25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Jul 28, 2025

தீபிகா ஈட்டி எறிதலில் தேசிய சாதனை

இந்திய ஓபன் தடகள போட்டி பஞ்சாப்பில் நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா பங்கேற்றார். 6 வாய்ப்பிலும் தலா 50 மீ.,க்கு மேல் எறிந்தார்.இதில் 3 வாய்ப்பில், தலா 54 மீ.,க்கு மேல் எறிந்தார். முதல் வாய்ப்பில் அதிகபட்சமாக 56.41 மீ., எறிந்த தீபிகா முதலிடத்தை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு 54.98 மீ., எறிந்திருந்தார்.  20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். 

Jul 28, 2025

மான்செஸ்டர் டெஸ்டில் கிரிக்கெட் .

 கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன், ஜடேஜா என மூவர் சதம் அடித்து ,மான்செஸ்டர் டெஸ்டில் துணிச்சலாக போராடி இந்திய அணி, 'டிரா' செய்தது.இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் எடுத்தது.இங்கிலாந்து 669 ரன் குவித்து, 311 ரன் முன்னிலை பெற்றது. நான்காவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்த அணி 174/2 ரன் எடுத்து, 137 ரன் பின்தங்கி இருந்தது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 425/4 ரன் எடுத்தது.ஜடேஜா (107), வாஷிங்டன் (101) அவுட் டாகாமல் இருந்தனர்.தற்போது 'ஆண்டர்சன் -சச்சின் டிராபி' தொடரில், இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலையில் உள்ளது.

Jul 28, 2025

வேர்ல்டு டேபிள் டென்னிஸ் சத்யன் ,ஆகாஷ் ஜோடிசாம்பியன்

வேர்ல்டு டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நைஜீரியாவின் லாகோசில்ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சத்யன், ஆகாஷ் ஜோடி, பிரான்சின் நாட் ரெஸ்ட், ஜூல்ஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 11-9, 11-4, 11-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. பெண்கள் ஒற்றையர்  பைனலில் இத்தொடரின் நடப்பு சாம்பியன், இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா,ஜப்பானின் ஹனோகோ மோதினர். முதல் மூன்று  செட்டை 7-11, 3-11, 4-11 என இழந்தார் ஸ்ரீஜா. முடிவில் 1-4 என தோற்று, இரண்டாவது இடம் பிடித்தார்.

Jul 26, 2025

செஸ்:உலக கோப்பை பைனலில்  திவ்யா-ஹம்பி .

  புதிய வரலாறு படைத்த உலக கோப்பை பைனலில் முதன் முறையாக முன்னேறிய இந்தியாவின் திவ்யா, ஹம்பி. , உலக சாம்பியன் ஷிப் தகுதிப் போட்டி யில்('கேண்டிடேட்ஸ்' செஸ்,2026) பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர். உலக கோப்பை வெல்பவருக்கு ரூ. 43.23 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற்றால் ரூ.30.26 லட்சம் தரப்படும். திவ்யா 19, ஹம்பி 38, மோதும் பைனல் இன்று துவங்குகிறது. இதில் இன்று, நாளை என இரு போட்டிகள் நடக்கும். இதில் முதலில் 1.5 புள்ளி பெறுபவர் உலக கோப்பை கைப்பற்றலாம். மாறாக இரு போட்டியும் 'டிரா' (1.0-1.0) ஆகும் பட்சத் தில், ஜூலை 28ல் 'டை பிரேக்கர்' நடக்கும். 

Jul 26, 2025

ஆசிய ஜூனியர் பாட்மின்டனில், அரையிறுதிக்கு முன்னேறிய தன்வி சர்மா.

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா, இந்தோனேஷியாவின் தலிதா ராமதானி வீர்யவான் மோதினர். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் தன்வி சர்மா 21,19,/21,14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வெண்ணாலா கலகோட்லா  21-18, 17-21, 21-17 என தாய்லாந்தின் ஜான் யாபோர்ன் மீபந்தோங்கை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.  'சூப்பர் 1000' சர்வதேச ,சீன ஓபன் பாட்மின்டன். 'சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனாவில்,. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத் விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யேவ் சின் ஆங், ஈ யி டியோ ஜோடியை சந்தித்தது. இந்திய ஜோடி 21-18,  21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

Jul 26, 2025

இந்தியா உலக பல்கலை வில்வித்தை 'காம்ப வுண்டு' பிரிவு  விளையாட்டில் முதல் தங்கம் வென்றது.

 உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் ஜெர்மனியில், வில்வித்தை 'காம்ப வுண்டு' பிரிவு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், குஷால் தலால் ஜோடி, தென் கொரியாவின் பார்க்,எரின் ஜோடியை சந்தித்தது. முதல் இரு செட்டில் பின் தங்கிய இந்தியா(77,78), கடைசி இரு செட்டில் (80,76) சிறப்பாக செயல்பட்டது. முடிவில் இந்தியா,157,154 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இத் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் .

Jul 26, 2025

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், 'வெண்கலம்' வென்ற இந்தியாவின் அனாஹத் சிங்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில், ஆசிய ஜூனியர்(19 வயது) சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.முதல் செட்டை 6-11 என இழந்த அனாஹத், அடுத்த செட்டை 12-14 என போராடி நழுவவிட்டார். 3வது செட்டிலும் 10,12 என முடிவில், 03 என தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

Jul 26, 2025

'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' கிரிக்கெட் தொடர்.

ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' தொடரில் இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந் தியா 358 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடி வில் இங்கிலாந்து 225/2 எடுத்து, 133 ரன் பின்தங்கியிருந்தது.நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய 'வேகங்கள்' தடுமாறினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 544/7 ரன் எடுத்து, 186 ரன் முன்னிலை பெற்றது. 

Jul 25, 2025

மான்செஸ்டரில் கிரிக்கெட் போட்டி.

'ஆண்டர்சன், சச்சின் டிராபி"ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி,2,1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 214/2 ரன் எடுத்து, 144 ரன் பின்தங்கியிருந்தது. 

Jul 25, 2025

பெண்களுக்கான உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி!

 பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர்ஜார்ஜியாவில்,  நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜோங்கியை வீழ்த்தி, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லெய்டிங்ஜீ மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0,1.0 என சம நிலையில் இருந்தது.நேற்று,'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டியில் விளையாடிய ஹம்பி, 65வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் களமிறங்கிய ஹம்பி, 39வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0-2.0 என மீண்டும் சம நிலை வகித்தது.அடுத்த 4 போட்டியில்,3ல் ஹம்பி, முடிவில் 5.0,3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். நாளை துவங்கவுள்ள பைனலில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். 

1 2 ... 120 121 122 123 124 125 126 ... 170 171

AD's



More News