விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் (29.12.2025) அரசுப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (BE / BTech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு (JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுசுபுத்ரா, I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலும், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் அவர்களின் முன்னிலையிலும் எதிர்வரும் 30.01.2026 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை 05.01.2025 முதல் 09.01.2026-ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், எதிர்வரும் 05.01.2026-அன்று நடைபெறவுள்ள மேற்படி 4 நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்: 228, இரண்டாம் தளம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கூரைக்குண்டு, விருதுநகர் – 626002 என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04562-244707 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது adfisheriesvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்,I A S., அவர்கள் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம். பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.இன்றைய தினம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம்,என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவில்லிபுத்தூர் லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பெறப்படும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடாத வகையில், அரசு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்தவாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான வாக்காளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பங்கள் அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மாவட்ட தேர்தல் அலுவலருடன் இணைந்து தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக வரப்பெற்ற விண்ணப்பங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி , சிவகாசி சார் ஆட்சியர் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2025 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம். பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு. ஏ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (28.12.2025) காலை 9 மணி முதல் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்யவுள்ளார். மேலும், மதியம் 03.00 மணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு செய்யவுள்ள 28.12.2025 ஞாயிற்றுக் கிழமையன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக கருத்துக்கள் அல்லது குறைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் இவரிடம் நேரிலோ அல்லது 7358150776 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம்அளிக்கலாம். மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 -ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.மேலும், இந்த விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முத்துராமலிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா நாயக்கன்பட்டி இந்து நாடார் சத்திரிய வித்யாசாலா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் (27.12.2025)வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதைமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2025 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம். பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.அதன்படி, (27.12.2025) மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.அருப்புக்கோட்டை வட்டம், தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முத்துராமலிங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா நாயக்கன்பட்டி இந்து நாடார் சத்திரிய வித்யாசாலா தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் இன்று(27.12.2025)வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றதைமாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம்அளிக்கலாம். மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 -ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும்.இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம்.எனவே, இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பங்களை அளித்து, தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறுமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் திரு.மா.வள்ளலார்,I A S., அவர்கள் இன்று(26.12.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு சட்டப் பேரவைவிதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மையங்களில் பல்வேறு கட்டங்களாக புதிய வீடுகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தை, காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, புதிதாக கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளையும், சாலை மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.மேலும் முகாமில் உள்ள அடிப்படை வசதிகள், வழங்கப்படும் குடிநீர் மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் குறித்து, முகாம் வாழ் தமிழர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், தனி வட்டாட்சியர்(அயலகத் தமிழர் நலன்) திருமதி கார்த்திகேயினி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.மேற்படி இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை 19.12.2025 (வெள்ளி) முதல் 18.01.2026 (ஞாயிறு) வரை வரை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம்.மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிறுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிறுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இன்று(26.12.2025) அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், சிறந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, இந்திய அளவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த உண்டு உறை விட பயிற்சியானது 15 நாட்கள் வரை வழங்கப்படும். மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் இப்பயிற்சி வகுப்பிற்கு வந்திருக்கலாம். போட்டி என்பது இங்கிருக்கும் உங்களுக்குள் அல்லாமல் போட்டித் தேர்விற்கு தயாராகும் அனைவருடனான ஒரு போட்டியாக இருக்க வேண்டும்.மாணவர்கள் பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு தங்களுக்குள்ளே கலந்துரையாட வேண்டும். நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.இன்றைய காலத்தில் நாம் அறியாமலே பல்வேறு கல்லூரிகள் உள்ளன. அக்கல்லூரிகளில் நுழைவதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் பல்வேறு அரசுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார்படுத்தி கொள்வது? எவ்வாறு விண்ணப்பிப்பது போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.ஒரு பாடத்தில் எவையெல்லாம் முக்கியமான தலைப்புகள் என்று ஆராய்ந்து படிக்க வேண்டும். இனிவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானவை. மேலும், மாணவர்களுக்கு தேவையான உரிய வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.இதனை உரிய வழியில் பயன்படுத்தி மாணவர்களாகிய நீங்கள் பயனடைய வேண்டும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தினை உணர்ந்து இப்பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் பயிற்சியினை வழங்கலாம். ஆனால், மாணவர்களாகிய நீங்கள் நல் ஒழுக்கத்துடன் நன்றாக படிக்க வேண்டும். மாணவர்களின் இந்த நேரம் தான் தங்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே மாற்றக்கூடிய தருணம். மதிப்பெண்களை பொறுத்து மாணவர்கள் எதிர்பார்த்த கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் அமையும். எனவே, மாணவர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார். அரசுப்பள்ளியில் பயிலும் எங்களுக்கும், இந்திய அளவிலான தலைசிறந்த கல்லூரிகளில் பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், அதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகளையும் வழங்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்ஃபான், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் 80 அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கில் (24.12.2025) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக நடைபெற்ற ஆதார், பிறப்பு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு துவக்கம் உள்ளிட்ட அரசு சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.அதன்படி, இம்முகாமில் அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள 29 குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ்களும், 26 நபர்களுக்கு பிறப்பு சான்றிதழ்களும், 5 நபர்களுக்கு ஆதார் அட்டைகளும், 5 நபர்களுக்கு வங்கி கணக்குகளும் என மொத்தம் 65 நபர்களுக்கு அரசு சேவை உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர், மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்க்கப்பட்டது.மேலும், அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, மாவட்ட குழந்தை நல அலுவலர் திருமதி இல.மீனாட்சி, குழந்தைகள் இல்லங்களில் உள்ள சுமார் 160 குழந்தைகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.