25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Aug 29, 2025

வேலவன் செந்தில்குமார்,அனா ஹத்சிங்,  தேசிய ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப் 81வது சீசன் டில்லியில், ஆண்களுக்கான பைனலில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் மோதினர். வேலவன் 3-1 (11-8, 11-9, 4-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2023, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய அபய் சிங், 2வது இடம் பிடித்தார்.டில்லியின் அனாஹத் சிங், கோவாவின் அகன்ஷா சலுங்கே பெண்களுக்கான பைனலில், மோதினர். அனாஹத் 3-0 (11-7, 11-6, 11-4) என வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக (2023-25) கோப்பை வென்றார்

Aug 28, 2025

அஜித் நாராயணா புதிய காமன் வெல்த் சாதனையுடன் ,பளுதுாக்குதலில் தங்கம் வென்றார். இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் குஜராத்  மாநிலம் ஆமதாபாத்தில், ஆண்களுக்கான 71கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா 26, (தமிழகம்) பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 145, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 172 என, மொத்தம் 317 கிலோ பளுதுாக்கிய அஜித், புதிய காமன் வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். நைஜீரியாவின் ஜோசப்எடிடியாங் உமோ பியா (316 கிலோ) வெள்ளி வென்றார். இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 'ஸ்னாட்ச்' பிரிவில் 91, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 126 என, மொத்தம் 217 கிலோ பளுதுாக்கி 2வது இடம் பிடித்து, வெள்ளி வென்றார்.இந்தியாவின் ஹேமந்தா டோய்மாரி ஜூனியர் ஆண்களுக்கான 71 கிலோ எடைப் பிரிவில் (264 கிலோ, 'ஸ்னாட்ச்' 118, 'கிளீன் அண்டு ஜெர்க்' 146) தங்கம் வென்றார்.

Aug 28, 2025

இந்திய பெண்கள் தெற்காசிய ஜூனியர் கால்பந்தில் நான்காவது வெற்றி!

17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பூடானில்,  7வது சீசன் ,இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள்பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும்.முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.முதல் 3 போட்டியில் நேபாளம், வங்கதேசம், பூடானை வென்றது இந்தியா. நேற்று இரண்டாவது கட்ட போட்டி, இந்திய அணி, மீண்டும் பூடானை எதிர் கொண்டது. முடிவில் இந்திய அணி 5-0 என தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா 12 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது .

Aug 28, 2025

அனிஷ் பன்வாலா ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் .

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பி யன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், , 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ,ஆண்களுக்கான தனிநபர் 25 மீ இந்தியாவின் ஆதர்ஷ் சிங் (585.20 புள்ளி), அனிஷ் பன்வாலா (583.21) முறையே 2, 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். பைனலில் அனிஷ் 35 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.  மற்றொரு இந்திய வீரர் ஆதர்ஷ், 15 புள்ளிகளுடன் 5வது இடத்தை கைப்பற்றினார். சீனாவின் சு லியான்போபான் (36 புள்ளி) தங்கம் வென்றார். இது வரை 9 தங்கம் உட்பட 23 பதக்கம் சீனியர் பிரிவில் வென்ற இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (15 தங்கம், 27 பதக்கம்) .

Aug 28, 2025

இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பிரிமியர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .

இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ,அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்திய பவுலரான அஷ்வின் (537), கடந்த டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.பிரிமியர் அரங்கில் 2009ல் சென்னை அணிக்காக களமிறங்கினார். 2010, 2011ல் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார். 2016ல் புனே, 2018-2019ல் பஞ்சாப், 2020-2021ல் டில்லி, 2022-2024ல் ராஜஸ்தான் என ஐந்து அணிகளில் விளையாடினார்.பிரிமியர்அரங்கில்ஒருவீரராகஎனதுபயணம்முடிவுக்கு வந்துவிட்டது.ஆனால்மற்றநாடுகளில்நடக்கும்உள்ளூர் 'டி-20' லீக்கில் பங்கேற்கும் எனது பயணம் துவங்குகிறது என தெரிவித்துள்ளார். 

Aug 28, 2025

சிப்ட் கவுர் சம்ராஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் .

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது கஜகஸ்தானில், 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா (589), ஆஷி சவுக்சே (586), அஞ்சும் மவுத்கில் (578) கூட்டணி, மொத்தம் 1753 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.  8 பேர் . பங்கேற்ற தனிநபர் பைனலில் சிப்ட் கவுர் சம்ரா, 459.2 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றினார்.  ஜூனியர் அணிகள் பிரிவில் 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் இந்தியாவின் பிராச்சி (588), மஹித் (587), அனுஷ்கா (583) கூட்டணி தங்கம் (1758 புள்ளி) வென்றது. தனி நபர் பிரிவில் இந்தியாவின் அனுஷ்கா, 460.7 புள்ளியுடன் தங்கப்பதக்கம் வென்றார்.    இந்திய வீரர் ஆண்களுக்கான 'டிராப்' ஜூனியர் பைனலில் ஆர்யா வன்ஷ், கஜகஸ்தானின் நிகிடா, சமபுள்ளி (40) பெற்று முதலிடம் பெற்றனர். 'ஷூட் ஆப்பில்' ஆர்யாவுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.   இந்தியாவின் சபீரா, டிராப்' ஜூனியர் பெண்களுக்கான பைனலில்  ,39 புள்ளி எடுத்து தங்கம் கைப்பற்றினார்.இந்திய வீராங்கனை ஆத்யா (38) வெள்ளி வென்றார். 25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல் - ஜூனியர் பிரிவில் இந்திய வீரர்சமீர் (21) வெண்கலம் வென்றார். 

Aug 28, 2025

காமன் வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் கோயல்  பார் உலக சாதனை .

காமன் வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில் ,30 நாடுகளில்இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற் கின்றனர். 53 கிலோ யூத் பிரிவில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கோயல் பார் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 85 கிலோ எடை தாக்கினார்.அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 107 கிலோ துாக்கினார். மொத்தம் 192 எடை தூக்கிய கோயல் , புதிய உலக சாதனை  படைத்து தங்கம் வென்றார். இந்தியாவின் பிந்தியாராணி  58 கிலோ பிரிவில் மொத்தம் 206 கிலோ (91+115) எடை தூக்கி, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.  இந்தியாவின் சாந்தா (185 கிலோ) ஜூனியர் 58 கிலோ பிரிவில் தங்கம் கைப்பற்றினார்.இந்திய வீரர் அனிக் மோடி, ஜூனியர் 65 கிலோ பிரிவில் 238 கிலோ (103+135) துாக்கிதங்கம் வென்றார். ஜூனி யர் பிரிவில் (65 கிலோ) யாஷ் கந்தகலே (273) தங்கம் கைப்பற்றினார்.  இந்தியாவின் ராஜ முத்துபாண்டி (தமிழகம்),ஆண்கள் 65 கிலோ பிரிவில் 'ஸ்னாட்ச்' 128 பிரிவில்128 கிலோ, கிளின் அண்டு ஜெர்க்' பிரிவில் 168 கிலோ என மொத்தம் 296 கிலோ தூக்கி, வெள்ளி வென்றார். 

Aug 26, 2025

யூத் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் ஷர்வாரி வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.

கனடாவில் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவில் யூத் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.இந்தியாவின் 16 வயது ஷர்வாரி18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் பிரிவு அரையிறுதியில் 'நம்பர்-20', இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற தென் கொரியாவின் கிம் மின் ஜியாங்கை, 7-3 என வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். முடிவில் ஷர்வாரி 6-5 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.தீபிகா குமாரி (2011), கோமலிகாவுக்கு (2021) அடுத்து, 18 வயது ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் ஷர்வாரி.இந்தியாவின் சிகிதா 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில், 142-136 என்ற கணக்கில் தென் கொரியாவின் எரின் பார்க்கை வீழ்த்தினார். யூத் உலக சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் தங்கம் கைப்பற்றிய இந்தியாவின் சிகிதா முதல் இந்திய வீராங்கனை ஆனார். 

Aug 26, 2025

மீராபாய் சானு காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்று புதிய சாதனை .

காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நேற்று ஆமதாபாத்தில் 30 நாடுகளில் இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.  48 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கினார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 31.முதலில் நடந்த  'ஸ்னாட்ச்' பிரிவில் 84 கிலோ எடை துாக்கினார். - அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 109 கிலோ துாக்கினார். மொத்தம் 193 எடை தூக்கிய மீராபாய் சானு, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.  இது காமன்வெல்த் பளுதூக்குதலில் புதிய சாதனை (இதற்கு முன் 179) ஆனது.இந்தியாவின் தர்மஜோதி ஆண்களுக்கான 56 கிலோ பிரிவில் மொத்தம் 224 கிலோ (97+127) எடை தூக்கி, தங்கப் பதக்கம். கைப்பற்றினார்.  தேசிய விளையாட்டு சாம்பியன் ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில், ரிஷிகன்டா, 271 கிலோ (120+151) எடை தூக்கி தங்கம் வசப்படுத்தினார். 

Aug 26, 2025

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் இந்தியா 8 பதக்கங்கள் வென்றது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில்,  ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவில் போட்டி நடந்தன. அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா, ஒட்டுமொத்தம் ஆஷிமா, பிரீத்தி களமிறங்கினர். 319 புள்ளி எடுத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினர். சீனா, குவைத் அடுத்த இரு இடம் பிடித்தன.அடுத்து தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதில் துவக்கத்தில் இருந்து இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். முடிவில் 43 புள்ளி எடுத்த நீரு, தங்கப்பதக்கம் வென்றார். கத்தாரின் பாசில் ரே (37) வெள்ளி வென்றார்.மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷிமா (29) வெண்கலம் கைப்பற்றினார்.25 மீ., ஜூனியர் 'பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் பயல் காத்ரி (36நாம்யா கபூர் (30), தேஜஸ் வினி (27) என மூவரும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர். யூத் பிரிவில் இந்தியா மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கம் வென்றது. 

1 2 ... 110 111 112 113 114 115 116 ... 170 171

AD's



More News