25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Sep 06, 2025

இந்திய வீராங்கனைகள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்  அபாரம்.

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில்,  65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்10 வீரர், 10 வீராங்கனைகள் என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சாக்சி சவுத்ரி  பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் சீனியர் அரங்கில் களமிறங்கிய உக்ரைனின் விக்டோரியாவை எதிர் கொண்டார். முதல் சுற்றில் சாக்சி முன்னிலை பெற்றார்.  விக்டோரியா இரண்டாவது சுற்றில் சாக்சியின் குத்துக்களை சமாளிக்க முடியாமல் திணறினார் போட்டியை நிறுத்திய நடுவர்கள், சாக்சி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

Sep 06, 2025

வெற்றியுடன் துவக்கிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

 பெண்களுக்கான ஆசிய கோப்பையில் ,ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 11-0 என, தாய்லாந்தை வீழ்த்தியது.பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் சீனாவின் ஹாங்சோவ் நகரில்,  நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா, 'பி' பிரிவில் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' லீக் போட்டியில், உலகின் 'நம்பர் -9' இந்தியா, தாய்லாந்து (30வது இடம் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் ,ஆட்டநேர முடிவில் 11-0 என்ற கணக்கில்  வெற்றி பெற்றனர்.

Sep 06, 2025

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் வைஷாலி வெற்றி பெற்றார்.

உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் , 'டாப்-2' இடம் பெறும்வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். இந்தியாவின் வைஷாலி, நெதர்லாந்தின் எலைன் ரோபெர்சை எதிர் கொண்டார். வைஷாலி, 22 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

Sep 05, 2025

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் குகேஷ், வைஷாலி வெற்றி !

உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நேற்று உஸ்பெகிஸ்தானில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டி டேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ்,  உலக கோப்பை  வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதல் சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. குகேஷ், பிரான்சின் பாக்ராட்டை எதிர்த்து, விளையாடிய குகேஷ், 45வது நகர்த்தலில் வெற்றி.அமெரிக்காவின் ஜெப்ரி ஜியாங், இந்தியாவின் பிரக்ஞானந்தா,  மோதி ,விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் ''டிரா' செய்தார். இந்தியாவின் வைஷாலி, பெண்கள் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் குல்ருக்பெஹினை சந்தித்து,விளையாடிய வைஷாலி, 56 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 

Sep 05, 2025

சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதியில் தான்யா.

 சர்வதேச மாஸ்டர்ஸ் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் சீனாவில் ,சர்வதேச மாஸ்டர்ஸ். 2வது சுற்றில்  இந்தியாவின் தான்யா ஹேம்நாத், தைவானின் யு வெய் ஹுவாங்கை எதிர்கொண்டார்.முதல் செட்டில் தான்யா 11-12 என பின்தங்கினார். அடுத்து தான்யா, தொடர்ந்து 10 புள்ளி எடுக்க, முதல் செட்டை 21-12 வசப்படுத்தினார். 2வது செட்டிலும் 5–10 என பின்தங்கிய தான்யா, பின் 21-18 என கைப்பற்றி னார். முடிவில் தான்யா 21-12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். 

Sep 05, 2025

ஆசிய கோப்பை கால்பந்து தொடர்  இந்தியா வெற்றி .

23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர்,  சவுதி அரேபியாவில் ,வரும் 2026, ஜன. 7-25 நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 44 அணிகள் பங்கேற்கின்றன. 11 இடங்களில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'எச்' பிரிவில் கத்தார், பஹ்ரைன், புருனேய் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இப்போட்டிகள்  கத்தாரின் தோகாவில் நடக்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பஹ்ரைனை சந்தித்தது.  இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Sep 05, 2025

ஆசிய கோப்பை ஹாக்கி.

ஆசிய கோப்பை ஹாக்கி சீனாவின் ஹாங்சோவ் ,11வது சீசன்இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளை யாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணி யும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (செப். 14) விளையாடும். 

Sep 04, 2025

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் புனே வெற்றி .

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், நேற்று, விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் புனே, பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் புனே அணி 26-22 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் புனே வீரர்கள், பெங்கால் அணியினரை 'ஆல்-அவுட்' செய்து முடிவில் புனே அணி 45-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்திய புனே அணி  வெற்றியை பதிவு செய்தது. புனே அணிக்கு அஸ்லாம் இனாம்தர் (11 புள்ளி), ஆதித்யா ஷிண்டே (11) கைகொடுத்தனர். பெங்கால் அணி சார்பில் கேப்டன் தேவங்க் 17 புள்ளி பெற்றார்.

Sep 04, 2025

இந்திய நட்சத்திரங்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கின்றனர்.

முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடர் உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று துவங்கும் .இத்தொடரில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் போட்டி நடக்க உள்ளன.65 நாடுகளில் இருந்து, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 17 பேர் உட்பட, 550 நட்சத்திரங் கள் பங்கேற்க உள்ளனர்.இம்முறை இந்தியா சார்பில் ஆண்கள் (10), பெண்கள் (10) என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். 

Sep 04, 2025

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரி ல் 12வது சீசன் இந்தியா-தென் கொரியா 'டிரா' .

 பீஹாரில் ஆசியகோப்பைஹாக்கிதொடரின் 12வதுசீசன் பீஹாரில்இந்தியா,'நடப்பு சாம்பியன்' தென்கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, 'பி' பிரிவில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா அணிகள் முதல் இரு இடம் பிடித்து 'சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறின.நேற்று 'சூப்பர்-4' போட்டிகள் துவங்கின. உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி, 14வது இடத்திலுள்ள தென் கொரியாவை சந்தித்தது. முடிவில் போட்டி 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. 

1 2 ... 107 108 109 110 111 112 113 ... 170 171

AD's



More News