சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்(ஐ.ஓ.சி.)தலைவராக 12ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாச்விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனையான (ஜிம் பாப்வே)கிறிஸ்டி கவன்ட்ரி அதிகவாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில், சர்வதேச விளையாட்டு அமைப்பில் இந்த அரியணையில் அமரும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற பெருமையை 41 வயதான கவன்ட்ரி பெற்றார்.ஐ.ஓ.சி. அமைப்பு உருவாக்கப்பட்ட தினமான(ஜூன்.23), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த விழாவில் கோல்டன் சாவியை முன்னாள் தலைவர் தாமஸ் பாச்அவரிடம் வழங்கினார். ஐ.ஓ.சி. சிறந்தவரின் கைக்கு சென்று இருப்பதாகவும்,அவர் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் செயல்படுவார் என்றும் தாமஸ் பாச் கூறினார்.
தேசிய ஜூனியர் தடகளம்தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன், உ.பி., யின் பிரக்யாராஜில் நேற்று நடந்த ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர் யுவராஜ், 13.69 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2021ல் தேஜாஸ் ஷிர்சே (13.74) சாதித்து இருந்தார்.போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின் ராஜா (5.11) தங்கம் கைப்பற்றினார்.பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் கிளாடிசியா ஷினே (14.44) வெள்ளி கைப்பற்றினார். ஆண்களுக்கான தாண்டுதலில் நீளம் தமிழக வீரர் ஜித்தின், 7.83 மீ., துாரம் தாண்டி, வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தேஷிகா (54.99 வினாடி) வெள்ளிப் பதக்கம் வென்றார்.தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. தமிழக அணி தரப்பில் முத்துசெல்வன் 4 கோலும், கேப்டன் ஆடம் சின்கிளைர், சுதர்சன், ரமேஷ், வினோத்குமார் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு கால்இறுதியில் ஒடிசா அணி 6-2 என்ற கோல் ஆந்திராவை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது.பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்து, லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் கர்நாடகா, இமாசலபிரதேசம். கேரளா,மராட்டியமும், 'பி' பிரிவில் பஞ்சாப், ஒடிசா, அரியானா, தமிழ்நாடும் முறையே முதல் 4 இடங்களுடன் கால்இறுதிக்குள் நுழைந்தன.இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டங்களில் மராட்டியம்-கர்நாடகம் (காலை 10 மணி), அரியானா-சண்டிகார் (பகல் 12 மணி) அணிகள் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் நடக்கும் கால்இறுதி ஆட்டங்களில் கர்நாடகா-தமிழ்நாடு (காலை 6 மணி), ஒடிசா -கேரளா (காலை 8 மணி), இமாசல பிரதேசம்-அரியானா (பிற்பகல் 2 மணி), பஞ்சாப்- மராட்டியம் (மாலை 4 மணி) அணிகள் சந்திக்கின்றன. கால்பந்து ஆஸ்திரேலியாவில்பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின்21வது சீசன்,2026, மார்ச்1,26(12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா,2,3வது இடம் பிடித்த தென் கொரியா, ஜப்பான், தொடரை ஆஸ்திரேலியா நடத்தும்4 அணிகள் நேரடியாக பங்கேற்க உள்ளன.மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கின்றது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரி விலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.இந்திய அணிB பிரிவில் மங்கோலியா, தாய்லாந்து, ஈராக், திமோர்,லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் போட்டியில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்து ,இந்திய அணி 13-0 என வெற்றி பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்தொடர் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப் பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விட்ட முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாசை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த திருச்சி அணியின் கேப்டன் சுரேஷ் குமார் பீல்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப் பர் கில்லீஸ் அணி 5 விக் கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது .20 ஓவர்களில் திருச்சி அணி 6 விக்கெட்டுக்கு 174 ரன்னில் அடங்கியது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
21-ம் தேதி போட்டி 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ,கோவை கிங்சை சந்தித்தது.நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்து. 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி 17.5 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. கோவை அணி 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 22-ம் தேதி போட்டி டி.என்.பி.எல்., லீக் போட்டியில், நேற்று மதிய நேரம், சேலம், ‘நடப்பு திண்டுக்கல் சாம்பியன்' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின், 'பவுலிங்' தேர்வு செய்தார். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட் டுக்கு 192 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றதுசேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது.. திருப்பூர், மதுரை அணிகள் ,இரவு மற்றொரு லீக் போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. திருப்பூர் அணி 10.1 ஓவரில் 124/1 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுமதுரை அணி 20 ஓவரில், 120 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
சர்வதேச ஹாக்கி புரோ லீக் 6வது சீசன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன . இதற்காக பெல்ஜியம் சென்ற இந்திய அணி, தனது கடைசி போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது. இதில் இந்திய அணி 4-3 என வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது 14வது போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது, இதில் இந்திய அணி, 2 வெற்றி, 3 'டிரா', 9 தோல்வி என 10 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது தமிழ்நாடு ஹாக்கி முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஹாக்கி போட்டி ,தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவிடம் வீழ்ந்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது. 5-1 என்ற கோல் கணக்கில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சண்டிகார் அணி மணிப்பூரை தோற்கடித்து 2வது வெற்றியை தனதாக்கியது. ஆந்திராவை மற்றொரு ஆட்டத்தில் ,தமிழக அணி 11-0 என்ற கோல் கணக்கில், 2-வது வெற்றியை பெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பவர்லிப்டிங் உலக கோப்பை தொடர் சீனாவின் பீஜிங்கில், . ஆண்களுக்கான 59 கிலோ பிரிவில் அதிகபட்சமாக 153 கிலோ தூக்கிய இந்தியாவின் குல்பாம் அகமது வெண்கலம் வென்றார். இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.ஆண்களுக்கான 72 கிலோ பிரிவில், 156 கிலோ தூக்கிய இந்தியாவின் ராமுபாய் பம்பாவா வெண்கலம் வென்றார்.. ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவில் 150 கிலோ தூக்கிய இந்தியாவின் ஜோபி மாத்யூ தங்கத்தை கைப்பற்றினார்.. இந்தியாவுக்கு நேற்றைய முதல் நாளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்தது.
16வது சீசன் டைமண்ட் லீக் தடகளத்தின் 4வது சுற்று பிரான்சின் பாரிசில் நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார். இவர், முதன் முறையாகதோகா டைமண்ட் லீக் (மே 16) போட்டியில் 90 மீ.,க்கும் (90.23) மேல் எறிந்து இருந்தார். இம்முறை முதல் வாய்ப்பில், அதிக பட்சம் 88.16 மீ., துாரம் எறிந்தார்.. கடைசி, 6வது வாய்ப்பில் 82.89 மீ., துாரம் மட்டும் எறிந்தார். இருப்பினும், நீரஜ் சோப்ரா (88.16) முத லிடம் பிடித்து, பட்டம் கைப்பற்றினார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கின்றது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா, 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக் கிறது. ரிஷாப் வழக்கம் போல வேகமாக ரன் சேர்த்தார். 99 ரன்னில் இருந்த இவர், சோயப் பஷிர் பந்தில் சிக்சர் அடித்து, 7வது சதம் கடந்தார். இந்திய அணி முதல் இன்னிங் சில் 471 ரன்னுக்கு ஆல் அவுட்டானது, மழை குறுக்கிட, 45 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 133/2ரன் எடுத்தது. இன்று ஆட்டம் தொடரும் .
பாட்மிண்டன் தாய்லாந்தின் ஆசிய பாரா பாட்மின்டன் சாம் பியன்ஷிப் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் (எஸ்.யு.5), இந்தியாவின் துளசிமதி (தமிழகம்), ஜப்பானின் சுகினோவை சந்தித்தார். துளசிமதி 21-6, 21-15 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.பெண்கள் இரட்டையர் காலிறுதியில் (எஸ்.எல்.3) இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோஷி ஜோடி, இந்தியாவின் பாலக் கோலி, தாய்லாந்தின் சனிதா ஜோடியை 21-10, 21-16 என வீழ்த்தியது.கலப்பு இரட்டையர் 'ரவுண்டு-16' போட்டியில் துளசிமதி, நிதேஷ் , ஜோடி 21-14, 21-11 என இந்தியாவின் சஞ்சனா, ஜதின் ஆசாத் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.செஸ் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது.இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட் பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஷம்சி தினை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.அர்ஜுன், ஈரானின் பர்ஹாம் மோதிய போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். முதல் இருசுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (1.5 புள்ளி), பிரக் ஞானந்தா (1.5) 3, 4 வது இடத்தில் உள்ளனர். ஹாக்கி ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் இந்திய மாஸ்டர்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.நேற்று நடந்த பெண்கள் போட்டியில் கர்நாடகா அணி 12-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஹிமாச்சல் அணி, கேரளாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆண்களுக்கான போட்டியில் ஆந்திரா அணி 4-3 என கேரளா அணியை வீழ்த்தியது.
கிரிக்கெட் உலக டெஸ்ட்சாம்பியன் ஷிப் (2025-27) நான்காவது சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கி லாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற் கிறது. முதல் டெஸ்ட் நேற்று லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்கியது.'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார். ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர் களுக்கு இந்தியா, இங்கிலாந்து அணியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் சதம் விளாசிய 5வது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் விஜய் மஞ்ச் ரேக்கர் (1952,133 ரன், லீட்ஸ்), சந்தீப் பாட்டீல் (1982, 129* ரன் மான்செஸ்டர்), சவுரவ் கங்குலி (1996, 131 ரன், லார்ட்ஸ்), முரளி விஜய் (2014, 146 ரன், நாட்டிங்காம்) இப்படி சாதித்திருந்தனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் (127), ரிஷாப் பன்ட் (65) அவுட் டாகாமல் இருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 26-அக் 5ல் டில்லி, நேரு மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான 100 நாள் 'கவுன்ட்-டவுண்' நேற்று துவங்கியது.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் லோகா, சின்னம் அறிமுகம் செய் யப்பட்டன. இந்தியாவின் பாரம்பரியத்தை போற் றும்வகையில், 'கார்ட்டூன்' வடிவ குட்டி யானை 'விராஜ்' சின்னமாக அறிவிக்கப்பட்டது.இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், "இந்தியாவில் முதல் முறையாக உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் நடக்க இருப்பது பெருமையான விஷயம் என்று இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா என்றார். 100 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 186 பதக்கங்கள் வழங்கப்படும்.இப்போட்டிகளை சிறப்பாக நடத்துவோம். இதன் மூலம் 2036 ல் ஒலிம்பிக், பாராலிம் பிக்கை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்து வோம்," என்றார்.தன்னம்பிக்கை, வலிமையின் அடையாளமாக 'விராஜ்' சின்னம் விளங்குகிறது என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 'பாரா' உலக தடகளத்தின் விளம்பர துாதரான நடிகை, எம். பி., கங்கனா ரணாவத் கூறினார்.