25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Sep 16, 2025

கிராண்ட் சுவிஸ் தொடரில்இரண்டாவது முறையாக வைஷாலி மீண்டும் சாம்பியன்.

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் ஓபன், பெண்கள் என இரு பிரிவில் போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் மொத்தம் 56  பேர் பங்கேற்றனர்.  10 சுற்று முடிவில் இந்தியாவின் வைஷாலி, 7.5 புள்ளியுடன் வைஷாலி, முதலிடத்துக்கு முன்னேறி இருந்தார். 11 சுற்றில் 8.0புள்ளியுடன் முதலிடம் பிடித்த வைஷாலி, கோப்பை வென்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக (2023, 2025) கிராண்ட் சுவிஸ்தொடரில் சாம்பியன்ஆனார்.இவருக்குரூ. 35.25லட்சம்பரிசுத்தொகைகிடைத்தது. 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி பெற்றார் வைஷாலி.

Sep 16, 2025

இந்தியாவின் ஆனந்தகுமார்தங்கம் வென்று ,உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்தார் .

சீனியர் ஆண்களுக்கான 500 மீ, ஸ்பிரின்ட் பிரிவு போட்டிகள் , சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் நடக்கிறது .ஆனந்த்குமார் வேல் குமார், ஆர்யன்பால்இந்தியா சார்பில் பங்கேற்றனர். ஆனந்த் துவக்கத்தில் கடைசி இடத்தில் வந்தார். பின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். கடைசியில், 43.072 வினாடியில் வந்து, 3வது இடம் பெற்ற ஆனந்த் குமார், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவு பைனலில் ,சிறப்பாக செயல்பட்ட ஆனந்த்குமார், ஒரு நிமிடம், 24.924 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

Sep 15, 2025

துப்பாக்கி சுடுதலில்   'வெண்கலம்’  வென்ற மேகனா சஜ்ஜனார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் சீனாவில், பெண்க ளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மேகனா சஜ்ஜனார், 632.6 புள்ளி களுடன் 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.அடுத்து நடந்த பைனலில் மேகனா, 230.0 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். உலக கோப்பை வரலாற்றில் மேகனா கைப்பற்றிய முதல் பதக்கம் ஆனது. இது, இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஈஷா சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றிருந்தார்.இம்முறை ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என, 2 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை கைப்பற்றியது. 

Sep 15, 2025

உலக சாம்பியன்ஷிப், உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தசர்வேஷ் அனில் குஷாரே.

உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,  . உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் 2.25 மீ., உயரம் தாண்டிய சர்வேஷ் அனில் குஷாரே, உலக சாம்பியன்ஷிப், உயரம் தாண்டுதலில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் பைனலில் ,ஜமைக்காவின் ஆப்ளிக்யு செவில்லே, 9.77 வினாடி நேரத்தில் வந்து தங்கம் ,மற்றொரு ஜமைக்க வீரர் கிஷேன் தாம்ப்சன் (9.82 வினாடி) வெள்ளி வென்றார். ஆண்களுக்கான 10,000 மீ., பைனலில் ,இந்திய வீரர் குல்வீர் சிங், 29 நிமிடம், 13.33 வினாடி நேரத்தில் வந்து, 16வது இடம் பிடித்தார்.

Sep 15, 2025

சர்வ தேச ஓபன் பாட்மின்டன்ஹாங்காங்கில் இரண்டாவது இடம்  பிடித்த லக்சயா சென்.

சர்வ தேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ,ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் லக்சயா சென், ('நம்பர்-20'), உலகத் தர வரிசை யில் 'நம்பர்-4' ஆக உள்ள, சீனாவின் ஷி பெங்லியை எதிர் கொண்டார். லக்சயா முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-10 சமநிலையில் இருந்து, முடிவில் 15-21 என செட்டை இழந்தார்.இரண்டாவதுசெட்டிலும் துவக்கத்தில் இருந்து பின்தங்கிய லக்சயா,. முடிவில் 15-21, 12-21 லக்சயா என்ற நேர் செட்டில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சீனாவின் வெய் கெங் லியாங், சங் வாங் ஜோடியை ஆண்கள்இரட்டையர் பிரிவு பைனலில் சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என கைப்பற்றியது .அடுத்த செட்டை 14-21 என நழு வவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 21-19, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்க, இரண்டாவது இடம் பெற்றது. 

Sep 15, 2025

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் வென்றது .

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 21, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை 57 கிலோ பிரிவு பைனலில் எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் ஜாஸ்மின். மூன்று சுற்று முடிவில், 5 நடுவர்களில் 4 பேர் ஜாஸ்மினுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.முடிவில் ஜாஸ்மின் 4-1  என (30-27, 29-28, 28-29-29-28) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றி, உலக சாம்பியன் ஆனார்.இந்தியாவின் மீனாட்சி ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் நஜிம் கைஜய்பேவை ,பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பைனலில் எதிர்கொண்டார். இதில் மீனாட்சி, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, புதிய சாம்பியன் ஆனார்.இந்தியாவின் நுபுர் ஷியோரன், போலந்தில் அகட்டாவை  பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு பைனலில் சந்தித்தார். இதில் சமமான போட்டியை வெளிப்படுத்தியபோதும், நுபுர் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் பூஜா, பாரிசின் எமிலி அஸ்குய்த்தை80 கிலோ பிரிவு அரை யிறுதியில் ,பூஜா 1-4 என தோல்வியடைந்து, வெண்கலம் கைப்பற்றினார்.

Sep 13, 2025

உலக தடகள சாம்பியன்ஷிப்

உலக தடகள சாம்பியன் ஷிப் இரு ஆண்டுக்கு ஒருமுறை 'உலக தடகள அமைப்பு சார்பில் 1983 முதல், நடத்தப்படுகிறது. இதன் 20வது சீசன் இன்று ஜப்பானின், டோக்கியோ தேசிய மைதானத்தில் துவங்குகிறது.உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் காத்திருக்கின்றனர். 49 போட்டிகளில்  149 பதக்கம் வழங்கப்பட உள்ளன.இந்தியா சார்பில் இம்முறை 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர். இதில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில்வென்று தந்தார். 

Sep 13, 2025

சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடரில் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் இரட்டையர் காலிறுதியில்இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரிப் ஜூனைதி, ராய் கிங் யாப் ஜோடியை எதிர் கொண்டது. சிராக்முதல் செட்டை 21-14 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 20-23 என போராடி இழந்து, மூன்றாவது கடைசி செட்டை இந்திய ஜோடி 21-16 என வென்றது.64 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

Sep 13, 2025

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்.

உஸ்பெகிஸ்தானில்'கிராண்ட்சுவிஸ்' செஸ்தொடரில் 'டாப்-2'இடம்பெறும் வீரர், வீராங்கனைகள்,2026ல்நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில்  பங்கேற்க தகுதி பெறலாம்.நேற்று எட்டாவது சுற்று போட்டி நடந்தன. ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா என இருவரும் மோதினர்.குகேஷ், 46 நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் நீடித்தனர்.47 வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, திவ்யா முந்தினார். 103வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.

Sep 13, 2025

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கிவிளையாட்டு போட்டிகள்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், 'ரிகர்வ்' பிரிவு 'ரவுண்டு - 16' தென் கொரியாவில் நடந்த போட்டியில் இளம் இந்திய வீராங்கனை கதா (15 வயது), 0-6 என்ற கணக்கில் உலகின் 'நம்பர்-1' தென் கொரியாவின் லிம் சி-ஹியோனிடம் தோல்வியடைந்தார். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு சீனாவில்நடக்கும் தகுதிச் சுற்றில் 6வது இடம்பிடித்த இந்தியாவின் பவேஷ் ஷெகாவத், பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' சீனாவில் நடக்கும் போட்டியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன . இதில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.

1 2 ... 104 105 106 107 108 109 110 ... 170 171

AD's



More News