25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 29, 2025

பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் (28.11.2025) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் வர்கள் தொடங்கி வைத்தார்.இப்பேரணியில், 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அல்லம்பட்டி சந்திப்பு சாலை வரை பாலின பாகுபாட்டிற்கு எதிரான பிரச்சாரங்களை கூறியபடி நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்; தலைமையில் பாலின பாகுபாடு எதிரான பிரச்சாரம் 4.0-க்கான உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, பாலின பாகுபாட்டிற்கெதிரான “புதிய எழுச்சி மாற்றத்திற்கான முயற்சி” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.வீ.கேசவதாசன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 29, 2025

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து, கடைசி தேதி வரை காத்திராமல், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 3 தினங்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில் திரும்பக் கொடுக்கலாம் -

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்புப்  படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியானது 4.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக வருகை தந்து படிவத்தினை பூர்த்தி செய்ய உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கியும், படிவத்தினை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்குவது கட்டாயமில்லை. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கணக்கெடுப்புப்  படிவத்தின், மற்றொரு படிவத்தில் ஒப்புதல் பெற்று வழங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 28-11-2025 முதல் 30.11.2025 வரை  ஆகிய 3 தினங்களிலும் சிறப்பு முகாம்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07-சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 16,26,485 வாக்காளர்களில் 16,06,999 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதுவரை, 12,44,548 கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.எனவே, நிலுவையில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, வாக்காளர்கள் கடைசி தேதி வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 28.11.2025  முதல் 30.11.2025 வரை  3 தினங்கள் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களிலும் திரும்பக் கொடுத்து உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-இல் இடம் பெறுவதை உறுதி செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Nov 29, 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒளவையார் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2026-ஆம் ஆண்டு மார்ச் -8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தின விழாவில் ஒளவையார் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.ஒளவையார் விருதிற்கு விண்ணப்பிக்க, தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.பெண்களுக்கான இச்சமூகசேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.விருது குறித்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 14.11.2025 முதல் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட வேண்டும் எனவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2025 எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.மேலும், விவரங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரியிலோ அல்லது 04562- 252 701 என்ற தொலைபேசி வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 29, 2025

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள இராஜபாளையம் வட்டத்திலுள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராயிருப்பு வட்டத்தில் உள்ள தாமரைக்குளம், இராஜபாளையம் வட்டத்திலுள்ள மருங்கூர் மற்றும் குறவன்குளம் ஆகிய 3-கண்மாய்களின் மீன்பாசி குத்தகை உரிமையினை மூன்று ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை  www.tntenders.gov.in  என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.             மேலும், விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 114 B 27/1, வேல்ச்சாமி நகர், பி.ஆர்.சி.டிப்போ பின்புறம், விருதுநகர் 626 001 என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04562 - 244 707 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது adfisheriesvnr@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும், மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 28, 2025

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் நடைபெறுவதையொட்டி, வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து 04.12.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்புப்  படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியானது 4.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும், இதுகுறித்து வானொலி, ஆட்டோக்கள், மின்கல வாகனங்கள், சமூக வலைதளங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள்,  மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக வருகை தந்து படிவத்தினை பூர்த்தி செய்ய உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கியும், படிவத்தினை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்குவது கட்டாயமில்லை.மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால்  நியமனம் செய்யப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கணக்கெடுப்புப்  படிவத்தின், மற்றொரு படிவத்தில் ஒப்புதல் பெற்று வழங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை வருகின்ற 04.12.2025க்குள் வாக்காளர்களிடமிருந்து பெற்று, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07-சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 16,26,485 வாக்காளர்களில் 16,03,328 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 11,50,855 கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, நிலுவையில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, வாக்காளர்கள் 04.12.2025 வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் திரும்பக் கொடுத்து உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-இல் இடம் பெறுவதை உறுதி செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ,I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Nov 28, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த, இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANADA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக  கேபின் க்ரூவ்  (Cabin Crew), விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, (Air Cargo Introductory+ DGR) பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா போக்குவரத்து அடிப்படை பயிற்சி, (Foundation in Travel and Tourism) மற்றும் போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த 18 முதல் 23 வயது நிரம்பி பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canada மூலம் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சி சான்றிதழ் உள்ளவார்கள் தனியார் விமான நிறுவனங்களிலும் (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India), சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000/-முதல் ரூ.22,000/- வரைபெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000/-  முதல் ரூ.70,000/-  ஊதிய உயர்வு பெறலாம். இதனால் வரை தாட்கோ மூலம்  விமான சேவை பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களான  Indigo, Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange  போன்ற விமான நிறுவன சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.இப்பயிற்சியில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com)  என்ற முகவரியில் பதிவு செய்ய  வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 28, 2025

மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் .

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பிற்கிணங்க, 04.12.2025 அன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 05.12.2025 அன்று ஜவகர்லால் நேரு   பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும்,  கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும்   நடத்தப்பெறவுள்ளன.   அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் /பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக்   கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும்  அனுப்பப்படும் . மகாத்மா காந்தி பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1. காந்தியடிகளின்  வாழ்க்கைச் சுவடிகள்  2. வாய்மையே  வெல்லும்   3. தீண்டாமையும்  காந்தியடிகளும் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1.வாழ்விக்க வந்த எம்மான் 2. அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வேள்வி 3. தில்லையாடி வள்ளியம்மையும்  காந்தியடிகளும் ஆகிய தலைப்புகளில் மகாத்மா காந்தி பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன. ஜவகர்லால்நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு  1.ஜவகர்லால் நேருவின் சாதனைகள் 2. அமைதிப்புறா  நேரு 3.  விடுதலைப் போரில்  நேருவின் பங்களிப்பு   என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1. நவீன இந்தியாவின் சிற்பி 2.நேரு பதித்த சுவடுகள்  3. நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.மேலும், பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- ,  இரண்டாம்பரிசு ரூ.3000-, மூன்றாம் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும்,  தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு  பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு  ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000-  என்ற வீதத்திலும்  வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 27, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம். 

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கொங்கன்குளம் ஊராட்சியில்,  (26.11.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், மூன்று சக்கர பேட்டரி சைக்கிள் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1.5 இலட்சம்  மதிப்பிலான வண்டியினை வழங்கினார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது  02.08.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,     நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமானது நமது விருதுநகர் மாவட்டத்தில் 15-வது முறையாக நடைபெற்று வருகிறது. அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு இரத்த பரிசோதனைகள், மற்றும் பிற பரிசோதனைகளை செய்து வருகின்றனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று வெம்பக்கோட்டை வட்டம், கொங்கன்குளம் ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினையும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 27, 2025

மக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி, அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சின்னக்காமன்பட்டி ஊராட்சியில்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், இன்று (26.11.2025)சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் மக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை வழங்கினார்.பின்னர், உலக கழிப்பறை தின உறுதிமொழியாக “நமது கழிப்பறை நமது எதிர்காலம் “ என்ற உறுதிமொழியினை அனைவரும்  எடுத்துக்கொண்டனர்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி, அதுவும் குறிப்பாக பொது சுகாதாரத்தில், மக்கள் நோய்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு நோய்கள் வந்துவிட்டால் அவற்றை தீர்ப்பதற்காகவும், உரிய மருத்துவ வசதிகளை மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், முதியவர்களுக்கு இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கிராமங்களிலும் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என்று மூன்று நிலைகளில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நோய்கள் வந்ததற்கு பிறகு நாம் செய்யக்கூடிய நடைமுறைகள், அதற்கான வழிமுறைகள் ஆகும். ஆனால் நோய்கள் வருவதற்கு முன்பாகவே அதனை  சரி செய்ய முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.அதாவது, ஒரு வருடத்தில் 365 நாட்களில் நம்முடைய சுகாதார குறைபாடுகள் காரணமாகவும், சுற்றுச்சூழலின் காரணமாகவும், காற்றின் மூலமாகவும், தண்ணீரின் மூலமாகவும் பரவக்கூடிய நோய்களால் ஒரு சாதாரண தொற்று , காய்ச்சல் ஏற்பட்டு சளி மற்றும் நோய்களின் மூலமாக வருடத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்தில் 20-ல் இருந்து 25 நாட்கள் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.இதனையெல்லாம்  தடுக்க முடியுமா என்றால்,  சுகாதாரத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், தன் சுத்தத்தை முழுமையாக பேணுவதன் மூலமாகவும், கழிவறைகளை சரியாக பராமரிப்பதன் மூலமாகவும், தொற்றுநோய்களை எல்லாம் குறைத்து, நம்முடைய நோய்வாய் படக்கூடிய நாட்களை எல்லாம் குறைக்க முடியும். ஆரோக்கியமான நாட்களை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.எனவே, நம்முடைய கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள்.மேலும், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால், காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஏற்படுகிறது. அதனால் நாம் எப்பொழுதும் குப்பைகளை எரிக்கக்கூடாது. அதற்கு ஒரே ஒரு தீர்வு நாம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டு வகையாக பிரித்து கொடுக்க வேண்டும்.மனிதருக்கு  தூய காற்று, தூய தண்ணீர் இந்த இரண்டும் தான் மிக மிக அடிப்படை ஆகும். எனவே, நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.முன்னதாக, கிராமப் பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத்தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 27, 2025

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026  பணிகள் நடைபெறுவதையொட்டி, வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து 04.12.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026  பணிகள் நடைபெறுவதையொட்டி, வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களை பூர்த்தி செய்து 04.12.2025 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்  என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வேண்டுகோள்இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட  7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான கணக்கெடுப்புப்  படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியானது 4.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இதுகுறித்து வானொலி, ஆட்டோக்கள், மின்கல வாகனங்கள், சமூக வலைதளங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள்,  மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக வருகை தந்து படிவத்தினை பூர்த்தி செய்ய உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கியும், படிவத்தினை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்குவது கட்டாயமில்லை. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால்  நியமனம் செய்யப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கணக்கெடுப்புப்  படிவத்தின், மற்றொரு படிவத்தில் ஒப்புதல் பெற்று வழங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை வருகின்ற 04.12.2025க்குள் வாக்காளர்களிடமிருந்து பெற்று, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07-சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 16,26,485 வாக்காளர்களில் 15,98,433 (98.28%)    வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 9,78,296 (60.15%)  கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.எனவே, நிலுவையில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு, வாக்காளர்கள் 04.12.2025 வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்களிடம் வருகை தரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம்  படிவத்தினை இரட்டைப் பிரதிகளில் வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 2 ... 58 59 60 61 62 63 64 ... 140 141

AD's



More News