25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 05, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் (04.08.2025) நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் இன்று (04.08.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  பின்னர், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமம், உட்கடை வலையப்பட்டி மெஃஸ்.டி.முத்து மீனா  பயர் ஒர்க்ஸில் கடந்த 27.07.2022 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் மரணமடைந்த தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், மஜரா வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) திரு.ஜெயராஜ் என்பவரின் வாரிசுதாரரான மனைவி திருமதி ஜானகி என்பவருக்கு ரூ.3 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலையினையும்,  வெடி விபத்தில் காயமடைந்த வெம்பக்கோட்டை வட்டம், விளாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.பவானீஸ்வரன் என்பவருக்கு ரூ.1 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலையினையும் என வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  மொத்தம் ரூ.4 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ரஜேந்திரன் அவர்கள்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 05, 2025

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகைக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன

 விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட மீன்வளர்ப்போர்; மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்குwww.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம்.    தெளிவுரைகள் மற்றும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், 04562 - 244 707  என்ற தொலைபேசி எண்ணிலும்,adfisheriesvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Aug 05, 2025

நீர்த்தேக்கங்களில் மீன்பிடி தொழில் செய்யும் 8 மீனவர்களுக்கு 50 சதவிகிதம் மானிய விலையில் ரூ.10,000/- மதிப்பிலான பரிசல்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(04.08.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் சார்பில் தமிழ்நாடு அரசு மாநில நிதி திட்டத்தின் கீழ் குல்லூர்சந்தை மற்றும் வெம்பக்கோட்டை நீர்த்தேக்கங்களில் மீன்பிடி தொழில் செய்யும் 8 மீனவர்களுக்கு 50 சதவிகிதம் மானிய விலையில் ரூ.10,000/- மதிப்பிலான பரிசல்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

Aug 04, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (02.08.2025)  நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் சத்திரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S, அவர்கள்  தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்   நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  துவக்கி வைத்தனர்.   தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம்,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,     நீரழிவுநோய் மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன.    மேலும், இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம் சத்திரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,500/-  வீதம் மொத்தம் ரூ.21,000/மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.

Aug 04, 2025

வேளாண்மைத்துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

 வேளாண்மைத் துறை சார்பில் ஆண்டு தோறும் மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொண்டு மாநிலஅளவில் முதலிடம் பெறும் விவசாயிக்குரூ.5 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளின்படி போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் குறைந்தப்பட்சம் 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் இரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைத்தாரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். 50 சென்ட் அளவில் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஓரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த 3 ஆண்டுகளுக்கு போட்டியில் கலந்து கொள்ள இயலாது. அறுவடை செய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநருக்;கு தெரிவிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றியாளர்களை அறிவிப்பதில் சென்னை, வேளாண்மை இயக்குநர் தலைமையிலான, மாநில அளவிலான குழு இறுதிமுடிவு எடுக்கும்.எனவே விருதுநகர் மாவட்டத்தில், திருந்திய நெல் சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயனடைய சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 02, 2025

தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பெரியவள்ளிக்குளம் கிராமத்தில், இயங்கி வரும்  தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (01.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், நீதிமன்ற உத்தரவின்படியும், தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றனவா என்பது குறித்து குழு அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக, பெரியவள்ளிக்குளம் கிராமத்தில், இயங்கி வரும்  தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், அரசின் உரிமம் பெற்றுள்ளதா என்பது குறித்தும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் (நிலத்தடி நீர், காரைக்குடி) திரு.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 02, 2025

தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (01.08.2025) வணிகவரித்துறை சார்பில், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் வாயிலாக சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யும் வகையில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST)  சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் ஆண்டிற்கு விற்று முதல் (Turnover) ரூ.40 இலட்சத்திற்கு குறைவாக உள்ள வணிகர்கள் வணிகர் நல வாரியத்தின் பலனை பெறும் வகையில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத் தொகையான ரூ.500/- ஐ செலுத்துவதிலிருந்து 01.06.2025 முதல் 30.11.2025 வரையிலான ஆறு மாத காலத்திற்கு விலக்களிக்கப்படுகிறது. தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.வணிகர் நலவாரியத்தில் ரூ.40 இலட்சத்திற்கு கீழ் வணிகம் செய்யும் அனைத்து வணிகர்களும் கட்டணமில்லாமல் உறுப்பினர்களாக சேரலாம். மற்ற வணிகர்கள் ரூ. 500 கட்டணத்துடன் சேரலாம். ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் பதிவு எண் பெற்ற வணிகர்கள் மற்றும் GSTIN பெறாத வணிகர்கள் உறுப்பினராக சேரலாம். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முகவரிச் சான்று, தொழில் உரிமம் சான்று (உள்ளாட்சி, MSME UDAYAM, உணவு பாதுகாப்புத் துறை) உள்ளிட்ட விவரங்களை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.வணிகர் நலவாரியத்தில் சேர்க்கை பெறும் உறுப்பினர்களுக்கு குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, உறுப்பினரின் வாரிசுகளுக்கு விளையாட்டு நிதியுதவி, தீ விபத்து நிவாரண உதவி, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, திருமண உதவித்தொகை, விபத்துக்கால உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான மேலும் விபரங்களுக்கு இணை ஆணையர் (மாநில வரி), விருதுநகர் கோட்டம், துணைஆணையர் (மாநில வரி) விருதுநகர், ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள், மதுரை ரோடு, விருதுநகர்-626001, துணை ஆணையர்(மாநில வரி) சிவகாசி ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள், ரிசர்வலைன், சாட்சியாபுரம் சிவகாசி- 626124 ஆகிய முகவரிகளிலும், www.tn.gov.in/tntwb    என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு வணிகர்கள் இந்த தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையர்(சென்னை) திரு.ஆ.பா.தேவேந்திர பூபதி அவர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்கவுரையாற்றினார்.மேலும், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான வணிகர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்(சென்னை) திரு.ஆ.பா.தேவேந்திர பூபதி, விருதுநகர் கோட்ட இணை ஆணையர்(மாநில வரி) திரு.சே.மாரியப்பன், விருதுநகர் துணை ஆணையர்(மாநில வரி) திரு.அ.மகபூப் இப்ராகிம், விருதுநகர் உதவி ஆணையர்(மாநில வரி) திருமதி செ.செல்வ பிரியா, விருதுநகர் மாநில வரிகோட்ட அனைத்து தலைமை அலுவலர்கள், சிறு, குறு வணிகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்

Aug 02, 2025

அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பு பயில சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (01.08.2025) கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில சேர்க்கை ஆணை பெற்ற சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் அழகுமாரி மற்றும் நாகரஞ்சனி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் கணேஷ்குமார் ஆகிய 3 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என் ஓ.சுகபுத்ரா.I A S. , அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

Aug 02, 2025

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகைக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்குwww.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம்.             தெளிவுரைகள் மற்றும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் இயங்கிவரும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், 04562 - 244 707  என்ற தொலைபேசி எண்ணிலும்,adfisheriesvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. , அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 01, 2025

நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (31.07.2025) தோட்டக்கலைத்துறை மற்றும் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து செயல்படுத்தும் நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியைத் தாங்க வல்ல வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பருவமழைக்கு முன்பாக அதிக அளவிலான இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய  ஊட்டச்சத்து மிகுந்த பழப்பயிர்களான சீத்தா, நாவல், நெல்லி, மாதுளை, சப்போட்டா, விருசம்பழம், களாக்காய், பால்சா, மல்பெரி, வன்னி மரம், விளாம்பழம், வில்வம், முள்சீத்தா, மேற்கு இந்திய செர்ரி ஆகிய 14 வகையான வறண்ட நிலப் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட உள்ளது.இது பருவ மழை தொடங்கிய உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் நடவு செய்வதற்கான ஒரு முன்னெடுப்பு நிகழ்வாகும்.அதிக வருமானம் தரக்கூடிய நமது மாவட்டத்திற்கு உகந்த வறட்சியை தாங்க வல்ல இப்பயிர்களை விவசாயிகள் தங்கள் நிலத்திலும் நடவு செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளை வழங்கினார்.இந்நிகழ்வில், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.சூ.சுபாவாசுகி, தோட்டக்கலை இணைப் பேராசிரியர் திரு.ப.பாலசுப்பிரமணியன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

1 2 ... 88 89 90 91 92 93 94 ... 140 141

AD's



More News