25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 12, 2026

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில்  ஜீன் -2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று காலை 11.00 மணியளவில்; விருதுநகர்  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 12, 2026

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமுதாய வளர்ச்சிக்குத் தன்னலமின்றிப் பங்காற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று *3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு* "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்படுகிறது.விருதின் மதிப்பு:ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம்.விருது வழங்கப்படும் நாள்: 15.08.2026 (சுதந்திர தின விழா)விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் & நிபந்தனைகள்:வயது வரம்பு:15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். (01.04.2025 அன்று 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். 31.03.2026 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.)சேவைக் காலம்:கடந்த நிதியாண்டில் (*01.04.2025 முதல் 31.03.2026 வரை*) செய்யப்பட்ட சமூகச் சேவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.இருப்பிடம்:விண்ணப்பிக்கும் முன்பாக, குறைந்தபட்சம் *5 ஆண்டுகள் தமிழகத்தில்* குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (இதற்கான சான்று அவசியம்).சேவையின் தன்மை: செய்த தொண்டு சமுதாய நலனுக்கானதாகவும், வெளிப்படையாகக் கண்டறிந்து மதிப்பிடக்கூடிய அளவிலும் இருக்க வேண்டும்.பணி நிபந்தனை:மத்திய/மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகப் பணியாளர்கள் *விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.கூடுதல் தேவைகள்:விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.மாவட்ட காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட *நன்னடத்தை சான்றிதழ்* சமர்ப்பிக்கப்பட வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை & கடைசி நாள்:விண்ணப்பிக்கும் தளம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான *www.sdat.tn.gov.in* ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் மற்றும் நேரம்: 06.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Jun 11, 2026

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(10.06.2026)  தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்துவதற்காக புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு(IEDP)திட்டத்தை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்(TNYIEDP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் நோக்கம் 5 ஆண்டுகளில் 10,000 மாணவர்களை தொழில்முனைவோர்களாக (Student Entrepreneurs) உருவாக்குவது, அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்திறன் வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, இ-காமர்ஸ் மற்றும் உற்பத்தித் துறை போன்ற துறைகளில் பயிற்சி அளிப்பது ஆகும்.இத்திட்டத்தின் கீழ் ரூ.19.57 கோடி மாணவர் தொழில்முனைவோர்களுக்கும், ரூ.2 கோடி அடுக்கு-1 மற்றும் அடுக்கு-2 (Tier-2 and Tier-3) நகரங்களிலுள்ள 9,000 இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு முயற்சி உணர்வை ஏற்படுத்துதல், தொழில்முனைவோர் திறன், புதுமை சிந்தனை வழங்கல், திட்ட முன்வைப்பு, பயிற்சி, கையேடு, வழிகாட்டுதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது நிமிர்ந்து நில் திட்டத்தை மையக்கல்லூரி மற்றும் உறுப்பு கல்லூரி நிறுவனங்கள் (Hub and Spoke) முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமானது மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் நிமிர்ந்து நில் திட்டத்தை செயல்படுத்துவார்கள். மற்ற உயர் கல்வி நிறுவனங்கள் உறுப்புக்கல்லூரிகளாக செயல்படுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மைய கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிமிர்ந்து நில் திட்டத்தை கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்படுத்தும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி(Entrepreneurship Development Programme), கட்டண பயிற்சி(paid Programmes), பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்(School Innovation Development Project), தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி(TNYIEDP), புத்தாக்க பற்று சீட்டு திட்டம்  மற்றும் Innovation Voucher Programme A&B, அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Facilitating Centre), தொழில் முனைதல் மற்றும் புத்தகத்திற்கான சான்றிதழ் படிப்பு (Certificate Programme in Entrepreneurship and Development) உட்பட பல்வேறு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.நிமிர்ந்து நில் என்ற திட்டமானது மாணவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் மாணவர்கள் சமுதாயத்தில் அல்லது வேறு தொழில்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மாதிரி வடிவம் கொண்டு விளக்கம் பட்சத்தில் அந்த யோசனைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.மாணவர்களுக்கு ஐடியேசன் கேம்ப்(ideation Camp) இரண்டு நாள் பயிற்சியும், பூட் கேம்ப்(Boot Camp) மூன்று நாள் பயிற்சியும் வழங்கப்படும். இறுதியாக சென்னையில் நடைபெறக்கூடிய இறுதி சுற்றில் வெற்றி பெறும் 30 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும். மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வளர் தொழில் மையங்களோடு (Incubation Centre) அவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி வசதிகள் செய்து தரப்படும்.எனவே, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து அறிந்து ஒவ்வொரு கல்லூரியிலும் இத்திட்டத்தை முன்னெடுத்து மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் குறித்தும், கல்லூரிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இந்த புதுமையான நவீன உலகில் மாணவர்கள் தொழில்முனைவோராக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்கு கல்லூரிகளின் பங்களிப்பு குறித்தும் கலந்து கொண்ட 40 க்கும் மேற்பட்ட கல்லூரி  முதலவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன், திருநெல்வேலி மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.சிவபாரதி, மைய கல்லூரி ஒருங்கிணைப்பாளர்(கலசலிங்கம் பல்கலைக்கழகம்) டாக்டர்.அறிவரசன் உட்பட 40 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 11, 2026

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள் ,திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் கள ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (10.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2025-26 திட்டத்தின் கீழ், ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் புதிய கிணறுகள்: பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2025-26 திட்டத்தின் கீழ், ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் மூன்று இடங்களில் புதிதாக கிணறுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் செண்பகத்தோப்பு பேயனாற்றுப் படுகையில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி கிணற்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் நகராட்சியின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க, இந்த உயர் கொள்ளளவு கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பேயனாற்றுப் படுகை கிணற்றின் கட்டுமானப் பணிகளைப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, அதாவது திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். திருவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி (KNMT 2024-25):கலைஞர் மேம்பாட்டுத் திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ், ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பேருந்து நிலைய தரைத்தளம், பயணிகள் நிழற்குடை, வணிக வளாக கடைகள் மற்றும் கழிவறைகளின் கட்டுமானத் தரத்தை (Structural Stability) பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பேருந்துகள் வந்து செல்வதற்கான விசாலமான அணுகுசாலை (Approach Roads) போன்றவற்றைத் தரமாக அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அம்மா உணவகம் – ஆய்வு திருவில்லிபுத்தூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் பயன்படுத்தப்படும் குடிநீரின் தூய்மைத் தன்மையை ஆய்வு செய்தார். சமையலறை மற்றும் பாத்திரங்களை நாளும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. திருவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி (KNMT 2023-24): தொடர்ந்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2023-24 திட்டத்தின் கீழ், ரூ.16.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் விநியோகிக்கப்படும் கால அளவு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், நீரிலுள்ள குளோரின் (Chlorine) அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீரான குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குழாய் உடைப்புகள் அல்லது குடிநீர் வீணாகுதல் போன்ற புகார்கள் வந்தால் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்வின் போது, திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், வட்டாட்சியர், குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 11, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 16.06.2026 அன்று நடைபெற உள்ளது .

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 16.06.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jun 11, 2026

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் (Consolidate Pay) அடிப்படையில் மாதம் ரூ.15000/-ஊதியத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது. (Under District Health Society)பணியின் பெயர்: ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II)மொத்த பணியிடங்கள்:     6மாத ஊதியம்:    ரூ.15000/-வயது வரம்பு:குறைந்த பட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)கல்வித்தகுதி:மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு- DMLT (இரண்டு ஆண்டுகள்) KING INSTITUTE OF RESEARCH AND PREVENTIVE MEDICINE அல்லது   தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது. விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வி தகுதி/ சாதிச் சான்று/ஆதார் நகல்) தபால் மூலமாக அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 29.06.2026             பிற்பகல் 5.00 மணிவரை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, எண்:1, பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், கூரைக்குண்டு கிராமம், விருதுநகர்-626 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 11, 2026

ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இரயில்வே வழித்தடங்கள்  மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM:  541/200-300  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல்  மாலை 06.00 வரையிலும்,மத்தியசேனை-சங்கரலிங்காபுரம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 417 Rly KM:  550/800-900  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை மற்றும் அழகாபுரி - மீசலூர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 410 Rly KM:  544/400-500  என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை ஆகிய வழித்தடங்களில் 12.06.2026 அன்று காலை 10.00 மணி முதல்  மாலை 06.00 வரையிலும், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய இரண்டு தினங்கள் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை விடுத்து,  மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jun 10, 2026

இராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (09.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தரப் பரிசோதனை:ஆய்வு செய்த இடம்: இராஜபாளையம் நாடார் துவக்கப்பள்ளி.ஆய்வு விவரம்: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுவை மற்றும் அளவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து பள்ளி சமையலறையை எப்போதும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி (Menu) சத்தான, சுவையான உணவைத் தடையின்றி வழங்க வேண்டும். காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் தரத்தினை பள்ளித் தலைமை ஆசிரியர் தினசரி கண்காணிக்க வேண்டும் என உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.சீரான குடிநீர் விநியோகம் & குளோரின் அளவு ஆய்வு:ஆய்வு செய்த இடம்: குறிஞ்சி நகர் பகுதி.ஆய்வு விவரம்: பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் விநியோகிக்கப்படும் கால அளவு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், நீரிலுள்ள குளோரின் (Chlorine) அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது.கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீரான குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குழாய் உடைப்புகள் அல்லது குடிநீர் வீணாகுதல் போன்ற புகார்கள் வந்தால் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அம்ரூட் 2.0 திட்டம் – புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்:திட்ட மதிப்பு: ரூ.27.25 கோடிஆய்வு விவரம்: இராஜபாளையம் நகராட்சியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, மத்திய-மாநில அரசின் கூட்டு நிதி பங்களிப்புடன் (Amrut 2.0) கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.கட்டுமானப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். சுத்திகரிப்பு இயந்திரங்களின் தரம் மற்றும் சிவில் கட்டுமானப் பணிகளின் நிலைத்தன்மையை (Quality Control) பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.அதிநவீன அறிவுசார் மையம் (Intellectual Centre / Library):நகராட்சியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (UIDF) 2025-2026 ன் கீழ் ரூ.2.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.நுண் உரம் செயலாக்க மையம்: இராஜபாளையம் நகராட்சியில் செயல்பட்டு வரும் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நுண் உரம் செயலாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இம்மையத்திற்கு நகராட்சி வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.பிரதான குடிநீர் நீரேற்று நிலையம்: பின்னர், இராஜபாளையம் நகராட்சிக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.200.06 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டு இயங்கி வரும் பிரதான குடிநீர் நீரேற்று நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.முன்னதாக, இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, இராஜபாளையம் நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 10, 2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.06.2026) அன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.“மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027” பணிகளில் ஈடுபடவுள்ள மாவட்ட அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்றுநர்கள் (Field Trainers) 68 நபர்களுக்கு 08.06.2026 முதல் 10.06.2026 வரை மற்றும் 15.06.2026 முதல் 17.06.2026 வரை என இரண்டு பகுதிகளாக  மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது. தற்போது முதல் பகுதி பயிற்சி வகுப்பு 08.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர்அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்து, எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களின் உருவாக்கத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விரிவாக எடுத்துரைத்தார். களப்பணியாளர்கள் அனைவரும் எவ்வித தொய்வுமின்றி, துல்லியமான விவரங்களைச் சேகரிக்கும் வகையில் தங்களை இப்பயிற்சியில் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் திரு. சின்னத்துரை, புள்ளியியல் ஆய்வாளர் திரு.ப.  ராஜா மற்றும் முதன்மை பயிற்றுநர்கள்  திரு.  ப. கருப்பசாமி, புள்ளியியல் துணை இயக்குநர் திரு. கெ. கணேசன் புள்ளியியல் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Jun 10, 2026

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் SSC Combined Gradual Level (CGL) CBT -1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் SSC & RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான  புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன் கணினி ஆய்வகம் உள்ளது. இலவசப் பயிற்சி வகுப்பு விவரம்:தேர்வு: பணியாளர் தேர்வு வாரியத்தின் *SSC Combined Graduate Level (CGL) - CBT 1* தேர்வு.தொடக்க நாள்: *10.06.2026 (புதன்கிழமை)* முதல் தினசரி வகுப்புகள் நடைபெறும்.இடம்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகம்.பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:திறன் வாய்ந்த சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.இலவச பாடவாரியான தேர்வுகள் (Topic-wise Tests) மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் (Full Mock Tests) தொடர்ச்சியாக நடத்தப்படும். பதிவு செய்யும் முறை:இவ்வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள் கீழே உள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்: 1. மின்னஞ்சல் வழியாக: studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். 2. நேரடிப் பதிவு: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு *நேரடியாகச் சென்று* தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எனவே SSC Combined Gradual Level (CGL) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 18 19 20 21 22 23 24 ... 139 140

AD's



More News