2 லட்சத்திற்கு மேல் - தங்கம் வாங்கினால் -PAN கார்டு கட்டாயம். ₹10 லட்சத்திற்கு மேல் – PAN Aadhaar வருமான சான்று அனைத்தும் கட்டாயம். தங்கம் விலையில் - 3% GST கட்டாயம் செலுத்த வேண்டும். மேக்கிங் சார்ஜில் - நகை தயாரிப்பு கட்டணத்தில் 5% GST கட்டாயம்.
உங்கள் கேஸ் வழங்குநரின்(Indane,HP,Bharat) இணையதளத்திற்குச் சென்று,'LinkAadhaar' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு,OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம்.
உடலை குளிர்விக்கும் உணவுகள்: தண்ணீர் நிறைந்த பழங்கள் - தர்பூசணி,வெள்ளரி,முலாம்பழம். குளிர்பானங்கள் - மோர்,இளநீர்,நெல்லிக்காய் ஜூஸ். சத்தான காய்கறிகள் - புதினா,முருங்கைக்கீரை, வெண்டைக்காய். குளுர்ச்சி தரும் உணவுகள் - தயிர் சாதம்,கஞ்சி,பானகம். முக்கிய குறிப்புகள்:அதிக தண்ணீர் குடிக்கவும்.வெயிலில் அதிக நேரம் தவிர்க்கவும்.குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடவும்.
நன்றாக வளர்ந்த ஒரு மரம். ஒரு நாளைக்கு 2 முதல் 10 மனிதர்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என கண்டறியப்பட்டு உள்ளது. . ஒரு முதிர்ந்த மரம் ஓராண்டுக்கு ஏறக்குறைய 260 பவுண்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். பொதுவாக, மரங்கள் கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்தி ஆக்சிஜன் மற்றும் குளுக்கோசை உற்பத்தி செய்கின்றன. மரங்கள் பகல் நேரத்தில் ஆக்சிஜனை வெளியிடும். அதே வேளையில், இரவு நேரத்தில் சுவாசிப்பதற்காக அதில் சிறிதளவு பயன்படுத்துகின்றன. மரங்களை பொறுத்தவரை, அகன்ற இலை கொண்ட மரங்கள், அவற்றின் அதிக இலை மேற்பரப்பு காரணமாக சிறிய இலைகளை கொண்ட ஊசியிலை மரங்களை விட அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன . இவற்றை எல்லாம்விட, ஒரு இடத்தில் மரங்கள் அதிக அளவில் இருந்தால் அந்த இடத்தின் வெப்பநிலை சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து குளிர்ச்சியாக காணப்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு புள்ளி விவரப்படி, ஒரு மனிதனுக்கு 699 மரங்கள் என்ற விகிதம் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதுவே ஆஸ்திரேலியா 3,266, பிரான்சு 203, எத்தியோப்பியா 143, கிரீன்லாந்து 4,964 என்ற அளவில் காணப்படுகிறது. இந்தியாவில் ஒரு நபருக்கான மரங்களின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் குறைய வேண்டும் என்றால், மேற்கண்ட நாடுகளை போல மரங்களை ஏராளமாக வளர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
உடல் வெப்பநிலையை சீராக்கி, புத்துணர்ச்சி பெற தண்ணீரை குடிப்பது அவசியம். அத்தகைய நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்காமல் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோழையை உமிழ்ந்துவிட்டு, பல் துலக்காமல் நீர் குடிக்கும்போது, உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை தான் நாம் உட்கொள்கிறோம். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்கும்போது இனி முக்கியமான மாற்றம் வருகிறது. 1.சொத்து பத்திரத்தில் இனி ஜி.பி.எஸ் (GPS) லொகேஷன் விவரம் கட்டாயமாக இணைக்கப்பட உள்ளது. 2.சொத்து உண்மையில் அந்த இடத்திலேயே உள்ளதா, என்பதை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டு வரப்படுகிறது. 3.சொத்து விற்பவர் அந்த இடத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்து ,பத்திரத்தில் இணைக்க வேண்டும். 4.பதிவுத்துறைதற்போது 'STAR 3.0' என்ற புதிய டிஜிட்டல் மென்பொருள் மூலம் காகிதமில்லா பத்திரப்பதிவு முறையை கொண்டு வர முயற்சி செய்கிறது. 5. இதன் மூலம் நிலத்தின் துல்லியமான இடத்தை GPS மூலம் கண்டறிந்து பதிவு செய்ய முடியும். இந்த புதிய முறையால் போலி நிலங்கள், தவறான பதிவுகள் போன்ற பிரச்சனைகள் குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1. உங்களுடைய மொத்த வருமானத்தையும் எப்போதும் வெளியே சொல்லாதீர்கள். 2.உங்களுடைய மொத்த சொத்தின் 1-5% பணமாக (Cash) கையில் வைத்திருங்கள். 3. நீங்கள் சம்பாதிப்பதன் 30%-க்கும் அதிகமாக செலவு செய்யாதீர்கள். 4. ஒரு அவசர நிதி (Emergency fund) தயாராக வைத்திருங்கள். 5.வரி விதிகளைப் பற்றி படியுங்கள். 6.சொத்துக்கள் (Assets) வாங்குவதற்கு 7. ஒன்றுக்கும் மேற்பட்ட வருமான வழிகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
மக்களுக்கு சொத்து, சுகம் மட்டும் போதாது, நல்லாட்சி மிக மிக முக்கியம்.தமிழ் நாட்டில் கடந்த 55 ஆண்டுகளாக மக்கள் ஆட்சியா ? மன்னர் ஆட்சியா ? மக்களின் பொறுமைக்கும், ஒரு எல்லை உண்டல்லவா ? பொறுத்து, பொறுத்து வெடித்த தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பை, இந்தத் தேர்தலில் கொடுத்திருக்கின்றனர்,என்றே சொல்லலாம். திமுக, அதிமுக, ஆட்சிக் காலங்களில் ஒருவருக்கொருவர் மாற்றி, மாற்றி அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் செய்தனரே தவிர, நல்லாட்சியைக் கொடுக்கவே இல்லை. ஆட்சி கெட்டுச் சீரழிந்துள்ளது.இந்த இரண்டு கட்சிகளில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே தங்கள் காலத்திற்கும் அடுத்த 10 ,15, தலைமுறைக்கும் சொத்துக்களைத்தான் சேர்த்தனர். எங்கும் கொள்ளை! எதிலும் கொள்ளை! பாக்தாத்திருடர்கள் தோற்கும் அளவிற்கு கொள்ளை!ஆட்சியாவது நன்றாகச் செய்தார்களா ? அதுவும் இல்லை, அதுவும் திமுக ஆட்சியில் போதைக் கலாச்சாரம், கரைபுரண்டு ஆண், பெண், ஏன் குழந்தைகளையும் அடிமை யாக்கியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியானது.இன்னும் சிறிது காலம் இவர்கள் ஆட்சியில் இருந்தால் நம் தமிழ்நாட்டை கூறு போட்டு பங்கிட்டு, விற்று வெளிநாட்டில் முதலீடு செய்து விட்டு, தப்பி ஓடிவிடுவார்கள். தமிழ்நாட்டில் இவர்கள் ஆட்சி செய்த பொழுதெல்லாம் மத்திய அரசை பகைத்துக் கொண்டு, தாங்கள் ரெம்ப நல்லர்களைப் போல பிம்பம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு அரசாங்கமே மது ஆலைகளை திறந்து வைத்துக் கொண்டு ,அதிலிருந்து வரும் பணத்தை மக்களுக்கு இலவசங்களைத் தருகிறது, என்றால் அந்த நாடு என்னவாகும் என்று சிந்திக்கக் கூடவா மக்களுக்குத் தெரியாது. சரியான பாடம் புகட்டி விட்டார்கள்.பதவி எடுத்த நாளிலிருந்து திமுக இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதும், சனாதன தர்மத்தை அழிப்போம். என்று கூறுவதும் எவ்வளவு அகம்பாவம், ஆணவம். இந்துக் கோவில்களின் வருமானத்தை, இவர்கள் யார்? இதைக் கையாள்வதற்கு ? தமிழ்நாட்டில்உள்ள85%இந்துக்களின்பாரம்பரியத்தைஅலட்சியப்படுத்துவதுபோன்றஅட்டுழியங்கள் கொஞ்ச ,நஞ்சமல்ல,தமிழ்நாட்டில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், சண்டையா போடுகின்றனர். எல்லோரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இனக் கலவரங்களை உண்டாக்க, இவர்கள் செய்யும் செயல்கள் அநியாயம், 18 வயதிலிருந்து 24 வயதுவரை உள்ள 1 கோடியே 20 லட்சம் தமிழக இளம் வாக்காளர்கள் பாக்தாத்திருடர்களின் அட்டுழியங்களை கவனித்து ஓட்டளித்துள்ளனர்.த.வெ.க கட்சியினர் ஒரு பைசா கூட கொடுக்காமல் எப்படி ஜெயித்தனர் என்பதற்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. அதிகார துஷ்ப்பிரயோகம், மணல் கொள்ளை, எக்குத் தப்பாக ஏறிய வீட்டு வரி, சொத்து வரி, மின்கட்டண உயர்வு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பழைய முகங்களே வேண்டாம். புது முகத்திற்கு போடலாம் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனம் ரணகளமாகி, த.வெ.க. விஜய்யிற்கு ஓட்டு அளித்துள்ளனர்.திரைப்படத்தில் Let me sing a kutty story! life is very short நண்பா! Always be happy! என்ற பாடல் மூலம் விஜய்யின் ரசிகர்கள் எந்த அளவுக்கு கவரப்பட்டனரோ, அந்த அளவிற்கு தன் நல்லாட்சியிலும் மக்கள் சந்தோஷப்படுவார்கள் என நம்புவோம்.தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை விஜய் சரி செய்வாரா ? சரியாகச் செய்வாரா ? என்பது பலரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மக்களுக்காக செய்வேன் என்பது ஒரளவு நன்றாகச் சிந்தித்து செயல்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்.தேர்தலுக்காகக் கொடுத்த வாக்கைச் சிறப்பாகச் செய்வார் என்று மக்களின் அதீத நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் விஜய்யின் விஜயத்தை எதிர்பார்த்துள்ளனர்.குணா பாஸ்கர் ராஜா.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட நீர் உடலில் வாதத்தை அதிகரிக்கும். இது மூட்டு வலி, வாய்வு மற்றும் மலச்சிக்கல் போன்றபிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.பானை நீர் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும் திறன் கொண்டது.மூளை மற்றும் செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும்.
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி', பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது.18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும்.