வாகனங்களுக்கான புகை மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் பெறும் நடைமுறையில் புதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி, RC புத்தகத்துடன் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை உறுதிப்படுத்திய பிறகே சான்றிதழ் வழங்கப்படும். RC-யில் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், Parivahan இணையதளம் அல்லது RTO அலுவலகம் மூலம் அதை புதுப்பிக்க வேண்டும்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், தேசிய கல்விக் கொள்கை (NEP) அல்லது மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்தாமல், தமிழகத்துக்கான நிலுவை ரூ.3,284 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தினார்.கல்வி அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பு என்பதால், கொள்கை காரணங்களுக்காக நிதியை நிறுத்தக் கூடாது என்றார். மேலும், இருமொழிக் கொள்கையில் தமிழகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், நிதி கூட்டாட்சி, தென் மாநிலங்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு, திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவித்தல் மற்றும் இலங்கை, பாகிஸ்தானில் உள்ள தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.ஜி. சந்திரமோகன், கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். மாதம் ரூ.65 சம்பளத்தில் வேலை செய்த அவர், குடும்ப நிலத்தை விற்று கிடைத்த ரூ.13,000 முதலீட்டில் 1970-ல் 'அருண்' ஐஸ்கிரீம் தொழிலை தொடங்கினார்.பின்னர் பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால்வளப் பொருட்களிலும் விரிவாக்கம் செய்து, ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால்வள நிறுவனங்களில் ஒன்றாக வளர்த்தார்.தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.20,000 கோடிக்கும் மேல் உள்ளது. ஆர்.ஜி. சந்திரமோகனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிய தொடக்கமும் விடாமுயற்சியும் இருந்தால் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா அரோரா, 15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தி, சுயமாக நிரலாக்கம் கற்று தொழில்முனைவோராக மாறினார். முதலில் உருவாக்கிய செயலி ஆப்பிளின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது.பின்னர் அமெரிக்க லாரி போக்குவரத்து துறைக்கான நிதிசார் சேவைகளை வழங்கும் AtoB நிறுவனத்தை தொடங்கி, அதை 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,600 கோடி) மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தார்.24 வயதில், உலகப் புகழ்பெற்ற ஸ்டார்ட்அப் அமைப்பான Y Combinator-இன் இளம் வயது General Partner ஆக தேர்வானது அவரது சாதனையில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
முன்னாள் வங்கி அதிகாரி அமித் கிஷன், கார்ப்பரேட் வேலையை விட்டு ஆந்திராவில் 650 ஏக்கரில் 'ஹெப்பீவு ஃபார்ம்ஸ்' என்ற இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியுள்ளார். ரசாயனங்கள், டிராக்டர்கள் இன்றி 700 நாட்டு மாடுகளின் உதவியுடன் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்து, ஆண்டுக்கு சுமார் ரூ.21 கோடி வருவாய் ஈட்டுகிறார். 40-க்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியுடன், 3,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறார்.
PhonePe-யின் காப்பீட்டு பிரிவு தலைவர் விஷால் குப்தா, புதிய தொழில்முயற்சியை தொடங்க பதவியை விட்டு விலகியுள்ளார். இதையடுத்து, காப்பீட்டு வணிகம்நுகர்வோர் பணப் பரிவர்த்தனை (Payments)பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதை சோனிகா சந்திராவழிநடத்த உள்ளார். 2021-ல் காப்பீட்டு உரிமம் பெற்ற PhonePe-யின் காப்பீட்டு பிரிவு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் நிறுவன வருவாயில் சுமார் 12% பங்களிப்பு அளித்துள்ளது.
கல்விக்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய Zoho Classes 2.0 தளத்தை ஜோஹோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் AI பாடத்திட்ட உருவாக்கம், 24/7 AI பயிற்றுவிப்பாளர், 22 இந்திய மொழிகளுக்கான ஆதரவு, மாணவர் முன்னேற்ற கண்காணிப்பு உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.இந்ததளம்தற்போதுஇந்தியாவில்பயன்பாட்டுக்குவந்துள்ளது.மத்தியமற்றும்மாநிலஅரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உரிமக் கட்டணம் இன்றி வழங்கப்படுவதுடன், 100 மாணவர்கள் வரை உள்ள தனிப்பட்ட ஆசிரியர்களும் இலவசமாக பயன்படுத்தலாம். விரைவில் உலக நாடுகளிலும் இந்த சேவை அறிமுகமாக உள்ளது.
0–5 வயது குழந்தைகளுக்கான ஆதார் பதிவு செய்யும்போது, பிறப்புச் சான்றிதழில் பெயர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பெற்றோரில் ஒருவரின் ஆதார் அவசியமாகும். அவர்களின் புகைப்படம், கைரேகை, கருவிழி விவரங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழில் QR குறியீடும் Green Verification Tick-மும் இருக்க வேண்டும். மேலும், அந்தச் சான்றிதழ் லேமினேட் செய்யப்பட்டிருக்கக் கூடாது.
நடப்பிலுள்ள விதிகளின்படி, ஒரு வீட்டில் பொதுவாக இரண்டு 14.2 கிலோ எடையுள்ள வீட்டு LPG சிலிண்டர்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் அனுமதியின்றி சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தால், பறிமுதல், அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். விதிமீறலுக்கு உதவும் விநியோகஸ்தர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
டிவிக்கு மாற்றாக ஹோம் தியேட்டர் அனுபவம் வழங்கும் Samsung Freestyle 2nd Gen Smart Projectorதற்போது அமேசானில் 58% தள்ளுபடியில் ரூ.44,990க்கு விற்பனையாகிறது. 100 இன்ச் FHD திரையிடல், HDR10+, Auto Focus, Auto Keystone, Netflix, Prime Video, Hotstar, Zee5 உள்ளிட்ட OTT செயலிகளுக்கான ஆதரவு மற்றும் 360° ஒலி வசதியுடன் இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.