ஜெர்மன் சூப்பர் கோப்பை கால் பந்து 16வது சீசனுக்கான பைனல் ஜெர்மனியின் ஸ்டட் கர்ட் நகரில் நடந்தது. இதில் ஸ்டட்கர்ட், பேயர்ன் முனிக் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிக் அணிக்கு 18வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். பேயர்ன் முனிக் அணிக்கு 77வது நிமிடத்தில் லுாயிஸ் டியாஸ் ஒரு கோல் அடித்தார். ஸ்டட் கர்ட் அணிக்கு 'ஸ்டாப் பேஜ்' நேரத்தில் (90+3வது நிமிடம்) ஜேமி லெவெ லிங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிக் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக கோப்பை வென்றது.
டில்லியில், 'கோ கோ' உலக கோப்பை முதல்சீசன் சமீபத்தில் இந்திய ஆண் கள், பெண்கள் அணியினர் நுாறு சதவீத வெற்றியுடன் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தனர். இவர்களை கவுரவிக்கும் விதமாக, இன்று டில்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்தியாவில் பிறந்த 'கோ கோ' விளையாட்டு, பள்ளி முதல் கல்லுாரி வரை ஆர்வமாக விளையா டப்படுகிறது. ஆசிய (2026), விளையாட்டு ஒலிம்பிக்கில் (2036) 'கோ கோ' சேர்க்கப்பட வேண்டுமென மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.இந்திய ஆண்கள் அணி கேப்டன் பிரதிக் வைகர் கூறுகையில், "டில்லி செங்கோட்டையில் இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றது வாழ்வின் பெருமைமிக்க தருணமாக கருதுகிறேன். எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது,”என்றார். இந்திய பெண்கள் அணியின் நிர்மலா கூறுகையில் குடியரசு சுதந்திர தின கொண்டாட்டங்களை 'டிவி'யில் தான் பார்த்துள்ளேன். சிறப்பான உணர்வைதந்தது முதல் முறையாக சக வீராங்கனைகளுடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என்றார்.
உலகபாரா 'எலைட்' டேபிள் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில்,. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் பவினா பென் படேல், தங்கப்பதக்கம் கைப்பற்றி இருந்தார். அடுத்து இரட்டையர் பிரிவு போட்டிகள் நடந்தன. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பவினா பென், சுபம் வாத்வா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.இதில் இந்திய ஜோடி தென் கொரியாவின் கிம் ஜங் கில், லீ மில் கியு ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 12-10 என போராடி வென்ற இந்திய ஜோடி, (2-11, 3-11, 3-11) .முடிவில் இந்திய ஜோடி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, வெண்கலப் பதக்கம் பெற்றது.பவினா வென்ற இரண்டாவது பதக்கம்.
'பெகா' ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ஆஸ்திரேலியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவின் கார்டுவெல் சாராவை சந்தித்து ,அனாஹத், சிங் 3-0 (11-3, 11-3, 11-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) கிராண்ட் செஸ் தொடரின், ,நான்காவது தொடர் அமெரிக்காவின் மிசவுரியில் நடக்கிறது. முதலில் ரேபிட் முறையில் போட்டி நடந்தன. நேற்று நடந்த 7வது சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின், லெய்னியரிடம் தோல்வியடைந்தார்.குகேஷ், 8வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லேயுடன் மோதிவிளையாடி45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9வது, கடைசி சுற்றில் அமெரிக்காவின் பேபியானோவை சந்தித்தார்.இம்முறை குகேஷ், 89 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.ரேபிட் பிரிவில் நடந்த 9 சுற்று முடிவில் 10.0 புள்ளி (4 வெற்றி, 2 'டிரா', 3 தோல்வி) பெற்ற குகேஷ், 4 வது இடம் பிடித்தார்.
சென்னை செஸ் தொடரில் இந்தியாவின் பிரனேஷ் (சாலஞ் சர்ஸ் பிரிவு), ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் (மாஸ்டர்ஸ்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்,மாஸ்டர்ஸ் பிரிவு 9வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதினர். கீமர், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு 9வது சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை), 55வது நகர்த்தலில் சகவீரர் பிரனவை தோற்கடித்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), முரளி கார்த்திகேயன் (கருப்பு ) மோதிய மற்றொரு 9வது சுற்றுப் போட்டி 49வது நகர்த்த லில் 'டிரா' ஆனது.இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின அவோன்டர் லியாங் மோதிய போட்டியும் 'டிரா' ஆனது.நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சக வீரர் ஜோர்டான் வான் பாரீஸ்ட்டை வீழ்த்தினார்.ஒன்பது சுற்றுகளின் முடிவில் 7.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த வின்சென்ட் கீமர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அடுத்த நான்கு இடங்களை அனிஷ் கிரி (5.0 புள்ளி), அர்ஜுன் (5.0), முரளி கார்த்திகேயன் (5.0), நிஹால் சரின் (4.5) உறுதி செய்தனர்.இந்தியாவின் பிரனேஷ் ,ஹர்ஷ்வர்தன் சாலஞ்சர்ஸ் பிரிவு 9வது சுற்றில் மோதினர். இதில் பிரனேஷ் 46வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்ற 9வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் ஆர்யன் சோப்ரா (எதிர்: ஹரிகா), திப்தயன் கோஷ் (எதிர்: வைஷாலி), இனியன் (எதிர்: அபி மன்யு புரானிக்), அதிபன் (எதிர்: லியோன் மென்டோன்கா) வெற்றி பெற்றனர்.ஒன்பது சுற்றின் முடிவில், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பிரனேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகவிளையாட்டு 12வதுசீசன்சீனாவில், இந்தியாசார்பில் 17பேர்(10வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர். 'இன்லைன் ஸ்பீடு ஸ்கேட்டிங்' ஆண்களுக்கான 1000 மீ., 'ஸ்பிரின்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார், ஆர்யன்பால் சிங்குமன் அரையிறுதிக்குள் நுழைந்தனர். இதில் 2வது இடம் பிடித்த ஆனந்தகுமார், பைனலுக்கு முன்னேறினார். ஆர்யன் குமார் 7வது இடம் பிடித்து வெளியேறினார்.அடுத்து நடந்த பைனலில் இலக்கை ஒரு நிமிடம், 22.482 வினாடியில் கடந்த ஆனந்த்குமார் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். உலக விளையாட்டில், ஒரு சீசனில் இந்தியாவுக்கு இம்முறை அதிக பதக்கம் (3) கிடைத்துள்ளது.. உலக விளையாட்டு அரங்கில் இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்துள்ளது.
ஜெருசலேம்கிராண்ட்ஸ்லாம்தடகளபோட்டிஇஸ்ரேலில், பெண்களுக்கான2000 மீ.,'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் பங்கேற்றஇந்தியாவின் அங்கிதா தியானி23,,பந்தய துாரத்தை 6 நிமிடம், 13.92 வினாடியில் கடந்த அன்கிதா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று இலக்கை அதி வேகமாக கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.அன்கிதா தியானி உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். பாரிஸ் ஒலிம்பிக் (2024) 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இவர், ஆசிய சாம்பியன் ஷிப் (2023, வெண்கலம், 5000 மீ.,),ஆசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் (2024, வெள்ளி 3000 மீ.,), உலக பல்கலை., விளையாட்டில் (2025, வெள்ளி, 3000 மீ., 'ஸ்டீ பிள்சேஸ்') பதக்கம் வென்றுள்ளார்.
கிராண்ட் பிரிக்ஸ் தடகளபோட்டி ஹங்கேரியில், ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை(2020,2024) தங்கம் வென்ற சுவீடனின் டுப்ளான்டிஸ் 25,பங்கேற்றார். கடந்த ஜூன்மாதம் சொந்தமண்ணில் நடந்த போட்டியில் 6.28 மீ., உயரம் தாவி உலகசாதனை படைத்திருந்தார். நேற்று பைனலில் பங்கேற்ற டுப்ளான்டிஸ், அதி கபட்சமாக 6.29 மீ., உயரம் தாவி,13வதுமுறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்..ஆண்களுக்கான 3000மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்று,7 நிமிடம்,34.49 வினாடியில் வந்து 5வது இடம் பிடித்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடந்த போட்டியில் இவர், 7 நிமிடம், 38.26 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய பெண்கள் 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி தஹ்லியா, பேட்டிங் தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய ஏ அணி 47.5 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி 215/7 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. தொடரில் இந்தியா ஏ 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நாளை பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.