிய வீரர் இல்லை. குகேஷிடம் வியத்தகு திறமை உள்ளது.இதுபோன்று தான் திவ்யா. இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக இல்லை என்றாலும், அபூர்வ திறமை உள்ளது.ஆனந்த் போன்ற ஜாம்பவான்கள், புதிய தலைமுறை நட்சத்திரங்களை வழிநடத்திச் செல்வதால், இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அரங்கில் வெற்றி பவனி வருகின்றனர்.

Jul 30, 2025

கிரிக்கெட் பெண்கள்  ஐ.சி.சி., சார்பில் ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது.

சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான ஐ.சி.சி., சார்பில் ஒரு நாள் போட்டியில் தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 728 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2வது இடத்திற்கு தள்ளப் பட்டார்.இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட், 731 புள்ளியுடன் மீண்டும் ‘நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 10வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் ரிச்சா 39வது, ஹர்லீன் 48வது இடத்துக்கு முன்னேறினர்.பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி, நான்காவது இடத்தில் தொடர்கிறார். 

Jul 30, 2025

உலக ஜூனியர் ஸ்குவாஷ், சாம்பியன் ஷிப் தொடர்.

உலக ஜூனியர் அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் தொடர் எகிப்தில் இந்திய பெண்கள் அணி 'பி' பிரிவில் இடம் பெற்றது.நேற்று நடந்த போட்டியில் பிரேசிலில் நடந்த ,முதல் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், 11–4, 11– 3, 11-3 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். அடுத்து உன்னதி  11-3, 11-2, 11-3 என வென்றார்.மூன்றாவது போட்டியில் இந்தியாவின் அனிகா, 11-1, 11-1, 11-5 என முடிவில் ,இந்தியா 3-0 என வென்று, இரண்டாவது இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது. இன்று, வலிமையான எகிப்து அணியை சந்திக்க உள்ளது.  இந்திய ஆண்கள் அணி 'டி' பிரிவில் இடம் பிடித்து,முதல் இரு போட்டியில் தென் ஆப்ரிக்கா (3-0), ஜெர்மனியை (3-0) சாய்த்தது.நேற்று மூன்றாவது போட்டியில் 2-1 என ஜப்பானை வீழ்த்தி, முதலிடம் பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று தென் கொரியாவை எதிர்கொள்கிறது. 

Jul 29, 2025

7800 க்கும் மேல் புள்ளி எடுத்த முதல் இந்தியர் ,தேஜஸ்வின் தேசிய சாதனை .

இந்தியாவின்தேஜஸ்வின்ஷங்கர்ஆண்களுக்கான 'டெகாத்லான்'(மொத்தம் 10)போட்டியில் ,களமிறங்கினார். 400 மீ., ஓட்டம் (48.87 வினாடி), வட்டு எறிதல் (38.85 மீ.,),நீளம் தாண்டுதல் (7.57 .,), 100 மீ., ஓட்டம் (11.02 வினாடி), போல் வால்ட் (4.10 மீ.,), 1500 மீ., ஓட்டம் (4 நிமிடம், 31.80 வினாடி) என 6 போட்டிகளில் தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.ஒட்டு மொத்தமாக 7826 புள்ளி எடுத்த தேஜஸ்வின், 4 வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இதற்கு முன் 7666 புள்ளி எடுத்து இருப்பினும் டெகாத்லான் போட்டியில் 7800 க்கும் மேல் புள்ளி எடுத்த முதல் இந்தியர் என வரலாறு படைத் தார்., இது புதிய தேசிய சாதனை ஆனது. 

Jul 29, 2025

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய  நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

 மான்செஸ்டரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் ,முதல் இன்னிங்சில் இந்தியா 358, இங்கிலாந்து 669 ரன் எடுத்தன.  311 ரன் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்தியா. ராகுல் (90), சுப்மன் (102) உதவினர். அடுத்து வந்த ஜடேஜா, வாஷிங்டன் இணைந்து தோல்வியை தவிர்க்க போராடினர், ஒரு கட்டத்தில் ஜடேஜா 89, வாஷிங்டன் 80 ரன் எடுத்திருந்தனர். போட்டி முடிய ஒரு மணி நேரம் மட்டும் உள்ள நிலையில் 15 ஓவர்கள் மீதம் இருந்தன. இந்திய அணி 75 ரன் முன்னிலை பெற்றிருந்தது.இதனால் போட்டியை 'டிரா' செய்ய முன் வந்தார் இங்கிலாந்து அணி  கேப்டன் ஸ்டோக்ஸ். இதை ஏற்க மறுத்தது இந்தியா. தொடர்ந்து ஜடேஜா, வாஷிங்டன் என இருவரும் சதம் அடித்த பின் (இந்தியா 425/4), 'டிரா' செய்ய ஒப்புக்கொண்டனர்.

Jul 29, 2025

செஸ் உலககோப்பையை மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த திவ்யா 19 வயது  திவ்யா தேஷ்முக் வென்றார்.

உலக செஸ் பைனலில் விளையாடிய கோப்பை இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இந்திய பெண்களின் திறமையை உணர்த்துகிறது.உலக கோப்பை தொடரில் இந்திய ஜாம்பவான் ஆனந்த்,2000,2002 என இருமுறை சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்து உலககோப்பை வென்ற இந்தியர் ஆனார் திவ்யா.செஸ் உலக கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் திவ்யா. பைனலில் சக வீராங்கனை ஹம்பி இரண்டாவது இடம் பெற்றார். திவ்யா, மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை ஜிதேந்திரா தேஷ்முக்,தாய் நம்ரதா இருவருமே டாக்டர்கள். இவர்கள் வசித்த பகுதியில் கூடைப்பந்து, பாட்மின்டன், செஸ் பயிற்சி மையங்கள் இருந்தன.திவ்யாவுக்கு ஐந்து வயதிலேயே செஸ்மீது ஆர்வம் பிறந்தது.பெண்களுக்கான செஸ் தொடரில் உலக வீராங்கனை கோப்பை வென்ற இளம் எனபெருமை பெற்றார் திவ்யா,உலகசாம்பியன்ஷிப்பில் சாதித்த இளம் வீரராக இந்தியாவின் குகேஷ் 19, உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு,பிரதமர் மோடி,செஸ் ஜாம்பவான் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியவீராங்கனையான திவ்யாவுக்கு வாழ்த்துகள்கூறினர்.ஹம்பி கடைசி வரைபோராடினார். இந்தியாவில் பெண்கள் செஸ் போட்டியை கொண்டாடும் தருணம். புதிய சாம்பியன் திவ்யா ரூ.43.33 லட்சம், ஹம்பி ரு. 30.33 லட்சம் பெற்றனர் 

Jul 28, 2025

21 பதக்கம் வென்ற இந்தியா.

 உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் ஜெர்மனியில்,  3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தின் பெண்களுக்கான பைனலில் இந்தியா சார்பில் அன்கிதா பங்கேற்றார். பந்தய துாரத்தை 9 நிமிடம், 31.99  வினாடியில் கடந்த அன்கிதா, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.4×100 மீ., தொடர் ஓட்டத்தின்ஆண்களுக்கான பைனலில் லல்லு பிரசாத் போய், அனிமேஷ், மணிகண்டா, மிருத்யம் ஜெயராம் அடங்கிய இந்திய அணி, இலக்கை 38.99 வினாடியில் கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது. 'எஸ்.யு.5' பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் துளசி மதி முருகேசன் 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் சகவீராங்கனை மணிஷா ராமதாசை தோற்கடித்து தங்கத்தை வென்றார். 'எஸ்.எல்.3 எஸ்.எல்.4' பிரிவு ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜெகதீஷ், நவீன் ஜோடி, நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.மற்ற பிரிவு போட்டியில் இந்தியாவின் சுகந்த் கடம், சஞ்சனா குமாரி, உமேஷ் குமார், சூர்யா வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்தியாவுக்கு 3 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கம் கிடைத்தது. 

Jul 28, 2025

செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இந்தியாவின் கொனேரு ஹம்பி, திவ்யா போட்டி.

பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில், பைனலுக்கு இந்தியாவின் கொனேரு ஹம்பி, திவ்யா முன்னேறி வரலாறு படைத்தனர். இரண்டு போட்டிகள் கொண்ட பைனலின் முதல் போட்டி 'டிரா' ஆனது.நேற்று, 2வது போட்டி நடந்தது.  இதில் வெற்றி பெறும்  வீராங்கனைக்கு, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இருவரும் விட்டுக்கொடுக்காமல் 34வது நகர்த் தலில் 'டிரா' ஆனது.இதனையடுத்து ஸ்கோர் 1.0 – 1.0 என மீண்டும் சம நிலையில் உள்ளது. இன்று ‘டை- பிரேக்கர்' நடக்கவுள்ளது. 

1 2 ... 119 120 121 122 123 124 125 ... 170 171

AD's



More News