25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 18, 2026

நெட்வொர்க்கின் சூழலமைப்பை விரிவுபடுத்தவும், பயன்பாட்டை விரைவுபடுத்தவும் ONDC-யில் ஜோஹோ ₹70 கோடி முதலீடு செய்யவுள்ளது.

ஜோஹோவின் இந்த முதலீடு, மேலும் பல வணிகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க வழிவகுக்கும்.சென்னையைச் சேர்ந்த முன்னணிSaaS நிறுவனமான ஸோஹோ கார்ப்பரேஷன், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பில்(ONDC)₹70 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.ONDC என்பது இந்திய அரசின் ஒரு முன்முயற்சியாகும். இது மின்னணு வர்த்தகத்தை ஒரு தளம் சார்ந்த மாதிரியிலிருந்து, விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒருமுறை பட்டியலிட்டு, இணக்கமான அனைத்து செயலிகளிலும் அவை தெரியும்படி செய்யும் ஒரு திறந்த, ஒன்றோடொன்று இயங்கும் வலையமைப்பாக மாற்றுகிறது.ஸோஹோவின் இந்த முதலீடு, வலையமைப்பின் சூழலமைப்பை விரிவுபடுத்தவும், அதன் பயன்பாட்டை விரைவுபடுத்தவும் உதவும். இதன்மூலம், மேலும் பல வணிகங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க வழிவகுக்கும்.

May 18, 2026

விஜய்க்கு கூகுள் செய்த சம்பவம்.

ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் இருந்தால் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் விவரங்களை வருமான வரித்துறையிடம் எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுள்ளதாக தகவல்.

May 18, 2026

பேப்பர் கப்பில் டீ குடிக்கிறீர்களா.

டீ மற்றும் காபி குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் சூடான பானங்களை ஊற்றும் போது, அதில் உள்ள மெழுகு மற்றும்பாலிஎத்திலீன் பிளாஸ்டி துகள்கள் கரைந்து உடலுக்குள் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு 3 முறை இவ்வாறு பேப்பர் கப்பில் சூடான பானங்களை குடிப்பவர்கள், சுமார் 75,000 நுண் பிளாஸ்டிக் துகள்களை தங்களையறியாமலே உட்கொள்கின்றனர். இத்தகைய துகள்கள் உடலில் சேர்வதால் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு தீவிரமான உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

May 18, 2026

டெய்லி வாக்கிங் செய்வதால்....

1 நிமிடம் நடந்தால் ரத்த ஓட்டம் நல்லது. 5 நிமிடம் நடந்தால் மனம் அமைதியாகும். 10 நிமிடம் நடந்தால் டென்ஷன் குறையும். 15 நிமிடம் நடந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். 30 நிமிடம் நடந்தால் இதயம் வலுவாகும். 45 நிமிடம் நடந்தால் உடல் சோர்வு குறையும். 60 நிமிடம் நடந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

May 18, 2026

அதிக வெப்பம் தலைசுற்றலை ஏற்படுத்துமா?.

கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாகும்போது ,மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து தலைசுற்றல் ஏற்படுகிறது. வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவதால், மயக்கம் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. போதிய அளவு தண்ணீர் குடிப்பது, மற்றும் நிழலில் ஓய்வெடுப்பது, இதைத் தவிர்க்க உதவும்.

May 16, 2026

‘AI பயனாளர்களுக்கு ,மூளை செயல்பாடு குறைகிறது!

அமெரிக்காவின் MIT நடத்திய ஆய்வில், AI-ஐப் பயன்படுத்திய 83% பேரால் சில நிமிடங்களுக்கு முன் எழுதிய ஒரு வாக்கியத்தைக் கூட நினைவில் வைக்க முடியவில்லை எனவும், ChatGPT பயன்படுத்துவோரின் மூளை செயல்பாடு 47% வரை குறைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் வேலைகளை 60% வேகமாக முடித்தாலும், கற்றலுக்கான (Cognitive Offloading) மனதளவு முயற்சி 32% குறைகிறதாம்!.

May 16, 2026

இனி டாலர் தேவையில்லை.

இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து தங்களது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ஒரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஒப்பந்தத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன. இதன்படி, மே 2026 முதல் இந்தோனேசியாவிற்கு வரும் சீனச் `சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டின்  'QRIS' குறியீட்டைப்  பயன்படுத்தும் எந்தவொரு வணிகரிடமும் தங்களது 'Alipay'செயலி  மூலம் நேரடியாகப் பணம் செலுத்தலாம். அதேபோல், சீனாவிற்குச் செல்லும் இந்தோனேசியர்கள் அங்குள்ள வணிகர்களுக்குத் தங்களது உள்ளூர் செயலிகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்த முடியும்.

May 16, 2026

சோலார் அமைத்துக்கொண்டால் ,மொட்டை மாடியில் இலவச மின்சாரம்.

"மத்தியஅரசு ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதாவது, ரூ.78,000 நேரடி மானியத்துடன் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டம் மூலம் நம் வீடுகளின் மொட்டை மாடியில் சோலார் அமைத்துக்கொண்டால்நம்முடைய மின் கட்டணத்தை 90% அளவுக்குக் குறைக்க முடியும்.சொந்த வீடும், வீட்டு மொட்டை மாடியில் 250 முதல் 300 சதுர அடி நிழல் படாத இடமும் இருந்தால் போதும். மொட்டை மாடியில் நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யலாம்."மொபைல் வாங்கும் பணத்தில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்.

May 16, 2026

ரயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள பயன்படுத்தப்படாத இடங்களைச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் சுவிட்சர்லாந்தில்…..

சுவிட்சர்லாந்து நாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மற்றொரு மைல்கல்லாக ரயில்தண்டவாளங்களுக்கு இடையே உள்ள பயன்படுத்தப்படாத இடங்களைச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களாக (Solar Power Plants) மாற்றி வருகிறது. 'சன்-வேஸ்' (Sun-Ways) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், தண்டவாளங்களுக்கு இடையே கம்பளம் போல விரிக்கக்கூடிய கழற்றத்தக்க சோலார் Solar Panels) பேனல்களை (Removable அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய நிலங்களைக்கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன், பராமரிப்புப் பணிகளின் போது இந்தப் பேனல்களை எளிதாக அகற்றவும் முடியும்.

May 16, 2026

மகளிர் உரிமைத் தொகை ; முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மகளீர் உரிமைத்தொகை பெரும் பங்கு வகித்தது. திமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கபப்ட்டது. அதே  போல் அதிமுகவும் மகளிர் உரிமைத் தொகை ரூ 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது.தவெக சார்பில் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் வாக்குறுதி அளித்திருந்தது. தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் மகளிர் உதவித்தொகை 2500 ஆக உயர்த்தப்படுமா..? அல்லது 1000 ரூபாயகவே தொடருமா என்கிற கேள்வி எழுந்தது.இந்த நிலையில் மே  மாததிற்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்.   இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக்  விரைவில் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் கூறப்பட்டுள்ளது.

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 131 132

AD's



More News