25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 31, 2026

தமிழரின் மனிதநேய வரலாறு: 'பாலம்' கல்யாணசுந்தரம்.

திருநெல்வேலியில் பிறந்த நூலகர் 'பாலம்' கல்யாணசுந்தரம், தன் வாழ்நாள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சொத்துக்களை ஏழை குழந்தைகளின் கல்விக்காகத் தானமாக வழங்கியுள்ளார்.அமெரிக்காவின் 'Man of the Millennium' விருதுடன் கிடைத்த ரூ.30 கோடி பரிசுத் தொகையையும் ஏழைகளுக்கே வழங்கிய இவருக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Jul 31, 2026

விண்வெளிச் செய்தி (SpaceX சாட்டிலைட்).

SpaceX நிறுவனம் 2026-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 50 ராக்கெட்டுகளை ஏவி சாதனை படைத்துள்ளது.ஏப்ரலில் ஏவப்பட்ட 50-வது ராக்கெட் மூலம் 25 ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. இதன் மூலம் விண்வெளியில் உள்ள மொத்த ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களின் எண்ணிக்கை 10,300-ஐ நெருங்கியுள்ளது.

Jul 30, 2026

மதுரை விமான நிலையம்... புதிய உயரத்திற்கு பறக்கிறது!

மதுரை சர்வதேச விமான நிலையம் வேகமாக விரிவாக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2,000 பயணிகள் பயணிக்கும் வசதி, 10,000 சதுர மீட்டர் கூடுதல் பரப்பு, புதிய Parking Bay, பயணிகள் பாலம் மற்றும் 2 புதிய Baggage Carousels உள்ளிட்ட வசதிகள் உருவாகின்றன. இந்த மேம்பாடு தென் தமிழகத்தின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்திற்கு புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்கும்.

Jul 30, 2026

ஒவ்வொரு இந்தியரும் இந்த எண்களை வைத்திருக்க வேண்டும்.

போலீஸ் -112 தீயணைப்பு துறை-101 ஆம்புலன்ஸ்-102 ரயில்வே தகவல்-139 பெண்கள் உதவி எண்-1090 குழந்தைகள் உதவி எண் -1098 முதலமைச்சர் உதவி எண் - 1076 ரயில் விபத்து-1072 விவசாயிகள் அழைப்பு மையம் -1551 சாலை விபத்து-1073 போக்குவரத்து போலீஸ்-103 அவசர எச்சரிக்கை -1031 விலங்கு உதவி எண் - 1092

Jul 29, 2026

தேசிய சின்னங்களும் அறிவிக்கப்பட்ட ஆண்டுகளும்..

தேசிய சின்னம்     அறிவிக்கப்பட்ட  ஆண்டு. 1.தேசிய கீதம் - ஜன கன மன கன - (1950) 2.தேசிய பாடல் - வந்தே மாதரம்  - (1950) 3.தேசிய சின்னம் - அசோகச் சக்கரம் - (1950) 4.தேசியக்கொடி - மூவர்ணக் கொடி - (1947) 5.தேசிய காலண்டர் - சக வருடம்  - (1957) 6.தேசிய விலங்கு – புலி - (1973) 7.தேசிய நதி – கங்கை - (2008) 8.தேசிய பறவை – மயில் -(1963) 9.தேசிய மலர் –தாமரை - (1950) 10.தேசிய மரம் – ஆலமரம் - (1950) 11.தேசிய கனி – மாம்பழம் -  (1950) 12.பாரம்பரிய விலங்கு – யானை- (2010) 13.நாணய சின்னம் - ரூபாய் சின்னம்  - (2010) 14.தேசிய நுண்ணுயிரி ( லாக்டோ பேசில்லஸ் )  -  (2012) 

Jul 29, 2026

அமெரிக்காவில் இந்திய ராணுவ அதிகாரியின் அபார சாதனை.

அமெரிக்க ராணுவத்தின் புகழ்பெற்ற Command and General Staff College-ல் நடைபெற்ற 10 மாத தலைமைத்துவப் பயிற்சியில் இந்திய ராணுவ மேஜர் பிரபாத் மிஷ்ரா சிறப்பான சாதனை படைத்துள்ளார்.92 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற இந்தப் பயிற்சியில், அவர் இரண்டு முக்கிய கல்வி விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருது சிறந்த தலைமைத்துவத் திறனுக்கான விருது இந்த இரட்டை கவுரவம் இந்திய ராணுவத்தின் திறமையை சர்வதேச அளவில் மீண்டும் நிரூபித்துள்ளது.

Jul 29, 2026

இந்தியாவின் புதிய ரேடார் அமைப்பு... வான் பாதுகாப்பில் அடுத்த கட்டம்!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்திய விமானப்படை மற்றும் அதானி டிபென்ஸ் & ஏரோஸ்பேஸ் இணைந்து உருவாக்கிய புதிய ரேடார் அமைப்பு, 500 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது.

Jul 28, 2026

குளிர்பானம், ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு தீவிர கண்காணிப்பு.

கோடை வெயிலால் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்க தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Jul 28, 2026

75 வீடுகள் 51 IAS, IPS அதிகாரிகள்.

உத்தரபிரதேசத்தின் மாதோபட்டி கிராமம் , இந்தியாவின் "IAS கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. வெறும் 75 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் இருந்து இதுவரை சுமார் 51 IAS மற்றும் IPS அதிகாரிகள் உருவாகியுள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த கிராமம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

Jul 28, 2026

உங்கள் மூளை... இயற்கையின் சூப்பர் மெமரி.

மனித மூளையின் தகவல் சேமிப்புத் திறன் சுமார் 2.5 பெட்டாபைட் என மதிப்பிடப்படுகிறது. இது சுமார் 30 லட்சம் மணி நேர வீடியோக்களை சேமிக்கும் திறனுக்கு இணையானது. தகவல்களை நினைவில் வைத்திருக்கும் மனித மூளையின் திறன், அறிவியல் உலகையே வியக்க வைக்கிறது.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 129 130

AD's



More News