.தைவான் தடகள ஓபன் சீனதைபேயில், நடந்தது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், தமிழகத்தின் வித்யா ராம்ராஜ்(56.53 வினாடி) தங்கப்பதக்கத்தை சென்றார். ஆண்களுக்கான 400 மீ.,தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் யாஷஸ் பாலக்ஷா (49.22 வினாடி) வெள்ளி வென்றார். இந்தியாவின் பூஜா பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் - இலக்கை 2 நிமிடம், 02.79 5 வினாடியில் கடந்து, புதிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனைடிவிங்கிள் சவுத்தரி (2 நிமி டம், 06.96 வினாடி) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் கிருஷ்ணன்குமார், ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.46 வினாடியில் கடந்து, , தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விஷால், தரம்வீர் சவுத்தரி, சந்தோஷ், மானு அடங்கிய இந்திய அணி ஆண்களுக்கான 4×400 மீ.,தொடர் ஓட்டத்தின் பைனலில் (3 நிமிடம், 05.58 வினாடி) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றது.
இந்தியாவின் ரோகித் யாதவ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் (74.42 மீ.,) தங்கப்பதக் கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் அன்னு ராணி பெண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் (56.82 மீ.,) தங்கம் வென்றார்.
இந்தியாவின் ஷைலி சிங் (6.41மீ.,), ஆன்சி ஜோசன் (6.39 மீ.) வெள்ளி, வெண் கலத்தை பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் கைப்பற்றினர்.இத்தொடரில் இந்தியா வுக்கு 12 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்தது.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடக்கும்ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ்,5முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென்(நார்வே) உள்பட 6 வீரர்கள், பங்கேற்றுள்ளனர். இதில்ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் 9வது சுற்று ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 40வது நகர்த்தலில் சீனாவின் வெய் யியை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 23-வது நகர்த்தலில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹிகாருநகமுராவிடம்(அமெரிக்கா) டிரா கண்டார். இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடந்த டைபி ரேக்கரில் நகமுரா 48-வது நகர்த்தலில் எரிகைசியை வீழ்த்தினார்.9வது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,குகேஷ் 14% புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நகமுரா 13 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.கடைசி சுற்றில் குகேஷ், பாபியானோ கருனாவையும், கார்ல்சென், அர்ஜூன் எரிகைசியையும் சந்திக்கிறார்கள். இதன் முடிவில்யாருக்கு சாம்பியன் பட்டம் என்பது தெரியவரும்.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் ஆமதாபாத்தில் (குஜராத்), நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்' கோவா, புனே அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கோவா வின் ஹர்மீத் தேசாய், புனேயின் அல்வரோ ரோபிள்ஸ் மோதினர். இதில் ஹர்மீத் 2-1 என வெற்றி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் கிருத்விகா சின்ஹா ராய் (கோவா) 2-1 என ஜியோன் லீயை (புனே) வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் கோவாவின் ஹர்மீத் தேசாய், ஜெங் ஜியான் ஜோடி 3-0 என புனே யின் ஜியோ லீ, அனிர்பன் கோஷ் ஜோடியை தோற்கடித்தனர். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜெங் ஜியான் (கோவா) 2-1 என ரீத் ரிஷ்யாவை (புனே) வென்றார்.கோவா அணி 10-5 என வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 3 போட்டியில், 2ல் வென்ற கோவா அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது.இதற்கு முன் நேற்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுப்மன் கில் கூறியது: ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.தற்போது, இந்திய அணிக்காக நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய, இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் நாங்கள் களமிறங்குகிறது. அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர்' வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம். மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன். இது மிகப் பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென 'ஸ்டைல்' எதுவும் இல்லை. அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணி யில் தங்களது இடம் பாதுகாப்பான என் பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.வரும் டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம்.அடுத்து 10 நாள் பயிற்சி முகாம் உள்ளது. பவுலிங்கில் 10 வீரர்கள் உள்ளனர். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாத போது, சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.கேப்டனாக, மற்ற வீரர் களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என்று சுப்மன் கில் கூறினார்.
சர்வதேச கிளாசிக்கல் செஸ் தொடர் ஆர்மேனியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் 7வது சுற்றில் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ஹகோபியானை எதிர்கொண்டார். பிரக்ஞா னந்தா 78 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் சாம்செவியன் மோதினர். அரவிந்த், போட்டியின் 65 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.ஏழு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.
தமிழக கிரிக்கெட் சங்கம்(டி.என். சி.ஏ.,) சார்பில் டி.என்.பி.எல்., தொடர் ,9வது சீசன் இன்று கோவையில் துவங்குகிறது.இதில் நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி என 8 அணிகள் பங்கேற்கின்றன.இதற்கான போட்டிகள் கோவை(ஜூன் 5,11), சேலம்(ஜூன் 13,19), நெல்லை(ஜூன் 21,26), திண்டுக்கல்(ஜூன் 28ஜூலை 6) என 4 இடங்களில் நடக்கின்றன.கோவையில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல், கோவை அணிகள் மோதுகின்றனபிரிமியர் தொடரின் 18 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு சாம்பியன் ஆனது. சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். இதில் கோலி பேசியது: உங்களிடம் பேசுவதற்கு அதிக நேரமில்லை. ஏனெனில் பிரிமியர் கோப்பையை முதலில் உங்களிடம் காட்டவேண்டும். எங்களது கேப்டன் ரஜத் படிதர் கூறியது போல, இனிமேல் ஈ சாலா கப் நம்தே' அல்ல,'ஈ சாலா கப் நம்து'(இந்த கோப்பை நமக்கு சொந்த மானது). இதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டோம். இது அணியின் வீரர்களுக்காக அல்லது என்னைப் போல 18 ஆண்டுகளாக அணியில் இருக்கும் ஒருவருக்காக அல்ல, இந்த வெற்றி அனைத்தும் உங்களுக்கானது. இந்த மக்களுக்கானது என்றார்.
வாலிபால் ஆண்களுக்கான சர்வ தேச தேசிய லீக் வாலிபால் தொடர்உஸ்பெகிஸ்தானில் நடந்தது. 7 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் இந்திய அணி துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தானை வீழ்த்தியது. ஈரானிடம் தோற்றது.அடுத்து கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா பைனலுக்கு முன்னேறியது. நேற்று இதில் மீண்டும் ஈரானை எதிர்கொண்டது. முதல் செட்டை 17,25 என இழந்த இந்தியா, அடுத்த செட்டை 20,25 என நழுவவிட்டது. மூன்றாவது செட்டையும் 19,25 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்து. வெள்ளிப்பதக்கம் பெற்றது. செஸ் நார்வேயில், சர்வதேச செஸ்('கிளாசிக்கல்')தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவு எட்டாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயின் சாராவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, போட்டியின் 58வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் வென்சுன் மோதினர். இதில் 'டைபிரேக்க ரில் வைஷாலி, வெற்றி பெற்றார். 8 சுற்று முடிவில் ஹம்பி (13.5) முதலிடத்துக்கு முன்னேறினார். சீனா வின் வென்சுன் (12.5), உக்ரைனின் அனா முஜிசக் (12.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். வைஷாலி (9.5) 5வது இடத்தில் தொடர்கிறார்.பாட்மிண்டன் இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி, தைவானின் நிக்கோல் சன், ஹாங் வெய் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை 15,21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 21,16 என கைப்பற்றியது. பின் நடந்த 3வது செட்டையும் இந்திய ஜோடி 21-17 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 15–21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி உக்ரைனின் புக்ரோவா, கான்ட்மெர் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-14, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
JUNE 3-ம் தேதி அஹமதாபாத்தில், பஞ்சாப், பெங்களூர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 190/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 184/ 7 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற அணி, பஞ்சாப் இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.