விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசு வைத்தான்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (12.02.2025) நடைபெற்றது.இம்முகாமில், 42 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ரூ.45,73,658/- மதிப்பிலும், 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா 9,67,895/- மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.39,500/- மதிப்பிலும், தோட்டக்கலைத் துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.7385/- மதிப்பிலும், 13 பயனாளிகளுக்கு ரூ.13,00,000/-மதிப்பிலான விபத்து நிவாரண தொகைகளையும், 18 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 132 பயனாளிகளுக்கு ரூ.68.88 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஒரு பெண்ணுக்கு உண்மையான வலிமை என்பது நிறைய சுதந்திரம் இருக்கலாம். பெண்ணிற்கு கல்வி கற்பதற்கான முழு சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் இப்படி எத்தனை சுதந்திரம் இருந்தாலும், பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் தான். தன்னுடைய பொருளாதாரத்திற்கு மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது. புதிய பயிற்சிகளை பெற்று, கடனுதவிகள் பெற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறக்கூடிய பொருளாதார வலிமை மிகுந்த பெண்களாக நமது பெண்கள் இருக்க வேண்டும்.மேலும், கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.20 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலமாக பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தொழிற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று பல்வேறு துறைகளின் சார்பாக அதிகமான கடன்களையும் வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களுக்கு தொடர்ச்சியாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடனை பெற்று நீங்கள் அனைவரும் அதனை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் கடனை பெற்று அதனை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்று, கடனையும் அடைத்து, வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்ள வேண்டும்.தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.ஒரு குடும்பத்திற்கு அவர்கள் வழங்கக்கூடிய பரிசு என்பது அவரது உடல்நலம் தான். ஒருவருடைய உடல்நலத்தை சிறப்பாக பேணிக்காத்து கொள்ள வேண்டும். 30 வயது கடந்த உடன் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசினுடைய மருத்துவத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே அதிகப்படியான பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ஒரு மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உடல் நிலையும், மன நிலையும் ஒரு குழந்தையை சுமக்கக் கூடிய அளவில் இல்லை.அதனால் பிறக்கக்கூடிய குழந்தைகள் குறைப்பாட்டுடன் பிறக்கிறார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரும்புச்சத்தின் அளவும் குறைவாக தான் உள்ளது. எனவே குழந்தை திருமணத்தை அனைவரும் சமூகமாக சேர்ந்து அவற்றை எதிர்க்கொள்ள வேண்டும்.மேலும், நமது பகுதியில் அதிகமான இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகமான போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஒவ்வொரும் தொழில் முனைவோராக ஆக வேண்டும். நமது மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் மிக அதிகமான சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செய்யக்கூடியதில் ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் அனைத்து இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவி வழங்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, வட்டாட்சியர் திரு.பாலமுருகன் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் ஒன்றிய அரசு வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் பதிவு விவரம், நில உடமை வாரியாக புவியிடக்குறியீடு செய்த பதிவு விவரம் ஆகிய 3 விவரங்களும் முக்கியமானவை ஆகும். இதில் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் திட்டமானது, ஒன்றிய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி மாநில முழுவதுமாக செயல்படுத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மின்னணு முறையில், அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம்.ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிதில்லை. அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டஙகள் பெற்றுக்கொள்ள முடியும். பிரதமரின் கௌரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தற்போது ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று அறுபத்து நான்கு விவசாயிகள் பிரதமரின் கவுர நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் பதிவு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டத்தின் மூலம் தரவுகளையும் சரிபார்த்து அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் 601 வருவாய் கிராமங்களிலும் ஊராட்சி அலுவலகங்களில் 10.02.2024 முதல் 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுநர்கள் வருகை தந்து, தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர்.எனவே விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு வந்து அடையாள எண் பதிவு செய்ய தங்களின் விவரங்களை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) படி வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப அட்டைகளான PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மற்றும் இதர குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் 12.02.2025 முதல் 15.02.2025 வரை தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்யலாம்.மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடை POS இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (10.02.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,79,432 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மனித உடல் இயங்க வேண்டும் என்றால் அதிகமான சத்துக்கள் வேண்டும். மனிதனுடைய உடல் கட்டமைப்பு புரதச்சத்;துக்களில் தான் வருகிறது. நமது உடல் எடையை பொறுத்தமட்டில் ஒரு கிலோ எடைக்கு சுமார் 1 கிராம் புரத சத்து உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். நம்முடைய உடலுக்கு தேவையான புரதச்சத்தை விட குறைவாக நாம் பெறும் போது தான் உடல் வலிமை குறைகிறது.இந்நிலையில் நம்முடைய வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் ஒட்டுண்ணியாக செயல்பட்டு, நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளும்.சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது குடல் ஆரோக்கியம் தான். நம்முடைய கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கால இடைவெளியிலும் இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலமாக உடல் ஆரோக்கியமும், குடல் ஆரோக்கியமும் பெற முடியும்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மிகை புழக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், அரிசி குடும்ப அட்டைகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்று குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY), முன்னுரிமை அற்ற அரிசி ,குடும்ப அட்டைகள் (NPHH(R)) ஆகியவற்றை விருப்பமுடைய தன்னார்வலர்கள், 15.02.2025 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், விண்ணப்பப் படிவங்கள் கொடுத்து முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டையாகவோ (NPHH-S) அல்லது எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளாகவோ (NPHH-NC) மாற்றலாம். விருப்பமுடைய, தன்னார்வலர்கள் இம்முகாமை பயன்படுத்தி பொது விநியோக திட்டம் பயன்பாடு சரியான முறையில் தேவைப்படும் மக்களுக்கு சென்றைடைய முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வீ.ப.ஜெயசீலன் , I A S,அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் எடுத்து வரப்படுகின்றன. குறிப்பாக தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சமூக ஊடகங்களில் போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகின்ற நிலையில், மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது போன்ற போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடிய மிட்டாய் வகைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தில் எந்தவொரு வணிகராவது இதுபோன்ற மிட்டாய் வகைகளையோ அல்லது போதைப்பொருள் கலந்துள்ள உணவுப்பொருட்களையோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அந்த கடையின் வணிகம் நிறுத்தப்பட்டு, அபராதம் விதித்து வழக்குகள் தொடரப்படும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டால், வழக்குகள் முடியும்வரை கடைகள் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரிக்கப்படுகிறது.தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 01.01.2024 முதல் 31.01.2025 வரை 430 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டும், ரூ.1,13,91,000/- (ரூபாய் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரம்) அபராதம் விதிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள், இம்மாதிரியான வித்தியாசமான வகையில் சந்தேகத்திற்குரிய மிட்டாய் அல்லது சாக்லேட் வகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது 04562-225255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.02.2025) செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் வழங்கும் தமிழி மொழிநுட்ப நிரலாக்கப்போட்டி குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார்.வளரும் தமிழ் மொழிநுட்பத் தேவைகளை ஈடு கொடுத்துப் புதிய படைப்புகளை உருவாக்க, செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள் முன்னெடுப்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் இணைந்து தமிழி என்ற நிரலாக்கப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.திரள் தளத்துடன் ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN)- உடன் வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி, தமிழ் அநிதம், சிஐஎஸ்-ஏ2கே போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நடக்கும் இந்தத் தமிழ் மொழிநுட்ப நிரலாக்கப் போட்டியில் மாணவர்களும், மொழி வல்லுநர்களும், தொழில்முனைவோர்களும் கலந்து கொள்ளலாம்.சந்தைப்படுத்தக் கூடிய புத்தாக்கச் சிந்தனை தரும் போட்டியாளர்களுக்குப் படைப்புகளை வளர்த்தெடுக்கத் தேவையான ஊக்கத் தொகையும் அது சார்ந்த தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும். மேலும் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வழிகாட்டுதல்களும் பயிற்சியும் வழங்கப்படுவதால் தமிழில் தொழில்நுட்பப் புத்தாக்கங்களை உருவாக்கிச் சாதனை படைக்கலாம்.எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள், மொழி வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் http://form.startuptn.in/TLTH என்ற கூகுள் படிவத்தினை 02.03.2025-க்குள் நிரப்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 78452-50039(தனபிரகாஷ்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப் டிஎன் (Startup TN) மதுரை வட்டார மைய அலுவலர் திரு.க.சக்திவேல், திரள் தளத்தின் சார்பாக திரு.நீச்சல்காரன் இராஜாராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலாசுப்பையா திருமண மண்டபத்தில்(08.02.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S..,அவர்கள் தலைமையில்விழா நடைபெற்ற விழாவில், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அரசின் திட்டங்களைமக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.அறிவிக்கப்பட்டஅரசதிட்டபயன்களைசாதாரணமான ஏழைஎளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று சொன்னால் அதற்கான முழு ஆதரவும், முனைப்பும் அரசு அலுவலர்களிலேயே இருந்திட வேண்டும் அமைச்சர்.அதன்படி, இன்று நடைப்பெற்ற விழாவில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.12.16 இலட்சம் மதிப்பிலான நத்தம் இலவச வீட்டு மனைபட்டாக்களும்,ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.44.57இலட்சம் மதிப்பிலான மின்னணு பட்டாக்களும்,120 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டைகளும்,102 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1இலட்சம்மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும்,56 பயனாளிகளுக்கு ரூ.45.40 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண தொகைகளும், தோட்டக்கலை துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.2இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 198பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்ட அடையாள அட்டைகளும், வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.9700 மதிப்பில் இயற்கை உரம்மற்றும் மரக்கன்றுகளும் எனமொத்தம் 603 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தனி நபர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடிப்படை வசதியான குடிநீர், சாலை, போக்குவரத்து,பள்ளிகள், சுகாதாரம், தெருவிளக்குகள், மழை நீர்வடிகால் வசதிகள்,உதவித்தொகைகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், குடியிருப்பை உறுதி செய்யும் வகையில் பட்டாககள் உள்ளிட்ட திட்டங்களும் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது..காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு மிகப்பெரிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு இந்த இரண்டு பேரூராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் முழு அளவில் வழங்கப்படும்.விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய இப்பகுதி மக்களுக்கு கம்பிக்குடிகால்வாய் திட்டத்தை சுமார் 18 கிலோமீட்டர் நீளத்திற்கு தனியாக கால்வாய் அமைக்கக்கூடிய பணிகளுக்கு ஏறத்தாழ ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நில எடுப்பு பணிகளை தொடங்கி இருக்கிறோம். .மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:விருதுநகர் மாவட்டத்தில் பலஇடங்களில் பொது கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அமைச்சர் அவர்களின் தொடர் முயற்சியால் குடிநீர், சாலை போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுவந்தாலும், தனி மனிதர்களுக்கு, ஒவ்வொரு நபர்களுக்கும் அரசனுடைய திட்டங்கள் நேரடியாக சென்று சேர வேண்டும். அதுவும் குறிப்பாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களாக இருக்கக்கூடிய நிதியுதவி திட்டங்களாக இருந்தாலும் சரி,பட்டா வழங்குவது உள்ளிட்ட உரிமைகளுக்கான திட்டங்களாக இருந்தாலும் சரிஅவற்றையெல்லாம் நேரடியாக சென்றுவழங்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை நமது மாவட்டத்தில் நடத்தி இருக்கிறோம்.அரசினுடைய கலைஞரின் கனவுஇல்லம் என்ற வீடுகட்டும் திட்டம் இருக்கிறது.ஆனால் வீடு கட்டும் திட்டத்திற்கு முன்பாக அனைவருக்கும் பட்டாக்களை வழங்க வேண்டும்.என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நமதுமாவட்டத்திற்கு வருகை தந்த போது ஏறத்தாழ 41 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் உள்ளிட்ட வீடு நில உரிமைக்கான ஆணைகளைவழங்கினார்.திருச்சூர், காரியாபட்டி நரிக்குடி போன்ற ஒன்றியங்களில்இன்னும் நிலங்களை தேர்வு செய்து பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்க வேண்டும் என்பதற்காக தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. நமது பகுதியில் தான்முதன்முதலாக நரிக்குறவர் இனமக்களுக்கு புதிதாக வீடுகளை கட்டி அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம். அதேபோன்று திருநங்கைகளுக்கு பட்டாக்களை வழங்கி வீடுகள் கட்டக்கூடிய திட்டத்தின் மூலமாக அவர்களுக்கும் வழங்கி இருக்கின்றோம். இப்படி சமூகத்தினுடைய எந்தஒரு பகுதியினரையும், பிரிவினரையும் விட்டுவிடக்கூடாது என்பதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறோம்.தொடர்ச்சியாக நிறைய பேருக்கு கலைஞர் காப்பீடு திட்டம் என்ற ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்குகிறோம்.அமைச்சர் பெருமக்கள் அவர்களின் அறிவுரையின் படி,மருத்துவ காப்பீடு அட்டைக்கான முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று நடத்தி மருத்துவ காப்பீடு அட்டை யாருக்கு இல்லையோ அவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்று மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி இருக்கின்றோம். அரசு அலுவலர்கள் இன்னும் விரைந்து செயல்பட்டு அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு கண்டு, உரியகாலகட்டத்திற்குள் அந்தபயன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று(08.02.2025)இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலை கி.மீ.2/0லிருந்து (மா.நெ.சாலை-41) (இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம்) திருமங்கலம் கொல்லம் 1600 கி.மீ.66/8 வரை (தே.நெ.744) (இராஜபாளையம் அரசு மருத்துவமனை) இணைப்புச்சாலை ரூ.38.24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:இந்த இணைப்பு சாலை பணிக்கு ரூ.30.00 கோடியும், நில எடுப்பிற்காக ரூ.8.34 கோடியும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மொத்தம் ரூ.38.34 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இச்சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்கள் அனைத்தும் வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இப்பணி விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது.இராஜபாளையம் நகரமானது வளர்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இந்நகரத்தில் பின்னலாடைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையத்தின் புதிய பேருந்து நிலையம் இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால்,மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளில் சென்று வருகிறது. அவ்வாறு வருவதால், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்த வண்ணம் உள்ளது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலையை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சாலைப்பணிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கிய காரணத்தினால் இப்பணி செயலாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலைப்பணி அனைத்தும் முடிந்தவுடன், திருநெல்வேலி, சங்கரன்கோவில், இராஜபாளையம், மதுரை, தென்காசி, கொல்லம் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனத்தும் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தா வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புதிய சாலை வழியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இராஜபாளையத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டம் 1988 G.O.Ms.No.33, நாள் 23.01.2025-ன் படி பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:1. அதிகபட்ச தூரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.2. குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் ((Unserved Route Length) சாலையில் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.3. தொடக்கப்பள்ளி/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.4. முனைய புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டு தளங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் பிராந்திய போக்குவரத்து ஆணையம்/மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, அதாவது மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.5. பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.6. மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்துகள் Wheel Base 390cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும்7. நிலைப்பேருந்து அல்லது மினி பேருந்து மூலம் வழிதடத்தின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத வழித்தடமாக கருதப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 2024-இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள,; தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் 10.02.2025க்குள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.