.தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DVAC)044-22321090 / 22321085044- 22310989/ 22342142லஞ்சமில்லா தமிழகம்.நேர்மையான தமிழகம்.உங்கள் புகார் ரகசியமாக வைக்கப்படும்.லஞ்சம் கொடாதீர்.லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள்.உங்கள் அடையாளம் பாதுகாக்கப்படும்.நாம் ஒன்றுபட்டால் லஞ்சமில்லா தமிழகம் உருவாகும்.
விருதுநகர் மக்களே, மத்திய அரசின் Ayushman Bharat (PMJAY) திட்டத்தின் கீழ் ஆண்டு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.எப்படி விண்ணப்பிப்பது?*pmjay.gov.inஇணையதளத்தில் ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.*விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பு முடிந்து "கோல்டன் கார்டு" வழங்கப்படும்.*அருகிலுள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
ஈரான்-அமெரிக்கா பதற்றம் மற்றும் மத்திய கிழக்கு போர் சூழ்நிலையால் உலகளவில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியா பெரிய அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால்,பொருளாதார அழுத்தத்தை குறைக்க முன்னெச்சரிக்கை அவசியம்!மோடி சொன்ன 7 முக்கிய விஷயங்கள் ஒரு வருடத்திற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!தேவையில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்முடிந்தவரை வீட்டிவிருந்தே வேலை செய்யுங்கள் (Work From Home)பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் Public Transport பயன்படுத்துங்கள்.வெளிநாட்டுப் பயணம் தவிர்த்திடுங்கள்தேவையில்லாத இறக்குமதி பொருட்களை வாங்காமல் இருங்கள்அவசியமில்லாத செலவுகளை குறைந்து சேமிப்பை அதிகரியுங்கள்.இந்தியா என்ன பிரச்சனை சந்திக்கும்?கச்சா எண்ணெய் விநியோகம் எண்ணெய் கிடைப்பு குறையும் Dollar மதிப்பு உயரலாம் இறக்குமதி செலவு அதிகரிக்கும்இந்திய ரூபாய் மதிப்பு குறையலாம்பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும்பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம்மக்களின் செலவு அதிகரிக்கும்Inflation (விலைவாசி உயர்வு)பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும்வளர்ச்சி வீதம் பாதிக்கப்படும்வீட்டிலிருந்து வேலை செய்வது எப்படி?மக்கள் தினமும் office போனால்எரிபொருள் பயன்பாடுபோக்குவரத்துடீசல்/பெட்ரோல் நுகர்வுWFH இருந்தால் fuel save ஆகும். Online meetings, virtual work methods பயன்படுத்த சொல்லியிருக்கிறார்.தங்கம் வாங்க வேண்டாம் என்று சொன்னது ஏன்?இந்தியா அதிக அளவில் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து import செய்கிறது.பெரிய அளவில் மக்கள் தங்கம் வாங்கினால்,இந்தியாவின் Foreign Exchange Reserve குறையும்.அதிக Dollar வெளிநாட்டுக்கு போகும்.இந்திய பொருளாதாரத்தில் அழுத்தம் வரும்.அதனால்தான் ஒரு வருடத்திற்கு தேவையில்லாமல் தங்கம் வாங்காதீர்கள் என்று appeal மாதிரி கூறியிருக்கிறார்.அப்படின்னா போர் வரப்போகுதா?அப்படி official ah யாரும் சொல்லவில்லை.ஆனால் உலகஅரசியல் நிலைமை tension-இருக்கிறது. குறிப்பாக iran பகுதி மற்றும் Strait of Hormuz பகுதியில் பிரச்சினை வந்தால் எண்ணெய் supply பாதிக்கப்படும்.இந்திய அரசு இப்போதே மக்களை prepare பண்கிறது என்பதே experts கருத்து.முன்னெச்சரிக்கை இன்று... பாதுகாப்பான இந்தியா நாளை .
'இ-ஷ்ரம்' அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் முக்கிய திட்டமாகும். 16-59 வயதுக்குள், வருமானவரி செலுத்தாதவர்கள் இதில் சேரலாம். * விபத்து மரணம் ₹2 லட்சம் காப்பீடு. * ஊனம் ஏற்பட்டால் ₹1 லட்சம் உதவி. * 60 வயதிற்கு பின் மாதம் ₹3,000 பென்ஷன். ஆதார் மற்றும் வங்கி விவரங்களுடன் ஆன்லைனில் எளிதாக பதிவு செய்யலாம்.
உலகமே 5G வேகத்தில் பறக்கும் போது எரித்திரியா 18ஆம் நூற்றாண்டிலேயே உறைந்து கிடக்கிறது. உலகின் மிகக் குறைந்த இன்டர்நெட் பயன்பாடு கொண்ட நாடுகளில்எரித்ரியா முதலிடத்தில் உள்ளது. தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் அனைத்தும்அங்கு அரசு வசமே உள்ளன; சில நகரங்களில் வேக இன்டர்நெட் கஃபேக்கள்இருக்கும்; அதற்குக் கொடுக்க வேண்டிய கட்டணமோ அங்கு ஒருவர் வாங்கும் மாத சம்பளத்திற்கு இணையானது; இதனால் பெரும்பாலான மக்கள் இன்னும் இணையத்தைப் பயன்படுத்தியது கூட இல்லையாம். கூகுள் இல்லை.. இன்ஸ்டா இல்லை!.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, தமிழகம் 2025-26 நிதியாண்டில் 10.83% என்ற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் (Real Growth Rate) பதிவு செய்துள்ளது. இது தேசிய சராசரி வளர்ச்சியான 7.4%-ஐ விட மிக அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GSDP) ₹35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-26) மாநிலத்தின் சராசரி வளர்ச்சி 9.07 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் சராசரியை (5.21%) விட மிகப்பெரிய முன்னேற்றமாகும். மேலும், தமிழகத்தின் தனிநபர் வருமானம் தற்போது ₹4.08 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், El Nino எனப்படும் குறைவான மழைப்பொழிவைக் குறிக்கும் கால நிலை மாற்றம் ஏற்படக்கூடும் என்றுWorld Meteorological Organisation கணித்துள்ளது. இந்த மாற்றம், பருவமழையின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே-ஜூலை மாதத்திலேயே உருவாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் "இயல்பை விட குறைவான" பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது.
சுமார் 60 மீட்டர் நீளம் 40 மீட்டர் அகலம் கொண்ட தேசிய கொடியை அந்தமான் நிகோபாரின் ஸ்வராஜ் தீவில் கடலுக்கு அடியில் விரித்து சாதனைசுமார் 400 ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கொடியை விரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
சகதி, பனி, மலைகள் போன்ற கரடுமுரடான பாதைகளில், அசால்ட்டாக இயங்கும் LYNX M205 என்ற புதிய தலைமுறை ரோபோவை, அறிமுகம் செய்து சீனாவின் DEEP Robotics அசத்தல்!35 கிலோ எடையைச்சுமந்து செல்லும் திறனுடைய இது, தீயணைப்பு, நிலநடுக்க மீட்புப் பணிகள், மின்சார வாரியச் சோதனைகள் போன்ற ஆபத்தான இடங்களில் வேலை செய்ய உதவியாக இருக்கும் என தெரிவிப்பு.
மேகமூட்டம், இருளையும் ஊடுருவிப் பார்த்து, பூமியைத் துல்லியமாக படம் பிடிக்கும் உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியாவின் GalaxEye ஸ்டார்ட்-அப் நிறுவனம்!அமெரிக்காவில் SpaceX Falcon 9 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின்பாதுகாப்பு, விவசாயம், பேரிடர்களின்போது தெளிவான படங்களை வழங்க பெரிதும்உதவும் என எதிர்பார்ப்பு.