25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 01, 2026

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-ணை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் (First Level Checking) நடைபெற்றுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுபுத்ரா.I A S., அவர்கள்  (31.12.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Dec 31, 2025

திருச்சுழி வட்டாரப்பகுதிகளில் அரசின் பல்வேறுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

விருதுநகர்மாவட்டம்,திருச்சுழிவட்டாரப்பகுதிகளில்அரசின்பல்வேறுத்துறைகள்மூலம்செயல்படுத்தப்பட்டுவரும்நலத்திட்டங்களை(30.12.2025)செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.அதன்படி, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மசாலா தயாரிப்பு தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.          தொடர்ந்து, திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உற்பத்தி பொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்ய ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வட்டி மானியத்தில் வாங்கப்பட்ட சரக்கு வாகனத்தினையும், திருச்சுழி வட்டம் குலசேகரநல்லூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.          பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சென்னிலைகுடி ஊராட்சியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் 2023-2024-ம் ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, புதிய வீடுகளை பார்வையிட்டார்.இந்த செய்தியாளர் பயணத்தின் போது திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 31, 2025

களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (30.12.2025) வழங்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் 'நல்லோசை களமாடு' பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.அதன்படி, மாவட்டத்தில், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, இசைக் கருவி இசைத்தல், ஓரங்க நாடகம், ஓவியம், பிரசுரங்கள் உருவாக்குதல், கவிதை, கதை எழுதுதல், கேரம், சதுரங்கம், குழு விளையாட்டுப் போட்டிகளாக பூப்பந்து, கைப்பந்தாட்டம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.அதன்படி, களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் (30.12.2025) வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சாந்தி,  அரசு அலுவலர்கள், சமூக நீதி விடுதிகளைச் சேர்ந்த 186 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Dec 31, 2025

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026-க்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதன் ஒரு கட்டமாக கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் இதற்கான விண்ணப்பங்களை அளிக்க இயலும்.பொதுமக்கள் இவ்விண்ணப்பங்களை எளிதில் அளிப்பதற்காக கடந்த 27.12.2025, 28.12.2025 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக மாவட்டம் முழுவதுமாக 16,270 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மீண்டும் 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.தற்போது 18 வயதினைப் பூர்த்தி செய்திருக்கும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ மாணவியர்களிடமிருந்து இம்முகாம்களில் படிவங்கள் மற்றும் ஆவணங்களைப் பெற்று அந்த இடத்திலேயே தேர்தல் ஆணைய வலைதளத்தில் படிவத்தைப் பதிவேற்றம் செய்யப்படுகிறது.29.12.2025 அன்று திருச்சுழி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருச்சுழி தொகுதியில் பெயர் சேர்ப்பதற்காக 40 படிவங்கள் பெறப்பட்டது. 30.12.2025 சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றிலும், ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள் கல்லூரி, என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாத்தூர் மேட்டமலையில் உள்ள கிருஷ்ணசாமி கலை மற்றும்  அறிவியல் கல்லூரி, பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றிலும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2008 அல்லது அதற்கு முன்னர் பிறந்துள்ளவர்கள் (01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள்), தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை அளிக்கலாம். அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தாலோ, அல்லது ஒரே தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம் அளிக்கலாம்.மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் (2.1.2008 முதல் 01.11.2008 வரை பிறந்துள்ளவர்கள்) தற்போதே படிவம்-6-ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.மேலும், இந்த விண்ணப்பங்களை சிறப்பு முகாம்களில் மட்டுமல்லாமல், 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.eci.gov.in  என்ற வலைதளத்தின் மூலமும், Voters Helpline என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும் ஆன்லைன் விண்ணப்பமாக பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 30, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் (29.12.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.           இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்த சாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கு ரூ.2.23 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களையும், விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு துறையின் சார்பில், 4 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.மேலும், உலக மாற்றுத்திறனாளிகள் தினம்-2025ஐ முன்னிட்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.16,500/- பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.           மேலும், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் கங்காரக்கோட்டை, இ.மேட்டுர் கிராம ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து தீ விபத்து காரணமாக பணியிடை மரணமடைந்த திருமதி முத்துமுனியம்மாள் என்பவரின் வாரிசுதாரரான கணவர் திரு.மூக்காண்டி என்பவருக்கு முதலமைச்சரின் நிவாரண  நிதியிலிருந்து வரப்பெற்ற தொகை ரூ.1 இலட்சத்திற்கான காகோலையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிரதெளஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 30, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மருளுத்து கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மருளுத்து கிராமத்தில் (29.12.2025) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து  காக்கும் வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 29.12.2025 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.    கோமாரி நோய் ஒருவைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாகும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் பகுதிகளில் புண்களும், காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை ஆகிய அறிகுறிகளோடு சினையுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதோடு, சினையின் தன்மை குறைந்து காணப்படும். இந்நோய் கொடிய தொற்று நோயாகும்.  காற்று மூலம் பரவுவதோடு ஒரு பண்ணையில் ஒரு மாட்டிற்கு காணப்பட்டால் அனைத்து கால்நடைகளுக்கும் உடனடியாக பரவ நேரிடும்.இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்திதிறன் அதிக பாதிப்பு ஏற்படும்.  கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடைவளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.       இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினைபிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கிவரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடைவளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின்  சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.     மேலும், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 58 குழுக்கள் அமைக்கப்பட்டு, 21 நாட்களுக்கு தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தடுப்பூசிப் பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத  சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.                 எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முன்அறிவிப்போடு நடைபெறும் கோமாரி நோய் முகாமில் தடுப்பூசியை தங்களது கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக,  பயனாளிகளுக்கு தீவன புல்கரணைகள், கால்நடைகளுக்கு உரித்தான தாது உப்பு கலவையையும் வழங்கப்பட்டது.இம்முகாமில், கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எட்வின் ஜேம்ஸ், துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபி விருத்தி) மரு.கார்த்திக், உதவி இயக்குநர்(விருதுநகர்) மரு.பழனிசாமி, உதவி இயக்குநர்(கால்நடை புலனாய்வுப் பிரிவு) மரு.அரவிந்தன், கால்நடை மருத்துவப் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Dec 30, 2025

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு,மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில், கலசலிங்கம்  பல்கலைக்கழகத்தில் (29.12.2025) அரசுப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (BE / BTech) சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு (JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுசுபுத்ரா, I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார்.

Dec 30, 2025

மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலும், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் அவர்களின் முன்னிலையிலும் எதிர்வரும் 30.01.2026 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை 05.01.2025 முதல் 09.01.2026-ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.

Dec 30, 2025

பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், எதிர்வரும் 05.01.2026-அன்று நடைபெறவுள்ள மேற்படி 4 நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்: 228, இரண்டாம் தளம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கூரைக்குண்டு, விருதுநகர் – 626002 என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04562-244707 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது adfisheriesvnr@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

Dec 29, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்,I A S., அவர்கள் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு  மேற்கொண்டார்.2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கணக்கெடுப்புப் பணி முடிக்கப்பட்டு கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க வேண்டியவர்கள் 19.12.2025 முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்கள் அளிக்கலாம். பொதுமக்கள் இம்மனுக்களை எளிதில் அளிப்பதற்காக 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்   நியமிக்கப்பட்டுள்ளார்.இன்றைய தினம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம்,என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவில்லிபுத்தூர் லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் /சென்னை தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பெறப்படும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய   நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடாத வகையில்,  அரசு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்தவாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும்  திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான வாக்காளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பங்கள் அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளுமாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மாவட்ட தேர்தல் அலுவலருடன் இணைந்து தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும்  திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக வரப்பெற்ற விண்ணப்பங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது  மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி , சிவகாசி சார் ஆட்சியர் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 52 53 54 55 56 57 58 ... 140 141

AD's



More News