25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 14, 2026

ஒரு சவரன் 8 கிராம்-னு எதுக்கு சொல்றாங்க ?

"சவரன்"என்ற வார்த்தை, 1817-ல் வெளியான பிரிட்டிஷ் Gold Sovereign நாணயத்திலிருந்து வந்தது. அதன் எடை 7.988 கிராம். அக்காலத்தில் 7.988 கிராம் என்பதை துள்ளியமாக கணக்கிட மெட்ரிக் அமைப்பு இல்லாததால் தசம எண்களுடன் கணக்கிட சிரமப்பட்டனர்; தென்னிந்தியாவுக்கு வர்த்தகத்திற்காக இது வந்தபோது வியாபாரிகள் அதை வசதிக்காக 8 கிராம் என்று கூறினர். அதுவே இன்றுவரை "ஒரு சவரன் = 8 கிராம்" என்ற நிலையான அளவாகிவிட்டது.

May 14, 2026

வானில் தகர்ந்த ஏவுகணை!

கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 'ஃபதே / ஷாஹீன்' ரக பாலிஸ்டிக் ஏவுகணை ஹரியானா வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சிர்சா விமானப்படைத் தளத்தில் இருந்து செயல்பட்ட ஏர் கமாண்டர் ரோஹித் கபில் தலைமையிலான அணி, 'பராக்-8' அமைப்பை பயன்படுத்தி ஏவுகணையை தடுத்தது. ரோஹித் கபிலின் துரித நடவடிக்கைக்காக 'YUDH SEVA' பதக்கம் வழங்கப்பட்டது.

May 14, 2026

அனைத்து மாவட்டங்களின் இலவச சட்ட உதவி தொடர்பு எண்கள் .

வ.எண்        மாவட்டம்     இலவச சட்ட உதவி எண்1.              சென்னை -      044-253846772.            திருவள்ளூர் -     044-276641063.             காஞ்சிபுரம் -      044-272371004.             வேலூர் -            0416-22005555.      ராணிப்பேட்டை -    04172-2720016.        திருப்பத்தூர்  -        04179-2220017.       கிருஷ்ணகிரி  -        04343-2440118.        தர்மபுரி  -                04342-2331009.        சேலம் -                   0427-241700110.    நாமக்கல்  -               04286-22620011.     ஈரோடு  -                 0424-226244412.     திருப்பூர்  -                0421-242220013.கோயம்புத்தூர்  -         0422-230050014.        நீலகிரி  -              0423-244236615.      திருச்சி  -                0431-241500116.     கரூர் -                     04324-22270017.  பெரம்பலூர்  -         04328-22570018.  அரியலூர் -            04329-22660019.கடலூர் -                    04142-22240020. விழுப்புரம்   -          04146-26000121. கள்ளக்குறிச்சி -   04151-22200122. செங்கல்பட்டு  -   044-27427242023. தஞ்சாவூர் -           04362-24200124. நாகப்பட்டினம் -  04365-25500125. மயிலாடுதுறை-  04364-22200126. திருவாரூர்  -       04366-22250027. புதுக்கோட்டை - 04322-22200128. சிவகங்கை -      04575-24200129. மதுரை-             0452-252500030. திண்டுக்கல்  -   0451-246100031. தேனி  -              04546-25050032. விருதுநகர்   -   04562-28000133. ராமறாதபுரம் - 04567-22030034. தூத்துக்குடி  -  0461-234100035. திருநெல்வேலி - 0462-250040036.கன்னியாகுமரி  - 04652-27990037.திருவண்ணாமலை - 04175-25200138.தென்காசி - 04633- 252001

May 13, 2026

தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்,  717 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற உத்தரவு.

 வழிபாட்டுதலங்கள், பஸ்ரெயில்நிலையம்,கல்விநிறுவனங்கள் ,பஸ்நிலையம், கல்விநிறுவனங்கள்அருகே 500 மீட்டர்தொலைவுக்குள் செயல்படும்டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு. தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து மூட முதல் அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. ஏற்கனவே கோவில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இடமாற்றம் செய்து வந்தது. புதிதாக பஸ் நிலையம் அருகில் உள்ள, டாஸ்மாக் கடைகளையும் அகற்ற முடிவு செய்து இருப்பது ,பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.குறிப்பாக 500 மீட்டருக்குள் இந்த கடைகள் வந்தால், அவற்றை 2 வாரங்களுக்குள் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.  தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய், அவர்களின் இந்த  உத்தரவு, அவர் ஆட்சியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை  மக்களுக்கு வந்துள்ளது.

May 13, 2026

கோடையில் சருமம் புத்துணர்ச்சி பெற..

கோடை காலத்தில் வியர்வை அதிகம் வெளிப்படும் என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று முறையாவது முகத்தை கழுவ வேண்டும். அதை செய்யாவிட்டால் எண்ணெய் சுரப்பி சருமத்தில் தேங்கி முகப்பருவுக்கு வழிவகுக்கும். வெப்பத்தால் பயன்படுத்தும் நீர் சூடாக இருக்கும் பட்சத்தில் முகம் கழுவக்கூடாது. குளிர்ந்த நீர் மட்டுமே பாதுகாப்பானது. இது சோர்வடைந்த சருமத்திற்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முகப்பருவை தடுக்கவும் செய்யும்.

May 13, 2026

“இனி 1 நாள் 25 மணி நேரமாகும்”

இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணிப்பு. ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர்ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். பூமி தோன்றியகாலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும் அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் கண்டறிந்துள்ளனர்.

May 13, 2026

OTP பூர்னப் பதம்.

OTP என்பதன் பூர்னப் பதம் என்ன?---- One  time password. UPI என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Unified payments interface. ATM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Automated teller machine  KYC என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Know your customer. PIN என்பதன் பூர்னப் பதம் என்ன?----- personal identification number. SIM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Subscribe identify module. SMS என்பதன் பூர்னப் பதம் என்ன?--- Short message service. CPU என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Central processing unit RAM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Random access  memory ROM என்பதன் பூர்னப் பதம் என்ன?----- Read only memory.

May 13, 2026

மே மாதத்தில் வெப்ப அலை வீசும்:வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை .

தமிழகத்தில் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.  (ஏப்., 14) முதல் தமிழகத்தில் 106 டிகிரி வரை வெயில் அதிகரித்து, மே மாதத்தில் வெப்ப அலை வீசும். கடல் காற்றிலிருந்து வரக்கூடிய காற்று தாமதமாக வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட வானிலை நீடிப்பதால், வெப்பநிலை அதிகரிப்புடன் ஈரப்பதமும் அதிகரித்து அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.

May 12, 2026

பிரதமர் மோடி   கோரிக்கை. ( வேண்டுகோள் )

1. கொரோனா காலத்தை போல வீட்டிலிருந்தேவேலை செய்யலாம் ( WORK FROM HOME ) 2. ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம். 3. பெட்ரொல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் . (விலை ஏறப்போகிறது) 4. சமையலிலும் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள். உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. 5. ரசாயன உரத்தை குறையுங்கள், இயற்கை உரத்திற்கு மாறுங்கள் 6. ஓராண்டிற்கு வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள்.

May 12, 2026

பூமிக்கு வரும் செவ்வாய் மண்!

2031ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் இருந்து 500 கிராம் மண்ணை, பூமிக்கு கொண்டு வர சீனா இலக்கு!சீனாவின் Tianwen-3 விண்கலம் 2028ல் செவ்வாய்க்கு ஏவி, 2031க்குள் மாதிரிகளைபூமிக்கு கொண்டுவர உள்ளதாக அந்நாடு அறிவிப்பு. நாசாவை முந்தி, செவ்வாயிலிருந்து மண்ணை கொண்டு வரும் முதல் நாடாக உருவெடுக்க சீனா முயற்சி.

1 2 ... 40 41 42 43 44 45 46 ... 131 132

AD's



More News