25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 23, 2026

நிலவில் தண்ணீர்.! அப்டேட் தந்த சந்திரயான்-2..

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO-வின் சந்திரயான்-2 விண்கலம், நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து சாதனை.. நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் பெருமளவிலான நன்னீர் இருப்பதை உறுதி செய்தது இந்த விண்கலம்.. மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வரும் வேளையில், இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது..

May 23, 2026

விண்வெளியில் மிதக்கும் வைர மழை!

நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களின் வளிமண்டலந்தில் நிலவும் அதீத அழுத்தம் காரணமாக, அங்குள்ள கார்பன் அணுக்கள் இறுகி வைரங்களாக மாறுகின்றன. இதனால் அந்த கிரகங்களில் உண்மையாகவே வைர மழை பொழிகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். விண்வெளியின் விந்தைகள் என்றும் வியப்பானவை!

May 23, 2026

விரைவில் வானத்தில் இரண்டு சூரியன்கள் தோன்றும்.

பெட்டெல்ஜபூஸ் (Betelgeuse) நட்சத்திரம் தனது கடைசி மூச்சுகளை எடுத்து வருகிறது. அது வெடிக்கும் போது, பூமியில் 15 நாட்கள் வரை இரவு இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒளி உருவாகும். இது நமது வாழ்நாளில் நடைபெறும் மிகப்பெரிய பிரபஞ்ச அதிசயமாக இருக்கும்! அப்போது வானத்தில் இரண்டு சூரியன்கள் தோன்றுவது போல் காட்சியளிக்கும்.

May 23, 2026

முதலமைச்சருடன் தொடர்பு கொள்ள :...

முதலமைச்சருடன் தொடர்பு கொள்ள :' வாட்சப் எண் : 7845252525 தொலைபேசி : 044-25672345 ஹெல்ப் லைன் எண் : 1100 இமெயில் : cmhelpline@tn.gov.in வலைத்தளம்  : cmhelpline.tn.gov.in

May 23, 2026

தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை திட்டம்.

"மக்களின் நலனே என் இலட்சியம் “ ஒரு குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரைஇலவச சிகிச்சை! இந்த அட்டை வழங்கும் நன்மைகள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை. குடும்பத்திற்கே முழுமையான  மருத்துவ பாதுகாப்பு. அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருத்துவமனை அனுமதி போன்றவை அடங்கும். பணம் செலவில்லாமல் தரமான சிகிச்சை பெறலாம். பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்.ஆதார் அட்டைகுடும்ப அட்டைவருமான சான்றுமொபைல் எண்இப்போதே பதிவு செய்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

May 22, 2026

த.வெ.க.  தலைமையிலான கூட்டணி அரசில் 23 புதிய அமைச்சர்களுக்கான துறைகள்

1 மீன்வளத்துறை-தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீ நாத்2 வனத்துறை-காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்3 பால்வளத்துறை-குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி4 கால்நடைத்துறை-அவிநாசி எம்.எல்.ஏ.கமலி5 வேளாண் துறை-கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்6 சுற்றுச்சூழல்துறை-திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ்7 வீட்டுவசதித்துறை-கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்8 கூட்டுறவுத்துறை-அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்9 சிறு,குறு, நடுத்தர தொழில்துறை- ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன் ராஜா------------------------------------------------------------------------------------------------10 சமூகநலன், மகளிர் நலத்துறை-ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி--------------------------------------------------------------------------------------------------11 சுற்றுலாத்துறை-கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்12 கைத்தறி, ஜவுளித்துறை-ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி13 வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை -ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்14 போக்குவரத்து துறை-சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பிரபாகரன்15 இந்து சமய அற நிலையத்துறை-ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ்16 உயர் கல்வித்துறை-மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பி.விஸ்வநாதன்17 ஏ.ஜ., தகவல் தொழில்நுட்பத்துறை-வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்18 வெளிநாடுவாழ் தமிழர் நலன்-ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு19 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை-கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்20 தொழிலாளர் நலத்துறை-அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்21 மனிதவளத்துறை-தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்22 நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை-ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மரிய வில்சன்23 மதுவிலக்கு மற்றும் கலால் துறை-கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. கே.விக்னேஷ்

May 22, 2026

வியர்க்குரு மறைய...

சோறு வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பு கலந்து உடம்பில் பூசி, ஊறிய பின் கழுவி வர அரிப்பு மற்றும் வியர்க்குரு மறையும். நுங்கு நீரை வியர்க்குரு, மேல் பூசி, வந்தாலும் மறையும். அரிசிமாவை உடல் முழுவதும் பூசி, கழுவி வந்தாலும் பலன் தெரியும் வசம்பைப் பொடியாக்கி ,தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி, வியர்க்குரு மற்றும் அரிப்பு உள்ள இடங்களில் பூசி வர, வியர்க்குரு மறையும்.சந்தனக்கட்டையை இழைத்து பன்னீரில் கலந்து பூசி வர வியர்க்குரு தொல்லை தீரும்.பயற்றம் பருப்பு மாவு மற்றும் கடலை மாவு இவற்றோடு சிறிதளவு வேப்பிலை பொடியைக் கலந்து உடம்பில் பூசி வர, வியர்க்குரு மறையும். கோடையில் இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை உடலுக்குள் செல்லும் காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. இதனால், அதிக அளவு வியர்வை மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

May 22, 2026

கடல் வழிவிடும் அதிசயம்! ஜிண்டோ பிளவு! இயற்கையின் பிரம்மாண்டம்!

தென் கொரியாவின் 'ஜிண்டோ அதிசயம்' என்பது கடல் இரண்டாகப் பிரிந்து, ஜிண்டோ மற்றும் மோடோ தீவுகளுக்கு இடையே மக்கள் நடந்து செல்லக்கூடிய ஒரு பாதையை வெளிப்படுத்தும் ஒரு அரிய இயற்கை நிகழ்வாகும்; சூரியன் மற்றும் நிலவின் ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசையினால் ஏற்படும் தீவிரக் கடல் உள்வாங்கலின் (extreme low tides) காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

May 22, 2026

வெயில் காலத்தில் 6 காய்கறிகள் சாப்பிடாதீங்க!!

கத்திரிக்காய், பூண்டு, குடைமிளகாய், பசலைக்கீரை, சர்க்கரை வள்ளி கிழங்கு, காலிஃபிளவர் ஆகியவை உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.

May 21, 2026

மறதி நோய்க்குக் காரணம். (Alzheimer's)

அல்சைமர் (Alzheimer's) எனப்படும் மறதி நோய், பெரும்பாலான மக்களிடம் ஏற்கனவே இருக்கும் ஒரு பொதுவான வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, வாயைச் சுற்றி கொப்புளங்களை ஏற்படுத்தும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்-1 (HSV-1) இந்த நோயுடன் நெருங்கிய தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் நமது நரம்பு மண்டலத்தில் நீண்ட காலம் உறக்க நிலையில் (Dormant) இருக்கும்போது, சிலருக்கு மூளையில் புரதக் கட்டிகள் (Amyloid plaques) உருவாகக் காரணமாகி, காலப்போக்கில் மறதி நோயைத் தூண்டுகிறது. 2026-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான ஆய்வுகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்கவோ அல்லது அதன் தீவிரத்தைக் குறைக்கவோ முடியும் என்ற புதிய நம்பிக்கையை விஞ்ஞானிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

1 2 ... 36 37 38 39 40 41 42 ... 131 132

AD's



More News