உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 25,000 RC (பதிவு சான்று) இல்லாமல் ஓட்டுதல் 23,000 - 25,000 இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் ₹2,000 (முதல் முறை), ₹4,000 (மீண்டும்) ஹெல்மெட் இல்லாமல் -₹1,000 + உரிமம் இடைநீக்கம் சீட் பெல்ட் அணியாமல் - ₹1,000 மூவர் பயணம் (பைக்) -₹1,000 – DL இடைநீக்கம் அதிக வேகம் (கார்/LMV)-₹1,000 – 2,000 அதிக வேகம் (பெரிய வாகனங்கள்)-₹2,000-4,000.
மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ₹4,000 மூன்று ஆண்டுகள் வழங்கப்படுகிறது. வருமானச் சான்றிதழுடன் இ-சேவை மையம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஹார்டுடிஸ்க்குகளையும்,பென்டிரைவ்களையும்மறந்துவிடுங்கள். எதிர்காலத்தில்,தரவுகள் DNAவில்சேமிக்கப்படும்.விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உலகின் ஒட்டுமொத்த இணையத் தரவுகளையும் வெறும் ஒரு தேக்கரண்டி DNA-வில் சேமிக்க முடியும். இயற்கை, மிகப்பெரிய மெமரி கார்டை நமது உடல்களில் பொருத்தியுள்ளது.
ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. 'Myaadhaar' இணையதளம் வழியாக பயனர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து இந்த வசதியை பெற முடியும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் PM-WANI திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் அதிவேக இணைய வசதி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு கடைகள் கூடி வைஃபை மையங்களாக (Wi-Fi Hub) மாற்றப்பட்டு, வெறும் ரூ.6 கட்டணத்தில் 2 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1GB வீதம் 150 Mbps வேகத்தில்இணையம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ‘PM WANI‘ செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம் இந்த எளிய மற்றும் பயனுள்ள இணைய சேவையை எளிதாக பயன்படுத்திகொள்ளலாம்.
மத்திய அரசு வரும் மே1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக விதிகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை பலமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி நகர்ப்புறங்களில் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், ஊர்ப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. விநியோகத்தின் போது வழங்கப்படும் OTP முறையை நிரந்தரமாக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மானியங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும். வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப மிஸ்டு கால், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் அல்லது மொபைல் செயலிகள் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில், குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்பு வசதி உள்ள பகுதிகளில், மக்கள் அந்த முறைக்கு மாற அரசு ஊக்குவித்து வருகிறது. இத்தகைய மாற்றங்கள் எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்கவும் விநியோகத்தை சீரமைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி பட்டத்தை விட தனித்திறமையே சிறந்தது என்பதை நிரூபிக்கும் வகையில்,19 வயது இளம் பெண் கௌரி, உலகின் முன்னணி நிறுவனமான BMW நிறுவனத்தில்மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார். முறையான பட்டப்படிப்பு இல்லாத நிலையிலும், சமூக வலைதளங்களில் அவர் உருவாக்கிய தனித்துவமான நற்பெயரும் , அவரது படைப்பாற்றலுமே இந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளன. வழக்கமாக ஐந்து ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும் ஒரு பணிக்கு, லிங்க்ட்இன் மற்றும் இன்ஸ்டாகிராமில் கௌரிக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்கள் ஒரு முக்கிய அங்கீகாரமாக திகழ்ந்துள்ளனர். இது தொடர்பாக கௌரி வெளியிட்ட பதிவில், தான் எந்த நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும், தனது திறமையைக் கண்டு பிஎம்டபிள்யூ நிறுவனமே தன்னை தேடி வந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திறமைக்கும் பட்டப்படிப்பிற்கும் இடையிலான விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது. தனிநபர் பிராண்டிங் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய சொத்தாக கருதப்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இருப்பினும், சில வல்லுநர்கள் முறையான கல்வி இன்றும் அவசியம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, கௌரியின் வெற்றி பல இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
e-PAN Card Download Email வந்தால் எச்சரிக்கை!சமீபத்தில் பலருக்கும் e-PAN கார்டை டவுன்லோட் செய்யுங்கள் என்ற பெயரில் Email வருகிறது. இது உண்மையானது அல்ல; சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் புதிய மோசடி முறையாக அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.புகார் அளிப்பது எப்படி?சந்தேகமான Email வந்தால்:webmanager@incometax.gov.inincident@cert-in.org.inஇந்த முகவரிகளுக்கு Email-ஐ forward செய்து புகார் அளிக்கலாம்.
வங்கிகளில் நகைகளை அடகுவைத்து லோன் வாங்கியவர்கள் உரிய நேரத்தில் வட்டியை செலுத்த தவறினால் அந்த நகைகளை ஏலத்திற்கு விட வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது; முன்பெல்லாம் நகை ஏலத்திற்கு விடுவதற்கு முன் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்படும்; தற்போது, கடன் காலக்கெடு முடிந்து, தேவையான நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு வங்கிகள் ஏல நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என RBI கூறியுள்ளது.
முதலில் அதன் உறையை அகற்றிவிடுங்கள், ஏனெனில் அது வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். பிரகாசத்தைக் குறைவாக வைத்து, நேரடி சூரிய ஒளியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவாகக் குளிர்விப்பதற்காக அதை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள்; உள்ளே இருக்கும் ஈரப்பதம் அதைச் சேதப்படுத்திவிடும்!போன் அதிகமாக சூடாகுவது ஒரு பொதுவான பிரச்சனை. அதற்காக, ஃப்ரிட்ஜில் வைப்பது தவறு; அதற்கு பதிலாக, போன் கவர் அகற்றினால் போன் விரைவாக குளிரும்.