25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Aug 22, 2025

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில்,  இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

. யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் போலந்தின் இகாஸ்வியா டெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடியை சந்தித்தது.இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றியது. ஸ்வியா டெக், காஸ்பர் ரூட் ஜோடி, 2வது செட்டை 7-5 என தன் வசப்படுத்தியது.வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் டை பிரேக்கரில்' இத்தாலி ஜோடி 10-6 என வென்றது.  ஒரு மணி நேரம்,32 நிமிடம் நீடித்த போட்டியில் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி 6-3, 5-7, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது..இந்த ஜோடி கைப்பற்றிய 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தது. இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 

Aug 22, 2025

தமிழகத்தின் விஷால் சீனியர்' தடகள சாம்பியன்ஷிப்பில் தேசிய சாதனை.

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64 வது சீசன் சென்னையில், நேற்று ஆண்களுக்கான 400மீ., ஓட்டம் பைனல் நடந்தது. தமிழகத்தின் விஷால் தென்னரசு 45.12  வினாடி நேரத்தில் கடந்து, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதற்கு முன் 2019ல் முகமது அனாஸ், 45.21 வினாடியில் கடந்து இருந்தார். தமிழகத்தின் மற்றொரு வீரர் ராஜேஷ் ரமேஷ் (46.04), ஹரியானாவின் விக்ராந்த் (46.17), வெள்ளி, வெண்கலம் வென்றனர்.   

Aug 22, 2025

டாப்ஸ்யா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் .

20 வயதுக்குட்பட்டோருக்கானஉலகமல்யுத்தசாம்பியன்ஷிப்பல்கேரியாவில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன.இதன் அரையிறுதியில் இந்தியாவின் டாப்ஸ்யா, நடப்பு சாம்பியன், ஜப்பானின் சொவாகா உசிடாவை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.அடுத்து நடந்த பைனலில் டாப்ஸ்யா, நார்வேயின் பெலிசிடாஸ் டொமாஜெவா மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டாப்ஸ்யா, 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார் .உலக சாம்பியன்ஷிப்பில் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். பெண்களுக்கான 68 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீஷ்டி, ஜப்பானின் ஹோஷினோ மோதினர். இதில் ஸ்ரீஷ்டி 0-7 என தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

Aug 22, 2025

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர்

 சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவில் ,இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்ற மூன்றாவது சுற்று போட்டி நடந்தன.குகேஷ், அமெரிக்காவின் சாம் செவியனை சந்தித்தார். குகேஷ். துவக்கத்தில் இருந்து இருவரும் சம பலத்தில் விளையாட, 44வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 46 வதுநகர்த்தலில் 'டிரா' செய்தார்.மூன்றுசுற்றுமுடிவில்அமெரிக்காவின்பேபியானோ, ஆரோனியன், பிரக்ஞாந்தாதலா 2.0புள்ளியுடன் 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.  குகேஷ் (1.5) 8வது இடத்தில் தொடர்கிறார். 

Aug 22, 2025

இந்திய பெண்கள் அணி ஆசிய ஹாக்கி கேப்டனாக சலிமா டெட் தொடர்கிறார்.

 5-14 ல் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி சீனாவில், வரும் செப்டம்பர் 11வது சீசன் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி, 'பி' பிரிவில் தாய்லாந்து (செப். 5). ஜப்பான் (செப். 6) சிங்கப்பூர் (செப்.8) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சலிமா டெட் தொடர்கிறார்.

Aug 21, 2025

ஆசிய துப்பாக்கி சுடுதலில்  அனந்த் ஜீத் சிங் 'தங்கம்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன்  கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர் ‘ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனந்த் ஜீத் சிங் நருகா, 119.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அனந்த் ஜீத் சிங், 57 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.சவுரப், சுருச்சி ஜோடி  வெற்றி பெற்று வெண்கலத்தை வென்றது. 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் கலப்பு அணிகளுக்கான இந்தியாவின் சவுரப் சவுத்ரி (286.10 புள்ளி), சுருச்சி இந்தர் சிங் (292.10)  ஜோடி 578.20 புள்ளிகளு டன் 5வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இந்திய ஜோடி, சீனதைபேயின் ஹெங்-யு லியு, ஹசியாங்-சென் ஹசீ ஜோடியை சந்தித்து, சவுரப், சுருச்சி ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை வென்றது. 

Aug 21, 2025

தெற்காசிய கால்பந்தில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் பூடானில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும். இந்தியா, நேபாள அணிகள் நேற்று திம்புவில் நடந்த முதல் போட்டியில், மோதின. போட்டியின் 16 வது நிமிடத்தில் அப்ஹிஸ்தா இந்திய அணிக்கு முதல் கோல் அடித்தார். 25வது நிமிடத்தில் நிராசானு, 33 வது நிமிடம் அனுஷ்கா தலா ஒரு கோல் அடித்தனர். 41 வது நிமிடம் மீண்டும் அசத்திய அப்ஹிஸ்தா, இரண் டாவது கோல் அடித் தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஜுலன் (45+1 வது) ஒரு கோல் அடிக்க, இந்தியா 5-0 என முன் னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் நிரா (56), அனுஷ்கா (62) மீண்டும் தலா ஒரு கோல் அடித்தனர்.முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Aug 21, 2025

இந்திய ஜோடி டேபிள் டென்னிஸ்  தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்வியாடெக் ஜோடி யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ஐரோப்பிய ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் சுவீடனில் கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ்ஷா ஜோடி, சிங்கப்பூரில் பங் கோயன், ஜெங் ஜியன் ஜோடியை சந்தித்தது. முதல் இரு செட்டை இந்திய ஜோடி 11-8, 11-7 என வசப்படுத்தியது. அடுத்த செட்டை 8-11 என இழந்தது. நான்காவது செட்டை 12-10 என போராடி வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்வியாடெக் ஜோடி யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம். யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம்  அமெரிக்காவின் நியூயார்க்கில், டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் புதிய முறையில் நடக்கிறது. ஒரு செட்டை கைப் பற்ற, 4 'கேம்' வென்றால் போதும்.இதன் காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி, இத்தாலியின் லோரென்சோ முசெட்டி ஜோடியை சந்தித்தது. ஸ்வியாடெக், ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

Aug 20, 2025

மனு பாகர் ஆசிய துப்பாக்கிசுடுதலில்  இரண்டு வெண்கலம் .

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில் 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சுருச்சி, பாலக் குலியா இடம் பெற்ற அணி பங்கேற்றது.மொத்தம் 1730 புள்ளி எடுத்து, வெண்கலம் வென்றது. சீனா (1740), தென் கொரிகயா (1731) தங்கம், வெள்ளி வென்றன. தனிநபர் பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டி ,தகுதிச்சுற்றில் மனுபாகர் 583 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். ஈஷா சிங் 9 (577), சுருச்சி 10 (574), பாலக் 13வது (573) இடம் பெற்று வெளியேறினர். பைனலில் கடைசி நேரத்தில் சறுக்கிய மனு பாகர், 219.7 புள்ளியுடன் 3வது இடம் பெற, வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆசிய சாம்பியன் ஷிப்பில் மனு பாகர் வென்ற 10வது பதக்கம் .ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா (ஏர் பிஸ்டல்) தங்கம் வென்றார். அணிகளுக்கான பிரிவில் ராஷ்மிகா, வன்ஷிகா, மோகினி இடம் பெற்ற இந்திய அணி தங்கம் வென்றது.  

Aug 20, 2025

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர்  .

சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை சந்தித்தார்.பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் 36 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்  சர்வதேச செஸ் லைவ் தரவரிசையில், 5 புள்ளி கூடுதலாக பெற்ற பிரக்ஞானந்தா (மொத்தம் 2784.0)  ஒரு இடம் முன்னேறி, உலகின் 'நம்பர்-3' வீரர் ஆனார்

1 2 ... 112 113 114 115 116 117 118 ... 170 171

AD's



More News