25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Sep 18, 2025

கபடி லீக் 12வது சீசன் டில்லி அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், டில்லி அணிகள் மோதின. இதில் டில்லி அணி 33-29 என வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு நீரஜ் நார்வல் (9 புள்ளி) கைகொடுத்தார். தெலுங்கு டைட்டன்ஸ் சார்பில் கேப்டன் விஜய் மாலிக் 5 புள்ளி பெற்றார்.இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்ற டில்லி அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது

Sep 18, 2025

ஆஸ்திரேலிய பெண்கள் அணியை  வீழ்த்திய  இந்தியா. மந்தனா சதம்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணி, இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று,  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நேற்று, நியூ சண்டிகரில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி 'பீல்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 49.5 ஓவரில், 292 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில், 190/10 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.மந்தனா சதம் அடிக்க, இந்திய அணி 102 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Sep 18, 2025

75 வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு , அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 'ஜெர்சி' பரிசு .

வரும் டிசம்பரில் மெஸ்ஸி, இந்தியா வரவுள்ள அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. கோல்கட்டா, ஆமதாபாத், மும்பை, டில்லி என நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.பிரதமர் மோடியை டிச. 15ல் டில்லியில் மெஸ்சி, சந்திக்க உள்ளார். இதனிடையே 75 வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, 2022, உலக கோப்பை தொடரில் அணிந்திருந்த 'ஜெர்சியை' பரிசாக அனுப்பியுள்ளார் மெஸ்ஸி.

Sep 17, 2025

புரோ கபடி லீக் 12வது சீசன் பெங்கால் வெற்றி,

 புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில்,. நேற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், உ.பி., அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில்பெங்கால் அணி 41-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

Sep 17, 2025

உலக தடகள ஈட்டி எறிதலில்20 வது சீசன் சாதிப்பாரா நீரஜ் சோப்ரா !

தடகள உலக சாம்பியன்ஷிப் 20 வது சீசன், ஜப்பான்தலைநகர் டோக்கியோவில், உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல், தகுதிச்சுற்று நடக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில் நீரஜ் சோப்ரா  வென்று தந்தார். மீண்டும் அதே  மைதானத்தில் ,இன்று பைனலுக்கு முன்னேற உள்ளார். இவருடன் இந்திய வீரர்கள் சச்சின் யாதவ், யாஷ் விர் சிங், ரோகித் யாதவும் 'ஏ' பிரிவில்களமிறங்குகின்றனர். 

Sep 17, 2025

கிராஸ் பனிச்சறுக்கு கன்ட்ரி' போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்னை பவானி.

'கிராஸ் கன்ட்ரி' பனிச் சறுக்கு போட்டி  சிலியில்,5 கி.மீ., பிரிவில் இந்தியா சார்பில் பவானி உட்பட 5 பேர் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பவானி, 21 நிமி டம், 04.9 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். இதையடுத்து சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட 'கிராஸ் கன்ட்ரி' போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமை பெற்றார் பவானி. 'கிராஸ் கன்ட்ரி' பனிச் சறுக்கு (இரு 'ஸ்டிக்குகளை' பயன் படுத்தி, சமமானபனிப்படர்ந்த பகுதியில் நடத்தல், சறுக்கி செல்லுதல்)

Sep 17, 2025

இரு முறை கோப்பை வென்ற மகிழ்ச்சியில் வைஷாலி.

 'கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் பெண்கள் பிரிவில் 56 பேர் பங் கேற்றனர். 11 சுற்றில் 8.0 புள்ளி பெற்ற இந்தியாவின் வைஷாலி, இத்தொடரில்தொடர்ந்து இருமுறை கோப்பை வென்ற முதல் வீராங்கனை. உலக சாம்பியன்ஷிப் தகுதிபோட்டியான, டேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற, மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார்.

Sep 17, 2025

17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய அணி வெற்றி.

 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் இலங்கையின்கொழும்புவில், மொத்தம் 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இரண்டாவது பாதியில் இந்திய அணிக்கு டவுன் கெல் (49), கன்லெய்பா (59), நஜார் (86) தலா ஒரு கோல் அடித்தனர். 68வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் காங்டே இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வென்றது..

Sep 16, 2025

டுப்ளான்டிஸ் உலக தடகள போல் வால்ட் போட்டியில் உலக சாதனை !

 உலகதடகளசாம்பியன்ஷிப் 20 வதுசீசன்ஜப்பான்தலைநகர்டோக்கியோவில்உலகின் 198 நாடுகளில்இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.ஒலிம்பிக்கில் இரண்டு முறை (2020, 2024) தங்கம்வென்ற சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 25, ஆண்களுக்கானபோல் வால்ட் போட்டியில், பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 5.74 மீ.,தாவி பைனலுக்குள் நுழைந்தார்.நேற்று நடந்த பைனலில் 6.15 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார்..பின் சாதனை முயற்சி யாக 6.30 மீ., உயரம் தாவி, 'போல் வால்ட்' போட்டியில் 14வது முறையாக உலக சாதனை படைத்தார். 

Sep 16, 2025

புரோ கபடி  லீக் 12வது சீசன் போட்டி.

ஹரியானா அணி 40-37 என, குஜராத் அணியை புரோ கபடி போட்டியில் வீழ்த்தியது.தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன்போட்டியில் பங்கேற்கின்றன.நேற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் குஜராத் ஹரியானா, அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 25-20 என முன்னிலையில்இருந்தது.. ஆட்ட நேர முடிவில் ஹரியானா அணி 40-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

1 2 ... 103 104 105 106 107 108 109 ... 170 171

AD's



More News