மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரியில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஒருங்கிணைந்த ஏவுகணை உற்பத்தி மையத்தை அமைக்க அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு இது முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானின் அதிவேக ஷின்கான்சென் ரயிலில் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஜப்பானின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்திய கிராமப்புற தொழில்களுடன் இணைக்கும் நோக்கில் அவர் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின்'தகுமி' கைவினை கலாச்சாரத்தை இந்திய கிராமப்புற திறமைகளுடன் இணைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அவரது இலக்கு.
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்ட கிராமத்தில் இணையம், ஸ்மார்ட்போன் வசதியின்றி வளர்ந்த அவாய்ஸ் அகமது, தனது ஆர்வத்தால் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான பிக்ஸல் (Pixxel)-ஐ தொடங்கினார்.பிட்ஸ் பிலானியில் படித்த அவர், 2019-ல் நண்பருடன் இணைந்து நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று பிக்ஸலின் ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோள்கள் பயிர் பாதிப்பு, மீத்தேன் கசிவு, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாகக் கண்டறிகின்றன.95 மில்லியன் டாலருக்கும் அதிக முதலீட்டை ஈர்த்துள்ள பிக்ஸல், 2024-ல் நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இணைய வசதி இல்லாத கிராமத்தில் தொடங்கிய அவரது ஆர்வம், உலகளவில் கவனம் பெற்ற வெற்றிக் கதையாக மாறியுள்ளது.
பழைய விதிமுறைகள்-முகவரி அச்சிடப்படும்.பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி அச்சிடப்பட்டு வருகிறது.பெற்றோர் பெயர்கள் அச்சிடப்படும்.பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் அச்சிடப்பட்டு வருகிறது.பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.குறைந்த கட்டணம்.முந்தைய கட்டண விபரம் நடைமுறையில் இருந்தது.குறைந்த PSK & POPSK மையங்கள் .பாஸ்போர்ட் சேவைகளுக்கு வரையறுக்கப்பட்ட மையங்களே இருந்தன. பாஸ்போர்ட் + குடியுரிமை ஆதாரம் .குடியுரிமை ஆதார வெளிப்படையாக குறிப்பிப்படவில்லை.புதிய விதிமுறைகள் (2026)முகவரி நீக்கப்பட்டது.பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி இனி அச்சிடப்படாது .பெற்றோர் பெயர்கள் நீக்கப்பட்டது.பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் இனி அச்சிடப்படாது.பிறப்புச் சான்றிதழ் கட்டாயம். 01 அக்டோபர் 2023 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்.கட்டணம் உயர்வு-01 ஜூலை 2026 முதல் புதிய கட்டண விபரம் அமலுக்கு வருகிறது.அதிக PSK & POPSK மையங்கள்அணுகலை மேம்படுத்துவதற்காக PSK & POPSK மையங்களை விரிவாக்குகிறது.பாஸ்போர்ட் + குடியரிமை ஆதாரம்பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணம், குடியுரிமைக்கு ஆதாரம் அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.ஏன் இந்த மாற்றங்கள்?பாதுகாப்பை மேம்படுத்கவும், தனியுரிமையை பாதுகாக்கவும், செயல்முறையை எளிதாக்கவும், உலக தரநிலைகளுடன் ஒத்திசைக்கவும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் சொந்த விண்வெளி நிலையத்தையும் உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் விண்வெளி சாதனைகள் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சில நாடுகளில் அரிதாக 'மீன் மழை' நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. பலத்த சூறாவளி அல்லது நீர்ச்சுழல் காரணமாக ஏரி, குளங்களில் இருக்கும் சிறிய மீன்கள் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு, பின்னர் மழையுடன் தரையில் விழுகின்றன என்று வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவின் சில பகுதிகளிலும் அரிதாக ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இனி பாக்கெட் வடிவில் விநியோகிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. அரிசி 5 மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளிலும், மற்ற பொருட்கள் 1 முதல் 5 கிலோ வரை இயந்திரங்கள் மூலம் பேக் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்படும். இதனால் தரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் வெளி நிறுவனங்களை அதிகம் சாராமல், தங்களது AI உள்கட்டமைப்பு மற்றும் தரவின் கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். AI சேவைகளை முழுமையாக சார்ந்தால், நிறுவனங்களின் நீண்டகால மதிப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே சென்றுவிடும் என்றும், திறந்த மூல (Open Source) AI மற்றும் சொந்த உள்கட்டமைப்பை பயன்படுத்துவது எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது பொதுத்துறை நிறுவனமான BSNLஇது வழக்கமான மொபைல் போன் வரம்புகளைப் பயன்படுத்தாமல், செயற்கைக்கோள்கள் வாயிலாக. இயங்கக்கூடியது.Satellite Phone - சிறப்பு அம்சங்கள்!நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் வேலை செய்யும்.தொலைதூர இடங்களில் இருந்தும் வாய்ஸ் கால்.பேரிடர் காலங்களில் அவசர கால் உதவி கோரும் SOS வசதி.சார்ஜிங் செய்யும் வசதி இல்லாத இடங்களிலும் நீண்ட நேரம் செயல்படும் பேட்டரி.கடினமான சூழலையும் தாங்கும் உறுதியான வடிவமைப்பு.இந்த போனின் விலை rs. 1,34,166/-சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு பயன்பாட்டின் தன்மையைப் பொறுத்து தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யார் வாங்கலாம்?பாதுகாப்பு துறை .மீட்பு நடவடிக்கைகள்.பெட்ரோல் படைப் பணிகள்.சார்ஜ் தேடுதல்.தொலைதூர தொழிலாளர்கள்.தொலைதூர பகுதிகளில் பணியாற்றும் பயணிகள்.அரசுப் பணியாளர்கள்.
தமிழக அரசின் இந்த புதிய வாட்ஸ்அப் எண் மூலம்,மக்கள் தங்கள் பகுதிப் பிரச்சனைகளை ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்!உங்கள் பிரச்சனை உங்கள் தீர்வு அரசின் பொறுப்பில் - +91 7845252525.எப்படிப் புகார் அளிப்பது?இந்த எண்ணை உங்கள் தொலைபேசியில் சேமிக்கவும்.வாட்ஸ்அப் மூலம் வணக்கம்" என்று செய்தி அனுப்பவும்.உங்கள் பகுதிப் பிரச்சனையை விளக்கி புகைப்படம்/ வீடியோ /ஆவணங்கள் உடன் அனுப்பவும்.உங்கள் புகார் பதிவு செய்யப்படும் தொடர்புடைய துறை நடவடிக்கை எடுத்து உங்களுக்கு தகவல் தரும்.புகார்கள் அளிக்கக்கூடியவை -சாலை /பாதை சேதம்.குடிநீர் பிரச்சனை .கழிவு நீர் / வடிகால் பிரச்சனை. மின்விளக்கு பழுது. குப்பை அகற்றல் பிரச்சனை.மற்றும் பல.....உங்கள் பிரச்சனை சொல்லுங்கள்... தீர்வை நாங்கள் கொண்டு வருகிறோம்!