உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு.1939-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில், பல நிறங்களில் சோதனை நடத்தப்பட்டபோது, மஞ்சள் நிறம் தொலைவிலிருந்தே எளிதாகக் கண்களில் படுவதும், மூடுபனி, மழை, அதிகாலை மற்றும் மாலை நேரங்களிலும் தெளிவாகத் தெரிவதும் உறுதி செய்யப்பட்டது.மேலும், மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்துகள் மிகத் தெளிவாகப் படிக்கப்படுவதால் பள்ளி பெயர் மற்றும் பேருந்து எண்களையும் எளிதில் அடையாளம் காண முடிகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பள்ளி பேருந்துகளுக்கான பொதுவான நிறமாக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
கிரேக்கத்தின் பெலோபொன்னீஸ் பகுதியில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான போசைடன் கடவுளுக்கான கோயில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின் மூலம், பழங்கால துறைமுக நகரமான சாமிகோஸில் புதைந்திருந்த இந்த கோயில் வெளிச்சத்துக்கு வந்தது. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் கோயில் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எலான் மஸ்க்கின் X நிறுவனம் XChat என்ற புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது iOS-ல் கிடைக்கும் இந்த செயலியில் End-to-End Encryption, தானாக அழியும் மெசேஜ்கள், ஆடியோ/வீடியோ அழைப்புகள், குழு உரையாடல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. மொபைல் எண் இல்லாமலேயே X கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில், உலகின் அரிய மற்றும் உயர்ந்த மதிப்புள்ள கைக்கடிகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் படேக் பிலிப் நிறுவனத்தின் 'சவுத் அமெரிக்கா' வேர்ல்ட் டைம் மாடல் சுமார் 10.2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹85 கோடி) விலைக்கு விற்பனையாகி கவனம் பெற்றுள்ளது.1953-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 'ரெஃபரன்ஸ் 2523' மாடலான இந்தக் கடிகாரத்தின் சிறப்பம்சம், அதன் எனாமல் டயலில் தென் அமெரிக்காவின் வரைபடம் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இவ்வகை கடிகாரங்கள் தற்போது உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால், சேகரிப்பாளர்களிடையே அதிக மதிப்பைப் பெற்றுள்ளது. மேலும், ஏலத்தில் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்பனையான மூன்றாவது வின்டேஜ் கைக்கடிகாரம் என்ற பெருமையையும் இந்த மாடல் பெற்றுள்ளது.
நாம் பார்க்கும் உலகம் உண்மையில் இருப்பதைப் போலவே நம் கண்களுக்கு தெரிவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், அறிவியல் கூறுவது வேறு. மனித மூளை ஒரு கேமராவைப் போல வெளி உலகத்தை நேரடியாக பதிவு செய்வதில்லை. அதற்கு பதிலாக, கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல் வழியாக கிடைக்கும் தகவல்களை ஒன்றிணைத்து, அவற்றை விளக்கி ஒரு முழுமையான உலகப் படத்தை உருவாக்குகிறது.நாம் காணும் நிறங்கள், கேட்கும் ஒலிகள், உணரும் வாசனைகள், தொடு உணர்வுகள் என அனைத்தும் மூளையின் விளக்கத்தின் விளைவுகளே. இதை விஞ்ஞானிகள் "கட்டுப்படுத்தப்பட்ட மாயத்தோற்றம்" (Controlled Hallucination) என்று குறிப்பிடுகின்றனர்.ஒவ்வொருவரின் அனுபவம், நினைவுகள் மற்றும் உணர்திறன் வேறுபடுவதால், ஒரே நிகழ்வை இருவர் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. அதனால், நாம் உணர்வது முழுமையான யதார்த்தம் அல்ல; நமது மூளை உருவாக்கி விளக்கும் உலகம்தான். மனித மூளையின் இந்த அற்புதமான செயல்பாடே நம் உலக அனுபவத்தை தனித்துவமாக மாற்றுகிறது.
கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க பலரும் ஏர் கண்டிஷனர் (AC) மற்றும் மின்விசிறியை நீண்ட நேரம் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இடைவிடாமல் குளிர்சாதன அறையில் இருப்பது உடல்நலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.நீண்ட நேரம் AC-யில் இருப்பதால் உடல் சோர்வு, மூட்டுவலி அல்லது வீக்கம், கண் வறட்சி, தோல் உலர்தல், மூக்கடைப்பு, காது அடைப்பு போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். எனவே, அவ்வப்போது இயற்கை காற்றை சுவாசிப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் AC வெப்பநிலையை அளவோடு வைத்துப் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பூமியின் நாட்களோடு ஒப்பிடும் போது, மற்ற கிரகங்களின் ஒரு ஆண்டு (சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம்) எவ்வளவு தெரியுமா?கிரகம் பூமியின் கணக்கில் ஒரு ஆண்டுபுதன் (Mercury ) - 88 நாட்கள்.வெள்ளி (Venus) - 225 நாட்கள்.செவ்வாய் (Mars)- 687 நாட்கள்.வியாழன் (Jupiter)- 12 ஆண்டுகள்.சனி (Saturn) - 29 ஆண்டுகள்.யுரேனஸ் (Uranus) - 84 ஆண்டுகள்.நெப்டியூன் (Neptune)- 164 ஆண்டுகள்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில், ஹரியானா மாநிலத்தின் ஜின்ட்–சோனிபட் வழித்தடத்தில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் கண்டது.மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் மின்சாரம் உருவாக்கி இயங்குகிறது. டீசல் அல்லது மேல்மின் கம்பிகள் தேவையில்லாத இந்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050-ம் ஆண்டின் உலகை எதிர்கொள்ள, குழந்தைகளுக்கு சொத்துகளை விட வாழ்க்கைத் திறன்களை வழங்குவது முக்கியம் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.சிந்திக்கும் திறன் – AI பதில்களை வழங்கலாம்; ஆனால் சரியான கேள்விகளை எழுப்பும் திறன் குழந்தைகளிடம் இருக்க வேண்டும்.பண மேலாண்மை பழக்கம் – சம்பாதிப்பதை விட சேமித்து வளர்க்கும் திறன் அவசியம். நற்குணமும் கருணையும் – அறிவுடன் மனிதநேயமும் இணைந்தால்தான் முழுமையான வளர்ச்சி. உடல் மற்றும் மன ஆரோக்கியம் – எதிர்காலத்தில் மிகப் பெரிய செல்வமாக இருக்கும்.குடும்பத்தின் மதிப்பு – உலகம் மாறினாலும் குடும்பம் தரும் பாதுகாப்பும் ஆதரவும் ஈடு இணையற்றவை. "பொருளாதாரச் செல்வத்தை விட, வாழ்க்கைத் திறன்களே குழந்தைகளுக்கான சிறந்த பரிசு" என்ற கருத்தே இதன் முக்கியச் செய்தியாகும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஜெய்னம் ஜெயின், செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி துபாயின் இளம் CEO-வாக கவனம் ஈர்த்துள்ளார். உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் தனி அலுவலகம் அமைத்து தொழில் உலகில் சாதனை படைத்து வருகிறார்.