25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 19, 2026

”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது - 2026” விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5 முதல் 18 வயதிற்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் ”பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது 2026”-னாது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுபவர்கள் இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 31.07.2026 அன்றைய தினத்தில் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளும் இருத்தல் வேண்டும். இவ்விருதினை பெற தகுதியுடையவர்கள் https://awards.gov.in  என்ற இணையதளத்தில் 10.07.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 19, 2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான இன்று வருவாய்த் தீர்வாய அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) ஐந்தாம் நாளான (18.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி ஜூன் 25 வரை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (18.06.2026) சாத்தூரில் நடைபெற்ற இத்தீர்வாயத்தில் 3-பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2-பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2-பயனாளிகளுக்கு கணினி வழி இ-பட்டாக்களையும்,3-கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் (Nutrition Kit) மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா அளவை எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.இந்த வருவாய் தீர்வாயம் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் திரு.மு.வடிவேல், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 19, 2026

சிவகாசியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் வரும் 21.06.2026  அன்று சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது.          இச்சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் மோட்டார்ஸ் (HYUNDAI MOTORS), சியட் டயர்ஸ் (CEAT TYRES), ஃபாக்ஸ்கான் ஹான் ஹை டெக்னாலஜி (FOXCONN HON HAI TECHNOLOGY), அடையார் ஆனந்த பவன் (ADYAR ANADHA BHAVAN), வி.வி.வி அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் (V.V.V & SONS EDIBLE OIL), ராயல் என்பீல்ட் அகாடமி (ROYAL ENFIELD ACADEMY), பென்குயின் அப்பாரல்ஸ் (PENQUIN APPARELS), டிவிஎஸ் சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் (TVS SUNDARAM BREKELINING), 5கே கார் கேர் (5K CAR CARE), ஆனைமலைஸ் டொயோட்டா (ANAAMALAIS TOYOTA), டிவிஎஸ் மொபிலிட்டி பாலிமெரிக் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (TVS MOBILITY POLIMARIC PRODUCTS PVT LTD), செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAINT GOBAIN INDIA PVT LTD) போன்ற  50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 3000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/hBAJ9cavdPKepNLVA ஐ பதிவு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com)  தொடர்பு கொள்ளுமாறு மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 19, 2026

தேசிய நெடுஞ்சாலை எண். 744 வடுகபட்டி - தெற்குவெங்காநல்லூர் நான்கு வழிச்சாலைக்கு நில இழப்பீடு பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம், வத்திராயிருப்பு வட்டம், சிவகாசி வட்டம் மற்றும் இராஜபாளையம் வட்டங்களில் வடுகபட்டி முதல் தெற்கு வெங்காநல்லூர் நான்கு வழிச்சாலை திட்டம் பணிக்காக அந்த பாதையில் உள்ள தனி நபர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. திருமங்கலம் - செங்கோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் இந்தப் பாதையில் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதில், பெரும்பாலானோருக்கு நிலத்திற்கான இழப்பீடுத்தொகை தேசிய நெடுஞ்சாலைத் துறையால் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.இருப்பினும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் அச்சம்தவிர்த்தான், அத்திகுளம் செங்குளம், அயன்நாச்சியார்கோவில், தெய்வேந்திரி, முத்துவெங்கட்ராயபுரம், நலிங்கப்பேரி, பாட்டாகுளம் சல்லிபட்டி, பிள்ளையார்குளம், பூவாணி, திருவில்லிபுத்தூர், விழுப்பனூர், தைலாகுளம் மற்றும் வடுகபட்டி,வத்திராயிருப்பு வட்டத்தில் களத்தூர், குன்னூர், எஸ்.அம்மாபட்டி, நத்தம்பட்டி மற்றும் மூவரை வென்றான்,இராஜபாளையம் வட்டத்தில் ரகுநாதபுரம், மேலராஜகுலராமன், சமுசிகாபுரம், தெற்கு வெங்காநல்லூர், கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், புத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம்,சிவகாசி வட்டத்தில் செவலூர், மங்களம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நிலங்களுக்கான இழப்பீடுத்தொகையை பெறாதவர்கள் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புக்கான தனி வட்டாட்சியர் (நி.எ) திருவில்லிபுத்தூர் மற்றும் தனி வட்டாட்சியர் (நி.எ) இராஜபாளையம் அலுவலகத்திலோ (அல்லது) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக (பழைய கட்டிடம்) வளாகத்தில் செயல்படும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இழப்பீட்டுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் (விடுமுறை நாட்களை தவிர பிற அலுவலக வேலை நாட்களில்) என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 18, 2026

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சூலக்கரை அன்னை சத்யபாமா நினைவு காப்பகம், புளியங்குளம் – புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம், மருளுத்து நடுநிலைப்பள்ளி - காலை உணவுத் திட்டம், இராமக்குடும்பன்பட்டி – சமுதாயக்கூடம் & அங்கன்வாடி புதுப்பித்தல், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  (17.06.2026) ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, சூலக்கரை அன்னை சத்யபாமா நினைவு காப்பகத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களின் தங்குமிடம் மற்றும் குடிநீர், கழிப்பறை வசதி, மின் வசதி, படிப்பறை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பார்வையிட்டார்.மேலும், மாணவர்களின் கல்வி நிலை குறித்து கேட்டறிந்து மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.புளியங்குளத்தில் கனிமவள நிதி-2020-2021 திட்டத்தின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடப் பணிகளையும்தொடர்ந்து, மருளுத்து நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை பார்வையிட்டு, மாணவர்களுடன் உணவு அருந்தினார். பின், தேசிய யோகா ஒலிம்பியாட் 2026 னை முன்னிட்டு, இணைய வழி வினாடி வினா (Online Quiz) போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ்கள் பெற்ற 4 மாணவ, மாணவியர்கள் மற்றும் சிலம்பம் போட்டியில் வென்று சான்றிதழ் பெற்ற மாணவரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தார்.பின்னர், இராமக்குடும்பன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினையும், RBM 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.2 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்டு வரும், அங்கன்வாடி மையத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தும், SCPAR 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சமுதாயக் கூடத்தில் தடையற்ற குடிநீர், மின்சாரம் மற்றும் முறையான வடிகால் வசதிகள் (Drainage Facilities) அமைப்பதை உள்கட்டமைப்புப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.இராமச்சந்திரன் மற்றும் லியாகத் அலி, செயற்பொறியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 18, 2026

1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான இன்று வருவாய்த் தீர்வாய அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) நான்காம் நாளான இன்று (17.06.2026) வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ம் ஆண்டு ஜூன் 12 தொடங்கி, ஜூன்16 முதல் ஜூன் 19 வரை மற்றும் ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (17.06.2026) சாத்தூரில் நடைபெற்ற இத்தீர்வாயத்தில் 4-பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2-பயனாளிகளுக்கு இறப்புச் சான்று ஆணைகளையும், ஈமக்கிரியை உதவித்தொகையாக ரூ.40 ஆயிரம் வீதம் 2 நபர்களுக்கு ரூ.80 ஆயிரத்திற்கான உதவித்தொகையினையும்,தோட்டக்கலைத் துறை சார்பில், நுண் நீர் பாசனத் திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 2-நபர்களுக்கு தெளிப்பு நீர் பாசனக் கருவிகளையும், இணையதளம் வாயிலாக ஒரு நபருக்கு விதவை மற்றும் வாரிசு சான்றிதழும், ஒரு நபருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும்,(16.06.2026) அன்று நடந்த வருவாய்த் தீர்வாயத்தில் கணினி வழி இ-பட்டா வேண்டி மனு அளித்த 11-பயனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று கணினி வழி இ-பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா அளவை எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.இந்த வருவாய் தீர்வாயம் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, வட்டாட்சியர் திரு.மு.வடிவேல், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jun 18, 2026

கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல  வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல  வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை இயற்கை  மரணத்திற்கான உதவித்தொகை ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேற்கண்ட, நலத்திட்ட உதவிகளை பெற, 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாத கிறித்தவ (அ) முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள், கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களும், பள்ளிவாசல்கள் மற்றும் மதராஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷுர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களும் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம். மேற்படி, கிறித்துவ நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளை www.cwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், முஸ்லீம் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளை www.uwb.tn.gov.in இணையதளம் வாயிலாகவும் பெறலாம்மேலும் விவரங்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை (தொலைபேசி எண்.94454 77844) அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 18, 2026

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய  முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மருத்துவ அலுவலர் (Medical Officer) -1, சுகாதார ஆய்வாளர்  நிலை (Health Inspector)-4, துணை செவிலியர் (Auxilary Mid Wife) (ANM)-3, மருத்துவமனை பணியாளர் (II) (Hospital Worker)-2,  ரேடியோகிராபர் (Radiographer) -2, முதன்மை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) (Senior Treatment Supervisor) (STS)-1, பாதுகாவலர் (Security Guard)-1, செவித்திறன் நிபுணர்/பேச்சுப் பயிற்சியாளர் (Audiologist/Speech Therapist)-1மேற்காணும் பதவிகளுக்கான விண்ணப்பம், கல்வித்தகுதி வயது வரம்பு ஆகியவற்றை விருதுநகர் மாவட்ட இணையதளத்தில் (http://virudhunagar.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்தப்பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணி நியமனத்திற்கான ஒப்பந்த பத்திரம் அளிக்கவேண்டும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 06.07.2026 மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண்:126, முதல் மாடி, விருதுநகர் - 626 002 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 17, 2026

விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக திரு.அ.கொ.நாகராஜபூபதி அவர்கள் (16.06.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக திரு.அ.கொ.நாகராஜபூபதி அவர்கள் (16.06.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Jun 17, 2026

சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  (16.06.2026) அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.சிவகாசி மாநகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் இரு தளங்களுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கும் கட்டுமான பணிகளையும்,2022-2023 சிறப்பு நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், மாநகராட்சி அலுவலகக் கட்டுமான பணிகளையும்,6-வது மாநில நிதிக் குழு (SFC) நிதியின் கீழ், ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான கூடுதல் கட்டுமான பணிகளையும்,15-வது மத்திய நிதிக் குழு (CFC) நிபந்தனையற்ற மானியத்தின் கீழ், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் மற்றும் வணிக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணிகளையும்,சிவகாசி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாநகர நகர் சுகாதார அலுவலர் திருமதி ஸ்ரீதேவி, மாநகராட்சி பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 139 140

AD's



More News